thiruchenthooril thuvangiyathu illam thorum noolaga iyakkam திருச்செந்தூரில் துவங்கியது "இல்லம் தோறும் நூலக இயக்கம்"

திருச்செந்தூரில் துவங்கியது “இல்லம் தோறும் நூலக இயக்கம்”

திருச்செந்தூர் அமலி நகரில் மாணவர்களை வாசிக்க ஊக்குவிக்கும் இல்லம் தோறும் நூலக இயக்கம் திருச்செந்தூர், ஜூன் 28- வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கோடு  முன்முயற்சியில் மாணவர்களின் சேமிப்புக்கு மும்மடங்கு விலையில் புத்தகம் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அமலி நகரில்…
சிறுகதை : மூன்று கிணறுகள் - இராமன் முள்ளிப்பள்ளம் sirukathai: moondru kinarugal - raman mullippallam

சிறுகதை : மூன்று கிணறுகள் – இராமன் முள்ளிப்பள்ளம்

    வேதாரண்யம் வலங்கைமான் வந்து அந்த தங்கும் விடுதியில் அறை எடுத்தான்.. வடக்குத் தெரு முனையிலிருந்து வடக்கு நோக்கி சென்ற தெருவில் அந்த விடுதி இருந்தது. விடுதியை அடுத்து மேற்கு கிழக்காக சென்ற குடவாசல் சாலை. நேராக வடக்கே சென்றால்…
மழலைக் கதைப் பாடல் - கே.என்.சுவாமிநாதன் mazhalaikathaipaattu-k.n.swaminaathan

மழலைக் கதைப் பாடல் – கே.என்.சுவாமிநாதன்

புத்திசாலிக் காக்கா... தண்ணீர் தேடிக் காக்கா ஒன்று அங்கும் இங்கும் அலைந்தது கோடைக் காலம் ஆனாதலே தண்ணீர் எங்கும் கிடைக்கலை தாகத்தோடு அந்தக் காக்கா குடிசைப் பக்கம் வந்தது குடிசையிலே காக்கா தண்ணீர் பானை ஒன்றைப் பார்த்தது ஆவலோடு நீர் குடிக்கப்…
“ஆனந்தின் அகழ்வாராய்ச்சி அமானுஷ்யம்”. (சிறுகதை ) மரு. உடலியங்கியல் பாலா.

“ஆனந்தின் அகழ்வாராய்ச்சி அமானுஷ்யம்”. (சிறுகதை ) மரு. உடலியங்கியல் பாலா.




ஆனந்தும் அமுதாவும் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தால் , புதிதாக ஆரம்பிக்கப்பட்ட “ஆர்க்கியாலஜி” எனும் அகழ்வாராய்ச்சி பட்டப்படிப்பின் முதல் பேட்ச் மாணவர்கள்.

அது 60களை ஒட்டிய காலக்கட்டம்.. அந்த வகுப்பில் மொத்தமே 12மாணவர்கள் தான் சேர்த்திருந்தனர். அதில் இருந்த இரண்டு மாணவியருள் அமுதாவும் ஒருத்தி. ஆனந்த், அமுதா. இருவரும் அந்த பாடத்தில் ஆர்வம் மிகுந்த, படுசுட்டி மாணவர்கள்.

ஒத்த குணம், ஒத்த ஆர்வம் இருந்ததால் இருவருக்கும் இடையே ஒரு இனம்புரியாத நட்பு மலர்ந்தது. அந்த வகுப்பு மாணவர்கள் அனைவரும் மாதாமாதம், இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு அரசு அருங்காட்சியகம், அல்லது புராதன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலங்கள், அல்லது அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடங்களில், கல்வி சுற்றுலா செல்வது, பாடத்திட்டத்தின் ஓரு பகுதி.

மஹாபலிபுரத்தில் ஆரம்பித்து, அஜந்தா, எல்லோரா என அவர்கள் சென்று வராத இடங்களே இல்லை எனலாம். . அவ்வாறு செல்லும் போது, இவர்கள் நட்பும் புரிதலும் அதிகரித்துக்கொண்டே சென்றது. இருவரும் பல விஷயங்களை அலசி ஆராய்வர்!
பல கருத்து பரிமாற்றங்கள், படிப்பு சம்பந்தப்பட்ட பகிர்வுகள், சிற்சில சமயங்களில், ஆரோக்கியமான சர்ச்சைகள், விவாதங்கள், வாக்குவாதங்கள் நடைபெறுவதும் உண்டு.

மெட்ராஸில் இருக்கும் நாட்களில் இருவரும், மாலைவேளைகளில், கட்டாயம், கன்னிமரா நூலகம், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம், தேவநேய பாவாணர் நூலகம், அரசு நூலகம் என ஏதேனும் ஒரு நூலகத்தில் ஆஜராகி, லைப்ரேரியன் விரட்டும் வரை பற்பல நூல்களை படித்தும், குறிப்புக்கள் எடுத்தும், வீட்டுக்கு கொண்டு வந்தும்… ஆழ்ந்து அலசி ஆராய்வார்கள். வரலாற்று சான்றுகள் பற்றி ஆராய்ந்து அறிந்து விவாதித்து மகிழ்வதில் இருவருக்கும், ஒரு அலாதி பிரியம்.

ஒருமுறை பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில், நூல்களை தேடிக்கொண்டு இருந்தபோது, ஒரு அரியஅண்மையில் வெளிவந்த!
சீன அகழ்வாராய்ச்சி நிபுணர் எழுதிய ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்ட,”பண்டைய மனித உடல்களின் அதிசயங்கள்” என தலைப்பு இடப்பட்ட மிக கனமான நூல் ஒன்று,

அனந்தன் கையில் அகப்பட்டது. அந்த நூலை, எடுக்கும்போதே அது தவறி கீழே விழ, ஒரு அமானுஷிய பயம் அவனுள் தொற்றி கொண்டது.அதை படிக்கும் ஆர்வம், ஏனோ இனந்தெரியாத உந்துதலை அவனுள் உண்டுபண்ணியது! அமுதா, ஏதோ ஒரு காரணத்தால், அன்று அவனுடன் வரவில்லை.

அந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தவன், அதன் சுவாரஸ்யமான ஆச்சர்யத்தில் ஆட்கொள்ளபட்டு, பித்து பிடித்தவன் போல் தொடர்ந்து படிக்க, வழக்கம் போல் லைப்ரேரியின் அவனைநெருங்கி , “நேரமாகி விட்டது!கிளம்புங்க” என கூறி அவனை உசுப்ப …
அவனோ, அந்த புத்தகத்தை வீட்டுக்கு எடுத்து செல்ல அனுமதி கேட்டான். அவரோ “இது மிக மிக அரிய புத்தகம், உலகம் முழுதுமே, இதன் சில பிரதிகள் மட்டுமே உண்டு. ஆகவே இதை கொண்டு செல்ல அனுமதி இல்லை. நாளை வந்து படித்துகொள்” என்று கூறி அவனை வழி அனுப்பி வைத்தார்.

வீடு வந்து சாப்பிட்டு படுத்த அவனுக்கு, உறக்கம் வரவில்லை, அந்த புத்தகத்தை சுற்றியே அவன் நினைவுகள் ஆலாபனை செய்து கொண்டிருந்தது i. அந்த புத்தகத்தில், அந்த சைனாகாரன் “அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும், பதப்படுத்தபட்ட, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உடல்களைக்கூட சிற்சில அரிய இரசாயண பொருட்களின் உதவியால், ஒரு சில நிமிடங்கள் உயிர் பெற செய்து, “சங்கேத நயன பாஷையில்” அதனுடன் உரையாடலாம்.. அவ்வாறு தான் பலமுறை உரையாடி பல அறிய சரித்திர சான்றுகள் பெற்றதாகவும்” குறிப்பிட்டிருந்தான்…

அதைப் பற்றிய மேல் விவரங்களை படிக்கும் போது, நேரம் கடந்து விட்டதால், அவன் நூலகம் விட்டு வெளியேற நேர்ந்தது.
“சே.. என்ன துரதிர்ஷ்டம் !அந்த புத்தகத்தை இப்பவே!இந்த நொடியே முழுவதுமாய் படிக்கணும் போல ஆர்வமா இருக்கே!
இன்னிக்கு பார்த்து அமுதா வேறு வரவில்லையே!நாளைக்கு முதல் வேலையா அவளை பார்த்து இதை பற்றி பேசவேண்டும்.. நாளை அவளுடன் நூலகம் சென்று, சேர்ந்து படிக்க வேண்டும்.. இதை பற்றி விவாதம் செய்ய வேண்டும்”என ஏதேதோ தனக்குள் சொல்லிக்கொண்டே உறங்கி போனான்.

பொழுவிடிந்து முதல் வேலையாக, அமுதாவை கல்லூரியில் சந்தித்து, நடந்ததை கூறி, அவள் பதிலுக்காக காத்திருக்க, அவளோ” ஆனந்த் இந்த சீனாக்காரனுங்க நிறைய புருடா விடுவானுக!அதெப்படி பண்டைகால உடல்கள் உயிர்பெறும்,? அதுவும் சில நிமிடம் மட்டும்.!.. அதுகள் எப்படி சங்கேத பாஷையில் பேசும்… இதில் இரண்டு விஷயங்கள் இடிக்குது… “ஒண்ணு அந்த விசேஷ இரசாயன பொருட்கள்.”. இன்னொன்று அந்த “சங்கேத நயன பாஷை”…முதலாவதான அந்த இரசாயன பொருட்கள் எங்கு கிடைக்கும்?
அதை எப்படி தயார் செய்வது.? .. இரண்டாவது அந்த சங்கேத பாஷையை எங்கு எப்படி கற்று கொள்வது.? “.. என்று நீண்ட விவாதம் செய்தாள் ..

அவன் பொறுமையாக “அமுதா !சீனர்கள், இரசவாதத்தில் கைதேர்ந்தவர்கள்!அவன் கூறுவதில் உண்மை இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது… அந்த புத்தகத்தை உடனே முழுவதும் படிக்க வேண்டும்.. அதில் இதைபற்றிய விளக்கமான குறிப்புக்கள் இருக்கலாம், என்று நான் உறுதியாக நம்புகிறேன். வா, நாம் உடனே அந்த நூல்நிலையம் செல்லலாம்!” என்று அவளைக் கட்டாயப்படுத்தி, அங்கு இட்டுச் செல்கிறான்.

ஏதோ ஒரு பரபரப்பு அவனை தொற்றிக்கொள்ள, அவன் வைத்து சென்ற இடத்தில், அந்த நூலை தேடுகிறான்..ஆனால் அந்த புத்தகம் அங்கு இல்லாததால் பெரும் ஏமாற்றம் அடைந்து, லைப்ரேரியன் இடம் சென்று, “ஐயா நேற்று நான் படித்த அந்த புத்தகத்தை காணவில்லையே! எங்கு வைத்து இருக்கீங்க? ” என கேட்க,

அவரோ அலட்சியமாக “எந்த புத்தம்.? எத்தனையோ பேர், எத்தனையோ புத்தம் படித்துச் செல்கின்றனர்..! அங்கேயே சென்று சரியாக நிதானமாய் தேடிப்பாரும்” என்று ஏனோதானோவென்று பதில் கூறி விட்டு, அவசரமாக அகன்றுவிட… இவன் விரக்தியுடன்.. மீண்டும் அங்கு சென்று நீண்ட நேரம், அமுதாவுடன் சேர்ந்து தேடியம் அந்த புத்தகம் கிடைக்காததால் வருத்தப்பட… அவளோ “என்னப்பா எதாவது கனவு கினவு கண்டியா? .. அதுக்குத்தான் ஓவரா படிக்க கூடாதுன்றது !மூளை குழம்பிடுச்சோ! “என்று அவனை கிண்டல் அடித்து சிரிக்க, அவன் “இதில் ஏதோ சூழ்ச்சி நடக்குது.. அந்த லைப்ரேரியன் ஏதோ திருட்டு வேலை பண்றான்” என கோபத்துடன் கூச்சலிட, அமுதா அவனை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து செல்கிறாள்…

இது நடந்த பிறகு, ஆனந்த், ஏதோ பறிகொடுத்தவன் போல் காணப்பட்டான். சதா சர்வ காலமும் சிந்தனையிலேயே இருந்தான்… அமுதாவிடம் முன்புபோல் சரியா பேசுவது கூட இல்லை.. அவளோ இவனிடம் வலியப்போய்,

“என்ன ஆச்சு ஆனந்த்? ஏன் இப்படி இருக்கே? உடம்பு கிடம்பு சரியில்லையா? “என்று கேட்டாள்.

அவனோ “அதெல்லாம் ஒண்ணுமில்ல! நல்லாத்தானே இருக்கேன்!!” என்று சொல்லி மழுப்பினான். அவளுக்கு இவன் மேல் எதோ ஒரு புதிரான, பற்று ஏற்படுவதை எண்ணி, அது காதலா? என தன்னை தானே கேட்டு கொண்டாள்…! அந்த நினைப்பே அவளுக்கு ஆயிரம் இன்ப உணர்ச்சி தந்தது !

இந்த நேரத்தில்தான்,… ஹரியானாவை ஒட்டிய ஓரு பின்தங்கிய கிராமத்தில் அகழ்வாராய்ச்சியில், பற்பல அதிசயமான பண்டைய பொருட்கள் கண்டு பிடிக்க படுவதாக, நாட்டின் அனைத்து பத்திரிகைகளிலும் செய்திகள் வந்த வண்ணம் இருக்க, நம் ஆனந்த் அமுதா கோஷ்டியும், அதில் பங்குபெற அங்கு புறப்பட்டது. ஆனந்த், ஓரு பெரிய வினோதமான ஹாண்ட்பேக் ஒன்றை, மிகவும் பாதுகாப்பாக அணைத்தவாறு தன்னுடன் அந்த பயணத்தின்போது கொண்டு வந்திருந்தான். அமுதாவுக்கு அது ஆச்சர்யமாகவும் அச்சமாகவும் இருந்தது. அவனிடம் அதைபற்றி கேட்க அவனோ “அது ஒண்ணும் இல்லை.என் துணிமணிகள்” என்றுஏதோ கூறி மழுப்பினான்.

அந்த ஆகழ்வாராய்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருக்க, இவர்களும் அதில் ஆர்வமாக பங்கு கொண்டனர். ஆனந்த் முகத்தில் பல வினோத மாறுதல்கள் தெரிய தொடங்க, அமுதா ஏனோ அவனை பற்றி நிரம்ப கவலை பட்டாள் . அவனுக்கு தெரியாமல் அவன் நிழல் போல், பின்தொடர்ந்து அவனை கண்காணிக்க தொடங்கினாள். அவனோ உறக்கமின்றி சதாசர்வ காலமும், சிந்தனை வயப்பட்டு இருந்தான்.

அன்று அதிகாலையிலேயே..பணி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து சுறுசுறுப்பாய் நடைபெற, பற்பல நாணயங்கள், தங்க காசுகள் மண்பாண்டங்கள், சிற்பங்கள், எலும்பு கூடுகள், என அரிய பெரிய பொருட்கள் கிடைத்த வண்ணம் இருக்க, அனைவரும் ஆச்சர்யாபட்டு வியந்துபோயினர். அந்தி சாயும் நேரம், அனைவரையும் திகில் அடைய செய்யும் வகையில், ஒரு இளம் பெண்ணின் பாடம் செய்யப்பட்ட பிரேதம் கண்டெடுக்கப் பட்டது. இதனால் அந்த குழு மொத்தமும், அமானுஷ்ய அமைதியில் உறைந்து நின்றது. அந்த பெண்ணின் உடல்.. சிரித்தவாறு, எந்த மாறுதலும் அடையாமல் ஓரு உயிரோட்டத்துடன் இருப்பது கண்டு, அனைவரும், பிரம்மிப்புடன் அஞ்சி நின்றனர்… அந்த ஆராய்ச்சி குழு உயரதிகாரி “மாணவர்களே .. இந்த உடல் என் கணிப்புப்படி, ஐம்பது ஆயிரம் ஆண்டுகள் பழமை ஆனதாக இருக்கும் என நம்புகிறேன்!

அவர்கள் பாடம் செய்த நேர்த்தியால் இன்றும்… சற்றும் சிதிலமடையாமல், உயிரோட்டமாய் உள்ளது..” என கூற அனைவரும், “அதை” பத்திரமாக எடுத்து சென்று, விசேஷ அறையில் பாதுகாத்து வைத்து கலைந்தனர்.

ஆனந்த் முகத்தில் அன்று ஓரு புரியாத பிரகாசம் புலப்பட்டது. அந்த இளம்பெண்ணின் பிரேதத்தை வெளியில் எடுப்பதற்கு, அவன் மிகவும் ஒத்துழைப்பு தந்தான். அந்த பிரேதம் அறையில் வைக்கப்படும் வரை அதனிடம் மிகவும் நெருக்கம் காட்டினான். அதன் சற்றே திறந்திருந்த விழியை…வைத்த கண் வாங்காமல் உற்று நோக்கியபடியே இருந்தான். இதைஎல்லாம் அமுதா உன்னிப்பாக கவனித்து கொண்டே இருந்தாள்! “ஆனந்த்க்கு எதாவது ஆகிவிடுமோ?” என்றஅச்சம் அவள் ஆழ்மனதில் ஊடுருவி .. அவளை வெகுவாக பாதித்தது.

இந்த களேபரம் ஓய்ந்ததும், அவனிடமே இதை பற்றி பேசவேண்டும் என்று நினைத்து இருந்தாலும், அந்த சந்தர்ப்பம் வாய்க்காதவாறு, அவன் இவளிடம் இருந்து நழுவி, நழுவி சென்று கொண்டே இருந்தான்.

இரவுச் சாப்பாட்டின் போது அமுதா அவன் அருகில் அமர்ந்து “என்ன? ஐயா இன்று ரொம்ப குஷியா இருக்கீங்க போல!” என்று கிண்டல் அடிப்பது போல் அவனை சீண்டினாள். இதைக் கேட்ட அவன் முகம் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்ச்சியை காட்ட, அவள் சற்றே அதிர்ந்துபோய் “என்ன பதிலே காணும்? என கூற..

அவன் “அதெல்லாம் ஒண்ணும் இல்லை! எப்போதும் போல் தான் இருக்கேன். சாப்பிடும் போது பேசாமல் ஒழுங்கா சாப்பிடு! “என பொய் சிரிப்புடன் அவளை நோக்க அவள் முகம் தொங்கிபோனது. அவன் சரியாக சாப்பிடாமல் பாதியிலேயே எழுந்து கொண்டான். ஏதோ ஒரு அவசரம் அவன் செய்கையில் தென்பட்டது.

இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை, அந்த சடலம் பாதுகாக்கபட்ட அறைக்கு வெகு அருகிலேயே இருந்தது. நடுஇரவில் அந்த பிரதேசமே ஒரு மயான அமைதியில் உறங்கி கொண்டு இருக்க.. ஆனந்த் மெல்ல எழுந்து, சுற்றும் முற்றும் பார்த்து, அனைவரும் (குறிப்பாக அமுதா,) நன்கு உறங்குகிறார்களா என ஊர்ஜீத படுத்தி கொண்டான். பிறகு மெல்ல, தன் மர்ம ஹாண்ட் பேக்குடன், அடிமேல் அடி வைத்து, அந்த பயங்கர சூழலில், அந்த பிணவறை நோக்கி நடந்தான்…

அமுதா உறங்குவதுபோல் பாசாங்கு செய்து.. அவனைப் பின்தொடர்ந்தாள்.. அவன் மெல்ல அந்த அறையை நெருங்கினான். காவலாளியோ கள்ள சாராய போதையில் குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்தான்.அவன் தன்னிடமிருந்த கள்ள சாவியால், பூட்டை திறந்து உள்ளே நுழைந்து, தன் டார்ச் லைட் ஒளியில், பாடம் செய்யப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகட்கு முன் இறந்த அந்த சவத்தை நெருங்கி, அதன் விழிகளை உற்று நோக்குகிறான். அவன் முகம் மலர்கிறது.

தன் ஹாண்ட் பேக்கை சத்தமின்றி திறந்து, சில பல இரசாயன குப்பிகளில் இருந்த, வேதி பொருட்களை கலக்க, ஒரு அருவருப்பான, குமட்டல் வாடை பரவுகிறது, அவன் மூக்கில் கர்சீப் கட்டி கொண்டு, அந்த கலவையை, மாட்டு ஊசி சிரஞ்சில் எடுத்து, அந்த பெண் பிரேதத்தின், கண், வாய், காது, ஆசனவாய், மற்றும் பிறப்புஉறுப்பில், மெல்ல மெல்ல செலுத்த, அந்த பிரேதத்தில் மெல்ல விசித்திரமான மாறுபாடுகள் தெரிய துவங்குகிறது.. சில பல நொடிகளில், அது லேசாக அசைந்து, கைகால்களை நீட்டி எழுந்து நின்று, அவனை பார்த்து புன்னகை செய்தது ! ஆனந்த் தன் ஆராய்ச்சி வெற்றியடைந்ததால்.. மகிழ்ச்சியின் எல்லைக்கே செல்கிறான்.

அவன், அந்த ரகசிய பையில் இருந்த சில, ஓலை சுவடிகளை எடுத்து, ஏதோ ஒரு புரியாத மொழியில், வார்த்தைகளை உச்சரித்து,..
மெல்ல, அதனுடன் பேச முற்படுகிறான். சிறிது நேரத்துக்கு பிறகு “அது” மெல்ல உலாவியபடி, இவன் பாஷையிலேயே, வினாக்களுக்கு பதில் தர தொடங்குகிறது.. அதன் குரல் புரியாத மொழியில் நாராசமான கீச்சு குரலில் மென்மையாக ஒலிக்க, அதன் விழியும் விரிந்து.. ஏதோ ஒரு சோகத்துடன் பேச முற்பட, இவன் அதன் பின்னால் ஓடியவாறு அதன் பதில்களை புரிந்து கொண்டு வியப்பு அடைகிறான்.

அவன் ஏதோ ஒரு முக்கிய வினா ஒன்றை எழுப்ப, அந்த பெண் வெகுண்டெழுந்து கோபத்தின் உச்சிக்கு சென்று, இவனை அலேக்காக தூக்கி.. அரக்கி போல் பற்களை காட்டி, எங்கோ வீசி அடிக்க அவன் நொடியில் மறைந்து போகிறான்! கரைந்து போகிறான்!.

இவை அனைத்தையும், சாவி துவாரம் வழியாக, திகிலுடன் நடுங்கியபடி பார்த்து கொண்டு இருந்த அமுதா.. “ஐயோ, ஆனந்த் என்ன ஆச்சு! எங்கே போய்ட்ட?” என்று அலறியபடி, மயங்கி விழ, அவள் அலறல் சத்தம் கேட்டு அனைவரும் விழித்து கொண்டு, கூட்டமாய் சேர்ந்து “என்ன ஆச்சு! ஏது நடந்தது? ஆனந்த் எங்கே ?” என்று அவளை பயத்துடன் விசாரிக்க, அவள் தலைமை ஆராய்ச்சியாளரின் தனி அறைக்கு சென்று , நடந்தது அனைத்தையும், ஒன்று விடாமல் விவரிக்க..அவர் வியப்பின் எல்லைக்கே செல்கிறார்.

இதற்கு இடையே அந்த குழு மொத்தமும் , அந்த அறைக்குள் சென்று வெளிச்சம் போட்டு தேட அந்த இளம் பெண்ணின் உடல் மட்டும், அப்படியே அதே நிலையில் கிடந்தது.. ஆனால் எங்கு வலைவீசி தேடியும் ஆனந்த்தை கண்டு பிடிக்கவே முடியவில்லை.

அவன் “எங்கே போனான்! எப்படி மறைந்தான் ! என்ன ஆனான்? ” என்ற எந்த தகவலும், யாருக்கும் கடைசிவரை கிடைக்கவேயில்லை!
அமுதா, மட்டும், மிகவும் மனதளவில் உடைந்துபோய் ஆனந்தை, எண்ணி எண்ணி அழுத வண்ணம் இருந்தாள்.ஒரிரு நாளில் அனைவரும் சோகத்துடன் மெட்ராஸ் திரும்பினர்.

இருபது ஆண்டுகள் உருண்டோடின.. அமுதா “இந்திய அகழ்வாராய்ச்சித் துறை”யின், தலைமை இயக்குனராக பெரிய பதவியில் நியமிக்கப் படுகிறார். ஆனாலும் , அவள் ஆனந்த் நினைவாய் திருமணமே செய்து கொள்ளவில்லை. “என்றேனும் ஒரு நாள் அவன் நிச்சயம் திரும்பி வருவான்” என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் வாழ்க்கையை ஒட்டிக்கொண்டு இருந்தாள். அப்போது, அவளுக்கு சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடக்கும், “சர்வதேச அகழ்வாராய்ச்சி உச்சி மாநாட்டில்” இந்திய பிரதிநிதியாக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.

மாநாட்டின் திறப்பு விழாவில், தலைமை ஏற்று “அகழ்வாராய்ச்சி பிரேதங்களின் அதிசயங்கள்”என்ற தலைப்பில் பேசும் “ஆனன்ஹூசூச்சின்” வருகைக்காக, அனைத்து நாட்டின் பிரதிநிதிகளும்ஆவலாய்க் காத்திருக்க, உள்ளே நுழைந்த அவர், அச்சு அசல் நம் ஆனந்த் போல் இருப்பதை கண்டு, அமுதா “ஆனந்த்!ஆனந்த்!” என்று கூவியபடி அவனை நோக்கி ஓடி சென்று, அவனை நெருங்கி மூச்சிரைத்தபடி அப்படியே சிலையாகி நிற்க.. அவரோ ஒன்றும் புரியாமல்” எஸ்!வாட் கேன் ஐ டூ பார் யூ “என்று புன்னகைக்க.. அவன் கண்களையே உற்று பார்த்து, அதில் புதைந்திருந்த போலித்தனத்தை, இனம் கண்டு, சினம் கொண்டு ஏமாற்றம் அடைந்து, உறைந்து நிற்கிறாள்… அப்பாவி அமுதா !!

Audio Book English Thavalai written by Ayesha Era Natarasan. Uzhachi Sambathicha Vadai Story telling by Srihari ஒலிபுத்தகம்: ஆயிஷா இரா. நடராசனின் இங்கிலீஷ் தவளை (உழைச்சு சம்பாதிச்ச வடை) - குரல் ஸ்ரீஹரி.

ஒலிபுத்தகம்: ஆயிஷா இரா. நடராசனின் இங்கிலீஷ் தவளை (உழைச்சு சம்பாதிச்ச வடை) – குரல் ஸ்ரீஹரி



ஆயிஷா இரா. நடராசனின் இங்கிலீஷ் தவளை என்னும் புத்தகத்தில் உள்ள உழைச்சு சம்பாதிச்ச வடை. கதையினை வாசிப்பவர் ஸ்ரீஹரி.

Audio Book English Thavalai written by Ayesha Era Natarasan. Nandriyulla Prani Story telling by Manish ஒலிபுத்தகம்: ஆயிஷா இரா. நடராசனின் இங்கிலீஷ் தவளை (நன்றியுள்ள பிராணி) - குரல் மணிஷ்

ஒலிபுத்தகம்: ஆயிஷா இரா. நடராசனின் இங்கிலீஷ் தவளை (நன்றியுள்ள பிராணி) – குரல் மணிஷ்



ஆயிஷா இரா. நடராசனின் இங்கிலீஷ் தவளை என்னும் புத்தகத்தில் உள்ள நன்றியுள்ள பிராணி. கதையினை வாசிப்பவர் மணிஷ்.

Audio Book English Thavalai written by Ayesha Era Natarasan. Velichathai Thedi Story telling by Sanjana ஒலிபுத்தகம்: ஆயிஷா இரா. நடராசனின் இங்கிலீஷ் தவளை (வெளிச்சத்தை தேடி) - குரல் சஞ்சனா

ஒலிபுத்தகம்: ஆயிஷா இரா. நடராசனின் இங்கிலீஷ் தவளை (வெளிச்சத்தை தேடி) – குரல் சஞ்சனா



ஆயிஷா இரா. நடராசனின் இங்கிலீஷ் தவளை என்னும் புத்தகத்தில் உள்ள வெளிச்சத்தை தேடி எனும் கதை. கதையினை வாசிப்பவர் சஞ்சனா.

Audio Book English Thavalai written by Ayesha Era Natarasan. Karadi Sonna Sethi Story telling by Kanishka ஒலிபுத்தகம்: ஆயிஷா இரா. நடராசனின் இங்கிலீஷ் தவளை (கரடி சொன்ன சேதி) - குரல் கனிஸ்கா

ஒலிபுத்தகம்: ஆயிஷா இரா. நடராசனின் இங்கிலீஷ் தவளை (கரடி சொன்ன சேதி) – குரல் கனிஸ்கா



ஆயிஷா இரா. நடராசனின் இங்கிலீஷ் தவளை என்னும் புத்தகத்தில் உள்ள கரடி சொன்ன சேதி எனும் கதை. வாசிப்பவர் கனிஸ்கா.

Audio Book English Thavalai written by Ayesha Era Natarasan. Nizhalum Nijamum Or Adhisayam Nadanthathu Story telling by Mohamad Adhil ஒலிபுத்தகம்: ஆயிஷா இரா. நடராசனின் இங்கிலீஷ் தவளை (நிழலும்... நிஜமும் ஓர் அதிசயம் நடந்தது) - குரல் முகமது ஆதில்

ஒலிபுத்தகம்: ஆயிஷா இரா. நடராசனின் இங்கிலீஷ் தவளை (நிழலும்… நிஜமும் ஓர் அதிசயம் நடந்தது) – குரல் முகமது ஆதில்



ஆயிஷா இரா. நடராசனின் இங்கிலீஷ் தவளை என்னும் புத்தகத்தில் உள்ள நிழலும்… நிஜமும் ஓர் அதிசயம் நடந்தது எனும் கதை. வாசிப்பவர் முகமது ஆதில்.