Subscribe

Thamizhbooks ad

இணையவழி வகுப்புகள், பள்ளி வகுப்பறைகளுக்கு மாற்றாக முடியுமா? – கலந்துரையாடல்  – பூஜா பெட்னேகர் (தமிழில்: தா.சந்திரகுரு)

 

நாடு முழுவதும் வகுப்புகள் மற்றும் தேர்வுகளை ரத்து செய்ய வைத்து, இந்த கல்வியாண்டை கோவிட்-19 பரவல் சீர்குலைத்திருக்கிறது. மாணவர்கள் தங்களுடைய படிப்பைத் தவறவிடாமல் பார்த்துக் கொள்வதற்காக, அவர்களிடமிருக்கின்ற சாதனங்களின் வழியாக, தங்களால் நடத்தப்படுகின்ற வகுப்புகளில் கலந்து கொள்ளும்படி அவர்களைக் கட்டாயப்படுத்தி, இணையவழி வகுப்புகளை நோக்கி பள்ளிகள் உடனடியாக நகர்ந்திருக்கின்றன. திரைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தின் அளவு அதிகரிப்பது, மாணவர்களுக்கு கற்றுக்கொள்ள உதவுமா அல்லது அது அவர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்குமா என்ற விவாதத்திற்கு அது வழிவகுத்துக் கொடுத்தது. இணையவழி  வகுப்புகளுக்கு மழலையர் வகுப்பு முதல் இரண்டாம் வகுப்பு வரை மகாராஷ்டிரா மாநிலம் தடை விதித்துள்ள நிலையில், கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் ஐந்தாம் வகுப்பு வரை தடையை நீட்டித்துள்ளன. பூஜா பெட்னேகர் நடத்திய கலந்துரையாடலில், கிரண் பட்டி (கொள்கை ஆராய்ச்சி மையத்தில் மூத்த உறுப்பினர் ) மற்றும் ரீட்டா சோனாவத் (ஆரம்பகால மழலைப் பருவ கழகத்தின் நிர்வாக இயக்குநர்) ஆகியோர் இணையவழி கற்றலின் நன்மை, தீமைகளைப் பற்றி தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்தார்கள்.

நேர்காணலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்:

இணையவழி வகுப்புகள் காரணமாக, மாணவர்கள் திரைக்கு முன் செலவழிக்கும் நேரம் அதிகரித்துள்ளதா?

ரீட்டா சோனாவத்: இல்லை, இணையவழி வகுப்புகள் திரைக்கு முன் செலவழிக்கும் நேரத்தை அதிகரித்திருப்பதாக நான் நினைக்கவில்லை. தொலைக்காட்சி, மொபைல் அல்லது கணினி வடிவத்தில் திரைகளுக்கு முன்னால் எப்படியாவது குழந்தைகள் இணைக்கப்பட்டே இருக்கிறார்கள். கோவிட்-19 தொற்றுநோய் தொடங்குவதற்கு முன்பாகவே, குழந்தைகள் திரைகளுக்கு அடிமையாகியே இருந்தனர். தினமும் எட்டு முதல் ஒன்பது மணி நேரம் அவர்கள் திரைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இணையவழிப் பாடங்களைப் பொறுத்தவரை, பெரும்பாலான பள்ளிகள் திரைகளை மட்டுமே சார்ந்து இருக்கவில்லை. பாடங்களுடன் பல்வேறு நடவடிக்கைகளைச் சேர்த்து ஒரு கலப்பு அணுகுமுறையை அவர்கள் மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள். மழலையர் பள்ளி மட்டத்தில், ஓவியம் அல்லது கைவினை செய்யுமாறு குழந்தைகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சில பள்ளிகள் யோகா அமர்வுகளை நடத்துகின்றன; சாலட் செய்யுங்கள் என்பது போன்று, வீட்டில் சமையலறையில் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு மாணவர்களைக் கேட்டுக் கொள்கிறார்கள். கதை சொல்லும் அமர்வுகளின் போது மட்டுமே குழந்தைகள் தங்கள் திரைகளைப் பார்க்க வேண்டும். ஆனால் அந்த அமர்வுகள்கூட, மாணவர்களை ஈடுபடுத்துகின்ற வகையில் ஆக்கப்பூர்வமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, திரைக்கு முன்பாக செலவழிக்கும் நேரம் சிறிதாகவே உள்ளது. அந்த நேரமும் கைகளால் செய்கின்ற செயல்களுடன் ஒன்றிணைக்கப்பட்டே இருக்கிறது.

இந்த வகுப்புகளை நடத்தாவிட்டால், குழந்தைகளின் மூளை வளர்ச்சியை தடை செய்தவர்களாகி விடுவோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைப் பருவத்தில், குழந்தையின் மூளை ஒவ்வொரு நாளும் உருவாகிறது. எனவே, அதில் ஒரு நாளைக் கூட நாம் தவறவிட முடியாது. மூளை வளர்ச்சிக்கு, குழந்தைகள் சரியான வகையான தூண்டுதலைப் பெற வேண்டும், இந்த தூண்டுதலை ஆசிரியர்களால் மட்டுமே வழங்க முடியும். வயதுக்கு ஏற்றவாறு தூண்டுதலை வழங்குவதற்கு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

கிரண் பட்டி: நீண்ட நேரம் திரையைப் பார்ப்பது தீங்கையே விளைவிக்கும். இணையவழி கல்விக்கு மாறியுள்ளதன் மூலம், குழந்தைகள் நீண்ட நேரம் திரைகளுக்கு முன்பு செலவிட வேண்டியிருப்பதை பள்ளிகள் ஏற்படுத்தியிருக்கின்றன. இது ஆரோக்கியமான கற்றல் வழிமுறையாகத் தெரியவில்லை. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்பை  ஏற்படுத்துவது மட்டுமல்லாது, வீட்டிலிருந்தே இணையவழி கற்றலில் ஈடுபடுவதன் மூலம் குழந்தைகள் மிகவும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் தனிமையிலே இருக்க வேண்டியுள்ளது. சகாக்கள் யாரும் தங்களுடன் இல்லாத நிலையில், அவர்கள் தாங்களாகவே கற்றுக் கொள்கிறார்கள். ஆசிரியர்களின் பங்கும்கூட இங்கே மட்டுப்படுத்தப்படுகிறது. வகுப்பறையில் கிடைப்பதைப் போன்ற மேற்பார்வை, இனையவழி கல்வியில் குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. இணையவழி கற்றலை மேற்பார்வையிட வேண்டிய பெற்றோர்கள் தங்கள் சொந்த வேலையில் மிகவும் மும்முரமாக ஈடுபட வேண்டியிருக்கலாம். இந்த காரணிகள் அனைத்தும் குழந்தைகளின் கற்றலைப் பாதிக்கவே செய்கின்றன.

மேலும், பல குழந்தைகள், குறிப்பாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், இணைய வசதிகளைப் பெற முடியாததால், இந்த தொற்றுநோய் காலத்தில், தங்களுடைய கல்வியை இழந்து வருகின்றனர். உண்மையில் அவர்கள் தங்கள் பாடங்களை இழக்கிறார்கள். சில குடும்பங்களால் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பெற முடிந்தாலும், அனைத்து குடும்ப உறுப்பினர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கும் போதுமான சாதனங்கள் நிச்சயம் அவர்களிடம் இருக்காது. வீட்டிலிருந்து வேலை செய்யும் பெற்றோர் அவர்களுடைய கணினிகளைப் பயன்படுத்த வேண்டிடிருக்கும் என்பதால், ஒவ்வொரு வீட்டிலும் அனைவருக்கும் கிடைக்கும் வகையில், பல சாதனங்கள் இருக்க வேண்டும். இது மக்கள் தொகையில் பெரும்பகுதியினருக்கு உண்மையில் சாத்தியமே இல்லாதது.

Can online learning replace the school classroom? - The Hindu

பல பள்ளிகள் மழலையர் வகுப்பில் உள்ள குழந்தைகளுக்கும் இணையவழியிலான பாடங்களை நடத்துகின்றன. இவ்வளவு இளம் வயதில் குழந்தைகளைத் திரைக்கு முன் அமர வைப்பதில் உள்ள ஆபத்துகள் என்ன?

ரீட்டா சோனாவத்: சிறு வயதிலிருந்தே குழந்தைகளைத் திரைகளுக்கு முன் அமர்த்துவது சரியல்ல. அது அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியைத் தடுக்கலாம். திரையில் இருந்து வெளிப்படுகின்ற ஒளி குழந்தைகளின் கண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் பார்வை கோளாறுகளுக்கு அது வழிவகுத்துக் கொடுக்கலாம். திரையைப் பார்ப்பது என்பது உயிர்ப்பற்ற செயலாக இருப்பதால், அது குழந்தைகளை சோம்பலாக மாற்றுவதோடு, அவர்களின் சிந்தனைத் திறனையும் பாதிக்கின்றது. பெற்றோர்கள் பெரும்பாலும், சிறு வயதிலிருந்தே தங்கள் குழந்தைகளை திரைகளுக்கு முன் அமர வைக்கிறார்கள். குழந்தைகளை அடம் பிடிக்காமல் சாப்பிடுவதற்கு, வீடியோக்களைப் பயன்படுத்துவது பெற்றோரிடம் இருந்து வருகின்ற பொதுவான வழக்கமாக உள்ளது. இது குழந்தைகளின் நடத்தை தொடர்பான பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். பள்ளிகளும் சிறுகுழந்தைகளுக்கான இணையவழி பாடத்திற்கான உள்ளடக்கத்தை உருவாக்கும் போது, இதை மனதில் கொள்ள வேண்டும். குழந்தைகள் திரையில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே செலவழிக்கும் வகையில் பாடங்கள் வடிவமைக்கப்பட வேண்டும். பாடங்களுடன் வெவ்வேறு செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதன் மூலமாக இதைச் செய்ய முடியும்.

இணையவழி கற்றல் குறித்த வழிகாட்டுதல்களை உருவாக்குமாறு கர்நாடக உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் எவற்றை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

கிரண் பட்டி: இணையவழி கற்றல் குறித்து, இன்னும் சிந்திக்கப்படாத பல சிக்கல்கள் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். கிட்டத்தட்ட ஒரே இரவிற்குள் இணையவழி வகுப்புகளுக்கு மாறுவதற்கான அவசரம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான், இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டுதல்களைக் கொண்டு வருமாறு அரசாங்கத்திடம் சில நீதிமன்றங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. இணையவழி வகுப்புகள் எதைக் குறிக்கின்றன, அவற்றின் பொருள் என்ன, அவை எவ்வாறு நடக்கப் போகின்றன, அவற்றின் தாக்கம் என்னவாக இருக்கப் போகிறது  என்பதை நீதிமன்றங்கள் அறிய விரும்புகின்றன.

ரீட்டா சோனாவத்: இணையவழி கற்றலில் பின்பற்ற வேண்டிய விரிவான வழிகாட்டுதல்களை, ஆரம்பகால மழலைப் பருவ கழகம் (மழலை தொடக்கக் கல்வியைப் பற்றிய சிந்தனைக் குழு) தயாரித்துள்ளது. அந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்ற முடிந்தால் மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்.

பல பால்வாடிகள் மற்றும் அங்கன்வாடிகள் (அரசாங்கத்தால் நடத்தப்படும் குழுக்கள் மற்றும் பகல்நேர குழந்தை பராமரிப்பு வசதிகள்) நெரிசலான பகுதிகளில் அமைந்திருக்கலாம், அவை நோய்த்தொற்று அதிகமாக இருக்கின்ற இடங்களாக இருக்கலாம்.

பல நாடுகள் தங்கள் பள்ளிகளை மீண்டும் திறக்கத் தொடங்கியுள்ளன. ஆனால் இந்தியாவில், மெட்ரோ நகரங்களான மும்பை, சென்னை மற்றும் தில்லி ஆகிய நகரங்களில், கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில், பள்ளிகளைத் திறப்பது சாத்தியம்தானா?

கிரண் பட்டி: இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், கல்வி குறித்த உரையாடல்கள் அனைத்தும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக மாறிவிட்டன. கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களைப் குறித்ததாக மட்டுமல்லாமல்,  தூர்தர்ஷனைப் பார்ப்பது கூட திரை நேரத்துடன் தொடர்பு கொண்டதாகவே இருக்கிறது. கல்வி செயல்பாடுகள் மீண்டும் தொடங்கக்கூடிய வகையில், பாதுகாப்பான இடங்களாக பள்ளிகளை மாற்றுவது குறித்து, உண்மையில் யாரும் (இந்தியாவில்) பேசவில்லை. கல்வி என்பது வெறுமனே திரைகள் வழியாக மாணவர்களுக்கு வழங்கப்படும் தகவல் அல்லது உள்ளடக்கமாக மட்டுமே இருக்கவில்லை. அதில் இன்னும் ஏராளமாக இருக்கிறது. பள்ளியில் சகாக்களுடன், ஆசிரியர்களுடன் சமூக தொடர்புகள் ஏற்படுகிறது. இணையவழி வகுப்புகள் தொடங்கப்பட்ட பிறகு, இவையனைத்தும் இல்லாமல் போய் விட்டன. பிற வகையான வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் தாக்கத்தை குழந்தைகள் மீதும், அவர்களின் வளர்ச்சியின் மீதும் இது ஏற்படுத்தும் என்றே நான் நினைக்கிறேன். இணையவழி கற்றல் என்ற முழுமையான மாற்றத்தை ஏற்படுத்துவதை விட, பள்ளிகளை எவ்வாறு மீண்டும் பாதுகாப்பான இடங்களாக மாற்ற முடியும் என்பதைப் பற்றி நாம் பேச ஆரம்பிக்க வேண்டிய நேரம் இது.

ரீட்டா சோனாவத்: வெளிநாடுகளில் உள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம், ஆனால் இந்தியாவில் உள்ள  நிலைமையுடன் அதை ஒப்பிட முடியாது. அந்த நாடுகளில் திறக்கப்பட்டிருக்கும் பள்ளிகள் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, அவர்கள் ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித்தனியாகப் பெட்டிகளைப் பயன்படுத்துகிறார்கள். பயன்படுத்திய திசு காகிதங்களை அந்த பெட்டிகளில் மாணவர்கள் போடலாம். ஆனால் இவ்வாறு உருவாக்கப்படும் கழிவுகள் மிக அதிக அளவிலானவை. மேலும் அவை பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். இந்தியாவில் பள்ளிகளில் அந்த வகையான உள்கட்டமைப்பு வசதி உள்ளதா? மேலும், குழந்தைகளைத் தொடாமல், முககவசம் அணிந்து அவர்களை வகுப்பறையில் அமர வைப்பது கடினம். அதேபோல் அவர்கள் மற்ற குழந்தைகளையும், மற்ற குழந்தைகளின் முககவசங்களையும் தொடாமல் இருப்பதும் கடினமே.

Maharashtra teachers to get online training on Gujarat channel ...

கோவிட்-19க்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறந்தவுடன் கல்வி எவ்வாறு இருக்கும்? இணையவழி பாடங்கள் தொடருமா, மாணவர்களின் கற்றல் நிலை என்னவாக இருக்கும்?

கிரண் பட்டி: பெரும்பாலான மக்களால் தொழில்நுட்பத்தைப் பெற முடியவில்லை, அது கவலையேற்படுத்துவதாக இருக்கிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள், தங்கள் பள்ளிகளிலிருந்து வெகுதூரத்திற்கு சென்றிருக்கலாம். தில்லியில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் மொபைல் போன்கள் வைத்திருக்கும் சில மாணவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்ததை நான் அறிவேன். ஆனால் அந்த மாணவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் தொடர்பிலிருந்து மறைந்து விட்டார்கள். அவ்வாறான குழந்தைகள் விரைவிலேயே பள்ளியை விட்டு விலகி வெளியே சென்று விடுகிறார்கள். அவர்களுடைய குடும்பத்தினர் நகரங்களுக்குத் திரும்புவார்களா, அவர்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்பது நமக்குத் தெரியாது. செயல்பாடுகளின் அடிப்படையில் சிறந்த இணையவழி தொகுப்புகளை உருவாக்க ஆசிரியர்கள் போதுமான அளவு செய்கிறார்கள் என்றாலும், எத்தனை குழந்தைகள் இதன் மூலம் பயனடைகிறார்கள்? நம்மிடம் உள்ள பிரச்சனை என்னவென்றால், எப்போதும் விளிம்புநிலை குழந்தைகளைப் புறக்கணிக்கும் வகையிலேயே நமது கொள்கைகள் இருக்கின்றன. அதனால்தான் இன்னும் பள்ளிக்கே செல்லாத பல குழந்தைகள் நம்மிடையே உள்ளனர். ஏற்கனவே சில வசதிகளைப் பெற்றிருப்பவர்கள் மீதே நமது கொள்கைகள் அனைத்தும் கவனம் செலுத்துகின்றன. கண்ணுக்குத் தெரியாதவர்களை – ஏழைகள் மற்றும் விளிம்பு நிலையிலிருப்பவர்களை நாம் வசதியாக மறந்து விடுகிறோம்.

ரீட்டா சோனாவத்: இணையவழி கல்வியை நாம் நிறுத்தி விட்டால், தொழில்நுட்பத்தைப் பெற்றிருக்கும்  குழந்தைகளும் அந்த வசதியை இழக்க நேரிடும். எனவே, இணையவழி வகுப்புகளை நிறுத்துவது தீர்வாகாது. அதற்குப் பதிலாக, இந்த [பின்தங்கிய] குழந்தைகளுக்கு தொழில்நுட்பத்தை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து நாம் செயல்பட வேண்டும். ஏற்கனவே இந்த பிரச்சனைகள் குறித்து, சில அரசு சாரா நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக் டேப்லெட்டுகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு குழந்தைகளுக்கு அவர்கள் கற்பித்து வருகின்றனர். அதுபோன்ற அதிகமான முயற்சிகள் இன்னும் நமக்குத் தேவைப்படுகின்றன.

இந்த நோயாலோ அல்லது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வேறு எந்த தொற்றுநோயாலோ மாணவர்கள் கல்வியில் இருந்து பின்வாங்க மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தக்கூடிய மாற்று வழிகள் யாவை?

கிரண் பட்டி: இந்த தொற்றுநோய்களின் போது, ​​ அனைத்து துறைகளிலும் – எல்லாவற்றிற்கும் மேலாக பொது சுகாதாரத்தில் – இருக்கின்ற பல கொள்கை குறைபாடுகள் முன்னுக்கு வந்துள்ளன. இத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கு நமது பொது சுகாதார அமைப்பு உதவவில்லை என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. கல்வித்துறையிலும் கூட, இது போன்றதொரு சூழ்நிலையைக் கவனித்துக்கொள்ளும் வகையில், நமது கல்வி முறையில் நாம் முதலீடு செய்திருக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது. முன்னோக்கிச் செல்கின்ற போது, ​​ நாம் இந்த முறையில் சிந்திக்கத் தொடங்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படும் போது, பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் இல்லாத வகையில் நமது கல்வி முறையை நாம் மேம்படுத்த வேண்டும். எந்தவொரு தொற்றுநோய்களின் போதும், பள்ளிகளில் மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழல் இருப்பதை நாம் சாத்தியமாக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை இல்லை என்ற நிலையை உறுதி செய்ய வேண்டும். இது இணையவழி கல்வி பற்றி மட்டுமல்லாது, தொற்றுநோயால் கல்வியை இழந்த மாணவர்களைக் கையாள்வதற்கான செயல் திட்டங்களை உருவாக்குவது குறித்ததாகவும் இருக்கின்றது. தொற்றுநோய்களின் போது, தொழில்நுட்பத்தைப் பெற முடியாத பெரும்பான்மையான மாணவர்கள் பள்ளியிலிருந்து வெளியேற நேரிடுகின்ற நிலைமை, அவர்களின் கல்வி உரிமைக்கு எதிரானது.

ரீட்டா சோனாவத்: தொற்றுநோய்களின் போது, ​​ஒவ்வொரு மாற்று நாளிலும் 50% மாணவர்கள் கலந்துகொள்வதன் மூலம், தொற்றுநோய்களின் போதும் ​​பள்ளிகளை சுழற்சி முறையில் திறக்க முடியும் என்று நாங்கள் (ஆரம்ப கால மழலைப் பருவ கழகம்) பரிந்துரைத்துள்ளோம். இந்த முறையானது நெரிசலான வகுப்பறைகளைத் தவிர்க்கவும், பள்ளிகளின் வளாகத்தை சுத்தம் செய்வதற்கான அவகாசத்தைப் பெறவும் உதவும். ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியரல்லாத அலுவலர்களின் உடல் வெப்பநிலை குறித்த பரிசோதனைகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். வீட்டிற்கு கொண்டு செல்வதற்காக எந்த புத்தகங்களையும் ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தரக்கூடாது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சமூக இடைவெளியை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். இரண்டாவதாக, விளிம்புநிலை மற்றும் புலம் பெயர்ந்த குழந்தைகளுக்கான பள்ளிகளைத் திறப்பதற்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது, ஏனெனில் அவர்களிடம் தொழில்நுட்பம் இருக்காது. அந்த குழந்தைகளுக்கு தனித்தனி பாதுகாப்பான இடங்களை உருவாக்கலாம்.

https://www.thehindu.com/opinion/op-ed/can-online-learning-replace-the-school-classroom/article31917964.ece

நன்றி: தி ஹிந்து நாளிதழ், 2020 ஜூன் 26

தமிழில்: தா.சந்திரகுரு

 

 

Latest

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய...

திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

படம் : விடுதலை நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப்...

நூல் அறிமுகம் :கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும் (பல்வங்கர் பலூ) – வே.மீனாட்சி சுந்தரம்

கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும், ஏன் ”பேட்டிங்” ”பொவ்லிங்கை”விட உயர்வாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.? ஏன்...

நூல் அறிமுகம் : குறுங்.. – கேத்தரின்

  குறுங்...... நூலின் தலைப்பே துறுதுறு வென இருக்க, ஏற்கனவே விழியன் அவர்களின் "பென்சில்களின்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய முற்பட  காலமில்லை!   உருமாற்றப்பட்ட  சந்திப்புகளைக்கடந்தபடி  ஓடுகிறது நிகழ்காலம்!    அறிய முற்பட்டு பிரிவுக்கான பிடிபடாத காரணங்கள்  பலவாயின!  தொடர்கதைகளில் இணைகின்றன வேறு வேறு சிறுகதைகளும் கவிதைகளும்!  ......   

திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

படம் : விடுதலை நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கண்களில் கண்ணீரை வர வைத்த கதையின் அமைப்பு நம்மையும் தூண்டுகிறது சில விடுதலை ஈடுபாடுகளில் அர்ப்பணித்துக் கொள்ள...

நூல் அறிமுகம் :கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும் (பல்வங்கர் பலூ) – வே.மீனாட்சி சுந்தரம்

கிரிக்கெட்டும், உள் உறை அரசியலும், ஏன் ”பேட்டிங்” ”பொவ்லிங்கை”விட உயர்வாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.? ஏன் பொவ்லிங் சூப்பர் ஸ்டார் பல்வங்கர் பலூவின்( 1876- 1955) திறமை மதிக்கப்படவில்லை? பதிவாகவில்லை?. ஏன் பலூவின் இடதுகை சுழற்சி முறை பந்தால் ரன்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here