ஜான் பெர்கின்ஸ் – ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (தமிழில் இரா.முருகவேள்) |  மதிப்புரை இரா.சங்கர்

ஜான் பெர்கின்ஸ் – ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (தமிழில் இரா.முருகவேள்) | மதிப்புரை இரா.சங்கர்

என் பள்ளி தலைமை ஆசிரியர் நடராசன் அவர்கள் உட்பட பலராலும் பரிந்துரைக்கப்பட்டு இத்தனிமைப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் வாசித்த நூல். கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று கருத்துரையாற்ற சென்னிமலைக்கு வருகைபுரிந்த இந்நூலின் தமிழ் மொழி பெயர்ப்பாளர் இரா முருகவேள் அவர்களுடமிருந்தே இந்நூலினைப் பெற்றது கூடுதல் சிறப்பு.

இந்நூல் ஜான் பெர்கின்ஸ் அவர்களுடைய ஆன்ம விசாரணையேயாகும்.
நாம் ஒவ்வொருவரும் நாம் வாழும் வாழ்க்கை குறித்து சுயவிமர்சனம் செய்து கொள்ளும் தன்மையிலேயே இவரும் தனது பணி சார்ந்து தன் மீதான விமர்சனத்தை முன் வைத்து அதனூடாக ஏழை நாடுகளின் மீதும் சூழலியல் மீதும் நடக்கும் சுரண்டல்களை முன்வைக்கிறார்.
இந்நூல் 1963-லிருந்து 2004 வரையுமான காலத்தின் கொண்டது தற்போது வரை பொருந்தக்கூடியதுமாகும்.

இந்நூலின் சில பக்கங்கள்

இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் எழுச்சி பெற்றமையாலும் அணு ஆயுதங்கள் பற்றிய பீதியாலும் ஒரு நாட்டின் வளத்தினை ராணுவ நடவடிக்கையின வழியே சுரண்டல் ஆகாது என்ற நிலையில் புதிய மாற்று அமெரிக்காவிற்கு 1951-ல் தேவைப்படுகிறது.

                                      பத்ர் களம்: January 2012

1951-இல் ஈரானின் இயற்கை வளத்தை பிரிட்டிஷ் எண்ணெய் நிறுவனம் சுரண்டிய பொழுது ஈரான்ல் ஜனநாயக பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான மொஸாடெக் அவர்கள் எண்ணெய் ,பெட்ரோலியம் தொடர்பான அனைத்து நிறுவனங்களையும் தேசிய உடைமையாக்கி விடுகிறார். அதனைத்தொடர்ந்து இங்கிலாந்து அமெரிக்காவுடன் இணைந்து ராணுவ நடவடிக்கைக்கு மாற்றாக ஈரானில் பணத்தின் மூலமாகவும் மிரட்டலின் மூலமாகவும் உள்நாட்டு சண்டைகளையும், ஆர்ப்பாட்டங்களையும், வன்முறையையும் தூண்டிவிட்டு மக்களால் வெறுக்கப்படுகிறவர் என்ற தோற்றத்தை ஊடகங்கள் பத்திரிகைகள் மூலம் மொஸாடெக் மீதுஏற்படுத்தி அவரை பதவி இறக்கம் செய்துவிட்டு அமெரிக்காவின் கைக்கூலியாக ஒரு பொம்மை அரசு நிறுவப்படுகிறது.

அணு ஆயுதப் போர் என்ற ஆபத்தில்லாமல் சோவியத்துகளை தோற்கடிப்பதற்கும்
உலகப் பேரரசாக அமெரிக்கா உருவாவதற்கும் ஈரானில் ஏற்படுத்திய பொம்மை ஆட்சி மற்ற நாடுகளிலும் எவ்வாறு ஏற்படுத்தப்படுகிறது என்பதை இந்நூல் விவரிக்கிறது

முதல் மற்றும் ‌‌ இரண்டாம் உலகப்போரின் முடிவில் உருவான உலக வங்கியும் ஐநா சபையும் உலக வர்த்தக நிறுவனமும் புதிய நிறுவன -அதிகார வர்க்கத்தை ஏற்படுத்துகிறது.

உலகப் பேரரசாக உருவாவதற்கு எண்ணெய் வளம், இயற்கை வளங்கள், நீர் முதலியனவற்றை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும், கம்யூனிசத்தை நோக்கி நாடுகள் செல்லாமல் இருக்கவும் அமெரிக்கா இந்த ஏழை நாடுகளுக்கு தங்களின் ஏழ்மையைப் போக்கி பொருளாதார வளர்ச்சியினை ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் உலக வங்கியிடமிருந்து திரும்ப செலுத்த முடியாத அளவிற்கு கடனை வாரி வழங்குகிறது.

அதேநேரத்தில் அந்நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கான மின்சாரத் திட்டம் ,போக்குவரத்து, கட்டுமானம், தொழிற்சாலை உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்களும் அமெரிக்காவின் மெயின் பெக்டல் ,ஹாலிபார்டன் பன்னாட்டு நிறுவனங்களுக்கே வழங்கப்படுவதால் மீண்டும் மூலதனம் அமெரிக்காவிற்கே செல்கிறது.

கடனை திருப்பி செலுத்த இயலாத சூழ்நிலையில் தன்னுடைய அந்த கோர முகத்தைக் கொண்டு அந்நாட்டின் எண்ணெய் வளங்களையும் இயற்கை வளத்தினையும் கோறுகிறது.

                         Vintage George W. Bush / Statue of Liberty / vampire… – Depop

உலகப்பேரரசாக ஆவல் கொண்டுள்ள அமெரிக்காவினை எதிர்த்து தன் மக்களுக்காகவும் தன் நாட்டின் இயற்கை வள சுரண்டலை தடுத்து நிறுத்தவும் போராடிய பனாமா பிரதமர் ஓமர் டோரிஜாஸ், குவாதமாலா பிரதமர் அர்பென்ஸ், ஈக்வெடார் பிரதமர் ரோல்டோஸ் , வெனிசுலா பிரதமர் ஹியூகோ சாவேஸ் போன்றோரை பற்றிய பக்கங்கள் நமக்கான உந்துதலும் வழிகாட்டலுமாகும்.

உலகமயம் தாராளமயம் என்று அந்நிய முதலீடும் அந்நிய நிறுவனங்களும் ஒரு நாட்டில் ஏற்படுத்தப்பட்டால் அந்நாடு தனது தற்சார்பு எப்படி இழக்கும் என்பதனை விவரிக்கிறது.

இறுதியாக

இந்த நிறுவன அதிகார வர்க்கத்தை சாத்தியமாக்கியவர்கள் நாமே.
ஏனெனில் நம்மில் பெரும்பாலானோர் நிறுவன அதிகார வர்க்கத்தினை சார்ந்தே இருப்பதால் நமக்கு உணவளிப்பவன் கைகளை நம்மால் கடிக்க இயலுவதில்லை. உங்களுக்கு வீடும் ,காரும், உணவும், உடையும் அளித்து வரும் ஒரு அமைப்பை நீங்கள் எப்படி எதிர்ப்பீர்கள்? ஆனால் அதே அமைப்பு முறை தினமும் 25,000 பேர்களை பட்டினி போட்டுக் கொண்டு வருகிறது என்றாலும் இந்த அமைப்பினை எதிர்கொள்ளும் தைரியத்தை எப்படி வளர்த்துக் கொள்வீர்கள்.

இதே அமெரிக்காவை 1770 களில் சுரண்டிய இங்கிலாந்தினை எதிர்த்து போராடிய ஒவ்வொரு அமெரிக்கர்களும் எப்படி அந்த தைரியம் வந்தது? உணவளிக்கும் கரத்தினை கடிக்க தூண்டியது எது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பல காரணங்கள் இருப்பினும் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாக ஒன்று இருந்திருக்க வேண்டும்.

அந்த சக்தி என்னவென்றால் ? சொற்கள்

மனித பேச்சு உலகை மாற்றும் என்ற பாவ்லோ ப்ரைரே கூறிய சொற்கள்

ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் தானும் தனது நாடும் சுரண்டப்படுவதை உரியமுறையில் எடுத்துரைத்த அமெரிக்க புரட்சியாளர்கள் தாமஸ் ஜெபர்சன் டாம்பெய்ன் போன்றவர்களின் நா வன்மையே மூடிக்கிடந்த இதயங்களையும் மூளையையும் திறந்து விட்டது.
‌…………………. ……………..

அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலோடு உலக அரசியலையும், சூழலியல் சுரண்டலையும், அதற்கான தீர்வினையும் எடுத்துரைக்கிறது. அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்
வாசிக்கும் ஒவ்வொருவரிடமும் உரையாடும் வகையில் சிறந்த முறையில் தமிழில் மொழிபெயர்ப்பு செய்த இரா. முருகவேல் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

இரா.சங்கர்
TNSF ஈரோடு

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *