2021 SRM University Tamil Awards (எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தமிழ்ப் பேராயம் விருதுகள்) Announced. Book Day is Branch of Bharathi Puthakalayam.

2021 ஆம் ஆண்டுக்கான எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தமிழ்ப் பேராயம் இலக்கிய விருதுகள் அறிவிப்பு



2012 முதல் ஆண்டு முதல் ஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த படைப்புகளை தந்த படைப்பாளிக்கு 12 வகையான விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறார்கள். இந்த விருதுகள் மொத்தம் ரூ.20 லட்சம் ரொக்கப் பரிசு கொண்டவை. இந்த ஆண்டுக்கான விருதுகளை நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தேர்வு செய்தது.

2021 SRM University Tamil Awards (எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தமிழ்ப் பேராயம் விருதுகள்) Announced. Book Day is Branch of Bharathi Puthakalayam.
நன்றி: hindutamil.in

விருதுக்கு தேர்வானோர் விவரம்:

இந்த ஆண்டிற்கான எஸ்.ஆர்.எம் தமிழ்ப் பேராயம் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது – அ.வெண்ணிலா (கங்காபுரம்), இரா.முத்து நாகு (சுளூந்தீ) ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

பாரதியார் கவிதை விருது – கடவூர் மணிமாறன் (குறிஞ்சிப் பூக்கள்), அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது – வெற்றிச்செல்வன் (மழலையர் மணிப் பாடல்கள்), ஜி.யூ.போப் மொழிபெயர்ப்பு விருது – டாக்டர் பழனி (நாலடியார்).

அப்துல் கலாம் தொழில்நுட்ப விருது – வி. டில்லிபாபு (எந்திரத் தும்பிகள்: ஹெலிகாப்டர் ஓர் அறிமுகம்), முத்துதாண்டவர் தமிழிசை விருது – டி. கே. எஸ். கலைவாணன் (நாடகமும், தமிழிசையும்), பரிதிமாற்கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது – சி.மகேந்திரன் (அறிவு பற்றிய தமிழரின் அறிவு), முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது – சி.மகேஸ்வரன் (இனக்குழு வரைவியல்), சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது – மா.பூங்குன்றன் (தென்மொழி).

தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது – மணிமேகலை மன்றம், ராஜபாளையம், அருணாசலக் கவிராயர் விருது – திருபுவனம் ஜி.ஆத்மநாதன் தமிழ் இசைக் குழு, பாரிவேந்தர் பைந்தமிழ் விருது – பா.வளன் அரசு (மூத்த தமிழறிஞர்).

விருது வழங்கும் விழா சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் எனவும், விழா நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pennagaram Book Festival 2021. This Book Fair Conducted by Thagadur Puthaka Peravai And Bharathi Puthakalayam.

பென்னாகரம் புத்தகத் திருவிழா 2021



தர்மபுரி மாவட்ட மக்களை அறிவுத்தளத்தில் கொண்டு செல்வதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தர்மபுரியில் தகடூர் புத்தக பேரவை என்ற அமைப்பானது ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக புத்தகத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று அனைத்து தரப்பு மக்களின் பாராட்டுகளையும் பெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா நோய்த்தொற்று காரணமாக புத்தகத் திருவிழா நடத்த முடியாமல் போனது.

இருப்பினும் வட்டார அளவில் புத்தக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அந்தந்த பகுதியில் இருக்கும் தன்னார்வ அமைப்புகளை இணைத்துக்கொண்டு தகடூர் புத்தக பேரவை, பாரதி புத்தகாலயம் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. கடந்த செப்டம்பர் 3ந் தேதி முதல் 5 ந்தேதி வரை மூன்று நாட்கள் பென்னாகரத்தில் புத்தக கண்காட்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்த புத்தக கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளரும் ஏற்பாட்டாளருமான தலைமையாசிரியர் மற்றும் சமூக செயல்பாட்டாளர் மா. பழனி அவர்களிடம் புத்தக கண்காட்சி பற்றிய அனுபவங்களை கேட்டோம்.

தகடூர் புத்தக பேரவை தோற்றுவிக்கப்பட்டு நடத்தப்படுகின்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறேன்.

Pennagaram Book Festival 2021. This Book Fair Conducted by Thagadur Puthaka Peravai And Bharathi Puthakalayam.

வட்டார அளவில் புத்தக கண்காட்சி நடத்த முடிவு எடுக்கப்பட்டு அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் ஆகிய பகுதிகளில் புத்தக கண்காட்சி நடத்தி முடிக்கப்பட்டது. தொடர்ச்சியாக பென்னாகரத்தில் புத்தக கண்காட்சி நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய முடிவெடுத்து தகடூர் புத்தக பேரவை மற்றும் பாரதி புத்தகாலயத்துடன் இணைந்து ஃப்யூவிஷன் கிளப் பென்னாகரம் புத்தக கண்காட்சியை நடத்த திட்டமிட்டு பணிகளை துவக்கினோம். புத்தகக் கண்காட்சி செப்டம்பர் – 3ந்தேதி காலை 10 மணியளவில் தகடூர்புத்தகப் பேரவையின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா. செந்தில் புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார். தொடக்கவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தது மிகப்பெரிய மனநிறைவைத் தந்தது.

வாசகர்கள் பெருவாரியாக புத்தக கண்காட்சிக்கு வருகை தந்து அவர்களுக்கு தேவையான நூல்களை வாங்கி சென்றனர். அத்துடன் விழாக்களில் சால்வை மற்றும் மாலைக்கு பதிலாக புத்தகங்களை பரிசளிக்க முன்வந்து வாசகர்கள் புத்தகங்களை வாங்கியது காண முடிந்தது. மாலை நேர இலக்கிய நிகழ்வுகள் உள்ளூர் எழுத்தாளர்கள் கவிஞர்கள் மூலம் நடத்தப்பட்டது.

மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் புத்தக கண்காட்சிக்கு வந்து புத்தகம் வாங்கி சென்றதை பார்க்கும் போது இனி ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற புத்தகக் கண்காட்சியை பென்னாகரத்தில் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கி இருக்கிறது. வாசகர்களும் தொடர்ச்சியாக வருடந்தோறும் புத்தக கண்காட்சி நடத்த வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்திருக்கிறார்கள்.

மூன்று நாள் முடிவில் புத்தக விற்பனை ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நடந்துள்ளதாக புத்தக கடைக்காரர்கள் தெரிவித்தது மனதிற்கு இதமாக இருந்தது.
மூன்று நாட்களும் ஒரு குடும்ப விழாவை எப்படி ஒருங்கிணைத்து நடத்த வேண்டுமோ அதே போன்ற உணர்வுடன் ஒருங்கிணைத்து அனைவரின் நட்பையும் அன்பையும் பெற்று சிறப்பாக நடத்துவதற்கு ஃப்யூவிஷன் கிளப் பொறுப்பாளர்கள் முன்வந்தது மிகுந்த மனநிறைவைத் தருவதாக இருந்தது.

Pennagaram Book Festival 2021. This Book Fair Conducted by Thagadur Puthaka Peravai And Bharathi Puthakalayam.

இந்த இனிய நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் தலைமை ஆசிரியர்கள் ஓய்வு பெற்றவ அரசுப் பணியாளர்கள் கலந்து கொண்டதோடு பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் வருகை தந்தது சிறப்பு அம்சமாகும். கிராமப்புறங்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நூலகங்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பாக அளிப்பதற்கு தொண்டு நிறுவனங்கள் தனிநபர்கள் முயற்சித்தது இந்த புத்தக கண்காட்சியில் சிறப்பு அம்சமாக இருந்தது.

நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கு முழுமையாக வழிகாட்டிய தகடூர் புத்தக பேரவையின் தலைவர் இரா. சிசுபாலன் அவர்களுக்கும், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை புரிந்திருந்த அனைத்து சான்றோர் பெருமக்களும் மிகுந்த நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

என்னோடு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கு இரவு பகல் பாராமல் உழைத்திட்ட ஃப்யூவிஷன் கிளப் பொருளாளர் மணிவண்ணன் மற்றும் தேவகி உட்பட கிளப் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி.

மிகப்பெரிய அளவில் விளம்பரங்கள் செய்து புத்தக கண்காட்சி வெற்றி பெற செய்வதற்கு விளம்பரங்கள் கொடுத்த விளம்பர நிறுவனங்களுக்கும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் இந்த நேரத்தில் நான் மிகுந்த நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் புத்தக கண்காட்சி நடத்துவதற்கான முயற்சியை தொடர்ந்தும் முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

கூத்தப்பாடி பழனி
தலைமை ஆசிரியர்,
பென்னாகரம்.

School Teacher Ve. Shankar's Dudduduu (டுட்டுடூ) Tamil Children Novel Book Realese in Erode Bharathi Puthakalayam Branch on September 6th 2021

ஈரோட்டில் “டுட்டுடூ” (சிறார் நாவல்) புத்தக வெளியீடு



06.09.2021 திங்கள் கிழமை மாலை 5.30 மணிக்கு பாரதி புத்தகாலயம், ஸ்டேட் பேங்க் ரோடு, ஈரோட்டில் எழுத்தாளர் வே. சங்கர் எழுதிய “டுட்டுடூ” (சிறார் நாவல்) புத்தக வெளியீடு குறைந்த எண்ணிக்கையிலான வாசகர்களின் முன்னிலையில் சமூக இடைவெளியைப் பின்பற்றி நடைபெற்றது.

புத்தக ஆர்வலரும் வாசகருமான திரு.ரமேஷ் அவர்கள் வந்திருந்த வாசகர்களை வரவேற்று நூல் ஆசிரியரைப் பற்றியும் நூலைப் பற்றியும் சிறந்தமுறையில் அறிமுகம் செய்து வைத்து வரவேற்புரை நல்கினார்.

தொடர் நிகழ்வாக திரு.ரமேஷ் அவர்கள் “டுட்டுடூ” சிறார் நாவலை வெளியிட முதல் பிரதியை நூல் ஆசிரியரின் நெருங்கிய நண்பரான திரு.சந்தோஷ்குமார் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

அடுத்த பிரதியை பாரதி புத்தகாலயத்தின் செல்லப்பிள்ளையும் நெடுநாளைய வாசகருமான திரு.பாபு அவர்கள் வெளியிட அதை பசுமை உலகம் பொறுபாளர் திரு.மனமோகன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

நூலின் சிறப்பு குறித்தும் கதையின் சாராம்சம் குறித்தும் பாரதி புத்தகாலயத்தின் விற்பனையாளர் திருமதி.ராணி அவர்கள் சிறப்புரை ஆற்றியது நூல் வெளியீட்டு விழாவின் முத்தாய்ப்பாய் அமைந்திருந்தது.

சிறார் இலக்கியத்தின் கூறுகள் குறித்தும் சிறார் இலக்கிய நூல்களை குழந்தைகளின் மத்தியில் கொண்டு செல்லவேண்டியதின் அவசியம் குறித்தும் திரு.சந்தோஷ்குமார் அவர்கள் பேசியது சிறப்பு.

வந்திருந்த வாசகர்களில் திரு.மகேஷ், திரு.பாலஜவகர் மற்றும் திரு.ஸ்டீபன் ராஜா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

”டுட்டுடூ” சிறார் நாவலின் ஆசிரியர் வே. சங்கர் அவர்கள் தனது ஏற்புரையில் இந்நாவல் எழுதப்பட்டதன் நோக்கம் குறித்தும் அது எவ்வாறு வடிவம் பெற்றது என்பதனையும் விலாவாரியாகப் பேசினார்.

பாரதி புத்தகாலயத்தின் பொறுப்பாளர் இளங்கோ

இறுதியாக, பாரதி புத்தகாலயத்தின் பொறுப்பாளர் தோழர்.இளங்கோ அவர்கள் நன்றி நவிழ புத்தக வெளியீட்டு விழா எளிமையாகவும் சிறப்பாகவும் நிறைவுற்றது.

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

Writer S Bala bharathi (Marappaachchi Sonna Ragasiyam) Gets Bala Sahitya Puraskar Award For 2020. Book Day is Branch of Bharathi Puthakalayam.

பால சாகித்ய புரஸ்கார் விருது பெறும் எழுத்தாளர் யெஸ். பாலபாரதி



எழுத்தாளர் யெஸ். பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வானம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற நூலுக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பால சாகித்ய புரஸ்கார் தாமிர விருதும், 50 ஆயிரம் ரொக்கம் பரிசு தொகை மற்றும் சான்றிதழ் எழுத்தாளர் யெஸ். பாலபாரதிக்கு வழங்கப்பட உள்ளது.

மரப்பாச்சி சொன்ன ரகசியம் » Fathima Booksஒவ்வொரு ஆண்டும் சிறார் இலக்கியத்திற்காக ஒன்றிய  அரசால் அளிக்கப்படும் சாகித்ய அகடாமி விருதுதான் பால சாகித்ய புரஸ்கார் விருது. இதில் 2020ம் ஆண்டுக்கான இந்த விருது தமிழ்மொழி பிரிவில் யெஸ். பாலபாரதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது குறித்து, பேசிய எழுத்தாளர் எஸ். பாலபாரதி, “குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டலை தடுப்பதற்காக நான் எழுதிய மரப்பாச்சி பொம்மை நூலுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தை தன்னை சுற்றி நடக்கும் பாலியல் அத்துமீறல்களை கண்டு பயப்படாமல் அதை வெளியில் உடனே கத்தி சொல்ல வேண்டும் என்பதை மரப்பாச்சி பொம்மை சொல்லிக்கொடுக்கும்.

பாலியல் அத்துமீறல்களில் இருந்து தற்காத்து கொள்வதுடன், வெளியில் சொல்லி அவர்களை தண்டிக்க வைக்க முடியும் என்பதை மரப்பாச்சி பொம்மை நூலில் கூறியுள்ளேன். இந்த நூல் முதல் பதிப்பு விற்று தீர்ந்து மீண்டும் மறுமதிப்பு வெளியிடப்பட்டது. மரப்பாச்சி பொம்மை நூல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டால் குழந்தைகளுக்கு எதிரான அநீதி தடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

விருது பெற்ற எழுத்தாளர் யெஸ். பாலபாரதி அவர்களை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பதிப்பகத்தார்கள், சக எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Ayesha. Era. Natarasan's Kattral Enbathu Yathenil Book Release Event on Teachers Day Celebration. Book Day is Branch of Bharathi Puthakalayam.

பள்ளிக் கல்வி என்பது அனைவரும் சேர்ந்து இழுக்க வேண்டிய தேர்- பள்ளி கல்வித்துறை ஆணையர் கே.நந்தகுமார்



சென்னை: கல்விச் சிந்தனைகள் குறித்த வளமையான புத்தகங்கள் தமிழில் வெளிவர வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஆணையர் கே.நந்தகுமார் கூறினார்.

செப். 5 ஆசிரியர் தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம் ஏராளமான நிகழ்வுகளை நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஆயிஷா இரா.நடராசன் எழுதிய ‘கற்றல் என்பது யாதெனில்: கல்வி 4.0’ நூல் வெளியீட்டு விழா செவ்வாயன்று (செப்.1) சென்னையில் நடைபெற்றது. பேரா. ஆர்.மனோகரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், நூலை மேனாள்துணைவேந்தர் பேரா. க.அ.மணிக் குமார் வெளியிட முதல் பிரதியை கே.நந்தகுமார் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் ‘கல்விச் சிந்தனைகள் நூல் திரட்டு’ விற்பனையை தொடங்கி வைத்து கே.நந்தகுமார், அயல்நாட்டு கல்வியாளர்கள், சிந்தனையாளர்களின் புத்தகங்களை தேடிதேடி படிப்பது என்ற நிலை மாற வேண்டும். தமிழில் முதல் தரமான புத்தகங்கள் வேண்டும். ‘கற்றல் என்பது யாதெனில்; கல்வி 4.0’ போன்று நல்ல நல்ல நூல்களை ஆயிஷா நடராசன் போன்றவர்கள் எழுத வேண்டும். பள்ளிக் கல்வி என்பது அனைவரும் சேர்ந்து இழுக்க வேண்டிய தேர். அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் என்றார்.

Ayesha. Era. Natarasan's Kattral Enbathu Yathenil Book Release Event on Teachers Day Celebration. Book Day is Branch of Bharathi Puthakalayam.

பேரா.க.அ.மணிக்குமார் குறிப்பிடுகையில், “பல்கலைக் கழக பேராசிரியர்கள் எழுதும் ஆய்வு நூல் தரத்தோடு இந்த நூல் உள்ளது. திறமையான ஆசிரியர்களை ஊக்குவித்தால் மிகச்சிறந்த கல்வி முறையை உருவாக்க முடியும்” என்றார்.

“வகுப்பறைகள் மறைந்து, மனிதநுண்ணறிவை கொண்டு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டி உள்ளது. தொழில் நுட்பத்தை ஆசிரியர்கள் புறக்கணிக்க முடியாது. தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை இந்நூல் உணர்த்துகிறது. மாணவர் இடைநிற்றல் 22 சதவீதமாக உள்ளது. ஒன்றரை வருடம் கல்விச் சூழலில் இருந்து துண்டிக்கப்பட்டு, பயிற்சிகள் இன்றி கணித அடிப்படைகளை மறந்த நிலையில் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருகின்றனர். கற்றல், கற்பித்தல் இயல்பாக இருக்காது என்பதை ஆசிரியர் சமூகம் உணர்ந்து கற்பிக்க வேண்டும்” என்று கல்வியாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி கூறுகையில், “காலையில் எழுந்து பல் தேய்க்க பழகியவர்கள், இப்போது செல் தேய்க்க பழகிவிட்டோம் என்பன போன்ற வாக்கியங்கள் வாசிப்பை நகர்த்தி செல்கிறது. 2010க்குப் பின் பிறந்த குழந்தைகள் பாதி மனிதர்களாகவும், பாதி கருவி களாகவும் உள்ளனர். இந்த அழகையும் ஆபத்தையும் உணர வேண்டும். தமிழக கல்வியில் கற்றல், கற்பித்தலில் உள்ள இடைவெளியை சரி செய்யவேண்டி உள்ளது. அதற்கு இந்நூல் உதவும்” என்றார்.“தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தனியார் பள்ளிகள் கொள்ளையடிக்கின்றன. அரசு நிர்வாகத்தின் இயலாமையின் வெளிப்பாடாக, ஆன்லைன் வழி கல்வியை கற்பிக்க ‘அகஸ்தியா’ என்ற தனியார் நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்துள்ளனர். ஆசிரியர் சமூகத்திற்கு மட்டுமின்றி மாணவர் சமூகத்திற்கும் இந்நூல் பேருதவியாக இருக்கும்” என்று இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் குறிப்பிட்டார்.

May be an image of 4 people, indoor and text that says 'கற்றல் என்பது யாதெனில் sed'

ஏற்புரையாற்றிய நூலாசிரியர் ஆயிஷா இரா.நடராஜன், “கடந்த ஒன்றரை வருடத்தில் ஆன்லைன் வாயிலாக முறைசாரா கல்வி பயின்று மாணவர்கள் தங்களை புதுப்பித்துக் கொண்டுள்ளனர். எனவே, கல்வி 4.0வை ஒவ்வொரு பள்ளிக்கும் கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம். அதற்கேற்ப ஆசிரியர்களும் தயாராக வேண்டும் என்பதற்காக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது” என்றார்.“இந்தியாவிலேயே கியூஆர் கோடு என்ற முறையை பாடத்திட்டத்தில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது தமிழகம்தான். தமிழக பாடத்திட்டம் முதலில் குழந்தையை குழந்தையாக அணுகும். அடுத்து மாணவனாக, தேடலில் ஈடுபடும் நிபுணனாக, எதிர்காலத்தை திட்டமிடுபவராக உயர்த்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஒரே பாடத்திட்டத்திற்குள் இவ்வளவையும் வைக்கும் அளவிற்கு அரசு பள்ளி ஆசிரியர்களிடம் திறமை உள்ளது. செயல்திறன் மிக்க ஆசிரியர்கள், அதிகாரிகள் உள்ள சூழலில், கல்வியில் மாற்றத்தை உருவாக்க முடியும். அதற்கு தொழில் நுட்பத்தையும் கைக்கொள்வோம்” என்றும் அவர் கூறினார். இந்நிகழ்வில், பாரதி புத்தகாலய நிர்வாகிகள் க.நாகராஜன், ப.கு.ராஜன், சுரேஷ் இசக்கிபாண்டி உள்ளிட்டோர் பேசினர்.

நன்றி: தீக்கதிர் நாளிதழ்
புத்தகம் வாங்க கிளிக் செய்க: கற்றல் என்பது யாதெனில் – கல்வி 4.0

Delhi Daryaganj Sunday Book Bazar (Kitab Bazar) Article By Writer Muthu Krishnan. Book Day is Branch of Bharathi Puthakalayam.

டெல்லி தரியாகஞ்ச் புத்தக சந்தை (Kitab Bazar) – எழுத்தாளர் முத்து கிருஷ்ணன்



20 வருடங்களாக டெல்லி சென்று வருகிறேன், எப்பொழுது டெல்லி சென்றாலும் நான் திரும்புவது ஞாயிறு இரவு ரயிலில் தான். இந்த ஞாயிறுக்காக பல நேரம் நான்கு ஐந்து நாட்கள் டெல்லியை சுற்றியலைந்து காத்திருந்ததும் உண்டு. யமுனைக்கரையில் ஷாஜகான்பாத் பகுதியில் பெரும் மதில் சுவர்கள் சூழ தரியாகஞ்ச் பகுதி அமைந்திருக்கும். ஞாயிறு காலை விடுமுறை நாள், அன்று வழக்கமான கடைகள் ஏதும் இருக்காது ஆனால் டெல்லி முழுவதும் இருந்து நுற்றுக்கணக்கான பழைய புத்தக வியாபாரிகள் இங்கு சாலையின் இருபுறமும் கடை போடுவார்கள்.
காலை 6 மணியில் இருந்தே மெல்ல மெல்ல வியாபாரிகள் வந்து தங்களின் புத்தகங்களை இறக்கி வைத்து கையில் தேநீர் கோப்பையுடன் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்தபடி இருப்பார்கள். மெல்ல மெல்ல பெரும் தார்பாய்கள் விரித்து விதவிதமான தினுசுகளில் புத்தகங்களை அடுக்கத் தொடங்குவார்கள். ஒரு கனிம சுரங்கத்தில் தங்கம், வைரம் கிடைப்பது போல் தரியாகஞ்சு கடைகளில் மூழ்கி எழுந்தால் நிச்சயம் உங்கள் விருப்பம் போல் ஒரு புதையல் காத்துக்கிடக்கும். புத்தகம் கிடைத்தவுடன் அடுத்த வேலை பேரம் பேசுவது தான். பொதுவாக காலையில் கொஞ்சம் கறார் விலைகளுடன் இருக்கும் வியாபாரிகள் மதியத்திற்கு மேல் நாம் கேட்கும் விலைக்கு சமயங்களில் கொடுக்கத் தொடங்குவார்கள். சில வியாபாரிகள் புத்தகங்களை எடை போட்டு விற்பனை செய்வார்கள்.
File:Sunday morning roadside second-hand book market at Daryaganj, Delhi  -1.jpg - Wikimedia Commons
உலகில் பதிப்பிக்கப்பட்ட எல்லாப் புத்தகங்களையும் நீங்கள் இங்கே காணலாம். புது தில்லியில் உலகின் எல்லா நாடுகளின் தூதரகங்களில் இருக்கும் நூலகங்களில் இருந்து வரும் பழைய புத்தகங்கள் என இங்கு நீங்கள் எதிர்பாராத விஷயங்களும் கொட்டிக் கிடக்கும். நேசனல் ஜியாகிரப்பியின் கடைசி இதழை கூட கொஞ்சம் தேடினால் எடுத்துவிடலாம்.
இந்தியாவின் பிரபல எழுத்தாளர்கள் பலரை நான் இங்கு சந்தித்திருக்கிறேன், அப்படித்தான் ஒரு முறை குஷ்வந்த் சிங் அவரை சந்தித்து கை குலுக்கினேன். பல நேரங்களில் ஒருவர் புத்தகங்களை பார்த்துக் கொண்டிருப்பார் அவரை சுற்றி ஏ.கே 47 துப்பாக்கியுடன் நால்வர் நின்று கொண்டிருப்பார்கள். ராணுவ அதிகாரிகள், அரசதிகாரிகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை ஒரு லட்சம் பேர் கூடும் பழைய புத்தக சந்தை இது. ஆய்வு மாணவர்களின் எல்லா தேடுதல் வேட்டைகளும் தரியாகஞ்சில் தான் முடியும். என் ஒவ்வொரு பயணத்திலும் டெல்லியில் இருந்து பெரும் அட்டை பெட்டிகளில் புத்தகங்களுடனும், என் டெல்லி நண்பர்களிடம் கடன் பட்டும் தான் வீடு திரும்பியிருகிறேன்.
270 பழைய புத்தக வியாபாரிகள் என்றால் 300க்கும் மேற்பட்ட விதவிதமான இடைத்தீனி கடைகள் இந்த சாலையை அலங்கரிக்கும். வாரம் ஒரு முறை நடக்கும் இந்த பெரும் திருவிழாவை இனி நடக்கக்கூடாது என்று தடை செய்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம். இந்த சந்தை அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துகிறது என்பதால் இந்த தடை உத்தரவு என்கிறது உயர் நீதிமன்றம்.
File:Sunday morning roadside second-hand book market at Daryaganj, Delhi  -3.jpg - Wikimedia Commons
இந்தச் செய்தியை வாசிக்கையில் என் கண்கள் குளமாயின, எத்தனை முட்டாள் தனமான உத்தரவு இது. இப்படி ஒரு கலாச்சார திருவிழா நடைபெறுகிறது என்றால் அன்றைய ஒரு நாள் அந்த சாலையை வாகனப் போக்குவரத்திற்கு தடை விதித்து மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியது தானே அரசின் வேலை. எத்தனை சொரணையற்று செயல்படுகிறது போக்குவரத்து காவல்துறை மற்றும் நம் நீதிமன்றங்கள். உலகின் வளர்ந்த நாடுகளில் இப்படி ஒரு ஏற்பாடு எங்கு இருந்திருந்தாலும் இந்த இடத்தை அவர்களின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக அறிவித்திருப்பார்கள், வேண்டிய வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்திருப்பார்கள்.
50-60 ஆண்டுகளாக தாங்களாகவே ஒரு சுயவேலைவய்ப்பை ஏற்படுத்தி அதன் வழியே 1000 குடும்பங்கள் பிழைத்து வரும் ஒரு ஏற்பாட்டை ஒரு உத்தரவின் வழியே சிதைப்பது எந்த வகையில் ஞாயம். போக்குவரத்தை ஒழுங்கு செய்யலாம் அல்லது ஒரு பெரும் மைதானத்தை ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இவர்கள் பயண்படுத்த அரசு ஏற்பாடு செய்யலாம். ஏதோ ஒரு வகையில் இந்த சந்தை ரசவாதம் பெற்று மீண்டும் உயிர் பெற வேண்டும்.
TNCWAA Office Barrers Meets Tamilnadu Textbook and Educational Services Corporation Chairman Dindigul I. Leoni

”மறுமலர்ச்சி காணும் சிறார் இலக்கியம்”



தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பாக திங்கட்கிழமை (ஆகஸ்ட் 9) தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவர் திரு திண்டுக்கல் லியோனி, நிர்வாக இயக்குநர் திரு மணிகண்டன் மற்றும் இயக்குநர் நாகராஜ முருகேசன் ஆகியோரை சந்தித்து சங்கத்தின் நோக்கம் மற்றும் செயல்திட்டம் பகிரப்பட்டது. முன்னதாக இணை இயக்குனர் திரு சங்கரசரவணன் அவர்களை சந்தித்து நிர்வாகிகளை அறிமுகம் செய்து, சங்கம் எப்படி பாடநூல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படலாம் என்று கலந்துரையாடல் நிகழ்ந்தது. பின்னர் பாடநூல் நிறுவனத்திற்கு புதிதாக நியமிகப்பட்ட திரு திண்டுக்கல் லியோனி அவர்களை சந்தித்து அறிமுகம் செய்துகொண்டு வாசிப்பின் அவசியத்தையும் பாடபுத்தகம் தாண்டி எவ்வாறான புத்தகங்கள் தேவை என்பதை சங்கம் வலியுறுத்தியது. சிறார் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக பொதுச்செயலாளர் விழியன், துணைத்தலைவர் சுகுமாரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இனியன், மணிகண்டன், நீதிமணி மற்றும் வெற்றிச்செழியன் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்புக்களைப் பற்றி குறிப்பிட்டு சங்கத்தின் பொதுச் செயலாளர் விழியன் இவ்வாறு குறிப்பிட்டார் “புதிதாக பொறுப்பேற்று இருக்கும் அரசு சிறார் இலக்கியம் மீது கவனம் செலுத்த கட்டளை பிறப்பித்துள்ளது மிகுந்து உற்சாகமூட்டுவதாக உள்ளது. இந்த பேரிடர் காலத்தில் எல்லாமே மெதுவாக நகர்கின்றது, ஆனால் குழந்தைகளுக்கு பள்ளிகள் திறக்கும்போது அவர்களுக்கு தேவையாக பாடபுத்தகம் தாண்டிய நூல்கள் துரித முறையில் தயாராகின்றன. தலைவர் லியோனியிடம் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரிடையாக பேசும்போது சிறார் நூல்கள் சார்ந்த வேலைகளை உடனடியாக துவங்கும்படி பணித்தார் என்பதனை தெரிவித்தார். வரும் நாட்களில் இந்த நூல்களை எப்படி வடிவமைப்பது, கொண்டுவருவது ஒட்டிய கலந்துரையாடல்கள் நடக்கும்போது சங்க நிர்வாகிகளை அழைப்பதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். அடுத்ததாக கல்வி அமைச்சரை சந்தித்து கல்வி, நூலகம் மற்றும் பால சாகித்ய துறையை துவங்குவது பற்றிய கோரிக்கைகளை வைக்க உள்ளோம்”

Dharmapuri Bharathi Puthakalayam Branch Opening on Last Saturday. Book Day is Branch of Bharathi Puthakalayam.

தருமபுரி நகரில் பாரதி புத்தகாலயம் கிளைத் திறப்பு

தருமபுரி நகரில் பாரதி புத்தகாலயம் கிளை திறப்பு விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பாரதி புத்தகாலயம் சாா்பில், தருமபுரி பேருந்து நிலையம் அருகே ஆறுமுகம் தெருவில் எல்.எஸ்.என். வணிக வளாகத்தில் பாரதி புத்தகாலயம் கிளை அமைக்கப்பட்டது. இப்புதிய கிளைத் திறப்பு விழா…
Antoine de Saint Exupéry in The Little Prince (Kutti Ilavarasan) Book Review by Udhayasankar. Book Day is Branch of Bharathi Puthakalayam.

குட்டி இளவரசனோடு ஒரு அற்புதப்பயணம் – உதயசங்கர்

குழந்தைகளின் கனவுகள் எல்லையற்றவை. அந்தககனவுகளில் குழந்தைகள் தங்கள் இதயத்தையே அர்ப்பணிக்கிறார்கள். அந்தக் கனவுகளில் எண்கள் இல்லை. மதிப்பீடுகள் இல்லை. வறட்டுத்தனமான அறநெறிகள், நன்னெறிகள், நீதிநெறிகள் இல்லை. ஆனால் அன்பும் நேசமும் பொங்கித்ததும்புகின்றன. குழந்தைகளின் உலகத்தை கண்களால் அல்ல.. இதயத்தால் பார்க்க முடிந்தால்…