நூல் புதுமுக வாசிப்பாளர்களுக்கு, நமது தலைவர்களின் தனித் திறனையும் அவர்களின் சமூக பங்களிப்பையும் சுருக்கமாக கூறும் படைப்பு. 20 கட்டுரைகளும் பல்வேறு இதழ்களில் வெளிவந்த தொகுப்பாக
காந்தி, பெரியார், வ உ சி, பகத்சிங் பாரதி- தாகூர் ஒப்பீடு, அதோடு அரிஸ்டாட்டில் முதல் பிடல் காஸ்ட்ரோ வரை ஆசிரியர்களாக எப்படி சமூக பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பதையும், வெளிச்சத்திற்கு வராத தன் சொந்த அனுபவத்தோடு இருந்த ஆசிரியர்களின் சமூகப் பணியையும் தொண்டையும் மிளிர செய்து இருக்கிறார் நூல் ஆசிரியர்.
நூல்கள், கட்டுரைகள், துணுக்குகள், கவிதைகள் மற்றும் பேச்சாளர்கள் மூலம் நம் தலைவரை குறித்தான செய்திகளை நாம் அறிந்திருக்கிறோம். சிலவற்றை மறந்தும், கவனக்குறிப்பு இன்றியும் கடந்திருப்போம். ஆளுமைகள் குறித்து தெரிந்திருக்கும் என்ற போதிலும், எப்போது படித்தாலும் புது புதிய செய்திகள் நமக்கு கிடைக்கத்தான் செய்கிறது. நிகழ்காலத்தில் படிக்கும் போது மேலும் புதிய செய்திகள் புதிய பரிணாமங்களும் பழைய வாசிப்புகளில் ஏற்படுவது உண்டு.
அப்படித்தான் நமது தலைசிறந்த ஆளுமைகளின் சுருக்கிய வடிவங்களை குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மாணவர்களுக்கு புரியும் எளிய வடிவங்களில் படிக்கும் போது முழுமையும் புதிய புரிதலையும் ஏற்படுத்துகிறது.
விட்டுப்போன செய்திகள் அரிதான சில குறிப்புகள் இருக்கத்தான் செய்கிறது. உதாரணமாக வ உ சி யின் சுதேசி கப்பல்களின் பெயர், அவர் வாசித்த ஆங்கில நூல் மொழிபெயர்த்தது போன்றவை எனக்கு புதிய செய்தி இப்படியாக பல படிக்கும் வாசகர்களுக்கு புதிய கோணங்களில் அணுக உதவும்.
புதுமுக மாணவ மற்றும் இளைஞர்களுக்கான சமூக பங்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் தேசத்தின் மீது அக்கறை கொண்ட ஆளுமைகளின் வாழ்வியலை எளிய வடிவிலான 20 கட்டுரைகளும் தருகிறது.
நூலின் தகவல்கள்
நூல் : “உறுதி கொண்ட நெஞ்சினாய் வா!_வா!” (மாணவர்களுக்கான கட்டுரை )
நூலாசிரியர் : சி. பாலையா
வெளியீடு: நானிலம் பாதிப்பகம்
விலை : ₹ 100
பக்கம் : 116
நூலுக்கு : 9443575610
நூலறிமுகம் எழுதியவர்
பாலச்சந்திரன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.