பராமரிப்பு.
சிங்கம் ரொம்ப வருத்தமா இருந்தது. நம்ம எல்லையில நடக்கிற இந்தக் கொள்ளையை தடுத்து நிறுத்தனுமேனு யோசிச்சுகிட்டு இருந்தார்.
மந்திரி நரியார், அப்பதான் வந்தார். நம்ம வைப்பறையில இருக்கிற தானியங்கள் காணாமல் போகுது என்ன பண்ணலாமுன்னு கேட்டார் சிங்க ராஜா.
ராஜா, இந்த திருட்டு ரொம்ப நாளா நடக்குது., இன்று இதை கண்டுபிடிக்கிறேனு சொல்லி போயிட்டார்.
அழகான கொடிகளில், அலங்கரிக்கபட்ட குகைதான் வைப்பறை.
கொடிகள் அறுந்து கிடந்தது. குகை கற்களில் ஒன்று நகர்ந்து இருந்தது. சில மின்மினிபூச்சிகளை பிடித்து சென்று குகையை ஒளியூட்டினார் நரியார்.
அங்கும், இங்குமாக எலிகள் துள்ளி ஓடின.”கீச் கீச்” என கத்திக்கொண்டு விளையாடின. பார்த்த நரியாருக்கு சிரிப்பு வந்தது.
பெரிய திருடன் அகப்படுவான் என எண்ணிய நரியார் சிரித்தே விட்டார்.
பராமரிப்பு இல்லாத அறையும், அரசும் இப்படிதான் இருக்கும்னு நினச்சுகிட்டார்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.