நூல் அறிமுகம்: சார்லஸ் டார்வின் எப்படி இருப்பான்..?  – ரா. பாரதி (இந்திய மாணவர் சங்கம்)

நூல் அறிமுகம்: சார்லஸ் டார்வின் எப்படி இருப்பான்..?  – ரா. பாரதி (இந்திய மாணவர் சங்கம்)



புத்தகம்: சார்லஸ் டார்வின்
ஆசிரியர்:சாமிநாத சர்மா
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
விலை:15
பக்கம்:24
புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://bit.ly/394o8LB
ஆறடி உயரம் ஆனால் பார்வைக்கு அப்படி தோன்ற மாட்டான். நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டதால் வயது ஏற ஏற முதுகு வளைந்து கொடுத்தது. முகத்திலோ மேலிருந்த புன்சிரிப்பு ஆனால் கண்களிலோ ஆழ்ந்த யோசனை! இவ்வாறாக டார்வினை ஆசிரியர் அறிமுகம் செய்கிறார், ‌‌
இளமைப் பருவம்:
சார்லஸ் ராபர்ட் டார்வின் (1809-1882)ஷ்ருஸ்பரி என்ற ஊரில் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி பிறந்தார்.இவர் சாதாரண பிள்ளைகளைப் போலவே வளர்ந்தார், பிற்காலத்தில் இவருக்கு நல்ல பெயர் உண்டு என்பதற்கான அம்சங்கள் ஏதும் இவர் இளம்பருவத்தில் காணப்படவில்லை.இவரது எட்டாம் வயதில் தாயார் இறந்துவிட்டார், படிப்பில் எவ்வித ஆர்வமும் இல்லாதவராக இருந்தார். எவருடனும் நெருங்கி பழக மாட்டார், தனக்குத்தானே ஏதேனும் சேஷ்டைகள் செய்து கொள்வார்.செடிகளையும் ,பூச்சிகளையும் பரிசோதனை செய்வதில் ஆர்வம் காட்டினாரே தவிர படிப்பில் அதனை காட்டவில்லை. டார்வினுக்கு நிரம்ப தூரம் தனியாக நடப்பது இயற்கை அழகு மிகுந்த இடங்களுக்கு செல்வது நாட்டம் உடையவராக இருந்தார்.
‘உதவாக்கரை” :
டார்வினை வைத்திய தொழில் படிப்பதற்கு அவன் தகப்பனார் அனுப்புகிறார் டார்வினுக்கு அதில் அதிக விருப்பம் இல்லை என அறிந்து அவரை ஒரு  பாதிரியாராக்க எண்ணம் கொண்டார் அதற்கு ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருப்பது அவசியம் ஆகவே தனது 19ம் வயதில் டார்வின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் போய் சேர்ந்தார் அங்கு மூன்று வருட காலம் படித்தார் இங்கேயே அவர் படிப்பின் மீது துளியும் அக்கறை காட்டவில்லை.கணக்கு என்றால் பிணக்கு இலக்கிய பாடம் என்றால் கலக்கம் அடைவார் ஆசிரியர்களே இவர் ஒரு உதவாக்கரை என்று இவரை கைவிட்டனர்.ஆனால் டார்வின் கேம்பிரிட்ஜில் இருந்த போது வேறு விஷயங்களில் கவனம் செலுத்தினார் பூச்சிகளை பிடித்து அவற்றை தனித்தனியே பிரிப்பது குதிரை மீதேறி சவாரி செய்வது பட்சிகளை சுடுவது நண்பர்களோடு சீட்டாடியும், சாப்பிட்டும் காலம் கழிப்பார். பெரும்பாலும் ஆராய்ச்சியிலும் பரிசோதனை செய்வதிலும் அதிகமான அக்கறை காட்டினார். படிப்பில் நாட்டம் இல்லை  என்றாலும் இளங்கலையில் தேர்வாகி விட்டார்.
Charles Darwin – The Reader's Catalog
பீகிள் கப்பல் பயணம் ; 
பீகிள் கப்பல் தளபதி ஒரு தாவர சாஸ்திரியை அழைத்து செல்ல விரும்பினார் டார்வினுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கப் பெற்றது கப்பல் புறப்படுவதற்கு நாள் நெருங்க நெருங்க டார்வினுக்கு உற்சாகமும் அதிகப்பட்டது தான் மறுபிறப்பு எடுக்க போவதாக அவர் ஆர்வம் கொண்டார் இதனைப்பற்றி தன் சுய சரிதையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார் பீகிள் யாத்திரை என் வாழ்க்கையிலேயே நடைபெற்ற ஒரு முக்கியமான சம்பவம் என்னுடைய பூரண வாழ்க்கையும் அது நிர்ணயித்து விட்டது என் மனம் பக்குவமடைந்ததற்கு இந்த பயணம் தான் காரணம் என்கிறார். பீகிள் கப்பல் பயணம் ஐந்து வருட காலம் ஆகும் இதில்தான் அவர் ஏராளமான பூச்சிகளையும் மீன் இனங்களையும் இனம் கண்டுகொண்டார், அதனை பரிசோதனைக்கு உட்படுத்தினார். பல ஆய்வுகளை செய்தார் கப்பல் தரைதட்டும் போது தாவர வகைகளை பரிசோதனை செய்வார் பரிசோதனை விஷயத்தில் அவர் சோர்வு கொண்டதே இல்லை தென்னமெரிக்காவில் பல இடங்களுக்கு சென்று மக்களோடு தொடர்பு கொண்டு அவர்களுடைய பழக்க வழக்கங்களை ஆராய்ந்தார்.
பயணம் முடிந்த பின்;
பயணம்  முடிந்த பின் அவர் கொண்டுவந்த தாவர இனங்களையும் உலோக பொருள்களையும் ஒழுங்குபடுத்தினார். தனது பயண வரலாற்றை புத்தக வடிவமாக கொணர்வதில் ஈடுபட்டார். இக்காலகட்டத்தில் டார்வின் மணமுடித்தார்.டார்வின் “டெளம் ‘என்ற ஊரில் இருந்து கொண்டே தான் புகழ் பெற காரணமாக பல ஆராய்ச்சிகளையும் செய்து வந்தார். இடையே நோய்வாய்ப்பட்டார் ஆனாலும் மிக பொறுமையுடனும் புகழையோ கௌரவப் பட்டங்களையும் சிறிதுகூட கருதாமல் ஆராய்ச்சிகளை நடத்துவது அவற்றை நூல்கள் மூலம் உலகத்திற்கு தெரியப்படுத்தி வந்தார்.
ஏன் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும்;
டார்வின் என்ற மகத்தான மனிதன் தன் ஆராய்ச்சிக்காக பட்ட இன்னல்களையும் அவர் வாழ்க்கை பற்றியும் இந்நூல் கூறுகிறது.மேலும் டார்வினை படிப்பதற்கும் அவர் எழுதிய நூல்களை தேடுவதற்கும் நம்மை இட்டுசெல்லும். குறிப்பாக டார்வினின் உயிரினங்களின் தோற்றம் போன்ற நூல்களை தேடி படிப்பதற்கு இந்நூல் தூண்டுவதாக அமைந்துள்ளது.  டார்வினின் பிற நூல்களை படிப்பதற்கு தூண்டுகோலாக இந்நூல் அமையும்.
புத்தகம்: சார்லஸ் டார்வின்
ஆசிரியர்:சாமிநாத சர்மா
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
விலை:15
பக்கம்:24
புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://bit.ly/394o8LB
ரா. பாரதி
இந்திய மாணவர் சங்கம்



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *