சாதி மத இனம் பேதமற்ற சமத்துவ சொல் தோழர்.. தலைப்பை ஒட்டி தோழமை பற்றிய கதைதான் இப்புத்தகம்.. தொடக்கத்தில் ரெஸ்டாரெண்டில் அமர்ந்திருக்கும் மூவர் ஒரு பெண்ணை பற்றி ஆபாசமாகவும் அவளை எப்படி “கரெக்ட் “செய்கிறேன் பார் என்று சவால் வார்த்தைகளையும் பேசிக்கொண்டனர், அடுத்த மேசையில் அமர்ந்து இருக்கும் பெண்ணை பார்த்து…. அப்பெண்ணை அடுத்து திரை அரங்கின் வாசலில் பார்க்கிறார்கள். அதேபோல மடக்க நினைத்து பத்திரிக்கை விற்றுக் கொண்டிருக்கும் அவளிடம் சென்று ஒரு பத்திரிக்கை வாங்குகிறான் அம்மூவரில் ஒருவன்… பத்திரிகைக்கான விலை போக மீதியை இலவசமாக வைத்துக் கொள்ளுங்கள் என அவன் தர முடிந்ததும் அதற்கான ரசீதை கிழித்துக் கொடுத்து விட்டு செல்கிறாள் அப்பெண்.. யார் அந்த பெண் ?இவற்றை சலித்துக் கொண்டு நேர்மையாக ரசீதை கொடுத்துவிட்டு செல்கிறார்… சுதந்திர காலகட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள்தான் இக்கதை. பகத்சிங்கின் நண்பர் யஷ்பாலால் எழுதப்பட்ட புத்தகம்.. கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஏதோ ஒரு வகையில் கம்யூனிசத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக அமைப்பிற்குள் வருகிறார் காம்ரேட் கீதா..

அமைப்பில் பணிகளையும் தொடர்ச்சியாக செய்து வருகிறார்… என்னால் வசூல் பணியில் ஈடுபட முடியாது என்று சொல்லும் காம்ரேட் கீதாவிற்கு “கட்சி பணியே நம் பணியாகும் ,மக்களின் விருப்பத்திற்கு மாறாக நமது விருப்பம் உள்ளது என்று சொன்னால், அது சரியான விருப்பமல்ல” என பதில் அளிக்கும் காட்சி நாம் சுய விருப்பு வெறுப்பு இன்றி மக்களுக்காக கட்சி திட்டங்களை பின்பற்றி செயலாற்ற வேண்டும் என்பதை உணர்த்துகிறது.. முன்னர் பார்த்த மூவரில் ஒருவனான ரவுடி பாவாரியா காம்ரேட் கீதாவை மீண்டும் மீண்டும் சந்திக்கிறான் ..கீதாவும் கட்சி பத்திரிக்கைகளை அவனுக்கு அளிக்கிறாள்.. எதிர்பாராதவிதமாக பாசிச கும்பலால் கட்சி அலுவலகம் தாக்கப்படுகிறது.. அதனை சீர்செய்ய அனைத்து தோழர்களும் வசூலில் ஈடுபட அழைக்கப்படுகிறார்கள். கீதாவும் தன் பங்குக்கு 200 ரூபாய் வசூல் செய்து தருவதாக கூட்டத்தில் வாக்குறுதி அளிக்கிறார் .ரவுடியான பவாரியா அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்த 200 ரூபாயை கட்சியிடம் தருகிறார்.. அதற்கான ரசீது எதுவும் காம்ரேட் கீதா அவனிடம் தரவில்லை.. பவாரியா கீதாவை ஒரு மது கிளப்பிற்கு கூட்டி செல்கிறான்…

यशपाल के जीवन पर विडियो | हिन्दीकुंज ...
yashpal bhagat singh

அது பிடிக்காமல் “நீங்கள் இப்படி செய்வீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை”என்று அவன் மீது இருந்த நம்பிக்கை உடைந்ததாக சொல்லிவிட்டு வேகமாக வீடு திரும்புகிறார் காம்ரெட் கீதா.. அதன் பிறகு அவர்கள் சந்தித்துக் கொள்ளவேயில்லை.. ஒரு போராட்டம் நடைபெறுகிறது.. அதில் சங்கிகள் காம்ரேட் கீதாவிடம் தகராறு செய்கிறார்கள். அதனை பவாரியா தடுத்து நிறுத்துகிறான். அச்செய்தி வேறுவிதமாக ,காம்ரேட் கீதாவின் நடத்தையை கேள்விக்குள்ளாக்குவதாக செய்தித்தாளில் வெளியிடப்படுகிறது. எனவே வீட்டில் தாயார் “வெளியில் சென்றால் காலை வெட்டி விடுவேன்”, “நடத்தை கெட்டவள் என்ற பெயர் எடுத்து விட்டாயே” என அழுதபடியே காம்ரேட் கீதாவை வெளியில் செல்ல அனுமதி மறுக்கிறார்.. இதற்கிடையில் கட்சியின் செயலாளரை சந்திக்கிறாள்.. பரிசீலனை கூட்டம் நடைபெறுகிறது.. அதில் கீதா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இனிமேல் பாவாரியாவை சந்திக்க கூடாது என நடவடிக்கை எடுக்கிறார்கள் ..அதேபோல காம்ரேட் கீதாவும் சந்திக்காமல் இருக்கிறார்.. தான் பெற்ற 200 ரூபாய்க்கான ரசீதை கொடுத்து விடுகிறார் ..அதன் பின்பு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பின்பற்றி ,தன் வேலைகளை தொடர்கிறார் கீதா..

ஒரு போராட்டத்தில் பவேரியா இறந்துவிடும் இறுதிநேரத்தில், தன்னை சந்திக்க வேண்டும், என்ற பாவாரியாவின் ஆவலை நிறைவேற்ற கட்சியிடம் அனுமதி பெற காம்ரேட் கீதா செயலாளரிடம் ஓடுகிறாள். ஆனால் அதற்கு முன்பே பாவாரியா இறந்து விடுகிறான்.. இறுதி நிமிடத்தில் கூட கட்சியின் முடிவை மீறாத கீதாவின் பண்பு போற்றுதலுக்கும் பின்பற்றுதலுக்கும் உரியது ..”கம்யூனிஸ்ட் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் கட்சியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கவேண்டும்.. தனிமனித விருப்பு வெறுப்பின்றி மக்களுக்காக உழைத்திட வேண்டும்” என்ற எண்ணம் புத்தகத்தைப் படிக்கும் பொழுது நமக்குத் தோன்றும்.. மேலும் பெண் தோழர்கள் பொதுவெளியில் சந்திக்கக் கூடிய இன்னல்களையும் இப்புத்தகம் தெரிவிக்கும்.. ரவுடியான பாவாரியாவை புரட்சிப் பாதைக்கு மாற்றிய காம்ரேட் கீதா என்றும் நம் நினைவில் வாழ்பவர்..

An excerpt from a book on Indian revolutionaries like Durga Devi ...

காம்ரேட்
யஷ்பால்
முதல் பதிப்பு: 2006
வெளியீடு: பாரதி புத்தகாலயம் ,7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018 தொலைபேசி :044-24332424
விலை ரூ .50/-

Image

மா.வினிஷா

மாவட்ட தலைவர் 

இந்திய மாணவர் சங்கம் (sfi)

ஈரோடு மாவட்டம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *