மொத்தம் 52 சிறுகதைகள் கொண்ட இப்புத்தகம், பல மாறுபட்ட மனிதர்களின் எண்ணங்களையும், செயல்பாடுகளையும், சிறிய கதைகள் மூலம் பெரிய செய்திகளை கொண்டு சேர்க்கிறது இந்த புத்தகம்.ஒவ்வொரு கதைகளோடு தொடர்புடைய அழகு ஓவியங்களும் இடம் பெற்றுள்ளது.
நமக்குள் இருக்கும் சில எண்ண சிக்கல்கள் சிதரல்களாய்,சிறியவர் முதல் பெரியவர் வரை ரசிக்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ளார் மதிப்புமிகு இறையன்பு. சில நகைச்சுவையோடு நயமிக்க செய்தியை கொண்டு கொஞ்சம் வளம் சேர்ந்துள்ளது.எந்த சூழலிலும் எவருக்கும் பொருந்தும் வகையில் உள்ளது.
பொதுவாக சுய முன்னேற்ற நூல்கள்,ஊக்கப்படுத்தும் புத்தகம் அனைத்தும் சாதனை மனிதர்களின் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றியதாகவோ, நூலாசிரியர் கேள்விப்பட்ட சாதனைச் சம்பவங்களைப் பற்றியதாகவோ, அல்லது நூலாசிரியர் தானே யோசித்து எழுதிய சுய முன்னேற்றத்திற்கான அறிவுரைகளின் தொகுப்பாகவோ இருக்கும்.
மாறாக, இந்தப் புத்தகம் அவற்றிலிருந்து வேறுபட்டது. மிகவும் வித்தியாசமானது.ஒவ்வொரு குட்டிக் கதைக்கும் பின்னால் உள்ள கருத்துகள் அனைத்தும் மிக அழகாய் சுருக்கமாக ஆசிரியர் சொல்லியிருப்பது இந்நூலின் சிறப்பம்சம்.
ஜென் கதைகள் இந்நூல் முழுவதும் பரவிக் கிடப்பதால் நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் விதவிதமான, புரிந்து கொள்ளக் கடினமான மற்றும் சிக்கலான பல நடைமுறைப் பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.
நம் அறிவை விரிவடைய செய்யும் விதத்தில் சில சிந்தனைகளை தூவிருப்பார்.சூரியனுக்கு இல்லாத புகழ்ச்சி சந்திரனுக்கு மட்டும் ஏன் கிடைக்கிறது? என்ற கதையில் சொல்லப்படும் கருத்து நம்மை ஆழமாக யோசிக்கச் வைக்கிறது.
ஒரு பானை நிறையத் தண்ணீரை நிறைத்துவிட்டு தண்ணீரின் எந்தத் துளியால் அந்தப் பானை நிறைந்தது? என்ற கேள்வியின் வாயிலாக நம் அகந்தைக்கு ஒரு சவுக்கடி கிடைக்கிறது.
ஒருவர் மெளன விரதம் இருக்கும் நாட்களில் அந்த வீட்டில் உள்ளவர்கள் அதிகம் பேசுவதைச் சொல்லி ‘எது மெளனம்’? என்பதை உணர வைக்கிறார் ஆசிரியர்.
வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் தெரிய வேண்டுபவன் முதலில் மெளனத்தைக் கற்க வேண்டும் என்ற கதையின் மூலம் ஆசிரியர் சொல்லவரும் கருத்தும் சிறப்பு.
‘பூசணிக்காய் ஏன் உயரமான மரத்தில் காய்ப்பதில்லை?’ என்று வகுப்பில் பாடம் எடுத்த ஆசிரியரிடம் ஒரு மாணவன் தேங்காயைப் பற்றிக் கேட்ட கதையைகூறி சிந்திக்க வைக்கிறது.
தொழில்நுட்ப மொத்தத்தில் நமக்குத் தெரிந்திருந்த கதைகளிலிருந்து நமக்குத் தெரிந்திராத தத்துவங்களை விளக்கிய வகையில் இப்புத்தகம் நம் பாதையில் பிரகாசமான மற்றும் வண்ணங்கள் நிறைந்த வெளிச்சத்தையே பரப்புகின்றது.
புத்தகத்தின் பெயர்: சின்னச் சின்ன வெளிச்சங்கள்
ஆசிரியர்: இறையன்பு
பக்கங்கள்: 130
விலை: 75
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தி. தாஜ்தீன்
தி கிரசண்ட் மேல்நிலைப்பள்ளி
ஆவணியாபுரம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.