கிளாரா ஜெட்கின் (Clara Zetkin) – நூல் அறிமுகம்
நாம் இன்று வாழும் வாழ்க்கை எவ்வளவு அமைதியானதோ அதற்காக முழுமையாக உழைத்த எத்தனையோ மனிதர்களை நான் நினைவு கூற வேண்டும். நம் உரிமைகளையும் உடைமைகளையும் மீட்டெடுத்தவர்கள் ஆயிரம் பேர் இருக்கின்றனர். அதில் ஒருவரான கிளாரா ஜெட்கின் என்ற ஒரு பெண்மணியின் ஒரு சிறு கட்டுரை தான் இந்த புத்தகம்.
நம் சமூகத்தின் ஆதியில் ஒரு பெண் தான் ஒரு குடும்பத்தை வழி நடத்தி இருக்கின்றார். வேட்டையாடும் சமூகத்தில் பெண்தான் குடும்பத் தலைவியாக இருந்திருக்கிறார். காலங்கள் மாற மாற பெண்ணானவள் குழந்தைகளை பெற்றெடுப்பதற்கும் வீட்டை பராமரிப்பதற்கும் என தங்களுடைய வாழ்க்கையை ஒரு வட்டத்திற்குள் கட்டமைத்துக் கொண்டனர்.
ஆண் என்பவன் வெளியில் சென்று பொருளாதாரத்தை ஈடுபவனாகவும் கடினமான வேலைகளை செய்பவனாகவும் இருந்திருக்கிறான். இந்த பொருளாதார நிலையானது பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது.
அப்படி இருந்த அடிமைத்தனத்திலிருந்து பெண்களை மீட்டெடுத்ததில் ஒரு மிகப்பெரும் பங்கு கிளாரா ஜெட்கினுக்கு எனக்கு உண்டு. ஒவ்வொரு வருடமும் சர்வதேச மகளிர் தினத்தை நாம் கொண்டாடும் பொழுதும் கிளாரா ஜெட்கின் அவர்களை நினைவு கூறுவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
ஏனெனில் பெண்களுக்கான சுதந்திரத்தை பெற்றுத் தருவதில் முழுமூச்சாக போராடிய ஒரு போராளி. பெண்ணுரிமை என்பது பாட்டாளி வர்க்க மகளிருக்கும், முதலாளித்துவ மகளிர்க்கும் பொதுவானதாக இருந்தாலும் இந்த இருவருக்குமான நோக்கங்கள் வெவ்வேறாக இருந்திருக்கின்றன.
முதலாளித்துவ மகளிர் தங்களுக்கான சொத்துரிமைகளை அடைவதிலேயே குறிக்கோளாக இருந்து அதற்காக போராடி இருந்திருக்கின்றனர்.
ஆனால் பாட்டாளி வர்க்க மகளிர் அப்படி அல்ல. அவர்கள் ஆண்களை எதிராக நினைக்கவில்லை. தங்களுடைய வர்க்க ஆண்களுடன் இணைந்து முதலாளித்துவத்திற்கு எதிராக போராடி இருக்கின்றனர்.
தங்களுடைய குடிசைகளில் ஆரம்பமான தங்களுடைய வாழ்வாதாரம் படிப்படியாக தொழிற்சாலைகளை சென்ற பொழுது அவர்களுக்கான பொருளாதார கேள்விக்குறியாகிறது. ஆண்கள் மட்டுமே தொழிற்சாலைகளை நோக்கி சென்று கொண்டிருந்த நேரத்தில் பெண்கள் பொருளாதார தேவைகளுக்காக தொழிற்சாலைகளை நோக்கி செல்கின்றனர்.
அப்படி செல்லும் பெண்கள் அடிமட்ட கூலிகளாகவும் முதலாளிகளுக்கும் ஆண்களுக்கும் அடிமைகளாகவும் இருக்கின்றனர்.
பெண்களைப் பொறுத்தவரை அவர்களின் சமூக மற்றும் அரசியல் சமத்துவம் பொருளாதார சுதந்திரத்தில் தான் உள்ளது. எனவேதான் ஒரு பெண் தன்னுடைய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தொழிற்சாலைகளையும் ஆலைகளையும் நோக்கி படை எடுக்கின்றனர்.
அப்படி வரும் பெண்களின் நிலை 30 சதவிகித குழந்தைகள் தாயின் கருவிலேயே களைந்து விடுகின்றனர். 50 சதவிகித குழந்தைகள் மட்டுமே ஐந்து வயது வரை வளர்கின்றனர். குழந்தை பெற்ற பின்பு ஓய்வின்றி இருக்கும் தாய்மார்கள் அதிக நாள் விடுப்பு எடுத்தால் தன்னுடைய வேலை பறிபோய் விடுமே என்ற காரணத்தினால் குழந்தை பிறந்த மூன்று மாதங்களிலேயே தொழிற்சாலைகளை நோக்கி ஓடுகின்றனர்.
சில பெண்கள் தங்களுடைய குழந்தைகளை கையோடு தூக்கிக் கொண்டு தொழிற்சாலைகளுக்கு செல்லும் பொழுது அங்கே குழந்தைகளை பராமரிக்க சரியான அறையோ வசதியோ எதுவும் இன்றி நீண்ட நேரம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
16 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் பெண்களுக்கு பிரிட்டனில் 10 மணி நேரம் வேலை நேரமாகவும் ஜெர்மனியில் 11 மணி நேரம் வேலை நேரமாகவும் நிர்ணயிக்கின்றனர். இவை அனைத்திற்கும் காரணம் கிளாராஜெட்கின் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து உருவாக்கப்பட்ட தொழிற்சாலை சங்கங்கள் நடத்திய போராட்டங்களே முக்கிய காரணமாகும்.
பாட்டாளி வர்க்க பெண்கள் மலிவு விலையில் தங்களுடைய உழைப்பை சுரண்டு முதலாளித்தனத்தை மட்டுமே எதிர்த்தனர். தன்னுடைய குடும்ப சூழ்நிலைக்காக கணவனின் பொருளாதாரம் பற்றாக்குறையின் காரணமாக தன் கணவனுடன் சேர்ந்து பட்டறைகளுக்குள்ளும் ஆலைகளுக்கும் நுழைகிறாள் பெண்.
பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கூட இல்லாமல் இருந்தது. பெண்களுக்கு அரசியல் தெரியாது. அவர்களுக்கு வாக்குரிமை அளிப்பது வீண். அந்த வாக்கை அவர்கள் எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் என்ற சிந்தனை அற்றவர்கள் பெண்கள் என்பது போன்ற பல கேள்விகள் இருந்திருக்கின்றன. இந்த கேள்விகள் அனைத்தும் ஆண்களுக்கும் பொருந்தும் தானே. வாக்குரிமை இருக்கின்ற அனைத்து வர்க்க ஆண்களும் பெண்களும் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்கின்றனர் என்ன? இதில் பெண்களை மட்டும் குறை கூறுவது எந்த விதத்தில் நியாயம்?
சோசியலிச கட்சிகளில் தன்னை இணைத்துக் கொண்ட கிளாரா , லக்சம் பர்க் மற்றும் காரல் மார்க்ஸ் அவர்களின் மகள் லாரா வுடனும் இணைந்து பெண்களுக்கான போராட்டங்களில் பணியாற்றியிருக்கிறார்.
1890 ஆம் ஆண்டு சமத்துவம் என்ற பத்திரிக்கையை துவங்கி 1892 முதல் 1917 வரை அதன் ஆசிரியராக இருந்தார் கிளாரா.
இந்த பத்திரிக்கையின் மூலம் பாட்டாளி வர்க்கத்தின் உழைப்பின் மூலமாகவோ அல்லது அவருடைய மூளையின் மூலமாகவோ அவர்களின் உழைப்பை சுரண்டி சொகுசாக வாழ்ந்து கொண்டிருந்த முதலாளித்துவத்தை இலக்காக வைத்து பல கட்டுரைகள் அதில் வெளிவந்தன. பின்னாளில் வந்த சீர்திருத்தவாதிகளால் பிளாராவின் தலைமை பதவி நீக்கப்பட்டு அந்த பத்திரிக்கையும் வேறு ஒரு வழியில் பயணப்பட்டது.
சர்வதேச மகளிர் தினம் ஏதாவது ஒரு நாட்டின் அல்லது நகரத்தின் பெண்களால் நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் என்பதாக மட்டும் இருக்கக்கூடாது அது எல்லா இடங்களிலும் முழு கம்யூனிஸ்ட் கட்சியின் விருப்பத்தின் வெளிப்பாடாகவும் பணியாகவும் இருக்க வேண்டும் என்று சர்வதேச கம்யூனிஸ்ட் மகளிர் தின கட்டுரையில் கிளாரா குறிப்பிட்டிருக்கிறார்.
இவரின் போராட்டங்களுக்கு கிடைத்த பரிசாக தான் நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் வாக்குரிமை திருமணம் விவாகரத்து மகப்பேறு உள்ளிட்ட அனைத்திலும் சமத்துவத்தை பெற்றுக் கொண்டிருக்கிறோம். முதல் முதலில் ரஷ்யாவில் தான் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடைபெறும் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க போராட்டத்திற்கு பெண்களை தயார் செய்யும் பணிகளை மிக சிறப்பாக செய்திருக்கிறார்.
காரல் மார்க்ஸ் அவர்களுடைய நண்பர் ஏங்கெல்ஸ் மற்றும் புரட்சியாளர் லெனின் ஆகியவற்றோடு இணைந்து பணியாற்றிய சிறப்புக்கு உரியவர் போராளி கிளாரா. மாபெரும் புரட்சியாளரான லெனின் அவர்களின் அருகிலேயே இவரும் துயில் கொண்டிருக்கிறார்கள்.
உழைக்கும் பாட்டாளி வர்க்க பெண்கள் இருக்கும் வரை கிளாராவின் போராட்டங்களும் புரட்சிகளும் அவருடைய வார்த்தைகளும் எங்கும் அகல்வது இல்லை.
நூலின் தகவல்கள் :
புத்தகம்: கிளாரா ஜெட்கின்
ஆசிரியர் : ஜி மஞ்சுளா
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்
பக்கங்கள்: 40
விலை: 40
நூல் அறிமுகம் எழுதியவர் :
நளினி மூர்த்தி
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.