1.விட்டத்தின் பூனை
**************************
தூரம் அறிந்ததில்
இலக்குகள் இல்லை
மதுர நினைவுகளில்
முதல் கடை நிலைகள்
புரிந்தும் தொடுநிலைகள்
அருகில் இல்லை!
கண்ணிட்டு கொய்தவைகள்
எண்ணிய வலைகளில்லை!
தொடரும் முரண்களிலும்
அடைக்கும் மரணங்களில்லை!
தொட்டது துலங்கவில்லை
துலங்கியதும் விட்டபாடில்லை!
முட்டியுணர்கிறேன் நான்
இன்னும் விட்டத்தின்
பூனையாக!
2. ஒரு பூமராங்கைப் போல
*************************************
புழுதியுதறிப்
புறப்படுகிறது நாய்.
என்னவென்று
அது சொல்லவுமில்லை.
புழுதி
கேட்கவுமில்லை.
ஒரு பூமராங்கைப் போல
திரும்பிவிடும் எதற்கும்…
சொல்வதற்கும்
கேட்பதற்கும்
என்ன இருக்கிறது.
தொகுப்பாசிரியர்: புதுகை விஜய் ஆனந்த்