20 தலைப்புகளில் பல்வேறு கேள்விகளையும் உரையாடல்களையும் முன்வைக்கும் மிக முக்கியமான புத்தகம். சமையல் அறையில் முடங்கிக் கிடக்கும் பெண்ணினத்திற்கு ஆதரவாக ஆசிரியரின் குரல் ஓங்கி ஒலிக்கிறது.
பெண்களும் ஆண்களும் புரிந்து கொள்ள வேண்டிய, தெரிந்து கொள்ள வேண்டிய, தம்மை மாற்றிக்கொள்ள வேண்டிய, தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ள வேண்டிய ஏராளமான கருத்துகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
பெரியாரின் “பெண் ஏன் அடிமையானால்” என்ற நூல் வரிசையில் வைத்து எண்ணத்தக்கது இவருடைய நூல்கள். இன்றைய சூழலில் பெண்களுக்கு தேவையான முக்கியமான புத்தகங்கள் இவருடைய “துப்பட்டா போடுங்க தோழி” மற்றும் “பெட்ரோமாக்ஸ் லைடேதான் வேணும் ! “
சமூகம் ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற கற்பித்தத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.
பொது இடங்களில் பெண்கள் எவ்வாறு நடக்க வேண்டும், சிரிக்க வேண்டும் , அமர வேண்டும், பேச வேண்டும்,உடை உடுத்த வேண்டும் போன்ற கற்பிதங்களைக் கட்டுடைத்துள்ளார்.
விடாப்பிடியாக சமையல் கட்டிலிருந்து பெண்களைத் தரதரவென்று இழுத்து வந்து பரந்துபட்ட இவ்வுலகைக் காண செய்யும் முயற்சியாகவே இந்நூலை நான் பார்க்கிறேன்.
ஆகச் சிறந்த நூல்லொன்றினை வாசித்த நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தேன். இனியவருக்கு என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளும் பாராட்டுக்களும்
நூலின் தகவல்கள்
நூல் : “பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்“! (துப்பட்டா போடுங்க தோழி ll)
ஆசிரியர் : கீதா இளங்கோவன்
தொடர்புக்கு : 44 2433 2924 https://thamizhbooks.com/product/buttermax-light-eh-thaa-venum/
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

