முந்தைய பதிவில் குறிப்பிட்டபடி விரிவடையும் சென்னை, ஆசியாவின் கார்நகர் “டெட்ராயிட்” என்று பெயரெடுக்க  சிம்சனின் மற்றும் இதர சுதேச கார் உற்பத்தியாளர்களின் பங்களிப்பு பற்றிய வரலாறு இப்பகுதியில் பதிவாகிறது.

2014 ல் முதல்வர் மான்புமிகு ஜெயலலிதா சட்டமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் 1961ல் வருடத்தில் 20 ஆயிரம் வண்டிகளே செய்த தமிழகத்தில் இன்று 14 லட்சம் வாகனங்கள் தயாராகின்றன 1.3 கோடி உழைப்பாளிகளுக்கு சோறு போடுகிற தொழிலாக ஆட்டோ மெபைல் தொழில் இருப்பதற்கு தனது அரசின் சாதனை என்று பெருமைப்பட்டார் அவர் பெருமைபடுவதற்கு எந்த முகாந்திமுமில்லை என்றே வரலாறு காட்டுகிறது. விடுதலைக்கு முன்பே இங்கு சில பிரிட்டீஷ் நிறுவனங்களே  உதிரி பாகங்களை இறக்குமதி செய்து  வாகனங்களை இங்கே பூட்டி விற்றனர் 1947க்குப்பிறகு இந்த தொழில்கள் சுதேசி தொழில் முனைவோர்கள் கைகளுக்கு மாறியது. இன்று அந்த நிறுவனங்களை இழுத்து மூடி அந்நிய நிறுவனங்களே கார் தொழிலை நடத்துகின்றன. அல்லது அந்நிய நாட்டவர் பிராண்டுகளை சார்ந்து சுதேச நிறுவனங்கள் உள்ளன.  இந்த மாற்றம் பற்றியும்  அதாவது. அதோடு அமெரிக்க வாகன நகர் டெட்ராயிட் இன்று கார் தொழிலகங்களின் சுடுகாடாகிவிட்ட நிலையையும் அந்த பாழுக்கு எது காரணம் என்பதையும்.பதிவு செய்யும் வரலாறு முன் பதிவில் கூறியபடி இப்பகுதிவருகிறது. பொதுவாக ஒருவர்  பதட்டமில்லாமல் வாழும் அறிவை பெற வரலாற்றை அறிவது அவசியம். 

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர, வருவதோர் நோய்

– குறள் 

இதுவரை மானுட வரலாறு காட்டுவது  பெரும்பாண்மையான நாடுகளில் இந்தியா உட்பட  புதிய தொழில் நுட்பங்களைக் கொண்ட எந்திர கட்டமைப்புகள் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தினாலும் உழைப்பை சார்ந்து வாழ்பவர்களின் வாழ்க்கையை சிதைக்காமல் புகுந்தது இல்லை. இயற்கையை கெடுக்காமலும் இருந்ததில்லை. அந்த போக்கு அமெரிக்காவிற்கும் பொருந்தும். இந்தியாவிற்கும் அதிலும் தமிழகத்திற்கு நன்றாகவே பொருந்தும். சென்னை நதிகளும் கால்வாய்களும் நாறுவது பின்னிமில் மற்றும் ஸ்டாண்டர்டு மோட்டார் மூடல்கள் போன்றவைகள் பல ஆயிரக்கனக்கான தொழிலாளர் குடும்பங்களை நடுத்தெருவிலே நிறுத்தியதை அறிவோம். மறு பக்கம் ரீயல் எஸ்டேட் பிசினஸ் ஐ.டி தொழில் சில லட்சம் பேரை கோடீஸ்வரர் களாக்கியதையும் காண்கிறோம். கூடவே பொதுத்துறை வங்கிகளின் வரா கடன்சுமை பணப்புழக்கத்தை நெருக்கி தனியார் வட்டி வீதம் உயர்வதையும் காண்கிறோம்.

 இன்றைய பிரதமர் மோடிக்கு இல்லாத சமூக அக்கறை கொண்ட பிரதமர் நேருவின் “மேக் இன் இந்திய பை இந்தியன்” என்ற அணுகு முறையால் 1950களில் சுய சுயர்பு நவீன தொழில்கள் சென்னையை சுற்றி முளைக்கத் துவங்கின. தொழில் முதலாளியாக வேண்டும் என்ற கனவோடு வாழும் மத்திய தர வர்கத்திலிருந்து புதிய தொழில் முனைவோர்களுக்கு தொழில்களை துவங்க அரசு உதவியது. 

 பங்குச் சந்தை மேலை நாட்டில் வளர்ந்தது போல் இங்கு வளராத நிலையில் தொழில் முனைவோர்களுக்கு முதலீடு அரசின்  சலுகைகளாக கிடைத்தன…  தொழில்முனைவோருக்கு பல ஆயிரகணக்கான ஏக்கர் நிலம் எந்திரங்களை இறக்குமதி செய்ய அந்நிய செலவாணி கொடுத்தது மலிவு விலையில் மின்சாரம் எல்லா உதவிகளும் அரசு செய்தது.   

  அதன் விளைவாக சிம்சன், அசோக் லேலன்ட. கனரக வாகனங்கள் செய்ய அவசியமான பாகங்கள்  செய்கிற முறையில் வளர்ந்தன..  கார் உற்பத்தி நிறுவனங்கள் என்று  ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், (அம்பாசிடர்) பிரிமியர் ஆட்டோ மோபைல் (பியட்) ஸ்டான்டர்டு மோட்டார் (ஹெரால்டு) இந்த மூன்று நிறுவனங்களும் சென்னையை சுற்றி அமைந்தன. இரு சக்கர வாகனத்திறகு ராயல் என்பீல்டு. டி.ஐ சைக்கிள் வந்தன. உதிரி பாகங்கள் செய்ய டி.வி.எஸ் குரூப் ரானே மோட்டார்ஸ் கிண்டி அம்பத்தூர் தொழில் வளாகங்கள் தோண்றின.  

இந்த நிறுவன முதலாளிகள் அனைவரும் இந்தியர்களே அதிலும் முதல் தலைமுறை முதலாளிகளே,அதிலும் பெருமுதலாளிகளாக உயரவேண்டும் என்ற கனவில் வாழ்பவர்களே, மேலை நாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்களோடு தொழில் நுட்பங்களுக்கு ராயல்டி கொடுத்து அந்த பிராண்டில் வாகன உற்பத்தி செய்யத் தொடங்கினர. இரண்டாம் உலகப்போருக்குப் பின் உருவாகிய உலக அரசியல் சூழல் இவர்களுக்கு கை கொடுத்தது. மேலை நாட்டு முதலாளிகளால் நடத்தப்பட்ட இந்த தொழில்கள் 1939ல்லிருந்து 1945 வரை நடந்த யுத்தத்தின் விளைவாக உதிரிபாகங்களை இறக்குமதி செய்யமுடியாமல் மூடப்பட்டன. இங்கேயே உதிரி பாகங்களை  செய்ய அவர்கள் விரும்பவில்லை புதிய அரசியல் சூழல்  இந்திய முதலாளிகளை கூட்டாளியாக சேர்க்காமல்   மேலைநாட்டு முதலாளிகள் உலக சந்தையில் நுழையமுடியாது என்ற நிலையும் வந்தது. அந்த வகையில்தான் மேலே குறிப்பிட்ட எல்லா தொழில்களும் கைமாறின. 

