Poem - Cat murder | பூனையின்கொலை

ஒவ்வொருமுறையும்
கூண்டுக்கிளிகளைத்
தின்றுவிட யத்தனிக்கும்
அப்பூனை.
விரட்டிவிட்டாலும்
சுவர்மேல்நின்றபடி
கிளிகளைவெறிக்கும்.
இரவானால்
உள்ளேவைத்துவிடும்நான்
நேற்றுமறந்துவிட்டேன்.
விடிந்துபார்க்கையில்
கூண்டெங்கும்
சிதறிக்கிடக்கின்றன
கொலைக்கான தடயங்கள்.

மறந்துவிட்டதற்கு பதில்
திறந்துவிட்டிருக்கலாம்.
உண்மையில்
கொன்றது பூனைதானென
நான் சமாதானமடைகிறேன்.

 

எழுதியவர் 

கௌ. ஆனந்தபிரபு

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *