கூட்டுறவு அமைப்புகள் மக்களுக்கே; அரசியல்வாதிகளுக்கோ கார்ப்பரேட்டுகளுக்கோ அல்ல – சர்வேசன்

கூட்டுறவு அமைப்புகள் மக்களுக்கே; அரசியல்வாதிகளுக்கோ கார்ப்பரேட்டுகளுக்கோ அல்ல – சர்வேசன்

 

100 ஆண்டுகளுக்கு மேல் நல்ல அனுபவங்களோடு சாதாரண ஏழை எளிய மக்களுக்காக சேவை செய்து வருவது கூட்டுறவு.

நிதி, உற்பத்தி, சேவை உள்ளிட்ட பல துறைகளில் மக்களுக்கான சேவை நோக்கத்தோடு  சிறந்த அனுபவம் கொண்ட அமைப்பு கூட்டுறவுஆகும்.

இந்தியா முழுவதும் உள்ள 1482 நகர கூட்டுறவு வங்கிகள்(ஒரு மாநிலத்திற்குள் செயல்படுபவை) மற்றும் 58 பன்மாநில நகர கூட்டுறவு வங்கிகள்(பல மாநிலங்களில் கிளைகள் அமைத்து செயல்படுபவை) ஆக 1540 நகர கூட்டுறவு வங்கிகள் பாரத ரிசர்வ் வங்கியின்  நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் என்று மத்திய  அமைச்சரவை 24.06.2020 அன்று   முடிவு எடுத்தது.

தற்போதும்கூட இவ் வங்கிகள் பாரத ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில்தான்  உள்ளன. இவ் வங்கிகளுக்கான  உரிமம்  வழங்கவும் ரத்து செய்யவும் அதிகாரம்  பாரத ரிசர்வ் வங்கியிடம்  தான்  உள்ளது. 1482 நகர கூட்டுறவு வங்கிகளில் தமிழகத்தில் 128 வங்கிகள் உள்ளன. இதில் 95% வங்கிகள் இலாபத்தில் இயங்குகின்றன.  இவை தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் மாநிலத்தில் உள்ள  சிறு சிறு நகரங்களில் செயல்பட்டு வருகின்றன. நகர் பகுதி மக்களுக்கு நகைக்கடன் , வீட்டு அடமானக்கடன், சிறு வணிக கடன், சிறுதொழில் கடன்போன்ற சாதாரண மக்களுக்கான கடன்களை வழங்கி வருகின்றன.

கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் ...

தொடர்ச்சியாக பாரத ரிசர்வ் வங்கியின் ஆய்வு,கண்காணிப்பு இருக்கின்ற நிலையில் ஏன்இந்த திடீர் அமைச்சரவை முடிவு ?

வங்கியியல் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் செய்து அவசர சட்டம் வெளியிட்டபின் மத்திய அரசின் நோக்கம் கூட்டுறவு வங்கிகளை தனியர்வங்கிகளாக மாற்றத்தான்(Private bank)   என்பதுதெளிவாகிறது.

இந்த அவசரச் சட்டம் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கிறது. மேலும் மக்களுக்கான நிதித் தேவைகளுக்கு உதவிட புதிய கடன் திட்டங்களை மாநில அரசு அறிவிக்க முடியாது.

இதன் தொடர்ச்சியாக விவசாயிகளுக்கு கடன் வழங்கி வரக்கூடிய மாநில தலைமை கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றைகயும்  தன் கட்டுப்பாட்டில் எதிர்வரும் காலங்களில் மத்திய அரசு மறைமுகமாக எடுத்துக் கொள்ள கூடிய ஆபத்து உள்ளது.

    கார்ப்பரேட்டுகள்தான் நாட்டின் வளங்களை உருவாக்குபவர்கள் என்ற எதிர்மறை சிந்தனை உடைய ஆட்சியாளர்கள் பொதுத்துறை, அரசுத்துறை, கூட்டுறவுத்துறை, பொது சுகாதாரம் போன்ற சாதாரண மக்கள் சார்ந்த அமைப்புகள் அதன் தன்மையில் நீடிக்க அனுமதிப்பதில்லை

மேலும் இந்த அவசர சட்டம்  வங்கி பங்குகளை தனியாருக்கு விற்று, கூட்டுறவு வங்கி உறுப்பினர்களின் உரிமைகளை பறித்து  கூட்டுறவு தத்துவத்திற்கு விரோதமாக தனியார் லாப வேட்டைக்கு திறந்து விட வழி வகுக்கிறது.

மத்திய அரசின் கீழ் உள்ள மத்திய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் இருந்துதான் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி (PMC Bank).   பத்து ஆண்டுகளாக நடந்த முறைகேடுகளை தடுக்க மத்தியஅரசு, பாரத ரிசர்வ் வங்கி, பட்டய கணக்கர்கள் என்று யாருமே தங்களது பணியினை சரிவர செய்யாததனால் இன்று வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் .

PMC Bank seized assets worth 'more than deposits'

தனது பணியை முறையாக செய்யாத  அமைப்புகளிடம் நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக உள்ள நகரக் கூட்டுறவு வங்கிகளை ஒப்படைப்பது இவற்றை பாதுகாப்பதற்காக  அல்ல. தற்போதைக்கு இவ்வங்கிகளில் சேவை பெற்று வரும் சாதாரண மக்கள் மற்றும் சிறு தொழில் முனைவோர்களை விரட்டிவிட்டு கார்ப்பரேட்டுகள் கபளீகரம் செய்யவே என்று இப்போதே துறை சார்ந்த வல்லுனர்கள் கூறுகிறார்கள் .

அனைத்தும் தனியார்மயம் அதுவே எனது தாரக மந்திரம் பாட்டன் முப்பாட்டன் சேர்த்து வைத்த சொத்தை விற்று சாப்பிடுபவர்களை கிராமங்களில் ஊதாரி என்பார்கள். அதுபோல இந்திய நாட்டு வளங்களை விற்று ஆட்சி நடத்தி வருகிறார்கள் இன்றைய ஆட்சியாளர்கள் ..

திரு.ரகுராம் ராஜன், பாரத ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தபோது ஜனவரி 2015இல் பாரத ரிசர்வ் வங்கியில் துணை  கவர்னராக இருந்த திரு. ஆர்.காந்தி தலைமையில் ‘உயர் மட்ட  குழு’ (REPORT OF THE HIGH POWERED COMMITTEE ON URBAN CO-OPERATIVE BANKS (UCBs)) நகர கூட்டுறவு வங்கிகளை  பலப்படுத்திட அறிக்கை வழங்க பணித்தார். 6 மாதத்தில் 2015 ஜூலயில் இக்குழு பரிந்துரைகளை சமர்ப்பித்தது. இங்கிருந்துதான் தற்போதைய அவசர சட்டத்திற்கான காரண காரியங்கள் துவங்குகின்றன.

RBI revises supervisory action framework for Primary (Urban) Co ...

குழுவின் பரிந்துரைகளில் முக்கியமானதாக ரூபாய் 50 கோடிக்கு மேல்  வைப்புகள் இருந்தால் சிறிய தனியார் வங்கிகளாகவும், 500 கோடிக்கு மேல் வைப்புகள் இருந்தால் தனியார் வணிக  வங்கிகளாகவும் மாறிக்கொள்ள  பரிந்துரைக்கப்பட்டது. இச்சரக்கு வியாபாரம் ஆகாமல் வங்கிகள் கூட்டுறவிலேயே நீடித்தது. இந்நிலையில் தான் கழுத்தை திருகி வெளியே வீசி காட்டு விலங்குகளுக்கு இரையாக்கும் பணியைத் துவக்கி உள்ளது மத்திய அரசு. இந்திய திருநாட்டில் கார்ப்பரேட்டுகள், பெரும் பணக்காரர்கள் கடன்  வாங்கி திருப்பி செலுத்தா ‘ஒழுக்கநெறி’ கொண்டவர்கள். அவர்கள் புகுந்து கபளீகரம் செய்திட மத்திய அரசு வழிவகுத்துள்ளது என்றால் அது மிகையல்ல.

பாரத ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் எல்லாம் சரியாகிவிடுமா?

இரண்டு உதாரணங்களை காண்போம்.

  1. குளோபல் டிரஸ்ட் வங்கி 1994ல் மிகுந்த விளம்பரங்களோடு துவங்கப்பட்டது. பாரத ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டது. 2004ல் இவ்வங்கி திவாலானதை பலரும் மறந்து இருக்க மாட்டார்கள் . அந்த வங்கியின் வைப்புதாரர்களின் நலன் பாதுகாக்கப்பட ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் என்ற பொதுத்துறை வங்கி ஏற்றுக் கொண்டு செயல்பட்டது.
  2. ஆர்பிஐ நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு கொண்டிருக்கும் எஸ் வங்கி தள்ளாடியபோது

எஸ்பிஐயும் எல்ஐசியும் தானே காப்பாற்றி வருகிறது.

எனவேதான் தெளிவாக கூறுகிறோம். வங்கியை, வாடிக்கையாளரை, கூட்டுறவை பாதுகாக்க அல்ல இச்சட்ட திருத்தம் இவர்களின் தனியார் மாய கனவை நிறைவேற்றவே .

தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் அரசும் எதிர்க்கட்சிகள் பலவும் இதனை எதிர்த்து குரலெழுப்பி உள்ளனர்.

Newsletter

இன்றைக்கு அவசரச் சட்டம் வெளியிடப்பட்ட பின்னணியில்

# சட்டமன்றத்தில் ஏகமனதாக இந்த அவசர சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்

# கூட்டுறவு அமைப்புகள் தன்னாட்சி பெற்ற அமைப்புகள். இதனுடைய வளர்ச்சிக்காக மாநில அரசின் பங்கினை விவரித்து இச்சட்டத்தை ரத்து செய்ய மாநில அரசு செயல்பட  வேண்டும்

மாநில அளவில் கூட்டுறவு வங்கிகளில் குறைபாடு இல்லையா ? இருக்கிறது

ஆளும் கட்சிகளின், சில  அரசு அதிகாரிகளின் முறையற்ற தலையீடு ஊழல் இவை முற்றாக ஒழிக்கப்படவேண்டும்  எந்த கட்சி  ஆளும் கட்சியோ அவர்களை மட்டுமே தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது, மற்றவர்கள் தேர்தலில் நிற்க அனுமதிப்பதில்லை. தேர்தலில் நின்றாலும்  ஆளும்கட்சி உறுப்பினர்கள் மட்டுமே வெற்றி பெற்றதாக அறிவிப்பது போன்றவை தொடர்கதையாக உள்ளன.

Tamil Nadu Cooperative Bank Assistant Exam Answer Key 2020 ...

மாநில அளவிலான சீர்திருத்தமாக

# கூட்டுறவு தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்பட வேண்டும்

# புகைப்பட அடையாள அட்டை அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கிட வேண்டும்

# தேர்தல் அறிவிப்பு வெளியிடும் நாளிலிருந்து பின்னோக்கி 5 ஆண்டுகளில் அக்கூட்டுறவு

நிறுவனத்தின் சேவையை பெற்றவர் மட்டுமே தேர்தல் நிற்க அனுமதிக்கப்பட வேண்டும்

# தேர்தல் அறிவிப்பு வெளியிடும் நாளிலிருந்து பின்னோக்கி  10 ஆண்டுகளில் அக்கூட்டுறவு

சங்கத்தின் சேவையை பெற்றவருக்குத்தான் வாக்களிக்க உரிமை வழங்கப்பட வேண்டும்.

# ஊழியர் பணி நியமனங்கள்தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் நடத்தப்படவேண்டும்

தமிழ்நாடு அரசின் முதலீடுகளில் ஒரு பகுதி  கூட்டுறவு வங்கிகளிடம் இட்டு வைக்கவேண்டும்

 

இத்தகைய சீர்திருத்தங்கள் மூலமாக மட்டுமே கூட்டுறவு வங்கிகளை வலுப்படுத்த முடியும். அதற்கு மத்திய அரசின் இந்த அவசர சட்டம் ஒரு போதும் உதவாது.

சர்வேசன்

பொதுச்செயலாளர்

கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம்   BEFI/CBEF

cbeftn@gmail .com

 

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *