“நாடே எழுந்து நிற்கின்றது” – சேத்துப்பட்டு பஞ்சாபகேசன் ரவிசங்கர்“நாடே எழுந்து நிற்கின்றது”
டெல்லி வீதிகளில் வீர நடை போட்டு
போராட்டம் ஒன்று நடக்கின்றது – அந்த
விவசாயிகளின் போராட்டம் வெல்ல
நாடே எழுந்து நிற்கின்றது
கார்ப்பரேட் டுக்கு காவு கொடுக்கும்
மூன்று சட்டங்களை
நாடாளுமன்ற நடைமுறை மீறி
நைச்சியமாக இயற்றுவதா
விளைச்சலுக்கு ஏற்ற விலை கிடைக்காமல்
மாண்டது போதாதா – இன்னும்
நிலங்களைப் பறித்து நிர்க்கதியாக்க
சட்டம் இயற்றுவதா
                    – டெல்லி வீதிகளில்
தேர்தல் அறிக்கையை ஜூம்லா என்ற
வெட்கங்கெட்ட அரசு இது
இந்திய நாட்டின் உணவு சுய சார்பை
அலட்சியமாக அழிக்கிறது – இனி
பொறுப்பதில்லை என வெகுண்டெழுந்து
புறப்பட்டதோர் பெரும்படை
வீரன் பகத்சிங் வாரிசுகள்
முன்கை எடுத்த படையிது
வெற்றியோடு தான் திரும்புவோமென
ஆர்பரிக்குது டெல்லியிலே
உழுவோருக்கு
நன்றிக் கடனாய்
நாமும் இணைவோம்
அவருடனே
ஒன்றிணைந்து போராடுவோம்
ஒன்றிணைந்தே வெல்லுவோம்
                  – டெல்லி வீதிகளில்
Image
– சேத்துப்பட்டு பஞ்சாபகேசன் ரவிசங்கர்