இளையோர் கதை 3:- சின்னஞ் சிறு தியாகி லியூ வென் ஷூவே (Chinese Boy Martyr Liu Wen Hsueh)
– தமிழில் உதயசங்கர்
( உண்மைக்கதை: 1959 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி ழீசுவான் புரொவின்ஸ், ஹோஜூவான் கவுண்டி, சுசியா மக்கள் கம்யூனைச் சேர்ந்த இளம் முன்னோடியான லியூ வென் ஷூவே மக்கள் நலனுக்காக ஒரு வர்க்க எதிரிக்கு எதிராக தீரமாகச் சண்டையிட்டுத் தன் உயிரை இழந்தான். பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை உயர்த்திப் பிடிக்க தன்னுடைய 14 வயதில் இறந்து போனான்.
பழைய சமூகத்தில் எப்படி நிலப்பிரபுகள் மக்களை அடித்துத் துன்புறுத்துவார்களென்று லியூ வென் ஷூவேக்குத் தெரியும். விடுதலைக்குப் பிறகு ஏழைகள் எழுச்சி பெற்றனர். அவனுடைய வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருந்த து. அவன் தீவிரமாக கட்சியையும் தலைவர் மாவோ வையும், நாட்டையும் சோசலிசத்தையும் நேசித்தான். அவனுடைய நாட்குறிப்பேட்டில்,
” நம்முடைய நாட்டிலுள்ள ஒவ்வொரு குழந்தையும் தலைவர் மாவோவின் நல்ல குழந்தைகளாக இருக்க வேண்டும்..” .
லியூ வென் ஷூவே சீனக்குழந்தைகள் மனதிலும் மக்கள் மனதிலும் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பான்.)
******************
கதை: நிலச்சீர்திருத்தம் வெற்றிகரமாக நடந்து முடிந்த து. ஏழைகள் எழுச்சி பெற்றனர். தங்கள் மண்ணுக்குத் தாங்கலே சொந்தக் கார ரானார்கள். லியூ வென் ஷூவேயின் குடும்பத்துக்கும் ஒரு வீடும் ஒரு துண்டு நிலமும் வழங்கப்பட்ட து. அவர்கள் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினார்கள்.
பழைய சமூகத்தில் ஏழைகளின் குழந்தைகளுக்குப் பள்ளிக்கூட த்தின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் இப்போது லியூ வென் ஷூவே புதிய ஆடைகள் அணிந்துகொண்டு தோளில் புத்தகப்பையை மாட்டிக் கொண்டு பள்ளிக்குச் சென்றான்.
அவன் பெருமையுடன் இளம் முன்னோடிகள் இயக்கத்தில் சேர்ந்தான். கழுத்து சிவப்பு நிறக்கைக்குட்டையை அணிந்து கொண்டு, நன்றாகப்படிப்பேன். ஒவ்வொரு நாளும் முன்னேறுவேன். ஒரு நல்ல இளம் முன்னோடியாக மாறுவேன் என்று உறுதி கொண்டான்.
கட்சியின் கிளைச்செயலாளர் வூ மாமா முன்னாள் ராணுவ வீர்ர். அவர் அடிக்கடி புரட்சி நடக்கும்போது நிகழ்ந்த போர்ச்சண்டைகளைப் பற்றிய கதைகளைச் சொல்வார்.
தீரமான போராளிகளைப் பற்றிய படக்கதைகளை லியூ வேன் ஷூவே மிகவும் விரும்பிப்படிப்பான். எப்படி ஹுவாங் சிகுவாங் எதிரியின் இயந்திரத்துப்பாக்கியின் வாயில் பாய்ந்து விழுந்தார் என்பதைப் பற்றி, எப்படி டுங் சூன் ஜுயி எதிரியின் கோட்டையைத் தகர்க்க தன்னுயிரை ஈந்தார் என்பதைப் பற்றி, எப்படி லியூ கு லான் சரணடைவதற்குப் பதிலாகத் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார் என்பதைப் பற்றியும் விரும்பி வாசிப்பான். அந்தச் சிறுவன் அந்த வீர தீரச் செயல்களிலிருந்து நிறையக் கற்றுக் கொண்டான்.
📚 எழுதியவர்:
எழுத்தாளர் உதயசங்கர்
முதல் கதையை படிக்க: இளையோர் கதை:- சின்னஞ் சிறு தியாகி லியூ வென் ஷூவே – தமிழில் உதயசங்கர்
இரண்டாம் கதையை படிக்க: இளையோர் கதை 2:- சின்னஞ் சிறு தியாகி லியூ வென் ஷூவே – தமிழில் உதயசங்கர்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

