சிறையா வெப் சீரிஸ் நடிகர்கள்: திவ்யா தத்தா, சஞ்சய் மிஸ்ரா, பிரசன்னா பிஷ்ட், ஃபைசல் ரஷீத்.
இயக்கம் & தயாரிப்பு: சஷாந்த் ஷா இயக்கியுள்ளார்
குடும்பத்தில் கணவனின் பாலியியல் வன்முறைக்கு ஆளான பெண் ஒருத்தி தன் எதிர்ப்புக் குரலை உயர்த்துவதன் மூலமாக, ஒரு சட்டமே இயற்றப்பட்ட ஒரு சம்பவத்தை மிக அழகாக, உணர்வுப்பூர்வமாக, இத்திரைப்படம் மக்களிடம் கடத்தியிருக்கிறது என்றால் மிகையில்லை.
ஒரு கட்டுக்கோப்பான உயர்தரக் குடும்பத்திலிருந்து தான் இந்த சம்பவம் வெளி உலகிற்கு தெரிய வருகிறது. குடும்பத் தலைவர் ஒரு கவிஞர் சமூகத்தில் பிரபலமானவர். அவர்கள் குடும்பப் பெண்கள் யாவரும் பெண்ணடிமைத்தனத்திற்கு ஆளானவர்கள் . தினந்தோறும் பூஜை புனஸ்காரங்கள் என்று ஆடிப் பாடி மகிழ்கிறார்கள். அந்த வீட்டு இளைஞனுக்கு பெண் பார்க்கிறார்கள். மிக அழகான பெண் குடும்பமே சேர்ந்து கொண்டாடுகிறது.
மணமகன் இளமைத் துடிப்போடு மணமகளை நேசிக்கின்றான். திருமணம் முடிகிறது முதலிரவு நடக்கிறது மணமகள் காய்ச்சலோடு இருக்கிறார். ஆகவே உறவு வேண்டாம் என்று மறுக்கிறார். ஆனால் கணவனோ வலுக்கட்டாயமாக நான் ஆண், உன் கணவன் இன்று உறவு கொண்டே ஆக வேண்டும் அவளைக் கதறக் கதற இரண்டு முறை வன்புணர்வு செய்கிறான். மனைவி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறாள்.

அந்தக் குடும்பத்தில் பத்தாம் பசலித்தனமாக மூத்த மருமகள் இருக்கிறாள். அவள் தான் அவனை வளர்த்தெடுத்தவள் . அவளிடம் சென்று இரவு அவன் செய்த முரட்டுத் தனத்தை கூறுகிறாள். அவள் அதைக் கேட்டு சினமடைகிறாள் பெண் என்பவள் ஆணின் உடமைப் பொருள் எனவே நீ பேசுவது தவறு என்று கூறி அவளை அறைகிறாள். மிகவும் மிரட்சியானவள் உடனே தாய்வீடு சென்று வருகிறேன் என்று கிளம்புகிறாள்.
அண்ணி அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள். அவளது அம்மாவோ அவள் கூறுவதை காது கொடுத்து கேட்காமல் உடனே உனது கணவர் வீட்டிற்கு செல் இங்கே உனக்கு இடமில்லை என்கிறார். மிகவும் துயரத்தோடு கணவன் வீடு செல்கிறாள். கணவன் வீடோ மிகவும் பதட்டத்தோடு காத்திருக்கிறது. ஆனால் அண்ணி தாய்வீடு சென்றதை கூறாமல் சமாளிக்கின்றார். தேனிலவு கிளம்புகிறார்கள் மனமின்றியே கிளம்புகிறாள். அங்கு சென்றும் மனம் விட்டு பேச நேரமில்லாமல் பாலியல் வேட்கையோடு மிருகத்தனமாக நடந்து கொள்கிறான். ஒரு கட்டத்தில் கழிவறைக்குள் சென்று ஒளிந்து கொள்கிறாள். கதவை பலமாக தட்டி அழைக்கின்றான். வர மறுக்கிறாள் நேரமாகும் என்கிறாள்.
ஏன் எனக் கேட்க மாதவிடாய் வந்துவிட்டதாக பொய் சொல்கிறாள். அவன் நம்ப மறுக்கிறான். உள்ளே வந்து பார்க்கிறேன் என்கிறான். வேறு வழியில்லாது கழிவறையில் இருக்கும் பிளேடை எடுத்து பிறப்புப்பை அறுக்கிறாள். ரத்தம் பீறிடுகிறது, மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். மருத்துவர்கள் அதிர்கிறார்கள். அண்ணி மருத்துவமனைக்கு வந்து அவளின் நிலையறிந்து அதிர்ச்சியாகிறாள் நடந்ததை கூறுகிறாள். இப்போதுதான் அவனின் கோர முகத்தை உணர்ந்து கொள்கிறாள்.
புதிய மருமகள் பக்கம் நின்று நியாயம் கேட்கத் துவங்குகிறாள். மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்கள்.கணவனோ மருத்துவரிடம் தன் மனைவியோடு எப்போது உறவு வைத்துக் கொள்ளலாம் என்று கேட்கிறான். கணவன் பார்வையால் சுட்டெரித்து விரட்டியடிக்கிறார். நீ சிறைக்கு போக வேண்டியவன் என்கிறார். வீட்டில் இரண்டு மருமகள்களும் ஒன்று சேர்கிறார்கள். கலகம் பிறக்கிறது நீதி மன்றத்திற்கு போவேன் என்கிறாள். வீட்டை விட்டு விரட்டுகிறார் மாமனார்.

மூத்த மருமகள் தனது வழக்கறிஞர் தாத்தாவிடம் அழைத்துச் செல்கிறார். அவர் சட்டப் புத்தகங்களை புரட்டி விட்டு கணவனால் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைக்கு தண்டிக்க சட்டத்தில் இடமில்லை என்கிறார். வரதட்சனை கொடுமை என்று வழக்கு பதிவு செய்யலாம் என்கிறார். மூத்த மருமகள் மறுக்கிறார் பொய் வழக்கு கூடாது என்கிறார். வேறு வழியின்றி வீடு திரும்புகிறார்கள்.
இரண்டு மருமகள்களும் தோற்றுப் போய் விட்டதாக மருகி நிற்கிறார்கள். அந்த வீட்டின் மூத்த பெண் அவர்களை அழைத்து பஜனைக்கு ஏற்பாடு செய்யச் சொல்கிறாள். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வரவழைக்கப்பட்டு அவர்கள் முன் மூத்த மருமகள் பஜனை பாடி, அருண் செய்த அநியாயங்களை சபை அறியச் சொல்கிறாள்.
உறவுகள் அதிர்கிறார்கள் ஆனாலும் ஆணாதிக்கமுள்ள மாமனார் அவர்களை அடக்குகிறார். வெளியேற முற்படும் உறவுகளிடம் நியாயம் கேட்கிறாள். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்கிறார்கள். அருண் மன்னிப்பு கேட்டு காலில் விழுகிறான். மனைவி மன்னிக்க மறுத்து விடுகிறாள். குடும்ப வன்முறைக்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டால் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தருவேன் என்கிறாள்.
பெண்கள் மகா சக்திகளாகி நிற்பதோடு படம் நிறைவடைகிறது. இந்தியில் வெளிவந்த வெப் சீரிஸ் சமூகப் பிரச்சினையை உணர்வுப்பூர்வமாக, ஆழமான, அழுத்தமான வசனங்களோடு எடுத்திருக்கிறார்கள். படத்தில் திருநர் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் வருகிறது. கதாநாயகி அப்போராட்டத்தை ஆதரித்து கொடி பிடிக்கிறாள். அந்த வீட்டின் இரண்டாவது மருமகள் சிக்கலான தருணங்களில் அங்கு சென்று தான் ஆலோசனை பெறுகிறாள். நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான விவாதப் புள்ளிகளுடன் கூடிய படம்தான் சிறையா.
📚 எழுதியவர்:
செ.தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

