கறுப்பும் நீலமும்
நான் நைஜீரியாக்காரி
நீ ஒரு அரசியல்வாதி…
உன்னை நான்
எனது தென்னைமரத்துக் கீழே சந்தித்தேன்…
என்னை உன்னிடம்
தாரை வார்க்குமாறு
நீ என்னிடம் இரந்தாய்…
உன் தாகத்தைத் தீர்க்க
என்னை அவசரப்படுத்தினாய்…
என் அரைப்பாவாடைக்குக் கீழே
நீ குனிந்தாய்…
உன் கண்களை
அதனுள்
மட்டுமீறி நுழைத்தாய்…
ஹோ , என் தடித்த முலைக்காம்புகளை
உறுத்துப் பார்த்தாய்…
என் கனத்த பிட்டங்களை
உற்று நோக்கினாய்…
பிறகு நீ
முரட்டுத்தனமாய் என்னை
விழுங்கினாய்…
கலக்கமூட்டும் கடலாக
உனது உடல் கெர்சித்தது…
என்னை ஒருமுறை
கற்பழித்தாய்…
ஓ.. கற்பழித்தாய்
இரண்டு முறை…
என்னை நீ கற்பழித்தாய்
கறுப்பாகவும் நீலமாகவும்
ஓ.. அரசியல்வாதி…
பிறகு என்னை
தென்னை மரத்தின் அடியிலிருந்து
இழுத்தாய்…
என்னை
திறந்த கடலுக்கு
இழுத்தாய்…
பிறகு என்னை மிரட்டி
கடலுக்குள்
அமிழ்த்தினாய்…
என்னால்
மேற்கொண்டு
சத்தம் மட்டும்
எழுப்ப முடிந்தது.
என் கால்களை
கடலுக்கும் படகுக்கும் இடையில்
கட்டினாய்…
என் மேல்
அக்கறையில்லாத நாயாய்
வேகமாகப் பாய்ந்தாய்…
உன் நண்பர்களை அழைத்து
உன்னோடு சேர்த்துக் கொண்டாய்…
என்னைக் கற்பழித்தாய்
கறுப்பாகவும் நீலமாகவும்
ஓ.. அரசியல்வாதி…
பிறகு
என் காற்சட்டையை
நீ கழற்றி எறிந்தாய்…
அது
உதிக்கும் சூரியனின் மேல்
போய் விழுந்தது…
உலகம்
என்னுடைய
அழுக்கான காற்சட்டையைப்
பார்த்தது…
பிறகு
சிரிக்க ஆரம்பித்தது…
என்னைக் கற்பழித்தாய்
கறுப்பாகவும் நீலமாகவும்
ஓ.. அரசியல்வாதி…
பிறகு
சாறு நிரம்பிய
பருத்த என் முலைகளை
இறுக்கிப் பிடித்தாய்…
அவைகள்
சிகப்பு நிறமாகும் வரை
உறிஞ்சினாய்…
பிறகு
என் இடுப்புகளைப் பிடித்தாய்…
என் கண்களிலிருந்து
உலகம் மறைய
அடித்துத் தூளாக்கினாய்…
என் பிட்டங்கள்
நெருப்பால்
நரக நெருப்பால்
நிரம்பியது…
என்னைக் கற்பழித்தாய்
கறுப்பாகவும் நீலமாகவும்
ஓ.. அரசியல்வாதி…
இப்பொழுது
எனது குழந்தைகள்
பசியால்
இறந்து கொண்டிருக்கின்றன…
எனது பால்
ஓடாமல்
நிறுத்தப்பட்டிருக்கிறது…
என்னைக் கற்பழித்தாய்
கறுப்பாகவும் நீலமாகவும்
ஓ.. அரசியல்வாதி…
இப்பொழுது
நிறைய குழந்தைகள் பெற
விரும்புகிறேன்…
ஆனால் என் பிட்டங்கள்
ஆயிரம் முட்டைகள் போல
அடித்து நொறுக்கப்பட்டது…
ஹோ, நீ
என்னில்
வேலையை முடித்தாய்…
ஆம்
என்னில்
மனிதாபிமானம் இறந்தது…
என்னைக் கற்பழித்தாய்
கறுப்பாகவும் நீலமாகவும்
ஓ.. அரசியல்வாதி…
ஆனால் மறக்காதே
நான்
நைஜீரியாக்காரி என்பதை…
நீ ஒரு
அரசியல்வாதி என்பதையும்…
ஆங்கிலத்தில்: Collins Emeghara
தமிழில் : வசந்த தீபன்
Collins Emeghara
____________
பிறந்த இடம் : Owerri , Imo.
தற்போதைய வசிப்பிடம் : Naze , Nigeria.
பிறந்த தேதி : 23, ஏப்ரல் 1983
வெளியான நூல் : My Blood , My Food.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.