1.அலைபாயும் அகக்கடல்
********************************
அல்லல் அத்தனையும்
அப்புறபடுத்த அலைகடலில் வீசியெறிந்துவிட்டு அமைதியாய்
அமர்ந்தால் அடுத்தடுத்து வரும்
அலைகள் அள்ளிவந்து
காலடியில் அடுக்கடுக்காய் சேர்க்கிறது
அதில் உன் நினைவுகள்
ஒட்டிக் கொண்டு உதிர மறுக்கிறது
சாகர அழகை காணவும் இயலவில்லை
சாந்தம் அதுவும் மனதிலில்லை
எப்போதும் சந்தம் சொல்லும் அலைகள்
ஏனோ சத்தம் போட்டபடி அலைகிறது…
–தேவி
2. காதல் பெருந்தொற்று
******************************
முக கவசமும் வேண்டாம்…
இடைவெளி விடத் தேவையில்லை…
கை கழுவி அதை துரத்தி விடாதே…
நீ நெருங்கி வர வர எனை
முழுதாய் தின்னத் தொடங்கும்
இக் காதலும் பெருந்தொற்று தான்…
நான் கட்டியணைக்கும் பொழுது
மட்டும் தளர்வுகளை அறிவித்து
விடாதே நீ….
_க.சு.வனராஜா
தொகுப்பாசிரியர்: புதுகை விஜய்ஆனந்த்.