Coronavirus Conspiracy Theory News Click Article Translated in Tamil by Ponniah Rajamanickam. Book Day is Branch of Bharathi Puthakalayam.

கோவிட் 19 வைரஸ் இயற்கையில் உருவாகிப் பரவியதா? அல்லது செயற்கையில் உருவாக்கப்பட்டு பரவ விடப்பட்டதா?



ஆங்கிலத்தில்: முனைவர் கிருஷ்ணசாமி & முனைவர் புரபிர்
தமிழில்: பொ. இராஜமாணிக்கம்

கோவிட் 19 என்ற உலகப் பெருந்தொற்று நோய்க்கான கொரோனா வைரஸ் சார்ஸ் கோவி2 மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது பல வளர்ந்த நாடுகளின் சுகாதாரக் கட்டமைப்பின் தனியார் மயத்தையும் பொது சுகாதார கட்டமைப்பின் பலவீனங்களை காட்டிக் கொடுத்துள்ளது. வட அமெரிக்கா, இந்தியா, பிரேசில் மற்றும் பல நாடுகளில் பெருமளவில் மனித உயிரிழப்புகளையும் வாழ்நிலை இழப்புகளையும் உருவாக்கி உள்ளது. சைனா, கியூபா போன்ற வலுவான பொது சுகாதார கட்டமைப்பு உள்ள நாடுகள் இந்த மிகப்பெரிய தாக்குதலில் இருந்து தப்பித்தன.

திறந்த, வேகமான தகவல்கள் பரிமாற்றத்தால் அறிவியல் தொழிநுட்ப ஆற்றலால் வெகு சீக்கிரமாகவே கோவிட் 19க்குத் தேவையான ஆர் டி பிசிஆர், தடுப்பு மருந்துகள் கண்டறிய முடிந்தது. சைனா விஞ்ஞானிகள் வைரசின் மரபக் கட்டமைப்பை விரைவாகப் பகிர்ந்து கொள்ளவில்லை என்றால் இதற்கான சோதனை முறைகளையும் தடுப்பு மருந்துகளையும் இவ்வளவு சீக்கிரத்தில் கண்டறியவே முடியாது. அதே போன்று, நவீன தொழில்நுட்பமான சமூக ஊடகங்களீன் மூலம் தவறான தகவல்களைத் தரும் தகவல் தொற்றும் (Infodemic) வேகமாகப் பரவிப் பாதிப்புகளை உருவாக்கி உள்ளது. ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக சார்ஸ் கோவி2 என்ற வைரஸ் இயற்கையில் தோன்றியதா அல்லது சோதனைச் சாலையில் சைனா விஞ்ஞானிகளால் செயற்கையில் உருவாக்கப்பட்டு அல்லது மாற்றியமைக்கப்பட்டு பரவ விடப்பட்டதா அல்லது அங்கிருந்து தப்பி வந்ததா என சமூக ஊடகங்கள் சர்ச்சைகளைக் கிளப்பி விட்டுள்ளன.

சோதனைச்சாலையில் இருந்து கசிய விடப்பட்டது என்பதால் இது போன்ற வைரஸ்கள் இயற்கையில் தோன்றுவது கிடையாது செயற்கையில் தான் உருவாக்கமுடியும் என்று வேறு பேசுகின்றன. இது போன்ற கேள்விகளுக்கு சார்லஸ் டார்வின் சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே பதில்களை அளித்துள்ளார். அவர் மனிதனும் பிற உயிரினங்களும் இது போன்ற மாற்றங்களால் தான் பரிணாமத்தில் உருவாயின என ஆதாரங்களுடனும் விவாதங்களுடனும் முன் வைத்துள்ளார். இந்த மாற்றங்கள் தான் சூழலுக்கு ஏற்றதாகவும் இருக்கின்ற வளங்களைப் பயன்படுத்தி மிகவும் நேர்த்தியாக வாழ முடிந்ததாலும் இயற்கை தேர்வு செய்துள்ளது எனக் குறிப்பிடுகிறார். இதைத் தான் நாம் உயிரினங்களின் பரிணாமம் என்கிறோம்.

