ஜா.மாதவராஜ் (Ja.Mathavaraj) எழுதிய க்ளிக் (Click) Click Novel - நூல் அறிமுகம், நாவல் (Novel) - பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) - https://bookday.in/

க்ளிக் (Click) – நூல் அறிமுகம்

க்ளிக் (Click) – நூல் அறிமுகம்

ஒரு நாவல் என்பது என்னுடைய பார்வையில் கதையாக நம்மோடு பயணிக்கும், தொடர்ந்து சிந்திக்க தூண்டி கொண்டே இருக்கும். இந்த க்ளிக் நாவலும் என்னோடு பயணித்தது.

தோழர்.மாதவராஜ் தொடர்கதையாக அவருடைய இணையப்பக்கத்தில் எழுதியபோது நிறைய தோழர்கள் அதுகுறித்து பேசியதாக கூறியிருந்தார்கள். அப்போது எளிதில் கடந்து சென்றேன். ஆனால் இப்போது நாம் அப்போதே படித்திருக்கலாம் என்று தோன்றியது. க்ளிக் நாவல் என்னை க்ளிக் செய்து படிக்க வைத்தது.

சாதாரண கிராமத்தில் வளர்ந்த பெண் பூங்குழலி. தனக்குரிய வாழ்க்கை வழிமுறைகளில் இருந்து விலகி புதிய கோணத்தில் சிந்திக்கிறாள். சராசரி ஆணாக திருமணத்தின் மீதான எதிர்பார்ப்புகளை முன்னின்று செல்கிறான் நரேன். இருவருக்கும் திருமணம் செய்து கொள்ள பெரியோர்கள் முடிவு செய்து க்ளிக் செய்கின்றனர்.

முதல் சந்திப்பில் நரேன் பூங்குழலியிடம் சொன்னது, உன்னை எனக்கு பிடிச்சுருக்கு, உனக்கு என்று கேட்கிறான். பார்த்தவுடன் எப்படி பிடித்திருக்கு சொல்ல முடியும், உங்களோடு பழகிய பிறகு தான் எனக்கு தெரியும் என்று பூங்குழலி கேட்கிறாள்.

க்யூன் இன் ரைட், கிங் இஸ் ராங் என்ற ஸ்டேட்டஸ்ஸில் தொடங்கிய பிரச்சனை, நமக்கு செட்ட ஆகாது என்று குறுச்செய்தியோடு நிறைய விஷயங்களை பேசுகிறது. பெண்ணின் வாழ்க்கை பயணத்தில் ஏற்படும் மாற்றங்களை பேசுகிறது. நம்பிக்கையையும், வாழ்க்கையின் அடுத்தகட்ட நடவடிக்கை தீர்மாளிக்கும் சக்தியையும் அவளுக்குக் கொடுக்கிறது. அதை வெளிப்படுத்திய நிகழ்வுகள் ஒவ்வொன்றும் கண்முன் பேசியது.

பூங்குழலியும் நரேன் கடற்கரையில் அமர்ந்து பேசும்போது, நீ என்னை லெஃப்ட் க்ளிக் செய்துவிட்டாய், நான் இன்னும் ரைட் க்ளிக் செய்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன், என்று கூறிய பூங்குழலியின் வார்த்தைகள் நிதசர்மான உண்மை.

பூங்குழலியின் அண்ணன் காதலுக்காக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தன் தந்தை இறந்தபிறகு கலைச்செல்வனை தன் தந்தையின் உருவமாகவும், நம்பிக்கையை உடையவராகவும் பூங்குழலி நினைக்கிறாள்.

ஜா.மாதவராஜ் (Ja.Mathavaraj) எழுதிய க்ளிக் (Click) Click Novel - நூல் அறிமுகம், நாவல் (Novel) - பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) - https://bookday.in/

சோபி பூங்குழலியுடன் வேலை செய்பவர். ஐந்து வருடங்களில் 500 முறை தன்னோடு செக்ஸ் வைத்தும், அவன் மீது நம்பிக்கை இல்லை என்று கணவனை பற்றிய வார்த்தை நாவலின் முக்கியமான ஒன்று

ஆஷா நரேன் உடன் வேலை செய்பவர். கணவர் வெளிநாட்டில் இரண்டு வருடமாக இருக்கிறார். ஆஷாவுக்கு மற்றொரு நபரோடு தொடர்பு இருக்கிறது. அதற்கான விளக்கத்தை ஆஷா நரேனிடம் கூறும்போது நாவலின் எழுத்தாளரின் எழுத்துகள் பேசுகின்றன.

பூங்குழலி, கல்யாணி, ஆஷா, பத்மாவதி, சித்ரா, சந்திரா, ஸ்ரீஜா, பவித்ரா, பத்மாவதி என்று நிறைய பெண்கள் க்ளிக் நாவலில் வருகிறார்கள். ஒருவருக்கு ஒருவர் மாறுபட்ட கோணத்தில் எதிர்பார்ப்புகளும், நடவடிக்கைகளும் இருப்பதை அறிய முடிகிறது.

ஆனால் நான் க்ளிக் செய்தது, பூங்குழலி, கல்யாணி, ஆஷா ஆகியோரை. என்னை மிகவும் தேட வைத்த கதாபாத்திரம் கல்யாணி. பூங்குழலியின் அப்பா ரவிச்சந்திரனின் முன்னாள் காதலி. கடைசிவரை நேசித்து பைத்தியமாக சுற்றிக்கொண்டு இருக்கிறாள். ஏன் ரவிச்சந்திரன் இவருடைய காதலை க்ளிக் செய்யவில்லை என்று இருக்கிறது.

நாவலின் கடைசி சில பக்கங்கள் மிகவும் நெகிழ்ச்சியான தருணங்கள். மேஜிக் ஷோ போல இருக்கிறது.

தோழர்.மாதவராஜ் முதல் நாவல் க்ளிக் ஆகிவிட்டது. ஒரு வாசகராக நான் வாசிக்கும்போது எழுத்தாளின் எழுத்துகள் ஒவ்வொன்றும் வலிமை மிகுந்து இருப்பதாக அறிய முடிகிறது. இந்த நாவல் முடிக்கும்போது நிறைய அர்த்தம் புரிகிறது.

இன்றைய தோழர்களின் நிலைமையை கண்முன் நிறுத்திய அன்புத்தோழர்.மாதவராஜ் அவர்களுக்கு அன்பும், வாழ்த்துகளும்.

எல்லோரின் வாழ்க்கையிலும் ஒரு க்ளிக் இருக்கதான் செய்யும்.

நூலின் தகவல்கள் :

நூல் : க்ளிக்
ஆசிரியர் : ஜா.மாதவராஜ்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
நூலைப் பெற :  https://thamizhbooks.com/product/click/

நூல் அறிமுகம் எழுதியவர் : 

எழுத்தாளர் சங்கர் எழுதிய (Sankar) முருகம்மா (Murugamma) - நூல் அறிமுகம் - சிறுகதைகள் (Short Stories) - பாரதி புத்தகாலயம் வெளியீடு - https://bookday.in/

சு.வினோத்குமார்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *