Communist Iyakathin Saadhanai Sarithiram Book review by S.Bala - https://bookday.in/

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சாதனை சரித்திரம் – நூல் அறிமுகம்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சாதனை சரித்திரம் – நூல் அறிமுகம்

கம்யூனிஸ்ட் இயக்கம் தோன்றிய காலத்தில் இருந்து தமிழகத்திலும் தேசிய அளவிலும் உலக அளவில் உருவான முக்கிய சமூகப் பொருளாதார வளர்ச்சிப் போக்கு பற்றி சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதப்பட்டிருக்கும் நூல் இது. இந்நூல் 64 பக்கங்களில் ஓரு நூற்றாண்டு கால வரலாற்றை சொல்லித் தருகிற ஆசிரியர்களுக்கான பாடக்குறிப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு வரலாற்று நூலையும் வாசிக்கும்போது புதிய புதிய செய்திகளை அறியத் தரும். அத்தகைய வரலாற்று பூர்வமான செயல்களை அறியும் போது ஏற்படுகிற உத்வேகம் அளப்பரியது. இந்த நூலிலும் அத்தகைய செய்திகள் உள்ளார்ந்து அமைந்துள்ளது சிறப்பாகும்.

வரலாற்றை நினைவுபடுத்தும் விதமாக சுதந்திரம் வேண்டி நின்று அதனை அடைந்த விதத்தையும், உழவனுக்கு நிலம் கேட்டார் எனும் தலைப்பில் தெலுங்கானா துவங்கி நாடு முழுவதும் நடைபெற்ற நிலத்திற்கான போராட்டத்தையும், மொழிவழி மாநிலங்களுக்கான கோரிக்கைக்காகவும் மதவெறிய எதிர்ப்பு சமூக நீதிப் போராட்டம் சமத்துவ பொருளாதாரம் என போராட்டக் களம் கண்ட கம்யூனிஸ்டுகளின் செயல்பாட்டை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

பொதுவாக வரலாற்றை வாசிக்கும் போது அயர்ச்சி ஏற்படும் என்று சொல்வார்கள் ஆனால் அருணன் நூலை வாசிக்கும் போது நமக்கு எழுச்சி ஏற்படுகிறது.
இந்நூலில் சிறப்புக்கள் அதனுடைய எழுத்து நடை ஆழமான செறிவு, கருத்துக்களில் உள்ள தெளிவு, வாசிப்பதற்கான மொழி நடை என நூலை கையில் எடுத்தால் வாசித்த பிறகு கீழ வைக்க முடியும் என்ற மனநிலையை உருவாக்குகிறது.

மதவெறி எதிர்ப்பில் உறுதியாக நின்றது.

கம்யூனிஸ்ட் இயக்கம் வி பி சிங் அரசை ஆதரித்த போது கூட அமைச்சர் பதவிகளை வாங்கவில்லை ஆனால் அரசு நிர்வாகத்தில் சங்கு பரிகாரங்களில் ஊடுருவலை தடுப்பதற்கு அமைச்சரவையில் பங்கேற்க விடாமல் தடுத்து நிறுத்தியது. மண்டல் கமிஷன் அமல்படுத்தப்பட்ட போது அரசிற்கு துணை நின்றது.

பாபர் மசூதி இடிப்பதற்கான முஸ்திபுகளை கண்டித்ததும் அதன் பின்னர் தேசிய ஒருமைப்பாட்டு குழுவை கூட்டுவதற்கான முயற்சியை எடுத்து நாட்டின் அமைதியை பாதுகாப்பதற்கும் மகத்தான பணியை மேற்கொண்டது.இன்று வரை மதவெறி எதிர்ப்பு போராட்டம் வலுவாக நடத்தி வருகிறது.
சமகாலத்தில் மதவாத அரசியல், வெறுப்பு வாத அரசியல், பிளவு அரசியல் ஆகியவை எல்லாம் எப்படி கார்ப்பரேட்டுகளுடன் பின்னிப்பிணைந்துள்ளது.
நவீன பாசிச குணாம்சங்களை கொண்ட பிஜேபி அரசாங்கத்தின் செயல்பாடுகளை இணைத்து பார்க்கும் பொழுது நாட்டின் ஆபத்தை முழு பரிணாமத்தோடு காணமுடியும்.

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை பற்றியும் சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அடக்குமுறை காலத்தில் கட்சியினுடைய பத்திரிகைகள் தடை செய்யப்பட்டது அந்நேரத்தில் தீக்கதிர் ஏட்டை நடத்திக் கொண்டே “செய்தி கதிர்”என்பதும் நடத்தப்பட்டு, அது கட்சி அணிகளுக்கு இடையே ரகசியமாக உலா வந்தது.
இப்படி வரலாற்றில் இதுவரை நாம் அறியாத செய்திகளை வாசிக்கும் போது உற்சாகம் ஏற்படுகிறது.

பிரச்சனைகளும் தீர்வுகளும்…

இன்றைக்கு நம்முடைய நாட்டில் நிலவக்கூடிய பல்வேறு பிரச்சனைகளுக்கு முதலாளித்து அமைப்பால் நிரந்தரமாக தீர்க்க முடியுமா? தீர்க்க முடியாது.
அதற்கு தீர்வு தான் என்ன? சோசலிச சமுதாயம் தான் என்று தெளிவாக நிறுவுகிறது. எனவே தான்,கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உறுப்பினர் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தக உள்ளது.

நூலின் தகவல்கள் : 

நூல் : கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சாதனை சரித்திரம்
ஆசிரியர் : அருணன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் :  64
விலை :  60
தொடர்பு எண் : +91 94449 60935
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/communist-iyakathin-saadhanai-sarithiram/

நூல் அறிமுகம் எழுதியவர் : 

எஸ்.பாலா

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *