செகாவின் மீது பனி பெய்கிறது – நூல் அறிமுகம்
ரஷ்ய இலக்கியங்கள் பொதுவாக அனைவருக்கும் ஏன் பிடிக்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த சேகாவின் மீது பனி பெய்கிறது என்ற புத்தகம் என்று கூறுவேன். ரஷ்ய இலக்கியங்களும் ரஷ்ய எழுத்தாளர்களும் காலம் கடந்தும் போற்றப்படுகிறார்கள் என்றால் அவர்களது எழுத்தும் அந்த இடத்தில் இருக்கும் உணர்வுகளும் தான் காரணம்.
புத்தகத்தில் மொத்தம் 20 கட்டுரைகள் உள்ளன ஒவ்வொரு கட்டுரையிலும் ஒவ்வொரு ஆளுமைகளை பற்றி கூறியிருக்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு ஆளுமைகளை பற்றி கூறும் பொழுதும் அதனோடு சார்ந்த பல இலக்கியங்களையும் நமக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
ரஷ்யாவின் மிகப்பெரிய எழுத்தாளர் டால்ஸ்டாய் தன்னுடைய இறுதி நாட்களை அஸ்தபோவ் என்ற ஒரு சின்னஞ்சிறு ரயில் நிலையத்தில் கழித்தார். டால் ஸ்டாலின் மனைவி சோபியா அவரது எழுத்துக்கள், சொத்துக்கள் அனைத்தும் தமுக்கம் தம் குழந்தைகளுக்கும் தான் சொந்த ம் என்று உரிமை கொண்டாடிக் கொண்டிருந்தார் ஆனால் டால்ஸ்டாயின் நெருங்கிய நண்பரான செர்ட்கோவ் டால்ஸ்டாய் ஒரு குடும்ப சொத்து அல்ல அவர் ஒட்டுமொத்த ரஷ்யாவின் சொத்தானவர். எனவே அவருடைய எழுத்துக்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்ற டால் ஸ்டாயின் கருத்துக்களுக்கு உடன்பட்டார். டால்ஸ்டாய் எப்பொழுதும் தன் குடும்பத்தை பற்றியும் தன் குழந்தைகளைப் பற்றியும் யோசித்ததே கிடையாது. எப்பொழுதும் எழுத்தாளர்களுடனும் விமர்சகர்களுடனும் இளைஞர்களுடனும் தன்னுடைய நேரத்தை செலவழித்து தன்னால் இந்த ரஷ்ய சமூகத்தை மாற்றிவிட முடியும் என்ற ஒரு தீவிரமான நம்பிக்கையோடு எழுதிக்கொண்டே இருந்தார். அவர் எப்பொழுதும் இந்த சமூகத்தை பற்றிய அக்கறையும் மனிதர்கள் மீதான அன்பையுமே பெரிதாக கருதினார். ஆனால் அந்த நினைப்பு அடுத்தவர்களால் கேலிக்கான ஆனது. இருப்பினும் அன்றைய இளைஞர்கள் டால்ஸ்ட்ராயை பின்பற்றி தான் வந்தனர். டால்ஸ்டாய் உயிர் பிரிய நேரத்தில் கூட தன்னுடைய குறிப்பேட்டில் குறிப்புகளை எடுத்துக் கொண்டே இருந்தார். தன்னுடைய குழந்தைகளிடம் அவர் பேசியதை விட எழுதி காட்டியதே அதிகம். மனைவியை விட்டு தனியே வெளியே வந்த பிறகும் மனைவி மீது பாசம் குறையாமல் தன் மகள் சாஷாவிடம் தாயின் உடல் நலத்தில் நீ அக்கறை கொள்ள வேண்டும் அவளுக்கு துணையாக நீங்கள் இருக்க வேண்டும் என்று தன்னுடைய கடைசி நொடியில் கூட அன்பை புரிந்திருக்கிறார்.
Give me a wife who, like the moon, wan’t appear in my sky everyday – செகாவின் புகழ்பெற்ற காதல் வரிகள். காதலை மையமாகக் கொண்டு இவரின் கதைகள் நகர்கின்றன. காதலுக்கு வயதில்லை. திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின் என்ற பேதம் இல்லை. ஒருவருக்கு காதல் எப்போது வேண்டுமானாலும் துளிர ஆரம்பிக்கலாம். காதல் என்பது திருமணம் என்பது தன்னை வருடத்தில் கட்டிப்போட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர். ஒல்காவை திருமணம் செய்து கொள்ளும் பொழுது அவர் விதித்த ஒரு நிபந்தனை இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒரே இடத்தில் இருக்க வேண்டாம் அவரவர் விருப்பம் அவரவர்களுக்கு. இருவரும் பிரிந்து இருக்கும்போது மட்டுமே எப்பொழுதும் காதலித்துக் கொண்டே இருக்க முடியும். அவரவர் வீடுகளில் வசிக்கும் பொழுது தன் காதல் மனைவியை காண செல்லும் ஒவ்வொருபொழுது ஒரு புதுவித காதலோடு சென்று வரலாம் என்கிறார். நாய்க்கார சீமாட்டியில் வரும் காதல் அற்புதமானது.திருமணமான ஒரு ஆணுக்கும் திருமணமான ஒரு பெண்ணுக்கும் ஏற்படும் காதலை அழகாக கூறி இருப்பார். அன்னா என்ற ஒரு பெண் கடற்கரையில் ஒரு நாயுடன் நடந்து செல்லும் போது ஊரே அவள் அழகில் மயங்குகிறது.அவளுடன் பேசி நட்பு கொள்ள வேண்டும் என்று ஒரு இளைஞன் ஆசைகொள்கிறான். இருவரும் இயல்பாக பேசிக் கொள்கின்றனர். ஆனால் இருவரும் திருமணம் ஆனவர்கள். திருமணம் என்று ஒரு கூட்டிற்குள் நடைபெற்று இருந்த இருவருக்கும் இவர்களின் உரையாடல் சற்று இளைப்பாறுகளை தருகிறது. இருவரும் தங்களுக்குள்ள பரஸ்பர ரசனைகளை வெளிக்காட்டிக் கொள்கின்றனர். பெயரிடப்படாத இந்த உறவை இருவரும் விரும்புகின்றனர் .காற்றில் பறக்கும் பறவைகளின் போல இவர்களின் மனது லேசாகிறது.இருவரும் பிரியும் நேரம் வருகிறது. 40 வயதிற்கு மேற்பட்ட காதலில் காமத்தை விட ஒருவருக்கொருவரான அந்த பரிமாற்றங்கள் அன்பு ஏக்கங்கள் தவிப்பு தனிமையை புறம்தள்ளுதல் தான் காதலாக இருக்கிறது. இருவருக்கும் இடையே பல மௌனங்களுக்கு பிறகு அவர்களின் காதல் பிரிகிறது. செகாவின் காதல் திருமணம் செய்வதே இல்லை. ஆம் இந்த இரு காதல் ஜோடிகள் பிரிந்தாலும் அவர்களுக்கும் காதில் இருந்து கொண்டே தான் இருந்தது.
தன்னுடைய சிறு வயது சாலையில் விடப்பட்ட ஒரு குதிரை பனியால் நனைந்து கொண்டிருந்தது. அதை பார்த்த செகாவிற்கு அந்த குதிரையின் மீது பரிதாபம் ஏற்படுகிறது. யாருமற்று தனிமையில் நிற்கும் குதிரை போல நாமும் நின்றால் என்ன ஆகும் என்று குதிரையோடு தானும் பனியில் நனைகிறார். நோயாளியான செகாவின் மீது பனி விழுகிறது. ஆனால் அந்த குதிரையோ செகாவை திரும்பி கூட பார்க்கவில்லை. அப்பொழுது அவர் எழுதுகிறார் கைவிடப்படுதலும் நிராகரிப்புமே மனித வேதனைகளின் முக்கியமானது.ஒன்றரை நூற்றாண்டுகள் கடந்தும் செகாவ் கவனிக்கபடுகிறார் என்றால் அவரின் எழுத்துக்களுக்கு இருக்கும் வலிமை ஒன்றே காரணம்.
தாஸ்தாயெஸ்கியின் வெண்ணிற இரவுகள் வாசிக்கும் போது அதில் ஒரு விதமான பதட்டமும் நிராகரிப்பும் குழப்பமும் காதலும் கலந்தது போன்று தோன்றும். சாதாரண மனிதர்கள் தங்களுக்குள் அடக்கி வைத்திருக்கும் பிரச்சனைகளை சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதை இவரின் கதைகள் மூலம் வெளி கொணரலாம். இவரின் படைப்புகளில் வரும் ஆண்களை விட பெண்கள் வலிமையானவர்களாகவும் தெளுவானவர்களாகவும் இருக்கின்றனர்.சிறு வயது முதல் கிடைக்காத அரவணைப்பும்,நேசமும் ஒரு மனிதனின் வாழ்வில் அழிக்க முடியாத வடுவாக இருக்கும் என்பது தான் தஸ்தயேஸ்க்கியின் குரலாக இருக்கிறது. வெண்ணிற இரவுகளில் வரும் கதாபாத்திரங்கள் இரண்டு ஆண் இரண்டு பெண்கள் மட்டுமே. சிறு வயதில் இருந்து பாட்டியின் கண்டிப்பில் வளரும் நாஸ்தென்கா. என்னுடைய வீட்டில் வாடகை வரும் ஒரு இளைஞனுடன் காதல் கொள்கிறாள். அந்த இளைஞன் அவளுக்கு நிறைய புத்தகங்களை பரிசளிக்கிறான். புத்தகங்கள் மூலம் அவள் வெளிவலகை அறிகிறாள். ஒரு நாள் காதலன் நாஸ்தென்காவை விட்டு பிரிந்து செல்கிறான். தன் காதலனுக்காக பல நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறாள் நாஸ்தென்கா. அப்பொழுதுதான் கனவுலக வாசி அவளுக்கு அறிமுகம் ஆகிறான். அவர்களின் காதல் உடலை மையப்படுத்தி அல்ல உணர்ச்சிகளை மையப்படுத்தியது. நாஸ்தென்காவிற்காக அவரின் காதலனை தேடி செல்கிறான் கனவுல வாசி. என் காதலனை அடைந்த பின்பு கனவுலக வாசியை ஒரு நிமிடம் கட்டி அணைத்து பெறுகிறாள் நாஸ்தென்கா. அந்த ஒரு நிமிட அணைத்து போதும் அவன் வாழ்வதற்கு.
இதே போன்று தான் மாக்ஸின் கார்க்கி வான்கா, கோகல்,பாசு அலியேவா,புஷ்கின்,வர்ஜீனியா உல்ப், பெசோ,எர்னஸ்ட் ஹெமிங்வே,ரோபர்ட்ருவார்க்,மாப்பசான், ஹோமுசாய்,ஜார்ஜ் ஆர்வெல்,அன்டன் செகாவ் போன்ற மாபெரும் இலக்கிய சிற்பிகளின் படைப்பை மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது இந்த புத்தகம்.
இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு கதையும் அதை சார்ந்த பிற கதைகளும் தேடி தேடி படிக்க வேண்டும் என்ற ஒரு ஆசையும் உண்டாகிறது. ஒரு கதையை கூறும்போது அதனோடு தொடர்புடைய இன்னொரு கதையை உருவகப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். மிக சிறப்பான ஒரு வாசிப்பு அனுபவம் கிடைத்தது.
நூலின் தகவல்கள் :
புத்தகம்: செகாவின் மீது பனி பெய்கிறது
ஆசிரியர்: எஸ் ராமகிருஷ்ணன்
வெளியீடு: தேசாந்திரி பதிப்பகம்
பக்கங்கள்: 160
விலை: 150
நூல் அறிமுகம் எழுதியவர் :
✍️நளினி மூர்த்தி
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.