இளையோர் கதை 2:- சின்னஞ் சிறு தியாகி லியூ வென் ஷூவே | Chinese Boy Martyr Liu Wen Hsueh Youth Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் PDF | நவீன தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

இளையோர் கதை 2:- சின்னஞ் சிறு தியாகி லியூ வென் ஷூவே – தமிழில் உதயசங்கர்

இளையோர் கதை:- சின்னஞ் சிறு தியாகி லியூ வென் ஷூவே (Chinese Boy Martyr Liu Wen Hsueh)

– தமிழில் உதயசங்கர்

( உண்மைக்கதை: 1959 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி ழீசுவான் புரொவின்ஸ், ஹோஜூவான் கவுண்டி, சுசியா மக்கள் கம்யூனைச் சேர்ந்த இளம் முன்னோடியான லியூ வென் ஷூவே மக்கள் நலனுக்காக ஒரு வர்க்க எதிரிக்கு எதிராக தீரமாகச் சண்டையிட்டுத் தன் உயிரை இழந்தான். பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை உயர்த்திப் பிடிக்க  தன்னுடைய 14 வயதில் இறந்து போனான்.

பழைய சமூகத்தில் எப்படி நிலப்பிரபுகள் மக்களை அடித்துத் துன்புறுத்துவார்களென்று லியூ வென் ஷூவேக்குத் தெரியும். விடுதலைக்குப் பிறகு ஏழைகள் எழுச்சி பெற்றனர். அவனுடைய வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருந்த து. அவன் தீவிரமாக கட்சியையும் தலைவர் மாவோ வையும், நாட்டையும் சோசலிசத்தையும் நேசித்தான். அவனுடைய நாட்குறிப்பேட்டில்,

நம்முடைய நாட்டிலுள்ள ஒவ்வொரு குழந்தையும் தலைவர் மாவோவின் நல்ல குழந்தைகளாக இருக்க வேண்டும்..” .

லியூ வென் ஷூவே சீனக்குழந்தைகள் மனதிலும் மக்கள் மனதிலும் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பான்.)

******************

கதை 2: 1949-ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி நாடு முழுவதும் மக்களைத் திரட்டி பிற்போக்காளர்களைத் துரத்தியடித்த து. லியூ வென் ஷூவேயின் சொந்த கிராமமும் விடுதலையடைந்தது. அந்தப் பையன் உற்சாகத்துடன் மக்கள் ராணுவத்தை வரவேற்கத் தயாராக இருந்தான்.

தலைவர் மாவோ ஊழியர்களை அனுப்பி கிராம நிலங்களை அங்குள்ள மக்களுக்குப் பிரித்துக் கொடுக்கச் சொன்னார். அவர்கள் ஏழைகளிடம் அவர்கள் பட்ட துயரங்களை கேட்டார்கள். அங்கிருந்த பண்ணையார்களுக்கு எதிராகப் போராடுவதற்கு மக்களைத் திரட்டினார்கள்.

போராட்டக் கூட்டத்தில் மோசமாகச் சுரண்டப்பட்ட, ஒடுக்குமுறைகளுக்கு ஆளான ஏழை விவசாயிகளும், கீழ்த்தட்டு விவசாயிகளும் பண்ணையார்கள் செய்த குற்றங்களுக்குக் கண்டனங்களைத் தெரிவித்தார்கள். லியு வென் ஷூவேயும் பண்ணையாரின் நாய் அவனைக் கடித்த இடங்களைக் காட்டினான். அவன் பண்ணையார் எப்படி எல்லாம் ஏழைகளை மிரட்டிக் கொடுமைப்படுத்துவார் என்பதையும் சொன்னான்.

பண்ணையார் ஒழிக! என்ற முழக்கம் அந்தக் கூட்டத்திலிருந்து எழுந்தன. இந்தப் போராட்டம் உழைப்பாளி மக்களின் போராட்ட உறுதியை வலுப்படுத்தியது. வர்க்க எதிரியின் ஆணவத்தின் மீது கடும் தாக்குதலையும் தொடுத்தது.

📚 எழுதியவர்:

எழுத்தாளர் உதயசங்கர்

முதல் கதையை படிக்க: இளையோர் கதை:- சின்னஞ் சிறு தியாகி லியூ வென் ஷூவே – தமிழில் உதயசங்கர்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *