பட்டாம் பூச்சி கவிதைகள் 6 | தொகுப்பு – புதுகை விஜய் ஆனந்த்1.நினைவுகள் நிறைய பேசும்…..
*******************************

ஒற்றை மயிலிறகு….
ஓயாத உன் நினைவு….

சூடான தேநீர்…
இதமாக நீ….

நான் நட்ட மல்லிகை…
வாசமாக நீ…

மொட்டைமாடி நிலா…
வெளிச்சமாக நீ…

உச்சி வெயில்….
கொஞ்சம் தென்றலென நீ…

இப்படி நீட்டிக்கொண்டே போவேன்…

உன் நினைவுகள் நீயறியாமலே
நிறைய பேசும் என்னிடம்….

போடா…

  –நிஷா வெங்கட்2.

எத்தனை முறை
முலாம் பூசி நின்றாலும்
காலம்காட்டிக் கொடுக்கும் நீ
பித்தளையென்று……

No description available.

–வண்ணை வளவன்.

தொகுப்பாசிரியர்: புதுகை விஜய்ஆனந்த்.