காம்ரேட் அம்மா (மகளின் பார்வையில் மைதிலி சிவராமன்) | மதிப்புரை எஸ். பாலகிருஷ்ணன்

காம்ரேட் அம்மா (மகளின் பார்வையில் மைதிலி சிவராமன்) | மதிப்புரை எஸ். பாலகிருஷ்ணன்

இப்புத்தகத்தின் ஆசிரியர் கல்பனா கருணாகரன் அம்மாவின் புதல்வி. பெண்ணியப் போராளி பொதுவுடைமைப் போராளி அம்மா மைதிலி சிவராமன் அவர்களுடைய போராட்ட அனுபவங்களை பயணங்களை குழந்தை பருவம் முதல் முதுமை பருவம் வரை, குடும்பம் படிப்பு வெளிநாட்டு பயணங்கள், போராட்ட அனுபவங்கள், தொழிற்சங்கவாதியாக, பெண்ணியவாதியாக, மார்க்சியவாதியாக, மாணவப் பருவ போராளியாக, எழுத்தாளராக, ஐநா சபையில் இந்திய தூதரகத்தில் ஆராய்ச்சியாளர் பணி ,அமெரிக்க அரசாங்கத்தின் நிதி பிரிவில் பணி பணியாற்றியது முதல், அவருடைய மாணவர் பருவத்தில் அமெரிக்காவில் படித்துக்கொண்டிருந்தபோது கருப்பின மக்களுக்கான போராட்டத்தில் பங்கெடுத்து, ஆயிரத்து 1960 களில் அமெரிக்காவில் மாணவராக இருந்த பொழுது வியட்நாம் போருக்கான எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றது.

மார்ட்டின் லூதர், கிங் மால்கம் எக்ஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கு கொண்டது. அன்றைய சூழலில் பல மாணவர்கள் உலக அளவில் இடதுசாரிகள் தலைமையில் சீனா, ரஷியா, வியட்நாம், கியூபா போன்ற நாடுகளில் நடைபெற்ற ஆட்சி. அதன்மீது தாக்கத்தால் அம்மா மைதிலி அவர்களையும் ஒரு கம்யூனிஸ்ட் ஆக மாற்றுவதற்கு உந்துசக்தி. ஐநா சபையில் காலனி நாடுகள் எல்லாம் அமெரிக்கா ஆட்டிப்படைத்தது ஆனால் சின்னஞ்சிறு நாடான கியூபா மட்டும் அமெரிக்காவை எதிர்த்து பேசியது இது அம்மாவுக்கு பிடித்திருந்தது, அமெரிக்காவிலிருந்து ரகசியமாக மெக்சிகோ வழியாக கியூபாவிற்கு பயணம் செய்தது.

                                                          photo courtesy : Dinamani

அங்கிருந்து தபால்களை ஏற்றிச்செல்லும் விமானத்தின் மூலமாக அமெரிக்காவுக்கு திரும்பியது. கியூபாவில் மனிதர்களின் உடல் உழைப்பை உன்னதம் ஆக்கியது ஒரு நபர் ஒரு ஆண்டிற்கு 30 முதல் 45 நாள்கள் கட்டாயம் உடல் உழைப்பு செய்ய வேண்டும், அங்கு அவர் வெளியுறவுத்துறை அதிகாரியை சந்திக்க சென்ற பொழுதும் அதிகாரி வயல்வேலைக்கு சென்றிருந்தார். 1968-ல் இந்தியா திரும்பிய அவர் பீகாரில் காந்தியவாதி வினோபாவே ஆசிரமத்தில் சிலநாள் தங்கள் அந்த வருடம்தான் .

முதல் அரசியல் பயணம்:

இந்தியாவையே உலுக்கிய ஒரு படுகொலை கீழ்வெண்மணியில் நடந்தது பண்ணையார்கள் 44 விவசாயக் கூலிகளை ஒரே குடிசையில் வைத்து எரித்த சம்பவம் நடந்தது இதை அறிந்தவர் காந்தியவாதி கிருஷ்ணம்மாள் உதவியுடன் வெண்மணிக்கு பயணம் செய்தார். அதன்பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் துணை அமைப்புகளான சிஐடியு, மற்றும் மாதர் சங்கத்தில், தீவிரமாக இணைந்து பணியாற்ற ஆரம்பித்தார். விபி சிந்தன் அவர்களே இவரை கட்சிக்குள் கொண்டு வருவதற்கு பங்காற்றியுள்ளார்.

உயர் பிராமண குடும்பத்தில் பிறந்திருந்தாலும் எளிமையான வாழ்க்கை கருணாகரனும் ஒரு தோழரை தன்பெற்றோர்கள் சம்மதத்துடன்சடங்கு சம்பிரதாயங்கள் இன்றி எளிமையான திருமணம் செய்துகொண்டார். எளிமையான உடை தொழில்நுட்ப உடுத்தும் பழக்கம் கொண்டவர். நகைகள் அணிய மாட்டார். தனக்குப் பிறந்த குழந்தைக்கு சிட்டகாங் பெண்ணுரிமை போராளி கல்பனா தத் நினைவாக பெயரைச் சூட்டினார். சென்னையில் மே நாளில் தான் வசித்த பகுதியில் இரண்டு ட்ரம்களை மேடையாக பயன்படுத்தி ஏறிநின்று பேசியிருக்கிறார்.

              photo courtesy : Dinamani

குழந்தை கல்பனா என்ன பாடங்களை எல்லாம் படிக்க வேண்டுமென்று டைப்ரைட்டிங் செய்து வைத்து விட்டு தான் கட்சிப் பணிக்கு சென்றிருக்கிறார் தண்ணீருக்கான போராட்டங்கள்1970களில் திருமண முடிந்த நேரம். தொழிற்சங்க போராட்டங்கள் டிவிஎஸ், மெட்டல் பாக்ஸ், டேப்லட் இந்தியா போன்ற போராட்டங்களில் பங்கேற்பு. சிவகாசியில் பட்டாசு ஆலை வேலை பார்த்த குழந்தை வாகன விபத்தில் பலியாகி எதிரான போராட்டம் ,ஜானகி அம்மாள் நினைவாக குழந்தைகளுக்காக முறைசாரா கல்வி மையம் மாலை நேரங்களில் செயல்பட்டது அதை கவனிக்க விடுதலைக்கு அடிக்கடி வந்து செல்வார். 1990இல் காவலர்கள் கற்பழிக்கப்பட்ட சிதம்பரம் பத்மினிக்கு மணிக்கு நீதி கேட்டு போராட்டம்,

கதை சொல்லியாக, கலைக்குழுக்கள், எழுத்தாளர்:

புரட்சியின்போது சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் குழந்தைகள் செயல்பற்றிய கதையை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது. குழந்தைகளுக்கு புத்தகங்களை பரிசாக அளிப்பது. சமந்தா ஸ்மித் குழு, நெல்சன் மண்டேலா அமைத்து மேதினம், தமுஎகச நிகழ்ச்சிகளில் பங்கேற்பது ,தேர்தல் பிரச்சாரம் பண்ணுவது போன்ற பணிகளில் ஈடுபட்டது. வீட்டில் பழைய பாடலான சந்திரபாபு ,பானுமதி ,எம்ஜிஆர் பாடல்களை கேட்டு ரசிப்பது. சினிமாவில் பெண்களை இழிவுபடுத்தும் படங்களை கண்டித்தது.மோகன் நடித்து வெளியாகிய ரெட்டைவால் குருவி சினிமா இரண்டு மனைவிகள் இருப்பதாக சித்தரிக்கப்பட்டிருக்கும் இதை கடுமையாக விமர்சித்தது அதே நேரத்தில் 2000ம் ஆண்டு பாரதி வாழ்க்கை வரலாறு படம் ரசித்தது.

                                          ALL INDIA DEMOCRATIC WOMENS ASSOCIATION

அம்மா வீடு புத்தகங்கள் நிறைந்து காட்சிதரும்.அதுமட்டுமல்லாது எந்நேரமும் ஆண்பெண், தோழர்களால் நிறைந்து வழியும் வீடு,விவாதங்களும் நடைபெறும் ஆரம்பத்தில் ராடிகல் ரிவ்யூ என்னும் பத்திரிகை நடத்தினார். இதில் சிதம்பரமும் உறுப்பினராக இருந்தார். மாலை நேரத்தில் தற்கால அரசியல் நிலைமைகளை விவாதிக்க சாட்டர்டே ஈவினிங் ஒன்று அமைத்து விவாதித்தனர் .கருத்து வேறுபாடு காரணமாக பா .சிதம்பரம் வெளியேறினார். கல்வியாளர் வசந்திதேவி சென்னை பிரஸிடெண்ட்ஸ் கல்லூரியில் இணைந்து படித்தது முதல் நெருங்கிய நண்பராக இருந்து வந்துள்ளார்.

எமர்ஜென்சி தலைமறைவு:

நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் தலைவர்களையும், முற்போக்காளர்களையும் கைதுசெய்தனர். இதனால் மைதிலி அம்மா அவர்கள் வீட்டிற்கு வராமல் பெங்களூருவில் தலைமறைவாக இருந்தார் .அங்கு ஒரு முக்கிய தலைவரை விமானத்தில் ஏற்றி விடும் கட்சி பணியை கச்சிதமாக பார்த்துவிட்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு சென்றுவிட்டார். பிறகு இயல்பு நிலை திரும்பிய பிறகு மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்தார். சோவியத், சீனா, கியூபா என பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.

கீழ வெண்மணியில் அம்மா மைதிலி

2000ம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற பேய்ஜிங் +5, உங்களுக்கான மாநாட்டில் பிரண்ட்லைன் நிருபராக பங்கேற்றார். 1990 முதல் 2000 வரை தினமணி ,தி இந்து, பிரண்ட்லைன் பத்திரிக்கைகளில் நிறைய கட்டுரைகளை எழுதியுள்ளார் .2002 விருதுநகரில் நடைபெற்ற மாதர் சங்க மாநில மாநாட்டில் செயல் தலைவர் பதவியிலிருந்து விடுபட்டார். அந்நேரத்தில் ஞாபக சக்தி குறைபாடுள்ள அல்சைமர் என்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 2007 பின் பொது நிகழ்வுகளில் பங்கேற்பது நிறுத்திவிட்டார். 2010 குடும்பத்துடன் சீன பயணம், தனது அம்மா பற்றி “வாழ்க்கை துகள்கள்” என்கின்ற நுல் அது பெண்கள் சம்பந்தப்பட்ட ஆய்வு கட்டுரை, அம்மா சுப்புலட்சுமி அவர்களுக்கு வெளியிட்டார்.

பல்கலைக்கழகத்தில் இவர் எழுதி வெளியிட்ட பெண்கள் சகுடும்ப வாழ்க்கை சம்பந்தப்பட்டது. தனது அம்மா குடும்ப வாழ்வியல் பற்றியது. இன்று பல்ககலைகழகத்தில் பாடப் புத்தகமாக உள்ளது. 2011இல் உமா சக்கரவர்த்தி என்பவர் அம்மா பற்றி ஆவணப்படம் ஒன்று எடுத்துள்ளார். இளமை பருவத்திலிருந்து குறிப்பு எடுப்பதும் ,டைரி எழுதும் பழக்கங்கள் கொண்டவர். கூட்டங்களுக்கு பேச செல்லும்பொழுது குறிப்புகள் எடுத்துக் கொண்டும்,முன் தயாரிப்புடன்தான் செல்வார். குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவதில் விரும்புவார்.

                                                             photo courtesy: Ananda Vikatan

தஞ்சை மற்றும் தென் மாவட்டங்களிலும் சென்னையிலும் மாதர் சங்கத்தை கட்டி அமைப்பதில் முன் நின்றவர். பாலியல் வன்முறைக்கெதிரான போராட்டம் ,பெண் உரிமைகளுக்கான போராட்டம் தலித் மக்களுக்கான நில உரிமை போராட்டம், என பன்முக போராளியாக பன்முகத் தன்மை கொண்டவராக மைதிலி அவர்கள் இருந்துள்ளார்கள். ஒரு பெண் போராளிக்கு தன் கணவர் எப்படி அமைய வேண்டும் அதேபோல் அவருடைய துணைவர் கருணாகரன் அம்மா மைதிலி அவர்களின் அரசியல் பயணத்திற்கு எந்த ஒரு முட்டுக்கட்டை போடாமலும் அவரை ஊக்கப்படுத்தி இயக்கங்களில் பங்கு பெற அனுமதித்துள்ளார் என்பது மிகவும் சிறப்பு.

“” இறுதியாக நீ கொடுக்காத ஒன்றை
உன்னால் பெற முடியாது
நீ உன்னைய கொடுத்தாக வேண்டும்
புரட்சியை உன்னால் விலை கொடுத்து வாங்க முடியாது
செயற்கையாக உருவாக்க முடியாது
நீயே புரட்சியாக இருந்தால் மட்டுமே முடியும்
அது உன் அடிமனதில் உள்ளது
இல்லையெனில் வேறு எங்கும் இல்லை”

நூல் பெயர்; காம்ரேட் அம்மா
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
ஆசிரியர்: மைதிலி கருணாகரன் கல்பனா.
விலை-50ரூ.(பக்கம்-64).

எஸ். பாலகிருஷ்ணன், புறநகர் மாவட்ட பொருளாளர்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்.
மதுரை..

 

Show 1 Comment

1 Comment

  1. நா.வே.அருள்

    மைதிலி தோழர் ஒரு பெண் சிங்கத்தைப் போல கர்ஜித்த தமுஎகச மேடை என் கண்முன்னே நிழலாடுகிறது. காந்தியைப் பற்றிய அவர் தீட்டிய பரிமாணம் கண்முன்னே காட்சியாய் விரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *