1.பாட்டாளியின் வாழ்க்கைப்பாடு – மேதின கவிதை
***********************************
வயிற்றை
குறைக்க
ஓடும் நீங்கள்…
கொஞ்சம்
திரும்பி
பாருங்கள்…
வயிற்றை
நிறைக்க
நாங்கள் ஓடும்
ஓட்டத்தை…
–காட்டுவா ராபி
2.வெட்டப்படும் வனமாகிறேன்
*********************************
தனக்கே…தெரியாமல்
வனங்களைப் படைக்கும்….பிரசவிக்கும்
பறவைகளாவோம்….
……
ரசிக்கப்படும்
தேனெடுக்கப்படும்…
சிலபோழ்து
இவ்வெதுவும்…நேராமலே….
உதிர்ந்தும் விடக்கூடும்..
பூக்கத் தயங்கியதே இல்லை…இந்த
வனமெங்கும் பூக்கள்!
எதிர்பார்ப்பின்றி வாழும்வாழ்க்கை…
அவைகளுக்கு விதித்தது…..
பூக்களையுடுத்தி
பச்சயங்களைப் போர்த்திக்கொள்ளும்
இந்தவனத்தை ஒரு
ஞானியைப் போல
உள்வாங்குகிறேன்…..
வெண் பஞ்சுக்குவியலாய் உணர்வலைகள் மிதக்க மனமும் உடலும் லேசாகிறது….
இயற்கையின் நிர்வாணமே….எல்லாவற்றிலும்..
..நிறைந்துள்ளது….
அண்டத்தின் பேரழகும்…அஃதே…
வனம்…அழகோஅழகுதான்
செல்வாக்கு ..அதிகாரத்தின்
கோடரி…அதன்மீது
விழும்போதெல்லாம்….ஆட்சியும்அதிகாரமும் மௌனித்திருக்க…
சுள்ளிபொறுக்கப் போனவனைத்தான்
சுளுக்கு எடுத்து…அனுப்புகிறது
இன்றுவரை….
–அ. லில்லி ஏஞ்சல்
**தொகுப்பு: புதுகை விஜய்ஆனந்த்