பதிமூனாவது மையவாடி - சோ.தர்மன் | Pathimoonavathu Maiyavadi | Cho.Dharman

கருத்தமுத்து என்கிற கிராமத்து இளைஞனின் சித்திரத்தை வேறுவிதமான கோணங்களில் காட்சிப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர் சோ.தர்மன். இவர் எழுதிய நூல்களில் இந்நூல் வாசகர்களை எங்கெங்கோயோ இழுத்து ஈர்த்துச் செல்கின்றன. கிராமத்துச் சம்சாரியின் மகனான கருத்தமுத்துவின் பள்ளிப் படிப்பு முதல் அரசு உத்தியோகம் வரை இவனின் ஒவ்வொரு அசைவுகளும் அசலாக புலப்படுத்தியிருக்கின்றன. கருத்தமுத்துவின் உயர்ந்த சிந்தனையும் கொள்கையும் பகுத்தறிவும் பல்வேறு வகையான கேள்விகளை எழுப்புகின்றன.

கருத்தமுத்துவின் விடுதியும் சுடுகாடும் ஒன்றாக இருந்தன. சிதையில் தீமுட்டி எழும்பும் கரும்புகையை குடித்துக் கொண்டிருப்பது தகரக்கொட்டறைகள்

மட்டுமல்ல,கருத்தமுத்துவோடு சேர்ந்து காற்றும் குடித்துக் கொண்டிருக்கின்றன. விடுதியும் மையவாடியும் பழகிப்போயின.

வேதப்பள்ளியும் பாதிரியாரின் கொள்ளைகளும் கருத்த முத்துவுக்கு முரணாக இருந்தன.

கருத்தமுத்து இந்துவாக இருந்தாலும் கட்டாய நீதி போதனை வகுப்பில் போதிக்கும் கருத்துக்கள் மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தான்.
பாதர்களையும் சிஸ்டர்களையும் கேள்விகளால் துளைத்தெடுத்தது வியக்க வைக்கின்றன.

பதின் பருவத்தில் காமத்தை தூண்டும், நண்பனின் அக்கா ஜெஸ்ஸியின் செயல்பாடுகளால் ஏங்கித் தவித்தான் கருத்தமுத்து .
முத்த வடுக்களால் உதடுகள் சிவந்தேகிடக்கின்றன கருத்தமுத்துவிற்கு.

ஆளவரமற்று கிடக்கும் சுடுகாடுகளில் காவல் காத்துக்கிடக்கும் அரியானும் , கருத்த முத்துவும் நண்பர்களாகிறார்கள்.

மஞ்சணத்திச் செடிகளும் புதரும் மண்டிக்கிடக்கும் சுடுகாட்டுக்கு இரவுகளில் மஞ்சக்குருவி போன்ற விலைமாதுக்கள் வந்து போகின்றன. அரியான் கண்ணில் மாட்டும் குடிகாரர்கள் அடியும் நாய்க்கடியோடு ஓடுவது இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அமையாதியாக கல்லறையில் உறங்கிக் கொண்டிருக்கும் ஆத்மாக்களை தொந்தரவு செய்து மண்டை எலும்பைத் தோண்டி எடுக்க வரும் மாந்திரீகர்களும் திருடர்களும் பேய்களுக்கு பயப்படுவதில்லை மாறாக அரியானுக்கு பயப்படுகின்றனர்.

அரியானின் கதைகளும் வேதப் பள்ளியில் நடக்கும் கொடூரங்களும் கருத்த முத்துவை வருந்தச் செய்தன.பெரும்பாலான பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் உண்மைக்கு மாறாக வாழ்ந்துவருவதை எண்ணி வருத்தப்படுகிறான் கருத்தமுத்து.

கன்னியாஸ்திரி ஏஞ்சல் சிஸ்டரும் கருத்த முத்துவும் நண்பர்களாகின்றனர். கருத்த முத்துவின் பேச்சுக்கள் ஏஞ்சல் சிஸ்டரை பலமுறை யோசிக்க வைத்திருந்தன.
இளம் வயதில் வெள்ளை ஆடையணிந்து தனது இன்பம்,வாழ்வு, சுதந்திரம் அனைத்தையும் அடக்கி வாழ்ந்து வரும் கன்னியாஸ்திரிகள் ஏதோ ஒரு சூழ்நிலைக்குள்ளாகி ஒரு கூண்டுக்குள் தள்ளப்படுகின்றன.மனம் வெறுத்து சில சமயம் தற்கொலை செய்து கொள்கின்றனர். சர்ச்களில் உள்ளே நடப்பது‌வெளியில் யாருக்கும் தெரிவதில்லை.

செந்தூர் பாண்டி போன்ற பெண்மை உணர்வு கொண்ட பெரும்பாலான ஆண்கள் வீடுகளை விட்டுத் துரத்தி வீதிக்குத் தள்ளப்படுகின்றன.அநாதையாக வந்த செந்தூர் பாண்டிக்கு வாழ்வு கொடுக்கும் கிட்டய்யர் இறைவனுக்குச் சமமாகிறார்.

கிட்டய்யரிடம் சமையல் கற்று வேதக்கோயில் விடுதிக்கு சமையலராக போன செந்தூர் பாண்டி ‌, நடையிலும்,பேச்சிலும்,பெண்ணைப் போலவே இருக்கிறான்.ஒவ்வொரு கன்னியாஸ்திரி சிஸ்டர்களிடமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் செந்தூர் பாண்டிக்கு ஏஞ்சலம்மா என்கிற ஏஞ்சல் சிஸ்டர் பிடித்துப் போகிறார்.

செந்தூர் பாண்டிக்கு உதவியாளராக வரும் கருத்தமுத்து, கன்னியாஸ்திரிகளைப் பற்றியும் பாதிரியார்களைப் பற்றியும் அவர்களின் உண்மைக்கு மாறான பேச்சுக்களையும் செந்தூர் பாண்டியிடம் சொல்லிப் புலம்பியதும் நெஞ்சைத் தட்டுகின்றன.இப்படியே போனால் இந்தியாச் சிலுவை நாடாக மாறிவிடும் அடுத்த தலைமுறையில் .பெரும்பாலான பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் வியர்வை பசி வறுமை வருத்தம் என்னவென்று தெரியாத ராஜாக்களாக வாழ்கின்றனர். கருத்து முத்துவின் கேள்விகளும் கருத்துகளும் இளம் வயதே ஆன ஏஞ்சல் சிஸ்டரை, சிறைக்கூண்டை உடைத்தெறிந்து வெள்ளை ஆடைகளை வீசிவிட்டு புத்தம் புதிய சேலை ரவிக்கை அணிய வைத்து சுதந்திரப் பறவையாக்கியிருக்கிறது. தனது அகத்தையும் புறத்தையும் முதன் முதலாக உணர்கிறாள்.கருத்த முத்து துணையோடு நிலக்கரி சுமக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசக் கல்வி கொடுத்து அறம் செய்கிறாள்.

 

நூலின் தகவல்கள்: 

புத்தகம் : பதிமூனாவது மையவாடி

ஆசிரியர் : சோ.தர்மன்

வெளியீடு : அடையாளம் பதிப்பகம்

விலை : ரூ.320/-

 

நூலறிமுகம் எழுதியவர்:

கவிஞர். அய்யனார் ஈடாடி
க/எண்45, ஈடான் -மூக்கம்மாள் இல்லம்
தானத்தவம், மாடக்குளம் (அஞ்சல்)
மதுரை – 625003.
பேச:+91 9597056785/8489127462
மின்னஞ்சல்: [email protected]

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *