சுதந்திரப் போராட்ட பாரம்பரியம்

இந்திய சுதந்திரப் போராட்டம் மற்றும் ரஷ்யப் புரட்சி ஆகியவற்றின் தாக்கத்தால் 1920இல் முதல் கம்யூனிஸ்ட் குழு ஒன்றுபட்டது; தொடர்ந்து நாடெங்கும் பல குழுக்கள் தொடங்கப்பட்டன; 1935 இல் கான்பூரில் முதல் கம்யூனிஸ்ட் மாநாடு சிங்காரவேலர் தலைமையில் நடந்து ஒருங்கிணைக்கப்பட்ட கட்சியாக செயல்படத் துவங்கியது.

விடுதலைப் போரில் ‘பூரண சுயராஜ்யம்’ எனும் கோரிக்கையை முன்னெடுத்தது

  1. விடுதலை
  2. சமூக நீதி
  3. மத நல்லிணக்கம்
  4. சுயசார்புப் பொருளாதாராம்
    உழுபவருக்கே நிலம்
    உள்ளூர் தொழில் வளர்ச்சி
    எல்லோருக்கும் வேலை
    எல்லோருக்கும் கல்வி

என்ற மக்களின் கோரிக்கைகள் விடுதலைப் போரின் கோரிக்கைகளாக மாற கம்யூனிஸ்ட்டுகள் பணியாற்றினர். சுதந்திரத்திற்குப் பிறகும் இந்தக் கோரிக்கைகளுக்காகப் போராடும் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தொடர்கின்றது.

No description available.

சர்வதேச நிலை

  • உலகப் பொருளாதாரம் மிகவும் மந்தநிலையிலேயே தொடர்கின்றது. 2008 இல் ஏற்பட்ட பெரும் நெருக்கடியிலிருந்து மீண்டெழும் முன்பே அடுத்த நெருக்கடி வந்துவிட்டது.
  • ஐரோப்பாவின் பல நாடுகள் கடுமையானப் பொருளாதார நெருக்கடியில் திணறி வருகின்றன.
  • வேலையின்மையும் வளர்ச்சியின்மையும் சிக்கன நடவடிக்கை என்ற பெயரிலான அரசின் நடவடிக்கைகளும் மக்களை பெருமளவில் போராட்டக் களத்திற்கு கொண்டு வந்துள்ளன.
  • அமெரிக்காவிலும் ஏனைய முன்னேறிய மேலை நாடுகளிலுமே உலகமயத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிரான போராட்டங்கள் மீண்டும் மீண்டும் மூண்டெழுந்து எரிகின்றன.
  • முதலாளித்துவம் உள்ளார்ந்த முரண்பாடுகளும் தீர்க்கவியலாத சிக்கல்களும் கொண்டது என்பது வளர்சியடைந்த முதலாளித்துவ நாடுகளிலேயே மீண்டும் மீண்டும் நிருபணமாகி வருகின்றது.

No description available.

இன்றைய உலகில் சோசலிசம்

  • சோவியத் யூனியனின் சீர்குலைவிற்குப் பின் ‘வரலாறு முற்றுப்பெற்றது’ என சிலர் கொக்கரித்தனர்.
  • ஆனால் சோசலிசப் பாதையில் நாடுகள் நடைபோடுவது நின்றுவிடவில்லை.
  • மக்கள் சீனம் தனித்துவமான சீன நிலைமைகளுக்கேற்ற சோசலிசத்தைக் கட்டியமைப்பதில் முன்னேறி வருகின்றது. தனது மக்களுக்கு நாகரிகமானதும் ஆரோக்கியமானதுமான வாழ்க்கையையும் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றையும் அளிப்பதில் பெரும் வெற்றி கண்டு வருகின்றது.
  • வியட்நாம், கியூபா, கொரியா ஆகியவையும் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் முன்னேறி வருகின்றன.
    லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக இடதுசாரிகளை ஆட்சியில் அமர்த்தி மீண்டும் மீண்டும் அவர்களைத் தேர்ந்தெடுத்து ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் நலன் சார்பு அரசுகளோடு பீடுநடை போட்டு வருகின்றன.
  • தென்னாப்பிரிக்காவில் ஆளும் கூட்டணியில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசோடு கம்யூனிஸ்ட் கட்சியும் பங்குபெற்றுள்ளது.

No description available.

சுதந்திரமும் அதற்குப் பின்னரும்

  • நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான ஏராளமான இயற்கை வளம் இந்தியாவில் உள்ளது.
  • ஏராளமான விளைச்சல் நிலங்கள்
  • பாசன வசதி
  • பல்வேறு பயிர்களுக்கான பருவச் சூழல்
  • பல்வேறு கனிம வளங்கள்
  • மின்னுற்பத்திக்கான வாய்ப்பு
  • திறன் கொண்ட மக்கள் வளம்
  • ஆனால் அரசு பின்பற்றும் கொள்கைகள் காரணமாக இவை முழுமையாய்ப் பயன்படுத்தப்படாத நிலைமை.
  • இந்திய மக்களின் உற்பத்தி ஆற்றல் முழுமையாய்க் கட்டவிழ்த்து விடப்படாமல் முடங்கிக் கிடக்கின்றது.
  • வளமிகுந்த நாட்டின் மக்கள் வறுமை, வேலையின்மை, கல்லாமை, நோய் நொடிகளில் கிடந்து உழல்கின்றனர்.

No description available.

பெருமுதலாளித்துவ நிலபிரபுத்துவ அரசு

  • சுதந்திரத்திற்குப் பிறகு அமைந்த அரசுகள் பெரு முதலாளிகள் நிலப்பிரபுக்கள் நலனைத்தான் பாதுகாத்தன.
  • விடுதலைப் போரின் வாக்குறுதியான ‘உழுபவருக்கு நிலம்’ என்பதை நிறைவேற்றவில்லை.
  • கிராமப்புறங்களில் இன்றும் 40% நிலமற்ற கூலித் தொழிலாளிகளே.
  • நிலம் இருப்பவரிலும் 78 % மக்கள் சிறு குறு விவசாயிகளாகவே இருக்கின்றனர்.
  • கிராமப்புற தலித், பழங்குடி மக்களில் 50% நிலமற்ற கூலித் தொழிலாளர்களே.
  • விவசாயிகளுக்கு நியாய விலையில் இடுபொருள் வழங்கவோ, வேளாண் விளைபொருளுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைப்பதை உறுதி செய்யவோ அரசு தயாரில்லை
  • விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடும் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) விளங்குகின்றது.

சுயசார்பான தொழில் வளர்ச்சி

  • சுதந்திரமான இந்தியத் தொழில் வளர்ச்சிக்கு மூலதனமும் விற்பனைப் பொருளுக்கான சந்தையும் அவசியம்.
  • பெரும்பகுதியாய் இருக்கும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை, வாங்கும் சக்தியை உயர்த்தினால் சந்தை விரிவடையும், மூலதனம் திரளும். தொழிற்சாலை உற்பத்திகளும் விரிவடையும்.
  • இதற்கு தீவிர நிலச் சீர்திருத்தம் அவசியம்; ஆனால் அரசு அதற்குத் தயாரில்லை.
  • மாறாக அரசு இந்திய பெருமுதலாளிகளோடும் ஏகாதிபத்தியத்தோடும் பன்னாட்டு நிறுவனங்களோடும் சமரசம் செய்து அவர்களுக்கு ரத்தினக் கம்பளம் விரிக்கின்றனர். இந்தியாவை அமெரிக்காவின் இளைய பங்காளியாக மாற்ற முயற்சிக்கின்றனர்.

No description available.

இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் 1991 க்கு முன்

  • சுதந்திரம் பெற்ற காலத்தில் இந்திய முதலாளித்துவம் அதன் துவக்கநிலையில் இருந்தது.
  • இந்திய நாட்டின் உள்கட்டமைப்புகள், இரும்பு எஃகு ஆலைகள், அலுமினிய உலைகள், உரத் தொழிற்சாலைகள், பெரும் எந்திர உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றை உருவாக்கத் தேவையான மூலதனம் இந்திய முதலாளிகளிடம் இல்லை.
  • இந்திய அரசு இந்த தேவைகளை பொதுத்துறையில் ஆரம்பித்து இந்திய தொழில் வளரவும், இந்திய முதலாளிகள் பலனடையவும் வழி வகுத்தது.
  • இந்திய மக்களும் இந்தத் தொழில் வளர்ச்சியில் சிறிது பலன் கண்டனர்.
  • அடிப்படையில் முதலாளித்துவ வழிமுறைதான் என்பதாலும் நாட்டின் பெரும்பகுதியினரான விவசாயிகளின் வாங்கும் சக்தி அதிகரிக்காததாலும் வளர்ச்சி
  • ஒரு குறுகிய வரம்பிற்கு மேல் செல்ல இயலவில்லை.

No description available.

இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் 1991 க்குப் பின்

  • 1991 ஆம் ஆண்டிலிருந்து அரசு தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பாதையில் பயணிக்கின்றது. பா.ஜ.க, காங்கிரஸ் அரசுகள் இரண்டிற்கும் இதில் வேறுபாடு இல்லை.
  • மக்களின் மேல் மேலும் மேலும் வரிச்சுமை
  • பெருமுதலாளிகளுக்கு . மேலும் மேலும் வரிச்சலுகை
  • நிலப் பிரபுகளுக்கும்கூட இன்றுவரை விவசாய வருமானத்திற்கு வரியில்லை
  • பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு அடிமாட்டு விலையில் விற்கப்படுகின்றன.
  • அந்நிய நிறுவனங்களுக்கு ரத்தினக் கம்பளம் விரிக்கப்படுகின்றது.
  • உரம், சமையல் எரிவாயு, ரேஷன் பொருட்களுக்கான மானியங்கள் பறிக்கப்படுகின்றன.
  • கல்விக்கும் மருத்துவத்திற்குமான அரசு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு தனியார்மயம் ஆக்கப்படுகின்றன.

No description available.

இடது முன்னணி அரசுகள்

  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்முயற்சியால் இடதுசாரிக் கட்சிகளின் முன்னணிகள் அமைக்கப்பட்டு மாநில அரசிற்கான தேர்தல்களில் மகத்தான் வெற்றி பெற்று அரசுகள் அமைக்கப்பட்டன
  • அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசிடமே குவிந்திருக்கின்றன; ஆனாலும் இருக்கும் அதிகாரத்தை வைத்து மக்கள் நலனுக்கு ஆற்ற முடிந்த பணிகளை இடது முன்னணி அரசுகள் செய்தன; செய்து வருகின்றன. நேர்மையான, மக்கள் நலம் பேணும் மாநில அரசிற்கு எடுத்துகாட்டாய் திகழ்கின்றன.
  • கேரளாவில் 1957 இல் அமைந்த ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் அரசே உலகில் தேர்தல் மூலம் அமைந்த முதல் கம்யூனிஸ்ட் அரசு. அது கேரளா மானுட மேம்பாட்டில் நாட்டின் முதல் இடத்தில் இருப்பதற்கான அடிப்படைகளை கொண்டு வந்தது. அடுத்தடுத்து வந்த ஈ.கே.நாயனார், வி.எஸ்.அச்சுதானந்தன் அரசுகளும் இவற்றைத் தொடர்ந்தன..
  • மே.வங்கத்தில் 1977 ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டுவரை ஜோதிபாசு தலைமையிலும் பின் 2011 வரை புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையிலும் இருந்த அரசுகள் வங்க மக்களுக்கு ஜனநாயகமானதும் மக்கள நலன் காப்பதுமான அரசுகளை வழங்கின. நாட்டில் நிலமற்ற விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட நிலத்தில் பெரும்பகுதி மே.வங்கத்தில்தான் அளிக்கப்பட்டது. உழைக்கும் மக்களின் உரிமைகள் சங்கங்கள் பாதுகாக்கப்பட்டன.
  • திரிபுராவில் அடுத்தடுத்து அமைந்த நிருபன் சக்கரவர்த்தி, தசரத் தேவ், மாணிக் சர்க்கார் அரசுகளும் ஊழலற்ற, சமூக அமைதி காக்கக் கூடிய அரசுகளாய் திகழ்ந்து வந்துள்ளன.

அரசுக் கட்டமைப்பும் ஜனநாயகமும்

  • மக்கள் போராட்டங்களின் காரணமாக மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன.
  • கூட்டாட்சி என்றுதான் பெயர்; ஆனால் அதிகாரங்கள் மத்தியில் மட்டுமே குவிந்துள்ளன.
  • காங்கிரஸ், பாஜக அரசுகள் தொடர்ந்து மாநில உரிமைகளை பறித்தே வந்துள்ளன.
  • பல மொழி, பண்பாடுகளுடைய நாட்டிற்கு உகந்த கூட்டாட்சியை காக்க மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
  • வேற்றுமையில் ஒற்றுமை எனும் கருத்திற்கு எதிரான போக்குகளை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர்
  • மதவாதம், சாதிய ஆதிக்கத்தைக் காப்பது எனும் ஆளும் வர்க்கங்களின் செயல்பாடுகளை எதிர்த்தும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

No description available.

மக்கள் ஜனநாயகம்

  • தீவிர நிலச் சீர்திருத்தம், சுயசார்பான தொழில் வளர்ச்சி
  • மாநிலங்களுக்கு உண்மையான சுயாட்சி, சமமான அதிகாரம்
  • சகல தேசிய இனங்களுக்கும் உண்மையான சமத்துவம் அதன் அடிப்படையிலான கூட்டாட்சி
  • திரும்ப அழைக்கும் உரிமையுடன் கூடிய விகிதாச்சார பிரதிநிதித்துவம் கொண்ட தேர்தல்களைக் கொண்ட ஆழமான உண்மையான ஜனநாயகம்
    மொழி சமத்துவம், நாட்டின் பன்முகத் தன்மைக்கு மதிப்பு
  • அடிப்படை உரிமையாய் கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம், மருத்துவம்
  • தலித் பழங்குடி மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கட் பகுதிகளுக்கு சமூகநீதி

என்ற நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும் திசை வழியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை அணி திரட்டிப் போராடி வருகின்றது. நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இந்தத்திசை வழியில் தனது செயல்பாடுகளை தொடர்கின்றது.

No description available.

கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றியமையாமை

  • நீண்டகால நோக்கில் அடிப்படையான சமூக மாற்றத்திற்கு பலமான கம்யூனிஸ்ட் கட்சி இன்றியமையாதது. அத்தகைய கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தன்னைக் கட்டியமைத்து வருகின்றது.
  • இந்திய நாட்டின் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள், பழங்குடி மக்கள், தலித் மக்கள், மாணவர்கள் ஆகியோரின் அமைப்புகளை நாடெங்கும் கட்டியமைத்து வருகின்றது.
  • இடதுசாரி கட்சிகளையும் மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகளையும் இணைத்து இந்தப் பணியை முன்னெடுத்து வருகின்றது.

No description available.

மக்கள் ஜனநாயகம் நோக்கி

இருக்கின்ற ஜனநாயகத்தையும் மதச்சார்பற்ற தன்மையையும் பாதுகாப்பது இந்தியநாட்டின் ஒற்றுமைக்கு இன்றியமையாதது. மதச்சார்பற்ற அரசும் நாட்டின் ஒற்றுமையும் நாட்டின் உழைப்பாளி மக்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர், சிறுபான்மையோர், தலித், பழங்குடி மக்கள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்கு முன்நிபந்தனை.

  1. சுயசார்பான பொருளாதாரக் கொள்கைகள், மக்கள் நலனுக்கான வரி விதிப்பு, தொழில் வளர்ச்சி கொள்கைகள் சாமான்ய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர இன்றியமையாதவை.
  2. மக்கள் விரோத பொருளாதார கொள்கைகள் கொண்ட காங்கிரஸ் கட்சியை ஆட்சியை விட்டு அகற்றுவோம்.
  3. அதே மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளையும் ஆதிக்க சக்திகளின் நலன் காக்க மக்களைப் பிளக்கும் மதவாத பாஜக வை நிராகரிப்போம்
    கொள்கைகள் கோட்பாடுகள் இல்லாது மக்கள் நலனை அடகு வைத்து காங்கிரஸ், பாஜக வோடு உறவுகொள்ள முயலும் திமுக, அ.இ.அ.தி.மு.க மற்றும் இதர மாநிலக் கட்சிகளையும் தோற்கடிப்போம்.
  4. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரிப்போம்; இடதுசாரிகள் ஆதரவு பெற்றோரை ஆதரிப்போம்.
    மக்கள் நலனுக்கான குரல்களை நாடாளு மன்றத்தில் உரத்து ஒலிக்கச் செய்வோம். மக்கள் நலன் அரசு அமைய வழி செய்வோம்.

CPI(M) worker attacked in Kannur | Kerala News | Zee News

♦ இந்தியா ஒரு வெற்றிகரமான மக்கள் ஜனநாயக நாடாக மலர்ந்து சோஷலிசத்திற்கான பாதையில் முன்னோக்கிச் செல்லும் எனும் நம்பிக்கையில்                  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது போராட்டங்களை நடத்திவருகின்றது. சட்டமன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் உள்ளேயும்                      வெளியேயும் நடக்கும் இந்தப் போராட்டங்களில் பங்கேற்க நாட்டு மக்களை அறைகூவி அழைக்கின்றது.
♦ தமிழகத்தின் எதிர்காலத்தை – உரிமைகளைப் பாதுகாப்போம்.
♦ பல தலைமுறைகளாகப் போராடி வென்ற மக்கள் நலன் சார்ந்த கல்வி, மருத்துவக் கட்டமைப்புகளைக் காத்து மேம்படுத்துவோம்.
♦ தமிழகத்தின் முன்னேற்றம், சமத்துவம், ஒற்றுமை, சமூகநீதி ஆகியவற்றுக்கு எதிரான மதவாத, பாசிச தாக்குதலை முறியடிப்போம்.
♦ சமதர்மம், சமூகநீதி, பகுத்தறிவு சார்பான சக்திகளை ஆதரித்து ஜனநாயகக் கடமை ஆற்றுவோம்.

PDF லிங்க்: https://bookday.in/wp-content/uploads/2021/03/அறைக்கூவல்15.3.2021.pdf

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.201 – 05.05.2021 வரை மட்டும்)



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *