முரடர்களின் அரசியலும் – இந்திய விவசாயிகளின் வலியும் | வே .மீனாட்சிசுந்தரம்       இன்றைய இந்தியாவில் விவசாயம்,தொழில், சேவை, அரசியல் என்ற நான்கும் கொண்டிருக்கும் உறவைப் புரியாமல்  விவசாயம் சார்ந்து வாழும் 60 கோடி மக்களின் வலிகளை எந்த படித்த மேதையாலும் உணர இயலாது !        

விவசாயிகளின் வறுமையும் முரடர்களின் அரசும் 

“இந்திய பொருளாதார கட்டமைப்பிற்கு விவசாயம் வேண்டும் ஆனால் விவசாயிகள் வேண்டாம்” என்று நம்பும்  முரடர்கள் கையில் அரசியல் அதிகாரம் இன்று மாட்டிக் கொண்டு.விட்டது. . 

            விவசாயிகளே இல்லாத விவசாயம், தொழிலாளியே இல்லாத தொழிலகம், என்பது தான் மேலை நாடுகளின்  “சுதந்திர” சந்தை கட்டமைப்பாகும். தொழில் நுட்பங்களைக் கொண்டு  மானுடத்தை தண்டச் சோறாகவும் பூமிக்கு பாரமாகவும்  ஆக்குவதே இன்றைய முதலாளித்துவ சந்தையின் திருவேலையாகும்.

           ஆறரைக்கோடி மக்கள் வாழும்.இங்கிலாந்திலும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. ,32 கோடிமக்கள் தொகை கொண்ட அமெரிக்காவிலும் வேலையில்லா திண்டாட்டம் உண்டு.ஏன் சுண்டைக்காய் சிங்கப்பூரிலும் வேலை தேடுவோர் உருவாக்கப்படுகிறார்கள். 130 கோடி மக்கள் வாழும் இந்தியாவிலும் சம்பளக் குறைவான வேலைகளுக்குத்தான் பஞ்சமில்லை .

           எங்கு நவீன  மேலை நாட்டு முதலாளித்துவம் புகுகிறதோ. அங்கு மானுடத்தை குப்பைகளாக மாற்றுவது ரசாயன கிரியைப்போல் நடக்கிறது. அதென்ன மேலை நாட்டு முதலாளித்துவ தன்மை என வினவலாம்?  பொதுவாக முதலாளித்துவம் பணத்தை மூலதனமாக்கி சரக்குகளை தயாரித்து சந்தையில் விற்று லாபம் சம்பாதிக்கும் இயல்பு கொண்டது.. மேலை நாட்டில் அது உருமாறி எல்லாவற்றையும் பணமாக்கும் பொருளாதார கட்டமைப்பாகும் கல்வி, மருத்துவம் அறிவு சொத்து எதையும் பணமாக்கிவிடும்.மானுடர்களை உதாவக்கறை ஆக்கிவிடும்

           அத்தகைய சந்தை கட்டமைப்பை காப்பி அடிப்பதே இந்துத்வா மூடர்களின் செயலாகும். அமெரிக்க ஜனாதிபதிகளை ராமாவதாரமாக கும்பிடும் நபரே நமது பிரதமர் ஆவார். அவர் எல்லா அதிகாரத்தையும் கையிலே வைத்துக்கொள்ள வெறிபிடித்த ஒரு  நபர் மற்றும். ஆன்மீக ஆஷாடபூதி என்பதை அவரது பேச்சும், செயலும் காட்டிவிடுகின்றன. அவரோடு சேர்ந்து மேலை நாடுகளின் சந்தை கட்டமைப்புதான் சிறந்தது என்று நம்புகிற மேலும் அதிகார பரவலை விரும்பாத பழுத்த அதிகார வர்க்கமே இன்று இந்தியாவை நிர்வகிக்கிறது.  

       அதிகாரத்தை கைப்பற்றிட  விரும்பும் அரசியல் தலைவர்களுக்கு அதிகார தரகர்களாக சேவை செய்கிற சுப்பிரமணியசாமி போண்ற புத்திசாலிகளும் மேலை நாட்டு சந்தைமுறையின் மூடபக்தர்களாகவே உள்ளனர். என்னதான் இந்த பக்தர்கள் திறமையை காட்டினாலும். எதார்த்த வாழ்வின் வர்க்க முரன்கள் விவசாயி தொழிலாளி மீது உருவாக்கும் வலிகள்  கொதி நிலை அடையும் பொழுது அரசியலதிகாரம் கேள்வி குறியாகிவிடுகிறது.

 இன்று மோடி விவசாயிகளின் எழுச்சியை அடக்க நினைத்தால் ஜனநாயகத்தை கொலை செய்யவேண்டும் அல்லது விவசாயிகளின் வலிகளை போக்க சட்டங்களை திரும்ப பெறவேண்டும்.மேலும் விவசாயிகளின் வறுமையை போக்கும் நடவடிக்கைகள் பற்றி திட்டமிட  வேண்டும்.. இந்த வடிவ போராட்டம் போராடுபவர்களையும் பாதிப்பதால் நீடிக்காது என்று மோடி கணக்கிட்டே பேசிவருகிறார்

தூண்டியது சந்தை கட்டமைப்பே

 இன்று இரண்டு முக்கிய  காரணங்களால் விவசாயிகள் எழுந்துள்ளனர்  இன்றைய அரசு கொள்முதல் சந்தையிலும், தனியார் மொத்த வியாபாரி சந்தையிலும் சிறு குறு விவசாயிகள் ஏமாற்றப்படுகிறார்கள் அவர்களது விளை பொருளுக்கு பல காரணங்களை கூறி கட்டுபடியான விலையை மறுப்பது இயல்பாகிவிட்டது, எடை மோசடி, ஈரப்பத அளவு மோசடி , தரநிர்ணய மேசடி என்று  ஏமாற்றுவது வாடிக்கையாகிவிட்டது.. அடுத்து பீஹாரில் 2006ம் ஆண்டிலிருந்து அரசு கொள்ளுமுதல் செய்யாமல் சுதந்திர சந்தை இயங்கிவருகிறது. அதன் அணுபவம் விவசாயிகளை ஏமாறக் கூடாது என்று உசுப்பிவிட்டது.

  சிறுகுறு விவசாயிகளை விவசாயத்திலிருந்து துரத்தி விவசாயிகளே இல்லாத  விவசாய முறையை கட்டுவது இந்த சட்டத்தின் நோக்கம் என்பதை விவசாயிகள் புரிந்து கொண்டனர். 

Farmers in India Facing Trouble Despite Exemption from Lockdown - Grainmart  News

 விவசாயிகளும் – தொழில்களும்.- பண வடிவு மூலதனம் 

 (GDP  ;Agriculture: 15.4% Industry: 23% Services: 61.5% (2017 est.)

இன்று தேச மொத்த வருவாய்க்கு அதிக பங்களிப்பது சேவை தொழிலே 61.5 சதமாகும்.எந்திர  தொழிலின் பங்கு 23 சதம் ”தேச மொத்த வருவாயில் விவசாயத்தின் பங்கு வெறும் 15.4 சதம். 

 எனவே “பொருளாதாரத்திற்கு அதன் பங்கு அவ்வளவு முக்கியமல்ல. அது ஒழிந்து  போணால் போகட்டும்” என்று மோடி வெங்கைய்யா நாயடு மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோபிந்த்  போண்ற அதிகாரத் தலைகள் அலட்சியபடுத்துவதை  பத்திரிகை வாயிலாக அறியமுடியும். அந்நிய முதலீடு கொண்டு எடுக்கப்படும் நிலத்தடி எண்ணையும், தாதுக்களும் போதும் அவைகளை விற்று பொருளாதாரத்தை வளர்க்கலாம் என மோடி அரசு கருதுவாதாலே துறைமுகங்கள் வேகமாக முளைக்கின்றன. மீன்பிடி தொழில் மறைகின்றன.  அரசே  முதலீடு செய்து  காடுகளை அகற்றுதலும் விவசாய நிலங்களை மாற்றுதலும் வேகமாக நடப்பதை காண்கிறோம். .  

            இந்தியாவின் தேச மொத்த வருவாயை பற்றி மோடி அரசு தரும் புள்ளிவிவரங்கள் எதுவும் விவசாயம், தொழில்கள் – நிதி இந்த மூன்றும் இன்று எவ்வாறு உறவாடுகிறது என்பதை பிரதிபலிக்கவில்லை.இந்திய விவசாயத்தின் மதிப்பை உணர வேண்டுமானால்  சற்று கற்பனை செய்ய தயாராக வேண்டும் 

          இன்று விவசாயிகள் முற்றுகை இடுவதற்கு பதிலாக விவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை வாபஸ் பெறுகிறவரை கொராணா காலத்து அணுபவ பாடத்தை வைத்து அடுத்த சில மாதங்களுக்கு  தங்களுக்கு தேவையான உணவுப் பொருளை மட்டும் உற்பத்தி செய்வது, எந்த  பொருளையும் பணத்திற்கோ தங்கத்திற்கோ கொடுப்பதில்லை, பண்ட மாற்று முறையில் வாழ்வது என்று முடிவெடுத்தால் என்ன நடக்கும். என்பதை கற்பனை பண்ணி பாருங்கள் 

          முதலில்  எல்லா மாநிலங்களிலும் உள்ள டெக்ஸ்டைல் ஆலைகள் சக்கரை ஆலைகள் மது தயாரிப்புகள் மருந்து தொழில்கள் டயர் தொழில்  ஹோட்டல்கள் காகித ஆலைகள்  பால் பொருள் தயாரிப்பு தோல் பொருட்கள்  காபி டீ.  எண்ணை ஆக 90 சத தொழிற்சாலைகள் மூலப் பொருளின்றி மூடப்படும். வங்கிகளின் செயல்படாசொத்து பெருகும். காசுக்கு உணவு கிடைக்காததால்  இந்திய பணக்காரர்கள் வெளி நாடுகளுக்கு ஓடி விடுவர்.  நமது பிரதமரும் உண்ண உணவிண்றி தூபாய்க்கோ அல்லது  மோரிஷியஸ் தீவிற்கோ சென்று அங்கிருந்து நம்மை  ஆட்சி நடத்த தள்ளப்படுவார். அல்லது அமெரிக்க ஜனாதிபதி ராணுவ விமாணத்தில் அணுப்பிய உணவை உண்டு டெல்லி வீட்டிலே ராம நாமத்தை ஜபம் செய்ய நேரிடும்.

           அன்று முதல் ஏழை இந்தியா வாழத் தொடங்கிவிடும். பணக்கார இந்திய அகதிகளாகிவிடும்.  அன்று இந்திய விவசாயும் தொழிலாளியும் தங்களைத் தாங்களே நிர்வகிக்க கற்றுக்  கொள்வர். பொருளுற்பத்தி நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு பெருகும். பணியிடச் சிரமங்கள் குறையும் அதற்கேற்ப வேலை நேரம் சுருங்கி சுதந்திர நேரம் கூடும். இது கற்பனைதான் ஆனால் விவசாயிகளின் வறுமை போக வேறு வழியில்லை. 

இந்திய முதலாளித்துவமும்- தொழில் வளர்ச்சியும் 

               இன்று இந்தியாவில் தொழில்வளர்ச்சி என்பது மாநிலத்திற்கு மாநிலம் ஏற்றத்தாழ்வாக இருப்பதை அறிவோம். விடுதலைக்கு பிறகு கூட தொழில்வளர்ச்சி என்பது பிரிட்டீஷ் ஆட்சிகாலத்து முறையையே பின்பற்றியது. ஏற்றுமதியை முதன்மை படுத்தியது ஆரம்பமே தவறாக தொடங்கியது. நேரு காலத்திய அணுகுமுறை உள்நாட்டு தொழில்வளர்ந்தாலும் ஏற்றுமதிக்கு உதவவில்லை எனவே மோசம் என்று நரசிம்மராவ் சுதந்திர சந்தையென மாற்றினார். அதனால் ஏற்றுமதியை விட இறக்குமதி கூடியது. அடுத்து மோடிவந்தார்  மூலதனத்தை இறக்குமதி செய்யாமல் ஏற்றுமதி இயலாது என்று மேலை நாட்டு முதலீட்டாளர்களை கூவி அழைக்கிறார். 

              மேலை நாட்டு தொழில் முதலீட்டாளர்கள் வர அஞ்சுகிறார்கள். அவர்கள் இந்தியா இன்னொரு சீனாவாக ஆவதை விரும்பவில்லை. அது ரூபாய்க்கு சர்வதேச அந்தஸ்தை கொடுத்து டாலருக்கு சமமா மதிப்பை பெரும். பிரிட்டீஷ் ஆட்சி காலத்திலிருந்து இந்திய சுதேசி        முதலாளித்துவம் எப்படி வளர்ந்தது என்பதை துப்பு துலக்கினால் ஒரு  உண்மை புலப்படும் இந்தியாவில் எந்த மாநிலத்தை எடுத்தாலும்   தொழில்கள் விவசாய விளை பொருட்களையே மூலப் பொருளாக கொண்டதாக இருந்து வருவது தெறியவரும். பஞ்சு, கரும்பு, தோல், சனல் தேங்காய்,.காப்பி, டீ .ரப்பர். தாணியங்கள் பழங்கள் மூங்கில்,  மரங்கள், வாசனை திரவியங்கள் என்று புகழ் பெற்ற மூலிகைகள், மசலா சாமான்கள் இவைகளை சார்ந்தே தொழில்கள் இருந்துவருகின்றன. சமசீரான வளர்ச்சிக்கு இதுவே அடிப்படையாகும் 

           இன்று கொரானாவால். தொழில்கள் படுத்துகிடக்கின்றன விவசாயிகள் தயாரிக்கும் தாணியம்  காய்கறி, பழங்கள் போண்ற பொருட்களே  மொத்தவியாபரிகள் கொள்ளை லாபம் சம்பாதிக்க உதவுகிறது. இன்று பணம் சுழன்று பெருக வேண்டுமானால் விவசாயிகளின் உழைப்பால் உருவாகும் பொருள்களே என்பது தெறிந்தும் மோடி வகையறாக்கள் திமிறாக பேசுவது கண்டு கோபப்படாதவன் மனிதனா?       

 மேலை நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு.. 

  மேலை நாட்டு பொருளாதார கட்டமைப்பு  பிற நாடுகளை சுரண்டும் ஏகாதிபத்திய கட்டமைப்பாகும். நமது நாட்டு பொருளாதார கட்டமைப்பு இன்றுவரை ஏகாதிபத்திய டாலரால் சுரண்டபட்டு வருகிறது.. எனவேதான்  சேவைத் தொழில்களால் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பயன்படவில்லை. 

Is not going to negotiate with situations, is not going to change the venue  of the strike; Farmers reject Amitsha's suggestion - News8Plus-Realtime  Updates On Breaking News & Headlines

இது வர்க்கப் போரின் முதல்படி

  எந்த போரட்டவடிவமும் ஈடுபடுவேரையும் பாதிக்கும். அது போல் இது வடியுமென மோடி கருதுகிறார்  இந்த கணக்கு வர்க்க போராட்டத்திற்கு பொறுந்தாது. இது விவசாய வர்க்கத்தின் எழுச்சி.. அது புதுபுது வடிவத்தில் வெடிக்கும். விவசாயவர்க்கம் பூர்சுவாவர்க்கத்தின் தலைமையை நிராகரிக்க தொடங்கிவிட்டதின் அடையாளமே இந்த எழுச்சி.