புத்தகங்களோடு புத்தாண்டுக் கொண்டாட்டம்
கவிதையாய்ப் புலர்ந்ததென வர்ணிப்பதுண்டு.
கவிதையால் பிறந்தது எனக்கான புத்தாண்டு.
பாரதி புத்தகாலயம், சென்னையில் அரும்பு சிறார் நூலரங்கில் நடத்திய ‘புத்தகங்களோடு புத்தாண்டுக் கொண்டாட்டம்’ நிகழ்வில் உடல் நிலையின் ஒத்துழைப்போடு தொடக்கத்திலிருந்தே கலந்துகொண்டேன். தமிழ் ஒளி கலைக்குழுவினர் தம் பாடல்களால் அவையைத் தயார்ப்படுத்தத் தனது உரையால் வரவேற்றார் ச. லெனின். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் வாழ்த்துரைச் செய்திகளை அசைபோட்டுக்கொண்டிருக்க நிகழ்வுகளைத் தொடங்கிவைத்தார் எம். ராமகிருஷ்ணன்.
எழுத வந்த பாதைகளைக் காட்டினார்கள் கரண் கார்க்கி, ச. விஜயலட்சுமி, சக்தி சூர்யா. வாசித்ததால் திறந்த வழியில் இட்டுச் சென்றார் ஆயிஷா நடராசன்.

தமிழ் சினிமாச் சமூகத்தின் அரை நூற்றாண்டு அடையாளமாகத் தொடர்கிற ரோகிணி அதை அவர் எழுத்தாகப் பதிவு செய்ய வேண்டுமென்ற வேண்டுகோளை ச. தமிழ்ச்செல்வன் விடுக்க, திரைப்படத்திற்கு வெளியே அவரது பன்முகத் தடங்களைப் பதிவு செய்தார் கவின் மலர். எந்தத் துறைக்குப் போயிருந்தாலும் தாம் வந்து சேரும் இடம் இதுவாகவே இருந்திருக்கும் என்றார் திரைக்கலைஞருமான அந்த சமூகத்தொண்டர்.
நம் எல்லோருக்குமான சே குவேரா வாழ்க்கைச் செய்திகளோடு இந்திய மக்களுக்கும் அவருடைய தோழமை ஏன் தேவையெனப் பகிர்ந்தார்கள் ஜி. செல்வா, ஜெ. தீபலட்சுமி.

எந்தவொரு பிரச்சினைக்கும் கடைசித் தீர்வு கம்யூனிஸ்ட்டுகள். விழாவின் கடைசி நிகழ்வாகப் படைப்புகளோடு வந்தார்கள் கவிஞர்கள். நா.வெ. அருள் கவிதையுடன் தொகுத்தளிக்க சி.எம். குமார், எஸ்.வி. வேணுகோபாலன், தளவை இராசேந்திரன், முனைவர் மஞ்சுளா, சிலம்பம் சரத், விக்னேஷ், சக்தி கவிதைகளை வழங்கினார்கள். நானும் ஒன்றை வாசித்துக்கொண்டிருக்க இடை நேரத்தில் பூத்தது 2025.
க. நாகராஜன், இரா. தெ. முத்து இருவருமாக விழாவை ஒருங்கிணைத்தார்கள். பங்கேற்ற தோழர்கள் வாழ்த்துகளும், அன்பு மிகு நல விசாரிப்புகளுமாய் அரவணைத்தார்கள்.

இலக்கியம், இயக்கம் இரண்டின கலவையோடு தொடங்கிய இந்த ஆண்டுப் பிறப்பு என்னைப் புதிய கவிதை எழுத வைத்தது, அந்தக் கவிதை புத்தகப் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு என்னைக் கொண்டுவந்தது.
எழுதியவர் :
-அ.குமரேசன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அருமை சார்.. வாழ்த்துகள்.