மிக முக்கியமாக டார்வினின் புத்தகமான உயிரினங்களின் தோற்றம் என்ற சிறந்த புத்தகத்தின் மூலம் அறிவது என்னவென்றால் தற்போதய கண் என்பது இயற்கைத் தேர்வு மூலம் வந்திருக்கிறது என்பது தான் உண்மை. எப்படி சூரியன் நிலையானது மற்றவைகள் அதனைச் சுற்றி வருகின்றன என்ற உண்மை வெளி வந்தபோது மனிதனின் பொதுப்புத்தி இது ஏற்றுக் கொள்ளக்கூடியது இல்லை எனக் கூறியதோ அது போன்றுதான் தற்போதைய நமது சிறந்த சிக்கலான வடிவமைப்புக் கொண்ட கண் மிகவும் எளிய அமைப்புக் கொண்ட கண் அமைப்பிலிருந்து சிக்கலான அமைப்பிற்கு மாறியுள்ளது பரிணாமத்தின் மாற்றங்கள் என நம்மால் நம்ப முடியாததாக இருப்பினும் அதுவே பொய்யாகாது. மிக எளிமையாகக் கூறினால் சிக்கலான சிறந்த தகவமைப்புக் கொண்ட அமைப்புகள் வேண்டுமென்றோ அல்லது வேறு எதற்காகவோ படைக்கப்படுவதில்லை இயற்கைத் தேர்வு மூலமே உருவாகின்றன என்பது தான் அறிவியல் உண்மை.

ஆனால் இயற்கை செய்ய முடியாததை கடவுளோ, சோதனைச் சாலையோ செய்ய முடியம் என்ற புதிய வாதத்தை முன் வைக்கின்றனர். கடவுள் எப்படிப் படைக்கிறாறோ அப்படி சோதைச்சாலையில் படைக்க முடியும் என்பதால் தான் அது இவ்வளவு வீரியமாக தொற்று நோயாகி இருக்கிறது என்கிறனர். ஆனால் தற்போது சார்ஸ் கோவி2 என்பதே ஆல்பா, பீட்டா,காமா,டெல்ட்டா எனப் பல மாறிலிகளாக உருவாகி வந்து இருப்பது இந்த படைப்புக் கொள்கையைப் பொய்யாக்கி இருக்கிறது.



கோவிட் 19 பெருந்தொற்று

டிசம்பர் 29,2019ல் சீனா ஊகான் மருத்துவ மனையில் நான்கு நோயாளிகள் கோவிட் 19 என்ற நோயால் பாதிக்கப்படு இருப்பதை ஏற்கனவே 2003ல் சார்ஸ் கோவி என்ற தீவிர சுவாச நோயைக் கண்டறிந்த கண்காணிப்பு முறையில் உடனடியாக இது ஊகானில் உள்ள மொத்த கடல் உணவு மார்க்கெட்டில் இருந்து வந்திருக்கலாம் என கண்டறிண்டந்தனர். வூகான் வைராலஜி ஆய்வு மைய விஞ்ஞானிகள் இது ஒரு வகையான புதிய வைரஸ் என்றும் அது கொரோனா குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் கண்டறிந்து அவற்றின் மரபுப்பொருள்களை வரிசைக் கிரமமிட்டு ஜனவரி 2020 நேச்சர் இதழில் வெளியிட்டனர். இது முதல் நான்கு நோயாளிகளில் கண்டறியப்பட்டு மூன்று வாரத்தில் இந்த கண்டுபிடிப்பு அறிவிக்கப்பட்டது.

மனித நோயாளிகள் உடலில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வைரஸ் 94.4 சத வீதம் சார்ஸ் கோவி வைரசுடனும், 96.2 சத வீதம் யூனான் குகைகளில் வாழும் வெளவாள்களில் இருந்து சேகரிக்கப்பட்ட (RaTG13),வைரசுடனும் ஒத்துப்போகியுள்ளது. இதிலிருந்து வெளவாள் தான் இதன் இயற்கையான இருப்பிடம் என தெரிவித்தது. இந்த உடனடி தகவல்கள் பரிமாற்றம் என்பது சீன விஞ்ஞானிகளால் தரப்பட்டதால் RT-PCR சோதனை உட்பட தடுப்பு மருந்துகளும் உலகளவில் வேகமாக உருவாக்கப்பட்டுள்ளன.



வைரஸ் தொற்று நோயை ஏன் சதித் திட்டம் என்கிறார்கள்?

இரண்டு வகையான சதிக் கொள்கையை முன் வைக்கின்றனர். ஒன்று அமெரிக்க உளவு நிறுவனத்தின் சொல்ல இயலாத ஆதாரம் கொண்டது. இது சோத்னைச் சாலையில் இருந்து நோய்க் கிருமிகள் கசிய விடப்பட்டிருக்கலாம் என்பது. ஆனால் நாம் இதைப் புறந்தள்ளி விடலாம். ஏனென்றால் இது போன்று தான் பெரும் மக்கள் அழிவு ஆயுதங்களை ஈராக் வைத்திருக்கிறது என்ற பொய்யான செய்தியை உளவுத் துறை கொடுத்த அடிப்படையில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை கருத்தில் கொண்டு இந்த முதல் சந்தேகத்தை அமெரிக்க செய்யும் போலிப் பிரச்சாரமாக விலக்கி விடலாம்

இரண்டாவது வகையானதில் முதல் ஊகம் என்பது இந்த வைரஸ் ஒரு புதிய ரகம் அதாவது புதியதாக இயற்கையில் பரிணாமம் அடைந்து வந்ததது; மற்றொன்று சோதனைச் சாலையில் உருவாக்கப்பட்டது. இரண்டுமே ஒன்றல்ல மற்றும் ஏற்றுக் கொள்ளக் கூடியதும் அல்ல. உலக சுகாதார சர்வதேச நிபுணர்கள் சோதனைச் சாலையில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்றதை ஆய்வு பண்ணி இது மனிதால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற ஊகத்தை மறுத்துள்ளனர் (See: WHO Report on Origin of SARS-CoV-2, 30 March 2019.). மேலும் சோதனைச்சாலையில் இருந்து தற்செயலாக விபத்தினைப் போல் கசிந்திருக்கும் என்ற ஊகமும் சாத்தியமற்றது என்றும் அனுமானிக்கின்றனர்.

இந்த சதி வேலையில் மிக முக்கிய பகுதியாக கருதப்படுவது என்னவென்றால் ஃபூரின் பிளவு என்ற ஒரு சிறப்புக்கூறு தான் மனிதனால் உருவாக்கப்பட்டதை உறுதிப்படுத்துவதாக இந்த சதிக் கோட்பாட்டிற்கு வலுச் சேர்க்கின்றனர். நேசனல் இன்ஸ்டிடுயூட் ஆஃப் அல்லெர்ஜி, தொற்று நோய்க்கான நேசனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் என்ற நிறுவனத்தின் ஆராய்சிசியாளர் டாக்டர் அந்தோனி ஃபாசி என்பார் சார்ஸ் கோவி2 எச் ஐவி வைரசின் பகுதிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன என்ற பொய்யான தகவலை கூறுகின்றனர். எச் ஐவி வைரஸின் எந்தப் பகுதியும் சார்ஸ் கோவிட் 2 மரபுத் தொகுதியில் காணப்படவே இல்லை.

இந்த ஃப்ரின் பிளவு சிறப்புக்கூறு மிகவும் முக்கியமானது. இது வைரசின் ஸ்பைக் புரதம் மற்றும் மேலுறைப் புரதத்தில் காணப்படுகிறது. இந்த ஃபூரின் என்ற நொதி ஸ்பைக் புரதத்தை வெட்டி மனித செல்களுக்குள் வைரஸ் உள்ளே நுழைய வழி வகுக்கிறது. இந்த ஃபூரின் நொதி மூலம் தான் பல வைரஸ்களும் தீவிரத்தன்மை பெறுகின்றன. சொல்லப்போனால் சாதாரண சளி உட்பட பல கொரோனா வைரஸ்கள் இந்தப் பகுதியைக் கொண்டுள்ளன.

ஸ்டீபன் கோல்டுஸ்டீன் என்ற வைரஸ் ஆய்வாளர் (University of Utah in Salt Lake City) இந்த ஃபூரின் சிறப்புக்கூறு பல முறைகள் பரிணாமம் அடைந்து சாதகமான அனுகூலத்தைத் தருவதால் நெருக்கமில்லாத உயிரினங்கள் கூட இது போன்ற பண்புகளை சமமான சூழலில் உருவாக்கிக் கொள்ளுகின்றன. இது டார்வின் கண் பரிணாமத்தை போன்றது என்று குறிப்பிடலாம்.



வைரஸ் பெருந்தொற்று:

வைரஸ்கள் ஒட்டுண்ணிகள் ஆகும். இவைகள் வேரொரு உயிரினத்தை நம்பி வாழும். இவைகள் தனக்கு ஒத்த விருந்தோம்பி செல் கிடைக்கும் வரை அது உயிர் வாழ முடியாது. அப்படிக் கிடைக்கும் போது அது விருந்தோம்பி செல்லில் நுழைந்து படை எடுக்கிறது. அப்படிப் படை எடுத்தாலும் எல்லா சமயத்திலும் தனது வாழும் விருந்தோம்பியை அது கொல்லவோ அழிக்கவோ செய்வதில்லை. வைரசின் ஒரு பகுதி தான் பாலுட்டிகளுக்கு முன்னர் உருவான மரபுத் தொகுப்பில் சேர்ந்துள்ளது. இந்த மரபுத் தொகுப்பு என்பது சிசு வளரும் போது தாயின் தடுப்பு முறையினால் அழிக்கப்படாமல் சிசு உருவாகுவதை உறுதி செய்துள்ளது. இந்த வைரஸ் இல்லையென்றால் மனிதன் உட்பட பாலூட்டிகளின் பரிணாமமே நடந்திருப்பதே சாத்தியமாயிருக்காது.

வைரஸ்கள் விலங்குகளில் இருந்து மனிதனுக்கு காலங்காலமாக தொற்றிக் கொண்டு வருகின்றன. இன்றும் அது தொடர்கிறது. நமக்கு வந்துள்ள நோய்களில் பல பாக்டீரியா வைரஸ் வகையைச் சார்ந்தவைகள் தான். ஆனால் அது எந்த வழிப் பயணத்தை மேற்கொள்ளுகிறது என்பதைத் தீர்மானிப்பது கடினமாக உள்ளது. அவைகள் நேரடியாக தாவித் தாக்குகின்றன்றவா? அல்லது அதன் சேமிப்புக் கலனாகச் செயல்படும் விலங்குகள் அல்லது இடைப்பட்ட விலங்குகள் (விலங்கு வழிப் பரவல்)மூலமாகப் பரவுகின்றனவா? பல முறைகளில் இது தீர்மானிக்க முடியாத அளவில் உள்ளன. இன்றும் கூட தொடர்ந்து தாக்குதல் நடத்தும் எபோலா வைரஸ் எந்த விலங்கினத்தில் இருந்து வந்தது என்பது புரியாத புதிராக உள்ளது.

இன்ஃபுலுயென்சா எனும் பெருந்தொற்று:

1918ல் தாக்கிய இன்ஃப்லுயென்சா தொற்று ஸ்பானிஷ் ஃப்ளு என அழைக்கப்படுகிறது. ஆனால் அது ஸ்பெயினில் ஆரம்பிக்கவில்லை. அமெரிக்காவின் கான்சாஸ் மாநிலத்தில் தான் முதன் முதலில் தோன்றியது. அது உலகளவில் ஐம்பது கோடிப் பேரைத் தாக்கியது. ஐந்து கோடிப் பேரைக் கொன்றது. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய தொற்று ஆகும். இது எச்1என்1 என்ற வைரசால் ஏற்பட்டிருக்கும் என்றும் பறவைகளில் இருந்து வந்த விலங்கு வழி நோயாகக் கருதப்பட்டது. இதற்குப் பின்னர் இது போன்ற இன்ஃப்லுயென்சா நோய் 1958 (எச்2என்2) 1968 (எச்3என்2) 2009 (எச்1என்1 பிடிஎம்09) போன்ற வைரசுகளால் வந்துள்ளன. எச்1என்1 பிடிஎம்09 வைரஸ் என்பது ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இதில் காணப்படும் மரபுத் தொகுப்பின் ஒரு பகுதி 1992ல் யூரேசியாவைத் தாக்கிய பன்றிக் காய்ச்சலில் காணப்பட்டது. இந்தப் பன்றிக் காய்ச்சலால் பலர் சுவாசப் பாதிப்புகள் அடைந்து முதல் 12 மாதங்களில் அனேகர் இறந்திருக்கின்றனர். இது எங்கிருந்து தாவி வந்தது? இதற்கான இடைப்பட்ட உயிரி இன்று வரைக் கண்டறியப்படவில்லை.



எச் ஐ வி பெருந்தொற்று

எய்ட்ஸ் என்ற நோய் முதன் முதலில் 1981ல் நியூயார்க் நகரில் கண்டறியப்பட்டது. 3.5 கோடிப்பேரை உலகளவில் இந்நோய் கொன்றுள்ளது. எச் ஐ வி1 என்ற வைரசே இதற்குக் காரணம் என கண்டறியப்பட்டது. முதல் பத்தாண்டு வரை இதனுடைய விலங்கு வழியைக் கண்டறிய முடியவில்லை. இருப்பினும் இறுதியாக கடுமையான உழைப்பாலும் அதிர்ஷ்ட்டத்தாலும் இதன் வழி கண்டுபிடிக்கப்பட்டது.

எச் ஐ வி 1 வைரசின் மரபுத் தொகுப்பு அதன் அமைப்பும் சிம்பான்சியில் இருந்திருக்கிறது (simian immunodeficiency virus or SIVcpz).. ஆனால் இந்த வைரஸ் தொற்று நோய் வன விலங்குகளில் குறைவாகவே இருந்துள்ளது. சொல்லப்போனால் சிம்பான்சி குரங்குகள் ஆப்ரிக்காவில் பூகோளாக ரீதியில் காணப்பட்டாலும் எய்ட்ஸ் நோய் அங்கு காணப்படவில்லை. இருப்பினும் HIV-1 and SIVcpz, ஆகிய இரண்டு வைரசுக்கும் உள்ள வேறுபாடுகளை வைத்து சிம்பான்சி எச் ஐ வி 1 வைரசின் இயற்கையான சேமிப்பு விலங்காக ஊகிக்க முடிந்தது. அதன் பின்னர் இதற்கு மேலாக ஏதேனும் ஒரு பாலூட்டி இந்த இரண்டு வைரசுகளுக்கும் இயற்கையான சேமிப்பு உயிரியாக இருக்கலாம் என்ற கருதுகோளும் உருவானது.

சுமாராக 20 வருடங்களுக்குப் பின்னர் 1999ல் சரியான விலங்கு வழி கண்டறீயப்பட்டது. மரிலின் என்று அழைக்கப்பட்ட ஒரு சிம்பான்சி ஆஃப்ரிக்கா காட்டில் பிடிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு குட்டியாக இருக்கும் பொழுது கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்ததது. ஆனால் இதன் ரத்தத்தில் எச் ஐவி கலப்படம் அப்போது எதுவும் இல்லை. ஆனால் 1985ல் 98 சிம்பான்சிகளில் சோதனை செய்யப்பட்ட ரத்த மாதிரிகளில் மர்லின் சிம்பான்சியில் அதிக அளவில் எச் ஐ வி1 க்கான ஆண்டிபாடிஸ் அதிகம் காணப்பட்டதும் அப்புறம் அது இரண்டு அறைகுறைப் பிறவிக் குட்டிகளை ஈன்று விட்டு உடனடியாக இறந்து போனதும் நடைபெற்றது. இறந்து போன மர்லினின் சில திசுக்களைச் செமித்து அதிலிருந்து 1999ல் செய்த பிசிஆர் சோதனை மூலம் அதில் SIV chzptt என்ற வைரஸ் காணப்பட்டதும் அது எச் ஐ வி 1 வைரசுக்கு நெருங்கிய உறவு கொண்டது என அறியப்பட்டு இதன் விலங்கு வழி சிம்பான்சி என முடிவெடுக்காப்பட்டது.

சார்ஸ் கோவி2 பிற வைரசுகளைப் போலவே இயற்கையில் பரிணமித்து மனிதர்களுக்கு நோயை உருவாக்கி உள்ளது. ஆனாலும் அதனுடைய வழியைக் அவ்வளவு எளிதாகக் கண்டறிவது முடியவில்லை. அது மனிதனுக்கு வெளவாளில் இருந்து நேரடியாகத் தாவியதா..அல்லது ஏதேனும் ஒரு இடைப்பட்ட உயிரினத்தில் இருந்து தொற்றிக் கொண்டதா எனக் கண்டறிய வேண்டியுள்ளது. இதற்கு சில வருடங்கள் எடுக்கலாம். இதற்கு காரணமான முக்கிய வெளவாள் தொகுதி எது என்பதை அறிய பல வருடங்கள் ஆகலாம். வெளவாள் தொகுதி என்பது பாலூட்டிகளில் அதிக சிற்றினங்கள் கொண்ட இரண்டாவது தொகுதி ஆகும். அல்லது வைரசின் இடைஉயிரி எது என்பதை அறிய கடினமாக இருக்கலாம் (எபோலா மற்றும் பிற நோய்களில் நமக்கு இன்றும் தெரியாதது போல்)

இந்த வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டு வெளிவிடப்பட்டதா, அல்லது விபத்து போல் கசிந்து வெளியேறியதா அல்லது வேறு வகையில் வெளியேறியதா என்று கூறுவதில் எந்தவிதமான அறிவியல் நம்பகத் தன்மை இல்லை என்றும் இது ஒரு சதி திட்ட வேலை என்றே நாம் கொள்ள வேண்டும். சில விஞ்ஞானிகள், சில அரசாங்கங்கள் இது வூகான் வைராலஜி ஆய்வு மையத்தில் இருந்து கசிய விடப்பட்டது எனக் கூறி, சைனா இதற்கான இழப்பீடுகளை வழங்க வேண்டுமென்று கூறுவது சைனா தற்போது உலகப் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் நாடு என்பதால் விரக்தியாலும் சைனா எதிர்ப்புக் கொள்கையாலும் பரப்பப்படுவதாகவே கருதப்படுகிறது.

https://www.newsclick.in/viewing-covid-19-pandemic-naturally-not-conspiratorially

நன்றி: நியூஸ் கிளிக்


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *