போராடும் விவசாயிகளுக்கு ஆதரவான கவிதை – சி பி கிருஷ்ணன்*என்ன கேட்கிறோம் உன்னிடம்*
என்ன கேட்கிறோம் உன்னிடம்
வீடு வாசலை விட்டு விட்டு
குழந்தை குட்டிகளை தவிக்கவிட்டு
நூற்றுக்கணக்கான மைல்கள் கடந்து
டெல்லி வீதிகளில் ஒன்று திரண்டு
தடியடி கண்ணீர் புகையை தாங்கி நின்று
நடுங்கும்  குளிரையும் புறந்தள்ளி
சாலை ஓரம் சமைத்து உண்டு
வீதி ஓரம் படுத்துறங்கி
*என்ன கேட்கிறோம் உன்னிடம்*
ஐந்து வருடங்களில் எங்களின் வருமானத்தை
இரட்டிப்பாக்கி  விடுவேன் என்றாயே
அதையா கேட்கிறோம் உன்னிடம்
இல்லை இல்லை இல்லவே இல்லை
*என்னதான் கேட்கிறோம் உன்னிடம்*
ஒன்றே ஒன்று தான் கேட்கிறோம்
சட்டம் போட்டு வதைக்காதே
திட்டம் போட்டு கொல்லாதே
*எங்கள் வாழ்வை இருளில் தள்ளும்*
*வேளாண் சட்டங்களை திரும்பப் பெறு*
*மின்சார சட்டத்தை ரத்து செய்*
எங்கள் போக்கில் வாழ விடு
                        – *சி பி கிருஷ்ணன்*