கடிகாரம் – சு.ரசிகாகடிகாரம்

முதலாளி இல்லா முழுநேர உழைப்பாளி நீ
முடிவுரை இல்லா முழு உரை நீ
விலைமதிப்பில்லா விடியலும் நீ
பகைவரும் இல்லா பங்காளியும் நீ
பகட்டு இல்லா பதவியும் நீ
பகலும் உன் வசம்
இரவும் உன் வசம்
இன்னலும் உன் வசம்
மின்னலும். உன் வசம்
உன்மீது காதல் கொள்ள
ஓடிவந்தேன் நொடியும்
நிமிடமும் உன் முதல் காதலியோ!!!!!

சு.ரசிகா