 அந்நிய தொழில் நுட்பங்களை சாராமல் வாகனங்களை உற்பத்தி செய்வது என்ற இலக்கோடு இந்த தொழில்களை சுதேச தொழில் முனைவோர் கையிலெடுத்தனர்..  அன்று அறிவு சொத்துரிமை என்பது தொழில்நுட்ப கண்டுபிடிப்பிற்கு மட்டுமே இருந்தது. பொருளுக்கில்லை. அதாவது ஒருவர் புதிய தொழில்நுட்ப மூலம் வாகனத்தை உற்பத்தி செய்து சந்தைக்கு கொண்டுவரலாம். இன்று ஒருவர் செய்த பொருளை இன்னொருவர் செய்யமுடியாது. இந்த அறிவு சொத்துடமை மாற்றமே இன்றைய வர்த்தக போரின் தீக்குச்சியாகும்  

 எல்லா வகை இரு சக்கர வாகன என்ஜின் முதல் கப்பலை இயக்கும் என்ஜின் விமான  ஜெட் என்ஜின்வரை இங்கேயே  தயாரிக்க கனவு காணும் தொழில் முனைவர்களாக இருந்தனர். அன்று அரசு எந்திரத் தொழில்கள் ஏகபோகமாவதை தவிற்க சில விதிகளை உருவாக்கியது. சிம்சனுக்கு ஹார்ஸ்பவர்-30-லிருந்து 120 ஹார்ஸ்பவர் வரை உள்ள டீசல் என்ஜின்கள் தயாரிக்கலாம். லேலண்ட் சேசிஸ்மட்டும் தயாரிக்கலாம் இரண்டையும் இனைத்து பஸ்ஸோ. லாரியோ கட்டமைக்க பிரிமியர் ஆட்டே மொபைல் டி.வி.எஸ். உரிமை பெற்றன.  பெற்றோல் இன்ஜினில் ஓடும் கார்கள் உற்பத்தி மட்டும் ஒரு நிறுவனமே செய்ய லைசென்ஸ் இருந்தது.  இந்த லைசென்ஸ் சிஸ்டம் துவக்கத்தில் குழந்தை பருவத்தில் இருந்த சுதேசி எந்திர தொழில்களை வளர்த்தது. பின்நாளில் அதுவே தொழில் வளர்ச்சியை முடக்கியது. நேருவின் சோசலிசம் ”லைசென்ஸ“ராஜ்” என்ற அவப் பெயரை சம்பாதித்தது.   

  முதல் தலைமுறை முதலாளிகளாக சிம்சன் அனந்தராமகிருஷ்ண ஐயர், ஸ்டான்டர்டு மோட்டார்  கார்த்திக் நாறாயனன் ()சர்.சி.பி ராமசுவாமி ஐயரின் பேரன்)., லேலன்ட் ஏ. ராமசாமி முதலியார்,.டி.ஐ சைக்கிள் முருகப்ப செட்டியார், ராயல் என்ஃபீல்டு ஈஸ்வரஐயர்-சுந்தரமைய்யர். ஸ்டீல் ரோலிங்மில்  சி. ராஜம் ஐயர்( 1812- 1955 ) குறிப்பிடத் தக்கவர்களாவர் இதில் சி ராஜம் ஐயர் ஒருவரே சற்று வித்தியாசமானவர். மெட்றாஸ் இன்ஸ்ட்டியுட் ஆஃப டெக்னாலஜி என்ற உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிமையம் 1949ல் உருவாக்கினார். இந்த வளாகத்தில் ஆட்டோமெபைல் ஆராய்ச்சி கூடம் இருந்தது. பாளையம் கோட்டையில் நான் கல்லூரியில் படிக்கும் பொழுதே இந்த இன்ஸ்டீயுட்டும் மற்றும் ஜி.டி நாயுடுவின் ஜி.டிடெக்னிக்கல் டிரெயினிங் இன்ஸ்டியூட்டும்..ஆய்வு ஆர்வம் கொண்ட மாணவர்களின் கனவாக இருந்தன.  1958ல் எனது கல்லூரி நன்பர்கள் பி எஸ்.சி முதல் வகுப்பு தேர்ச்சி பெற்றதால் எம்.ஐ.டியில்  சேர்ந்தனர் . நான் சிம்சனில் சேர்ந்தேன் இந்த சொந்த கதையைவிட சிம்சன் வரலாறே வாசகர்கள் அறிய வேண்டிய ஒன்றாகும்

முதலில் சிம்சன்  கைமாறிய வரலாற்றை பார்ப்போம். சிம்சன் நிறுவனத்திற்கு 180 வயதாகிறது 1840ல் ஸ்காட்லாந்தை சார்ந்த சிம்சன் என்பவர் நமது ஊரின் தச்சர்களின் கைத்திறனை கேள்விபட்டு சென்னையில் குதிரை வண்டிகள் சாரட்டுகள் தயாரித்து மேலை நாட்டு சந்தையில் விற்க ஒரு தொழிலகத்தை திறந்தார். . நமது முன்னோர்களான கைவினைஞர்களின் விரல்களின் திறமையை உலகறிய செய்தவர்கள் அரேபியர்கள்,பின்னர் ஐரோப்பிய வர்த்தகர்கள் ஆவர். மார்க்ஸ் எழுதிய மூலதன நூலில் கைவினைஞர்களைப் பற்றி சிறப்பாக குறிப்பிடுகிறார்.

ஐரோப்பியர்களும், அதற்கு முன் அரபியர்களும் இந்தியாவோடு வர்த்தக உறவினை வளர்க்க ஆசைப்பட்டதற்கு வாசனை திரவியங்கள் மட்டுமல்ல நமது முன்னோர்களான தச்சர்கள்,தட்டான்கள், கொல்லர்கள், குயவர்கள், நெசவாளர்கள் இவர்கள் தயாரிக்கிற பொருட்கள் அனைத்தும் வேலைப்பாடுகள் கொண்டதாக கலை நயத்தோடு கதை சொல்லும் நுகர் பொருட்களாக இருந்தன. குதிரைகள் இழுக்கும் சாரட்டின் கம்பீரத்திற்கு ஈடு இனை கிடையாது. மேலை நாட்டு மன்னர்கள் பிரபுக்கள், இங்கே செய்த சாரட்டில் பயனம் செய்தால்  இன்று ஆடிக்கார் வைத்திருப்பவருக்கு எவ்வளவு கர்வம் உள்ளதோ அதைவிட 10மடங்கு கர்வத்துடன் இருக்கும் தகுதியை கொடுத்தது. விக்டோரியா மஹாராணி பவனி வந்த  சாரட் சென்னை சிம்சனில் தயாரிக்கப்பட்டது.

 மேலைநாடுகளில் தானியங்கி வண்டிகள் குறிப்பாக நீராவி என்ஜினில் ஓடும் ரயில் மட்டுமல்ல சாலைகளில் ஓடும் கார்களும் பஸ்களும் வந்தபிறகு.  இந்த நிறுவனம் வண்டி ஏற்றுமதி செய்த காலம் மலைஏறியது  வண்டி ஏற்றுமதி முடங்கியதால்  பிரிட்டனில் இருந்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்து நீராவி இன்ஜினால் இயங்கும் பஸ்கள், லாரிகள் தயாரித்து இந்திய சந்தையில் விற்க தொடங்கியது. சிம்சன் நீராவி என்ஜினே அன்று வாகனங்களுக்கு பூட்டப்பட்டன.

 இரண்டாம் உலகப்போரினால் மூட இருந்த சிம்சன் நிறுவனத்தை அங்கே கனக்கராக இருந்த அனந்தராமகிருஷ்ணய்யர் பங்கு தாராகி இந்திய சந்தையில் விற்கிற சில பொருட்களை தயாரிக்க ஏற்பாடு செய்தார். ரயில் பாதை போட   தொழிலார்கள் பயன்படுத்தும் கைவண்டி. மண்வாறி மற்று கட்டிட வேலைக்கான கருவிகள் போன்ற இரும்பிலான கருவிகளை உற்பத்தி  செய்து நிறுவனத்தை காப்பாற்றிவிட்டார். நேரு அரசின் உதவியுடன் பின்னர்  அமால்கமேஷன் லிமிடெட் என்ற பல ரக தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கி பெருமுதலாளிகளின் பட்டியலிலே இடம் பிடித்தார். 

இவருக்கிருந்த தெலை நோக்கு பார்வையில்லாத ஸ்டணடர்டு மோட்டார் நிர்வாகம் இந்திய சாலைகளுக்கு பொறுத்தமான ஹெரால்டு என்ற சிறிய கார் உற்பத்தியை விரிவாக்காமல் ஆடம்பர கார் செய்ய முனைந்த தால் மூட நேர்ந்தது. ஜப்பான் மாறுதி அந்த இடத்தை பிடித்தது. இன்று மாருதி கார்வைத்திருக்கும் ஒவ் வொரு குடும்பமும் குடும்பமாக பயனிக்க  எஸ்.யு.வி என்ற மோட்டா ரக காருகளை வாங்க முனைவதால் டாட்டாவின் நானோ கார் தொழில் வங்கி கடனை முழுங்கிவிட்டு படுத்துவிட்டது. இதையே குப்பை வாறுகிற வாகனமாக கட்டியிருந்தால்   சந்து பொந்துகளில் நுழைந்து குப்பை அகற்றும்  வேலையை வேகப்படுத்தியிம்ருக்கும். பொது சுகாதாரம் பேணும் பயனுள்ள வாகனம் என்று பிரபலமாயிருக்கும் 

1947க்கு முன்னால் பிரிட்டீஷ்காரன் ஒருவன்தான் இந்தியாவில் எந்திர தொழில்களை நடத்துபவனாக இருந்தான் இன்று இந்தியா பணக்கார நாடுகளின் கார் தொழில்களின் வேடந்தாங்கலாகிவிட்டது. அமெரிக்க. ஐரோப்பிய ஜப்பான் ஜெர்மனி, தென் கொரிய கார்நிறுவனங்கள் நூறு சத முதலீட்டில் கார்கள் உற்பத்தியாகின்றன.

 சுதேசி தொழில் முவைர்களை காணாமல் ஆக்கிய கருணாநிதியோ ஜெயலலிதாவோ, இந்த சாதனையில் ஒரு சோகம் இருப்பதை உணராமலே போயினர். ராஜம் ஐயர் ஜி.டி நாயுடு போண்றோர்  தூண்டிய  அறிவியல் தொழில்நுட்ப தேடல் தாகத்தை தணிக்க இன்று அரசும் தயாரில்லை பணத்தை குவிக்கும் சுதேசி கார்ப்பரேட்டுகளும் தயாரில்லை

இது பற்றியும் இந்திய முதல் தலைமுறை முதலாளிகள் வளர்வதற்காக கையாண்ட நிர்வாக முறையும் டெட்ராயிட் நகரின் இன்றைய நிலை பற்றியும்  அடுத்து வரும்   

 

 தொடர் 1ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 1 | V. மீனாட்சி சுந்தரம்

தொடர் 2ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 2 | வி. மீனாட்சி சுந்தரம்

தொடர் 3ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 3 | வி. மீனாட்சி சுந்தரம்

தொடர் 4ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 4 | வி. மீனாட்சி சுந்தரம்

தொடர் 5ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 5 | வே .மீனாட்சிசுந்தரம்

தொடர் 6ஐ வாசிக்க

 

One thought on “தொடர்: சென்னையும், நானும் – 8 | வே .மீனாட்சிசுந்தரம்”
  1. நானோ வை இப்படி பயன்படுத்தலாம் என்ற கருத்து சிரிக்க வைத்தாலும் உண்மையிலேயே யோசிக்க வைக்கிறது.
    அதே தருணத்தில் சென்னை நகரில் மீன் பாடி வண்டிகளை தடைசெய்து விட்டு நகரத் தெருக்களில் குட்டி யாணை பவனி வருவதற்கு அரசும் காவல் துறையும் எப்படி ஒத்துழைத்தது என்பதையும் நினைவு கூறவேண்டியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *