கொரோனா ஓலங்கள் – வசந்தா

கொரோனா ஓலங்கள் – வசந்தா



கொரோனா ஓலங்கள்

மஞ்சளின் ஈரம் காயவில்லை
மணந்தவன் வாசம் நீங்கவில்லை
வாழை மரமும் அகற்றவில்லை
வந்தோர் எவரும் செல்லவில்லை
அவிழ்த்த மாலை உலரவில்லை
அழுகை நின்றிட வழியுமில்லை
எமனின் பசியும் தீரவில்லை
எழுத என்னால் முடியவில்லை

சுற்றமும் நட்பும் தொலைகிறதே
சொல்லவும் நாவு.…வறள்கிறதே
வந்தோர் எல்லாம் செல்லத்தான்
வாழ்வும் நடுவில் முடியத்தான்
ஒருநாள் கடையும் மூடும் தான்
உயிருடன் பார்க்க வழி இல்லை
உடலும் வீடு வரவில்லை

பாசமும் பந்தமும் கடந்த நிலை
பரிதவிக்காதே என் மனமே
அடங்குஅடங்குஅடங்கி விடு
அடுத்து உன் நாளைஎண்ணியிரு
முடங்கி முணங்கிப் போகாதே
முயற்சியில் மட்டும் விலகாதே
எதுவரை வாழ்வோ தெரியாது
இருக்கும் பொழுதே உதவிவிடு.

–வசந்தா



Show 2 Comments

2 Comments

  1. சாந்தி சரவணன்

    அம்மா மிகவும் ‌‌‌நெகிழ்வான சமகால நிகழ்வுகளை கண் முன் ‌‌‌‌‌‌படைத்து ‌‌‌‌‌‌தந்துள்ளிர்கள். மனமார்ந்த வாழ்த்துகள்

  2. Priya Jayakanth

    “எதுவரை வாழ்வோ தெரியாது இருக்கும் பொழுதே உதவிவிடு” – நிதர்சனமான வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *