ஒரு ரோபோட்டால் தற்கொலை செய்து கொள்ள முடியுமா?
தென்கொரியாவில் குமி சிட்டி கவுன்சில் சமீபத்தில் ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டது ஜூன் 26 அன்று அது முதன்மை நிர்வாக அதிகாரியாக நியமித்த ஒரு ரோபோட் சைபோர்க் படிக்கட்டில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக ஒரு அறிக்கையை வெளியிட்டது. இரண்டு அதிசயங்கள் உள்ளன. சிட்டி கவுன்சில் முதன்மை நிர்வாக அதிகாரியாக ஒரு ரோபோட் இருந்துள்ளது இரண்டாவது அந்த ரோபோட் பணி சுமை தாங்க முடியாமல் படிக்கட்டுகளில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளது. நிர்வாக அதிகாரியாக செயல்படும் அளவிற்கு மனித இயந்திரங்கள் வந்து விட்டனவா ஒரு ரோபோட் தற்கொலை செய்து கொள்ளுமா? என்னால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை.
உலகிலேயே ரோபோட்களின் மக்கள் (?) தொகை தென்கொரியாவில் தான் அதிகம் அங்கே சுமார் 1,14,000 ரோபோக்கள் பணியில் உள்ளன. கேள்விக்குரிய மேற்கண்ட ரோபோட் ஆகஸ்ட் 2023 ல் பணிக்கு அமர்த்தப்பட்ட தாம் உண்மையில் இது ஒரு நேர்காணல் மூலம் மணிக்கு சேர்ந்துள்ளது இந்த நேர்காணலில் ஆறு ரோபோட்கள் கலந்து கொண்டன சைபர் போர் ஏன் இப்படி செய்தார் ..சிட்டி அதிகாரிகள் மனச்சோர்வடைந்த ரோபோவின் மரணம் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள் துண்டுகள் சேகரிக்கப்பட்டுள்ளன இவை பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும் என்று சிட்டி கவுன்சில் அறிவித்துள்ளது நகரசபை அதிகாரியாக நியமிக்கப்பட்ட முதல் வகையைச் சேர்ந்தது . அது தினசரி ஆவண விநியோகம் நகர பதவி உயர்வு மற்றும் தகவல்களை வழங்குதல் நகரத்தில் இருக்கும் மக்களின் அன்றாட பணிகளை கண்காணித்து உதவுதல் குடிநீர் குழாய் மின்சாரம் போன்றவை தடையின்றி கிடைக்க காலை 9:00 மணி – மாலை6:00 மணி வரைஇந்த ரோபோட் பணி செய்துள்ளது சிவில் சர்வீஸ் அதிகாரி என்கின்ற அடையாள அட்டையும் அது வைத்திருந்தது. உதவிகரமாக மற்றொரு அதிகாரியும் இருந்திருக்கிறார் அவர் ஒரு மனித அதிகாரி நகர கவுன்சில் ரோபோ தொழில்நுட்பத்தை விரைவாக பயன்படுத்துவதில் புகழ்பெற்றது சர்வதேச ரோபோட்டிக்ஸ் கூட்டமைப்பு கூற்றின்படி உலகில் ROBOT அதிகம் இருக்கும் நாடாக தென்கொரியா உள்ளது 10 ஊழியர்களுக்கு ஒரு மனித இயந்திரம் உண்டு.

ரோபோ என்பது என்ன அது ஒரு இயந்திரம் குறிப்பாக கணினியால் நிரல்படுத்தப்படக்கூடிய முன் சிமிகை கொண்ட இயந்திரம். ஒரு சிக்கலான தொடர்ந்து செயல்களை தானாவே செய்யும் திறன் கொண்ட இயந்திரம் ஒரு ரோபோவை வெளிப்புற கட்டுப்பாட்டு சாதனம் மூலம் வழிநடத்த முடியும் அல்லது கட்டுப்பாடு உள்ளேயே கட்ட படலாம் மனித வடிவத்தை தூண்டும் வகையில் ரோபோக்கள் கட்டமைக்கப்படுகின்றன ஆனால் பெரும்பாலான ரோபோட்கள் வெளிப்படையான அழகியலுக்கு பதிலாக அப்பட்டமான செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து வடிவமைக்கப்பட்ட செயலை செய்கின்ற இயந்திரங்களாக உள்ளன.
இன்றைக்கு மருத்துவத் துறையிலிருந்து வேளாண்மை வரையில் உலக அளவில் மனித இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. ரோபோக்கள் தன்னாட்சி அல்லது அரை தன்னாட்சி மற்றும் மனித உருவில் இருந்து இயங்கக்கூடிய தொழில் முறையை அடிப்படையாகக் கொண்டவை ஜப்பானில் மனித தசைகளால் ஆன மனித இயந்திரம் இப்போது வந்துவிட்டது ஒரு காலத்தில் அறிவியல் புனை கதைகளில் இருந்தவற்றை முறைப்படி வெளியே கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஓரளவு வெற்றி அடைந்திருக்கிறோம். மொபைல் ரோபோ மிகவும் பிரசித்தி பெற்றது. தென்கொரியாவின் தற்கொலை செய்து கொண்ட ரோபோ அந்த வகையைச் சார்ந்தது.
தொழில் துறை ராணுவம் மற்றும் பாதுகாப்பு சூழல்களில் இன்றைக்கு உலக அளவில் பல ரோபோக்கள் பலவகை ராணுவங்களில் பணிபுரிகின்றனர். பொழுது போக்கிற்காக பயன்படுத்தப்படும் ரோபோக்கள் உண்டு சில நாடுகளில் ரோபோக்களை மனித கழிவுகளை அகற்றுவதற்கும் பெரிய சாக்கடைகளை சுத்தகரிப்பு செய்வதற்கும் பயன்படுத்துகிறார்கள் தற்போதைய ஆராய்ச்சியின் மையமாக ஃப் தொழில்துறை ரோபோட்கள் உள்ளன. தொழில்துறை ரோபோக்கள் அவற்றை கையாள்வது எளிமையாக இருப்பதால் கார் உற்பத்தி முதல் மருத்துவத்துறை வரை பல வகை பயன்பாடுகள்ல் அவைகளின் தரத்தை பொறுத்து பயன்படுத்தப்படுகின்றன.
தானாக கட்டுப்படுத்தப்படும் ரோபோட் மறு நிரலாக்கம் செய்யப்பட கூடிய ரோபோட் பல்நோக்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட PROGRAMED நிகழ்வு படுத்தக்கூடிய கையாளும் ரோபோட் என்று வகைப்படுத்தப்படுகிறது ஜப்பானில் முதியவர்கள் அதிகம் வீட்டில் முதியவர்களை பராமரிப்பதற்கு டொமஸ்டிக் ரோபோட்டுகள் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 45,000 என்கிறார்கள்!
அதிகம் கல்வியில் ரோபோட்களைபயன்படுத்தும் ஃப் நாடு என்றுஜப்பான் ஐ சொல்லலாம் சீனாவில் கூட வந்துவிட்டது. இந்தியாவில் பெங்களூரில் இதுபோன்ற முயற்சிகள் நடப்பதை நான் பத்திரிகைகளில் வாசிக்கிறோம் கற்பிக்கும் கணினி NICHIEN என்ற வகை ரோபோட்டுக்கள் 1974ல் அறிமுகமாயின AGV ரோபோட்களின் ஒரு வகை புதிய இனம். இவை ரோபோட்களின் கட்டமைப்பை கட்டுப்படுத்துவதன் மூலம் அவற்றின் பயன்பாட்டை அதிகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன கட்டமைப்பை மட்டுப்படுத்தல் என்றால் என்ன வழக்கமான ரோபோக்களுக்கு ஒப்பிடும்பொழுது மட்டு இயந்திரமஎன்பதன் செயல்பாடு மற்றும் செயல்திறன் அதிகரிக்கிறது. ஏனெனில் இந்த ரோபோட்டுகள் எடை அதிகமாக இருப்பது இல்லை ஒரே மாதிரியான பல்வேறு ரோபோட்டுகளை புதிய 3D தொழில்நுட்பம் கொண்டு தயாரித்து விடுகிறார்கள் கட்டிடக்கலை அமைப்பு மட்டு ரோபோட்டுகளுக்கு இந்த வகை ஈடுபாடு ஏற்படுகிறது ஏனெனில் அவை எட்டுகிரி சுய மூளை சுதந்திரத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வகை புரோகிராமிங் தலைகீழ் இயக்கவியல் என்று அழைக்கப்படுகிறது இந்த வகை ரோபோட் தான் தென்கொ ரியாவில் தற்கொலை செய்து கொண்டது.
பணி இடத்தில் எப்போதும் கூட்டு ரோபோட்டுகளை பயன்படுத்த தற்போது ஒரு கொள்கையை போல அறிவித்திருக்கிறார்கள் இந்த வகை ரோபோட்டுக்கள் கோ வொர்கர்ஸ் என்று அழைக்கப்படுகின்றன இவை மனிதர்களோடு இணைந்து பணி செய்வதில் பாதுகாப்பான உணர்வை பெறுகின்றன. ரோபோட் பயன்பாட்டில் சில பின்விளைவுகளும், சுற்றுச்சூழல் அபாயங்களும் உண்டு எந்த ஒரு தொழில்துறை இயக்க கட்டுப்பாட்டு பயன்பாட்டை பரிசீலிப்பதற்கு முன்பு இத்தகைய இடர் மதிப்பீடுகள் கண்டிப்பாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
தொழில்துறை ரோபோட்டுகளை பயன்படுத்துவதில் முன்னணி நாடுகளில் தென்கொரியா தனித்து ஒளிர்கிறது. 2019 ஆம் ஆண்டில் உலகிலேயே தானியங்கி ரோபோட் அதிகம் கொண்ட நாடாக தென்கொரியாவை ரோபாட்டிக்ஸ் கூட்டமைப்பு பட்டியல் இட்டது நாட்டில் ரோபோ தொழில் துறையானது9.18 TRILIAN டாலர் வர்த்தகம் கொண்டதாகும்.
தென்கொரியா உலகின் மிகக் குறைந்த பிறப்பு விகிதம் கொண்ட நாடு ..தொழிலாளர் பற்றாக்குறையை போக்க உதவும் வகையில் 10 தொழிலாளர்களுக்கு ஒரு ரோபோட் அறிமுகமாகியுள்ளது இது அங்கு ரோபோட் சந்தையை பிரம்மாண்ட அளவில் அதிகப்படுத்தியுள்ளது தென்கொரியாவில் மட்டும் ஏறக்குறைய 200 சிறியதும் பெரியதுமான ரோபோட் நிறுவனங்கள் உள்ளன ..நீங்கள் தென்கொரியாவில் உள்ள ரோபோட்களின் பட்டியலை எடுத்து பார்த்தால் ஜென் இப்போ மூஸா ஃப் இப்படி 1,00,000 பெயர்கள் உள்ளன. மனிதர்களுக்கு பேர் வைப்பதைப் போலவே ரோபோட்டுகளுக்கும் பெயர் வைத்து அழைக்கிறார்கள்..2003 முதல் ரோபோட்களின் உரிமைகள் குறித்தும் அங்கு பரவலாக பேசப்படுகின்றது.
ALBERT HUGO எனும் மனித உருவ ரோபோட் அமைக்கப்பட்டு2005 பெரிய பரபரப்பை ஏற்படுத்தி யது ..ALBERT HUGOகோ எனும் இந்த ரோபோ டைனமிக் கொரியா என்று அழைக்கப்பட்டு ரோபோட்களின் தூதராக நியமிக்கப்பட்டார். அரசாங்கத்திற்கு ரோபோட்களின் ஒரு பிரதிநிதியை நியமித்ததற்கு ஒப்பாக பேசப்பட்டது பாராளுமன்றத்தில் ALBERT HUBO என்று அழைக்கப்படும் அந்த ROBOT பிரதிநிதி க்கு ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டது.
மனிதர்களை போல பணி செய்ய வேண்டிய ரோபோட்டுகள் தற்கொலை செய்து கொள்வது என்றால் என்ன தென்கொரியாவின் அந்த ரோபோ அதிகாரி ஏதோ இருப்பதை போல ஒரே இடத்தில் சுற்றி சுற்றி வந்தது என்று சொல்கிறார்கள். படிக்கட்டில் இருந்து விழுந்து தூள் தூளாக நொறுங்கிப் போன சம்பவத்தை பற்றிய காரணங்களை கண்டறிய இப்போது விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. சரி பொறுப்புமிக்க அதிகாரி பணியை ஓராண்டுக்கு செவ்வனே செய்ய முடிந்த அந்த ரோபோ கலிபோர்னியாவைச் சேர்ந்தது BEAR ROBOTICS எனும் நிறுவனம் அதை வடிவமைத்திருந்தது.. இந்த வகை ரோபோட்களுக்கு விடாமுயற்சி ரோபோட் என்று பெயர் தென்கொரியாவில் ROBOT உதவியாக மனிதர்களை நியமித்திருக்கக் கூடாது என்று கலிபோர்னியா நிறுவனம் இப்போது சொல்கிறது. மன அழுத்தம் தாங்காமல் படைகளுக்கு இடையே அது தவறி விழவில்லை வேண்டுமென்றே விழுந்து இறந்து இருக்கிறது என்று கலிபோர்னிய நிறு வனம் அறிவிக்கிறது.
ஜப்பானில் ஆராய்ச்சியாளர்கள் உயிருள்ள தோல் திசுக்களை உன் பழியை கண்டுபிடித்ததாக அறிவித்திருக்கிறார்கள் ஜப்பானில் உள்ள முதியவர்கள் அவற்றை இயந்திரம் என்று கருதாமல் தங்கள் சகாக்களாக கருத வேண்டும் என்பதுதான் இந்த ஆராய்ச்சியின் நோக்கம் இன்னும் கொஞ்ச நாட்களில் அதிகாரியாக மட்டுமல்ல தொழிலாளியாக இருந்தாலும் மனிதர்களை போல கால நேரம் பார்க்காமல் உழைக்கும் பணியை முடியாது 8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு என்று கேட்டு போராடவதற்கும் வாய்ப்புள்ளது.
நம் வீட்டில் பொம்மைகளோடு விளையாடும் ஒரு குழந்தை.. படிக்கட்டில் தடுக்கி பொம்மை விழுந்து நொறுங்கினாளல பொம்மை தற்கொலை செய்து கொண்டு விட்டது என்று சொல்லுமா.. இதை வைத்துப் பார்த்தால் ரோபோட் தற்கொலை என்பது சாத்தியமா.. இப்படி பல கேள்விகளை கேட்டுக் கொண்டே இருக்கலாம்
கட்டுரையாளர்:

ஆயிஷா இரா. நடராசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Super