இந்தியச் சீன எல்லையில் இருக்கும் பனி மலை உச்சியில் சென்ட்டி கிரேடில் பூஜ்யத்திற்கும் கீழே போன குளிர் நிலையில் இந்தியச் சீன ராணுவ வீரர்கள் கைகலப்பில் இறங்கி நமது ராணுவ வீரர்கள் உயிரிழந்த சோகம் இந்திய- சீனா பகைமைத் தீயைக் கொழுந்துவிட்டு எரியவைத்துள்ளது. யுத்தம் வெடிக்குமோ என்ற பதட்டம் மக்களைக் கவ்வுகிறது.
ஏற்கனவே, கொரான பதட்டம் , பாகிஸ்தானிலிருந்து விட்டில்பூச்சி படையெடுப்பால் ஏற்படும் பதட்டம் . 2015 ல்லிருந்து இந்துத்துவா அரசின் அதிரடி நடவடிக்கைகள் உருவாக்கும் பதட்டம் போதாது என்று சீனாவின் ராணுவம் எல்லை வழியாகவும் சீனாவின் டாலர் சேமிப்பு திறந்த கதவு (சுதந்திர சந்தை) வழியாகப் பொருளாதாரத்தின்மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டதாக மோடி பரபரப்பாக உருவாக்கும் பதட்டம் .உண்மையைத் தேடாத ஊடக விவாதங்கள் உருவாக்கும் பதட்டம், மக்களைப் பதட்டங்களின் கடலில் தள்ளுகின்றன .
சீன அரசிற்கு அமெரிக்க அரசு மாதிரி ஆதிக்க வெறி பிடித்து விட்டதோ என்ற சந்தேகம் எழுவது அவசியம் பனிப்போர் கால ஆணுபவங்களை மறந்துவிடலாகாது.
பேணைப் பெருமாளாக்கும் ஆற்றல் படைத்த மோடி மீது எதிர்க்கட்சிகள் வைக்கிற விமர்சனத்தால் அவநம்பிக்கை மறுபக்கம் மக்களைக் குழப்புகிறது. இதற்கிடையில் சீனா பிடித்துவைத்திருந்த 12 ராணுவ வீரர்களை நம்மிடம் ஒப்படைத்த தாக செய்தி வருகிறது. அது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டினை உறுதிப்படுத்துகிறது.
இக்கட்டுரையின் நோக்கம் அந்த குழப்பத்தைப் போக்க எழுதப்படவில்லை மாறாகச் சீன இந்தியப் பொருளாதார கட்டமைப்புக்களின் பலம் பலகீனம் இரண்டையும் சுட்டிக்காட்டுகிறது அரசியல் ரீதியாக நட்புறவின் அவசியத்தைச் சுட்டிக்காட்டவிரும்புகிறது. இந்தியாவும் சீனாவும் மோதினால் இருநாடுகளும் சேதமடையும் ஏகாதிபத்தியவாதிகள் பயனடைவர் என்ற உண்மையை உணர்த்த விரும்புகிறது.
இந்தியாவும் சீனாவும் ஏகாதிபத்தியவாதிகளால் அடிமைப்படுத்தப்பட்டதால் வளர்ச்சி குன்றிய நாடுகள். இந்தியாவை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தும் ராணுவ மற்றும் இதர வல்லமையும் சீனாவிற்கு கிடையாது. இந்த உண்மை பிரதமர் மோடிக்கு நம்மைவிட அதிகம் தெறியும் ஆனால் சீனா முதலீடுகள் மூலம் இந்தியப் பொருளாதாரத்தை ஆதிக்கம் செலுத்த முயலுகிறது என்ற பிரதமரின் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை அரசியல் நோக்கம் கொண்டவை என்பதை இந்திய அரசின் தகவலே உறுதிப்படுத்துகிறது. கடந்த20 வருடமாக அந்நிய முதலீடுகளை வரவழைக்க இந்திய அரசு கதவைத் திறந்து வைத்திருக்கிறது. இருந்தாலும் எப்பொழுது சீன முதலீடு உள்ளே வந்தது. இந்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரப்படி கடந்த 20 வருடத்தில் சுமார் 457 பில்லியன் டாலர்(456.91) அந்நிய முதலீடாக வந்துள்ளது வருடத்திற்குச் சராசரி 20 பில்லியன் டாலர் அளவிற்கு வந்தன எனலாம் அதுவே மோடியின் உலகம் சுற்றியதால் 2108ல் 50 பில்லியனாக உயர்ந்தது (ஐ.நா அறிக்கை)
இந்த முதலீடுகள் 72சதம் 5 நாடுகளிலிருந்து வந்தவைகள்
மொரிஷியஷ் தீவை அலுவலமாக கொண்ட பல நாட்டு முதலாளிகள் (அதில் இந்திய முதலாளிகளுமுண்டு) 31%
சிங்கப்பூர் நிறுவனங்கள் 20.7%
ஜப்பான் 7%
நெதர்லாண்டு 6.7%
யு.எஸ்.ஏ 6.2%
சீனா வெறும் அரை சதம்( 0.51%)
மீதி பிற நாடுகள்
சீனாவின் இந்த அரை சத முதலீடும் கடந்த 5வருடமாக மோடி சீனா சென்று கேட்டதற்கு இணங்க வந்த முதலீடுகளே இதில் கவனிக்க வேண்டியது மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த பொழுது 4முறை சீனா சென்றுள்ளார் பிரதமரான பிறகு ஒரு முறை சென்றுள்ளார். அரசியல் காரணங்களால் முதலீடு செய்யப் பயந்து கொண்டிருந்த. சீனமுதலீட்டாளரகள் பிரதமர் மோடி நம்பிக்கையூட்டியதாலேயே சில பில்லியன் டாலர்கள் வந்தன எனத் தெரிகிறது. சீனாவை முதலீடு செய்ய அழைத்துவிட்டு முதலீடு செய்தவுடன் சீனா பொருளாதார ஆதிக்கம் செலுத்த வருகிறது என்று அதே மோடி கூச்சல் போட்டால் விவரம் தெரிந்த எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார். அதிக விவரம் தெரிந்தவர்கள் மோடிக்கு மன அழுத்தம் காரணமாக 1949ல் 16வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பாரஸ்ட்டாலுக்கு வந்த டிஸ்யீஸ்சுக்கு ( தான் சொல்லுகிற பொய்யைத் தானே நம்பத் தொடங்குவது) ஆளாகிவிட்டார் எனக் கருதுவர் .
இந்த அந்நிய நேரடி முதலீடு என்பது என்ன? அதைவைத்து ஒரு நாட்டுப் பொருளாதாரத்தை அபகரிக்க முடியுமா? அல்லது ஆதிக்கம் செலுத்த முடியுமா ?
ஐ.நாவின் சர்வதேச முதலீட்டு அறிக்கை அந்நிய நேரடி மூலதனம் பாயும் நாடுகளின் பட்டியலைப் படங்களோடு வெளியிட்டுள்ளது. அந்நிய நேரடி முதலீடு பாயும் நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்காவும் இரண்டாவது இடத்தில் சீனாவும் இருக்கின்றன.
அந்நிய முதலீடுகளைச் சீனா தனது டாலர் சேமிப்பைக் கொண்டுதான் செய்ய முடியும் சீனா யுவானும் இந்திய ரூபாய் போலவே சர்வதேச அந்தஸ்து படைத்த நாணயமல்ல எனவே சீனாவிற்குள் பாய்கிற அந்நிய முதலீடுகளைச் சீனா பிற நாடுகளில் அந்நிய முதலீடாகத் திருப்பிவிடுகிறது. இந்தியாவோ நேரடி அந்நிய முதலீடுகளாக வரும் டாலரைச் சரக்கு இறக்குமதி செய்யப் பயன்படுத்துவதால் சீனா போல் வேறு நாடுகளுக்கு அந்நிய முதலீடாகத் திருப்பிவிட போதுமான டாலர் இல்லை.அதோடு அந்நிய வர்த்தக கடன் சுமை இந்தியாவை அழுத்துகிறது. ஒரு கட்டற்ற சந்தை பொருளாதார கட்டமைப்பில் நாம் சிக்கியுள்ளோம்.
இன்று இந்தியா ரூபாயின் மதிப்பு தேய்வதோடு மக்களின் வாழ்வு பல இல்லாமைக்கு இரையாகிறது சீனாவிலும் வறுமை உண்டு போதாமை உண்டு அங்கே அனைவருக்கும் வீடு கொடுப்பது இயலவில்லை தேவையைப் பூர்த்தி செய்கிற அளவிற்குக் கட்ட இயலவில்லை. ஆனால் இந்தியாவைப்போல் அடுக்குமாடிக்குடியிருப்புகள் விற்காமல் கிடப்பதுவும் மறுபக்கம் வீடின்றி தவிப்போரும் என்ற முரன் கிடையாது அங்கும் உணவு போதாமை உண்டு இந்தியாவைப் போல் உணவு தானியம் மலை ஒருபக்கம் மறுபக்கம் வாங்க வக்கற்ற மக்கள் பெறும் திரள் மறுபக்கம் என்ற முரன் கிடையாது. அங்கே கல்வி மருத்துவம் உழைப்பு இம்மூன்றும் சந்தை சரக்கல்ல இந்தியாவில் இன்று எல்லாமே சந்தை சரக்குகளே அது தொழில் மற்றும் விவசாய வளர்ச்சிக்கு அந்நிய நிதியையோ தொழில்நுட்பத்தையே சார்ந்து இல்லை. அந்நியர்கள் தொழில் செய்யக் குவிகிறார்கள் இந்தியாவிற்கு வர மறுக்கிறார்கள் அதற்குரிய கட்டமைப்பு இங்கே இல்லை
சீனா- இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் ஏகாதிபத்திய நாணயங்களாலும் ராணுவ பலத்தாலும் முற்றுகை இடப்பட்டிருப்பதை இந்திய அரசியல் தலைவர்கள் உணர்வது அவசியம். அதைவிட்டு சீன -அமெரிக்க வர்த்தக மோதலை பேரம் பேசப் பயன்படுத்தினால் ஏமாந்து போவோம். இந்தியச் சீன நட்பு இருநாடுகளின் போதாமையைப் போக்க உதவுவதோடு அந்த முற்றுகைக்கு முடிவுகட்ட முடியும் அது மட்டுமல்ல நமது பொருளாதார கட்டமைப்பு டாலரையே அல்லது இன்னொரு நாட்டின் பணத்தையோ தொழில் நுட்பங்களையோ சார்ந்து இல்லாமல் சுயேச்சையாக வளர இந்த நட்பைப் பயன்படுத்தும் வியட்நாமிற்கு இருக்கிற மாதிரி விவேகம் நமக்கு வேண்டும்.
முதலாளித்துவ உலகில் ஒரு நாட்டின் பொருளாதார வல்லமையைத் தேச மொத்த வருவாயை அளவு கோலாகக் கொண்டு அளக்கிறார்கள். இது உண்மையில் வல்லமையை அளக்கப் பயன்படாது. அதன்படி கீழே உள்ள தூண் வரைபடம் தேச மொத்த வருவாயைத் தூண்களாகக் காட்டுகிறது. அதில் தேச மொத்த வருவாயை டாலரில் கணக்கிட்டு முதல் 10 இடத்தில் இருக்கிற நாடுகளைக் காட்டுகிறது. அமெரிக்கா சீனா, ஜப்பான் ஜெர்மனி, இந்தியா. என்று வருகிறது. இந்த இந்த வரைபடத்தில் இந்தியாவை விடப் பொருளாதார வல்லமை படைத்த ஆனால் தேச மொத்த வருவாய் குறைவான ரஷ்யா ஆஸ்திரேலியா.பிரிட்டன் தென் கொரியா கீழே இருப்பதால் காட்டப்படவில்லை. நமக்குப் பொருளாதார வல்லமை ரஷ்யாவை விடக் கூடுதலாக இருந்தால் ஏவுகணை தடுப்பு கவசத்தை ரஷ்யாவிடம் வாங்க மாட்டோம் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் அமெரிக்க ஏவுகணையை பொறுத்தியிருக்க மாட்டோம் பைட்டர் ஜெட்டை பிரான்சிடம் வாங்கியிருக்க மாட்டோம்.இந்திய உழைப்பாளிகளைக் கொண்டு நாமே தயாரித்திருப்போம்.
இன்று இந்திய, சீன முதலீட்டாளர்கள் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளிலே முதலீடு செய்கிறார்கள் இதில் விநோதம் என்னவெனில் சீன அமெரிக்க முதலீட்டு வருவாய் சீனாவின் நிகர வருவாயோடு சேருகிறது. இந்தியர்கள் முதலீடு வருவாய் இந்தியாவிற்கு வருவதில்லை அங்கேயே வங்கிகளில் குவிகிறது விவேகமான நாட்டுப்பற்று அவசியம் மூர்க்கத்தனமான பக்தி நாசத்தை விளைவிக்கும்.
(கடந்த இரண்டு தசாப்தங்களாக, இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டைப் பார்க்கும்போது, இந்தியா 456.91 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றது. அதில் 72 சதவீதத்திற்கும் அதிகமானவை வெறும் ஐந்து நாடுகளிலிருந்தே வந்துள்ளன. மொரிஷியஸ், உலகெங்கிலும் உள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விருப்பமான நாடாகவும் ( 31 சதவீதம்), சிங்கப்பூர் (20.7 சதவீதம்), ஜப்பான் (7.2 சதவீதம்), நெதர்லாந்து (6.7 சதவீதம்), அமெரிக்கா (6.2 சதவீதம்). இதே காலகட்டத்தில் இந்தியாவில் சீனாவின் அன்னிய நேரடி முதலீட்டின் விகிதம் மொத்த வருவாயில் வெறும் 2.34 பில்லியன் டாலர் (0.51 சதவீதம்) ஆகும். வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகத்தின் கூற்றுப்படி, சீனாவிலிருந்து இந்த வருகையின் பெரும்பகுதி கடந்த ஐந்து ஆண்டுகளில் ($1.81 பில்லியன்), ஆட்டோமொபைல் ($876.73 மில்லியன்), மின் உபகரணங்கள் ($152.5 மில்லியன்) மற்றும் சேவைத் துறைகள் ($127 மில்லியன்) உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.)

