“சே” வெறும் பெயர் அல்ல கியூபப் புரட்சியின் அடையாளம் .அது ஒரு சகாப்தம்.. சே வினுடைய வாழ்க்கை வரலாறு ஆசிரியர் மருதன் எழுதிய புத்தகத்தை படித்தேன் . கம்யூனிஸ சித்தாந்தம் கொண்ட பெற்றோர்களுக்கு 1928 ம் ஆண்டு பிறந்த எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா என்கின்ற சே குவேரா சிறுவயதிலேயே ஆஸ்துமா என்று சுவாச நோய்க்கு ஆளாகிறார் ..கொஞ்சம் வசதியான குடும்பத்தில் பிறந்த குவேராவின் நோய்க்காக சிறந்த சூழ்நிலை உள்ள இடத்திற்கு குடும்பம் புலம் பெயர்ந்து கொண்டே இருக்கிறது.. தனது தந்தைக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் குடும்பத்துக்குள் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு சொத்துக்களை இழக்க வேண்டிய நிலைமை. குவேராவின் தாய்க்கு இவர் என்றால் கொள்ளை பிரியம்..

கடுமையான ஆஸ்த்மா நோயினால் பாதிக்கப்பட்ட எர்னஸ்டோ பள்ளி செல்ல இயலாமல் தன் பெற்றோரிடமே கல்வி கற்கிறார் .பிறகு தான் அதிகமாக நேசித்த பாட்டி தன் கண் முன்னாலேயே இறந்துவிட மருத்துவம் படிக்க வேண்டும் என ஆவல் தோன்றுகிறது .ஆனால் மருத்துவம் படிப்பதற்கு முன்பு சே ஒரு பயணத்தை மோட்டார் சைக்கிளில் தனது நண்பருடன் தொடங்குகிறார் ..சே க்கு சாகசம் என்றால் கொள்ளை பிரியம். பத்து வயதிலேயே புத்தகங்களை வாசிக்க கற்றுக்கொண்டு சமூகம் சார்ந்த அரசியல் சார்ந்த புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தார்… இவரின் மோட்டார் சைக்கிள் பயணங்கள் “மோட்டார் சைக்கிள் குறிப்புகள் “என்னும் புத்தகத்தில் விரிவாக இடம்பெற்றுள்ளது…

மின்னம்பலம்:சிறப்புக்கட்டுரை ...

நினைத்ததைப் போலவே 1953ல் மருத்துவம் பயிலத் தொடங்கினார் .அந்தக் காலகட்டத்தில்தான் சிச்சினா என்ற பெண்ணை பார்த்து காதல் கொண்டார். இருவரும் பல கடிதங்களை எழுதி பலமணிநேரம் விவாதித்து காதல் செய்தனர் … என்னுடைய காதல் தன் சுதந்திரத்திற்கு வேலி போடுகிறதோ என எண்ணி சே காதலை உதறினார் …மீண்டும் அவர் ஒரு மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கினார். அர்ஜென்டினா முழுவதும் பயணம் செய்தார்.

ஆந்திய மலைப்பகுதிகளில் தொடங்கி பல பகுதிகளில் பயணம் செய்தார். இடையில் கப்பலின் மாலுமி, விமானத்தில் வேலை செய்வது இப்படியான வேலைகளை செய்துகொண்டு சே ஊர் சுற்றினார். பிறகு படிப்பில் முழு கவனம் எடுத்து படித்து மருத்துவத்தில் எம்டி பட்டப்படிப்பை முடித்தார்.பின்பு அர்ஜென்டினாவில் இருந்து வெளியேறி பெரு விற்க்கு சென்றார். அங்கே சந்தித்த இரு நபர்கள் மூலமாக கியூபாவில் ஏற்பட்டிருக்கிற கலகத்தை கேள்விப்பட்டார். பின்பு ரால் காஸ்ட்ரோவின் மூலமாக காஸ்ட்ரோவை சந்தித்து காஸ்ட்ரோவின் புரட்சிப் படையில் தன்னை இணைத்துக் கொண்டார்.

Fidel, Raúl and Che: shared ideals and dreams

மருத்துவராகவும் ,போர் வீரராகவும் தன்னை புரட்சியில் ஈடுபடுத்திக் கொண்ட குவேரா தன்னைக் கடுமையாக ஆட்டிப்படைத்த ஆஸ்துமா நோயினிலும் கூட சிறப்பாக பணியாற்றினார் .”அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அடியோடு விரட்டுவது எனது லட்சியம் “என்ற வேட்கையோடு கொரில்லா பயிற்சி பெற்று கியூபாவில் தொடர்ந்து புரட்சியை சத்தி கொண்டிருந்தார் .புரட்சிப் பாதையில் அவர் கண்ட இன்னல்கள் ஏராளம் ..உணவு ,தண்ணீர், உறக்கம், ஓய்வு இல்லாமல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வேரறுக்க போராடினார்..

அச்சமயத்தில் ஏற்கனவே பரிச்சயமான ஹில்டா வை திருமணம் செய்து கொண்டார் .பிறகு பயிற்சியில் தொடங்கி போருக்கு ஆயத்தமானார்கள். தன் மனைவியை பிரிந்து புரட்சிப் பாதையில் பணித்தார் சேகுவேரா. பல்வேறு இன்னல்களை சந்தித்த காஸ்ட்ரோவின் புரட்சிப்படை கிரான்மா என்னும் படகு பயணத்தை தான் முதல் முதல் இன்னலாக சந்தித்தது ..”பிடல் காஸ்ட்ரோ என்னை வசீகரித்து விட்டார் வெற்றியோ ,தோல்வியோ வாழ்வோ, மரணமோ பிடலுடன் தான் என் வாழ்க்கை “என்ற குவேராவின் வரிகள் உறுதியானவை ..

மெக்சிகோவில் பயிற்சி பெற்று திரும்பிய புரட்சிப்படை கியூபாவிற்கு வந்து சேர்ந்தது.. வந்தவுடனேயே ராணுவத்தில் தாக்குதலுக்கு ஆளானது.. இப்படியான சூழலில் சே கமாண்டராக பதவி உயர்வு பெற்று முன் வரிசையில் நின்று போராடினார் ..அச்சூழலில் அலைய்டா என்ற பெண்ணிடம் ஈர்ப்பு ஏற்பட்டு ஹில்டா அனுமதியுடன் திருமணமும் செய்து கொண்டார் .. புரட்சி நடந்தேறியது சோவியத் உடனான நட்பை பலப்படுத்திக் கொண்டார் குவேரா.. அமெரிக்காவிற்கு அடுத்தடுத்து தலைவலியை உருவாக்கிக் கொண்டே இருந்தனர் சே வும் பிடலும்.. புரட்சிக்குப் பிறகு கியூபாவின் படிப்பறிவு சதவிகிதம் 98.2 ..பொருளாதார தடைகளை சந்தித்த போதும் துவளாத அரசாங்கம் ,மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியது..

சேகுவேரா hashtag on Twitter

நான்கு குழந்தைகளுக்கு தந்தையான சே கியூபாவில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கினார். ஆனால் “லத்தின் அமெரிக்கா முழுவதையும் விடுவிக்க வேண்டும் “என்ற வேட்கையோடு பொலிவியா காடுகளில் சுற்றி அலைந்தார் ..அங்கு சிஐஏவின் ஏவல் படையால் சுட்டுக் கொல்லப்பட்டார் சே.. தான் கைது செய்யப்பட்டு அடைபட்டிருந்த இடம் பள்ளிக்கூடம் என அறிந்ததும் ஏன் இவ்வளவு அசுத்தமாக இருக்கிறது என கவலை கொண்டு “ஒருவேளை நான் உயிரோடிருந்தால் புரட்சி வெற்றி பெற்றால் நான் உங்களுக்கு புது பள்ளிக்கூடம் கட்டித் தருகிறேன்” என்று கூறிய வார்த்தைகள் சேவின் அக்கறையை காட்டுகின்றன..

இப்படியாக எங்கெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களின் குரல் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும் என்று சொன்ன சே அக்டோபர் 9 1967 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார் ..அவரின் உடலைக் கண்டு கூட பயந்த அமெரிக்கா அரசாங்கம் அவனது உடலை புதைக்க உத்தரவிட்டது.. 30 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டாயத்தினால் உடலை தோண்டி எடுக்க சம்மதித்தது… இப்புத்தகத்தில் கூறிய அனைத்து கருத்துக்களையும் சுருக்கி 3000 வார்த்தைக்குள் அடக்குவது எனக்கு கடினமான ஒன்றுதான் ..சேவின் வரலாற்றை விரிவாக வாசிக்க எளிமையாக கூறியுள்ள நூல்.. நீ மறையவில்லை சே எங்களோடு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் கியூபாவின் வரலாற்றை பேச வேண்டும் என்று சொன்னால் பிடலையும் சேவையும் தவிர்க்க இயலாது மருத்துவராகவும் புரட்சியாளர் ஆகவும் மக்கள் மனதை வென்ற வாழ்ந்து கொண்டிருக்கிறார் நம்மில்…

சேகுவேரா : வேண்டும் விடுதலை
ஆசிரியர் : மருதன்
முதல் பதிப்பு : டிசம்பர் 2006
பக்கம் :184
வெளியீடு :கிழக்கு பதிப்பகம் 117\ 103
முதல் மாடி,
அம்பாள் கட்டிடம்
லோயட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை -600014 இந்தியா .
தொடர்புக்கு +91 444 2009603
மின்னஞ்சல் : [email protected] இணையம்: www.nhmreader.in

Image

– மதிப்புரை வினிஷா 

மாவட்ட தலைவர் 

இந்திய மாணவர் சங்கம் (sfi)

ஈரோடு மாவட்டம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *