சி.மோகன் எழுதிய “விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்” நாவல் புத்தகம் | Vindhai Kalaingnin Uruva Chithiram Tamil Novel Book Review | Popular Book Reviews | www.bookday.in

சி.மோகன் எழுதிய “விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்” நாவல் – நூல் அறிமுகம்

உருவக் கலைஞனின் விந்தைச் சித்திரங்கள்… (சி.மோகனின் சந்தியா பதிப்பக வெளியீடான ‘விந்தைக்கலைஞனின் உருவச்சித்திரம்’ நாவலை முன்வைத்து)

ராமன் என்ற விந்தைக் கலைஞன் உண்மையில் இருந்திருப்பான் என்றும் அவனுடைய கனவுகளின் வெளிப்பாடான அந்த விந்தை ஓவியங்களையும் நிலவையும் இப்போது எங்கு சென்றால் பார்க்கலாம் என்று சி.மோகனிடம் போன் போட்டு கேட்டுவிடத் தோன்றுகிறது நாவலைப் படித்தததும். தகவல்களிலும் காலக்கோர்ப்பிலும் அத்தகைய ஒரு நம்பகத் தன்மை. ஒரு புதினமாகவே இல்லை.

பயோகிராபி வகையிலான நாவல். கிளாசிக் வகைகளில் நிச்சயம் சேர்க்க வேண்டிய ஒன்று. ஒரு நாவலின் ஊடே இடையீடாக நாவலாசிரியர் தான் நாவல் எழுதிய விதத்தையும் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள டக்ளசுடன் பேசுகிறார். அவர் எழுதிக் கொண்டிருப்பது ஒரு சரிதைதான் என்றே மனம் நம்புகிறது. திக்குவாயுடன், சற்றே மனம் சிதைந்த நிலையில் இருக்கும் ராமன் தனது கனவுகளை ஓவியங்களாகக்கி அதில் தானும் பாத்திரமாகி விடும் ஓவியன். அதுவும் பிறவிக் கலைஞன்.

தொடக்கத்தில் நல்வாய்ப்புகள் ஏதுமின்றி ஒரு கோவில்பட்டர்தான் அவருக்கு உதவி செய்து பணிக்கர் முதல்வராய் இருந்த அரசு கவின் கலைக்கல்லூரியில் சேர்கிறான். அவனது ஓவியத் திறமை பல சிறந்த ஆளுமைகளால் மதிக்கப்படுகிறது -ஆனால் சக ஓவியர்கள் மத்தியில் பெரிய பேரில்லை. அவனது காம உந்துதல் கூட சக ஓவியர்களால் கிண்டலடிக்கப்படுகிறது. கடைசியில் சரக்கில் பூச்சி மருந்து கலந்தடித்து தற்கொலை செய்து கொள்கிறான். அவன் ‘தேவி’ என்ற பெயரில் ஒரு ஆண் நாயுடன் சிநேகம் வைத்துள்ளாhன். சரக்கடிப்பான். கஞ்சா புகைப்பான்.

சரோஜாதேவி புத்தகம் படிக்கிறான். எழுபது, எண்பதுகளில் ஒரு கலைஞனின் உருவத்தை கண் முன்னர் காட்டுகிறார் சி.மோகன். பூச்சி மருந்து குடித்து ராமன் தற்கொலை செய்து கொள்ளும்போதுதான் நாவல் உயிர்கொள்கிறேது. ராமனின் முடிவை முதல் அத்தியாயத்திலேயே சொல்லிவிடும் உத்தியும் நன்றாகத்தான் உள்ளது. ராமனின் தற்கொலையை மரணமென்று உணர்த்தாமல் அதனை ஒரு நிலை மாற்றமாக வாசகனை நம்பவைத்துள்ளதில் நாவல் உயிர்க்கிறது. அ

வனது ஓவியத் திறமை உச்சத்தை எட்டி விட்டது. அவனது கலையின் உச்சம் அடைந்து விட்ட நிலையில் அவனால் வெற்று உயிரை வைத்துக் கொண்டு வாழ இயலவில்லை. அவன் முன் இரண்டு வழிதான் உள்ளது. ஒன்று தனது கலையினை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்வது. அல்லது வரைவதையே நிறுத்திவிடுவது. இரண்டவாது அவனால் நினைத்தாலும் முடியாத வழி.

எனவேதான் தனது கலையினை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதாற்காக தனது அப்போதைய வாழ்வின் காலத்தை முடித்துக் கொண்டான். சிறந்த கலைஞர்கள் பலரும் பாரதி, புதுமைப்பித்தன் போன்றோர் சிறு வயதிலேயே இறந்து விட்டது இதுனால்தானா என்று ஓர் ஆன்ம வினாவினையும் எழுப்பிச் செல்கிறது நாவல். சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் கட்டுரையாளராகவும் விமர்சகராகவும் தெரிந்த சி.மோகன் சிறந்த கதை சொல்லியாகவும் தனது இந்த நாவல் மூலம் அறிவித்துள்ளார்.

📚 நூலின் விவரங்கள்:
தலைப்பு விவரம்
நூலின் பெயர்: விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்
ஆசிரியர்: சி.மோகன்
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
விலை: ₹.110
அறிமுகம் எழுதியவர்:   
அன்புச்செல்வன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *