இளையோர் கதை 4:- சின்னஞ் சிறு தியாகி லியூ வென் ஷூவே (Chinese Boy Martyr Liu Wen Hsueh)
– தமிழில் உதயசங்கர்
( உண்மைக்கதை: 1959 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி ழீசுவான் புரொவின்ஸ், ஹோஜூவான் கவுண்டி, சுசியா மக்கள் கம்யூனைச் சேர்ந்த இளம் முன்னோடியான லியூ வென் ஷூவே மக்கள் நலனுக்காக ஒரு வர்க்க எதிரிக்கு எதிராக தீரமாகச் சண்டையிட்டுத் தன் உயிரை இழந்தான். பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை உயர்த்திப் பிடிக்க தன்னுடைய 14 வயதில் இறந்து போனான்.
பழைய சமூகத்தில் எப்படி நிலப்பிரபுகள் மக்களை அடித்துத் துன்புறுத்துவார்களென்று லியூ வென் ஷூவேக்குத் தெரியும். விடுதலைக்குப் பிறகு ஏழைகள் எழுச்சி பெற்றனர். அவனுடைய வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருந்த து. அவன் தீவிரமாக கட்சியையும் தலைவர் மாவோ வையும், நாட்டையும் சோசலிசத்தையும் நேசித்தான். அவனுடைய நாட்குறிப்பேட்டில்,
” நம்முடைய நாட்டிலுள்ள ஒவ்வொரு குழந்தையும் தலைவர் மாவோவின் நல்ல குழந்தைகளாக இருக்க வேண்டும்..” .
லியூ வென் ஷூவே சீனக்குழந்தைகள் மனதிலும் மக்கள் மனதிலும் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பான்.)
******************
கதை: விடுதலைக்கு முன்பான வாழ்க்கை கசப்பான து. இப்போது மகிழ்ச்சியாக இருந்த து. கட்சியின் மீதும் தலைவர் மாவோ வின் மீதும் அன்பு பெருகியது. அதேபோல நிலப்பிரபுகளின் மீது வெறுப்பும் வளர்ந்த து.
“ நமது நாட்டிலுள்ள ஒவ்வொரு குழந்தையும் தலைவர் மாவோ வின் நல்ல குழந்தைகளாக இருக்க வேண்டும் “
அவனுடைய நாட்குறிப்பேட்டில் எழுதி வைத்தான்.
1958-ல் கிராமப்புறங்களில் மக்கள் கம்யூன்கள் அமைக்கப்பட்ட போது லியூ வென் ஷூவே கம்யூன் உறுப்பினர்களுடன் சேர்ந்து தீவிர உழைப்பில் ஈடுபட்டான்
அவன் குடும்பம் இல்லாமல் தனியாக இருந்த சாவோ பாட்டிக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுத்தான். விறகு வெட்டிக் கொடுத்தான்.
📚 எழுதியவர்:
எழுத்தாளர் உதயசங்கர்
முதல் கதையை படிக்க: இளையோர் கதை:- சின்னஞ் சிறு தியாகி லியூ வென் ஷூவே – தமிழில் உதயசங்கர்
இரண்டாம் கதையை படிக்க: இளையோர் கதை 2:- சின்னஞ் சிறு தியாகி லியூ வென் ஷூவே – தமிழில் உதயசங்கர்
மூன்றாவது கதையை படிக்க: இளையோர் கதை 3:- சின்னஞ் சிறு தியாகி லியூ வென் ஷூவே – தமிழில் உதயசங்கர்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

