அபூவின் செல்லக்குட்டி - யெஸ். பாலபாரதி | Abuvin chellakutty

யெஸ். பாலபாரதி எழுதிய “அபூவின் செல்லக்குட்டி” – நூலறிமுகம்

ஜுராசிக் பார்க் படம் பார்த்த அனுபவம்

இந்த கோடை விடுமுறையில் படித்துப் பொழுதைப் போக்க நல்ல ஒரு சிறார் நாவல் தான் எழுத்தாளர் பாலபாரதி எழுதியுள்ள “அபூவின் செல்லக்குட்டி”.
மனிதன் தோன்றுவதற்கு முன்னரே இங்கு பல உயிரினங்கள் தோன்றி வசித்துள்ளது என்ற அறிவியல் வரலாற்று உண்மை இக்கதையின் வழியாக அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

கடற்கரையை ஒட்டிய சிறு ஊரில் வசிக்கும் சிறுவர்கள் சிலர்தான் கதையின் முக்கிய பாத்திரங்கள். அபூபக்கர் என்னும் சிறுவனின் பாட்டி கதீஜா, வட இந்தியாவில் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுவிட்டுத் திரும்புகிறார்கள். அப்படியே உறவுகளுக்கும் நட்புகளுக்கும் பரிசுகள் வாங்கி வருகிறார். பாட்டியின் தோழியான காமாட்சி என்னும் பாட்டிக்கும் பரிசு வாங்கி வருகிறார். அப்பரிசினை அபூவிடம் கொடுத்து, காமாட்சி பாட்டி வீட்டில் கொடுத்து விட்டு வரக் கூறுகிறார்.

அபூவும், அவனது நண்பரும் கதிஜா பாட்டி கொடுத்த பரிசை வாங்கிக்கொண்டு, காமாட்சி பாட்டி வீட்டுக்கு கொண்டு செல்கின்றனர். வழியில் இவர்களை ஒரு நாய் துரத்துகிறது. பரிசு பொருள் கீழே விழுந்துவிடுகிறது. மீண்டும் பரிசை எடுத்துக்கொண்டு காமாட்சி வீட்டிற்குப் போனால் அவரின் வீடு பூட்டி இருக்கிறது.

கீழே விழுந்த பரிசு பொருள் உடைந்திருக்குமோ என்ற சந்தேகத்தில் மீண்டும் வீட்டுக்கு வந்து பரிசு பொருளை பிரித்துப் பார்த்தால், அந்தப் பரிசுப் பொருள் உருண்டை வடிவில் முட்டை போன்ற பொருளாக இருக்கிறது. அதில் சிறு ஓட்டையும் விழுந்து விடுகிறது.

உள்ளே என்ன இருக்கிறது என்று கண் அருகில் வைத்து பார்க்கும்போது உள்ளே ஒரு உருவம் இருப்பதை நண்பர்கள் பார்த்து மிரட்சி அடைகிறார்கள். அது தலை கை, கால்கள் கொண்ட நீண்ட வாலுடன் கூடிய உருவமாக இருக்கிறது.

அச்சத்துடன் அதை மூடிவைத்துவிட்டு, மறுநாள் திறந்து பார்த்தால் முட்டை உடைந்து கிடக்கிறது. அதன் உள்ளே இருந்து வெளிவந்த குட்டி டைனோசரைக் காண்கிறார்கள். அதை செல்லப்பிராணியாக வளர்க்க அவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளும் அந்த டைனோசரால் அந்த ஊருக்கு வரும் கஷ்டங்களையும் நகைச்சுவையாக எழுதி இருக்கிறார். படிக்கப்படிக்க சுவாரஸ்யம் குன்றாத எழுத்து நடை.

ஜாதி, மதங்களைத்தாண்டிய நட்பு எவ்வளவு முக்கியம். ஒருவருக்கொருவர் இணக்கமாகவும் நட்பாகவும் வாழ்வதுதான் நம் நாட்டின் பண்பாடு என்பதையும் நாம் வாழும் இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து வகையான ஜீவராசிகளுக்கும் உரியதாகும் என்பதை அழுத்தமாக பேசியுள்ள கதை.

கதையின் இடையிடையே வரலாற்றுக்கு முந்தைய உயிரினங்களைப் பற்றிய அறிவியல் குறிப்புகளையும் கொடுத்திருக்கிறார்.

மாணவர்கள் இந்த நூலை வாசிக்கும் போது ஜுராசிக் பார்க் படம் பார்த்த அனுபவம் அவர்களுக்கு கிடைக்கும். மிகவும் உயிரோட்டமாக உள்ளது. பெற்றோர் அனைவரும் இந்நூலினை வாங்கிக் கொடுக்கலாம். கோடை விடுமுறையை கொண்டாட உதவக் கூடிய பயனுள்ள நூல் இது.

 

நூலின் தகவல்கள்

நூல் : “அபூவின் செல்லக்குட்டி”

நூலாசிரியர் : யெஸ். பாலபாரதி

விலை : ரூபாய் 90/-

வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ட்ரன்

தொடர்பு எண்044 24332424

 

எழுதியவர் 

Mj பிரபாகர் 

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 


Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *