கருத்து – கொரோனா கொள்ளை நோய்
கொரோனா நோய் தொற்று பருவ நிலை மாற்றத்தின் ஒரு பகுதி. எனவே பருவ நிலை நோக்கி நமது செயல்கள் மைய படுத்தப்பட வேண்டும் – விஜய் கொலின்ஜிவாடி (30 மார்ச் 2020)
கொரோனா வைரஸ்ஸின் வீச்சும் வேகமும் உலகமெங்கும் உள்ள அரசாங்கங்களை ஆச்சரியப்படுத்தி இருக்கின்றது. பங்கு சந்தை தொடர்ந்து வீழ்ந்து கொண்டு வருகின்றது . சீன வுஹான் மாநிலத்தில் முதலில் தோன்றிய இந்த வைரஸ் ஆறு மாதங்களுக்குள்ளேயே 7 லட்சம் மக்களை பாதித்தும் 90,000 மக்களை கொன்றும் உள்ளது.
ஓன்றோடு ஒன்று இணைந்திருக்கும் உலகமய சூழல் வைரஸ் பரவலை சாத்தியப்படுத்தி உள்ளது.
இன்றைய சமூகம் உலகளாவிய உற்பத்தி முறையை , சார்ந்திருப்பது இந்த பிரச்சனையால் தெளிவாக தெரிய வந்துள்ளது.
இந்த கொள்ளை நோய் அரசாங்ககளை, “மக்கள் நலம் & சுகாதாரம்” மற்றும் “லாபம் & வளர்ச்சி இலக்கு” இந்த இரண்டு நிலைகளுக்கு இடையே எப்படி சம நிலையில் அணுகுவது என்ற சவாலை கொடுத்திருக்கின்றது. அதிகப்படியான மரணங்களும் சுகாதார கட்டமைப்பின் சீர்குலைவும், நாடுகள் , லட்சோப லட்சம் மக்களை முடக்க வைத்திருக்கிறது.
அரசாங்கங்கள், சர்வதேச நிறுவனங்கள் எடுத்திருக்கின்ற இந்த நீண்ட மற்றும் முன் எப்போதும் இருந்திராத செயல்கள் , நம்முள் சில பேருக்கு இன்னொரு உலகளாவிய அவசர நிலை – அதாவது பருவ நிலை மாற்றம் குறித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென தோன்றியுள்ளது.
இந்த இரண்டு (கோவிட் -19, பருவ நிலை மாற்றம்), அவசர நிலைகளின் ஆரம்பம் ஒரே மாதிரியாக இன்றைய பொருளாதார சூழலில் இருந்து தொடங்குகிறது . அதாவது சுற்று சூழலை காவு கொடுத்து எல்லையில்லா வளர்ச்சியை அடையுதல். இது நம்மை சீர்குலைத்து அழிக்கிறது.
கொள்ளை நோய், பருவ நிலை மாற்றத்தின் ஒரு பகுதியே, எனவே வெறும் வைரஸ் பரவலை தடுப்பதோடு நமது நடவடிக்கைகள் நின்று விட கூடாது. கொள்ளை நோய் பரவலுக்கு முன் நாம் சாதாரணம் என்று நினைத்தது, மிகப் பெரிய சிக்கலாக ஏற்கனவே மாறியுள்ள நிலையில், திரும்ப செல்வத்திற்கு சாத்தியமில்லை.
கோவிட் 19 மற்றும் பருவ நிலை மாற்றத்துக்கான பொதுவான காரணிகள்
கொள்கை வகுக்கும் வட்டாரங்களால் தொடர்ந்து மறுக்கப் பட்டாலும், தொழில் உற்பத்தி என்னும் மனித நடவடிக்கையே பருவ நிலை மாற்றத்திற்கு காரணம் என்று பெரும்பாலானவர்கள் இப்போது அறிந்திருக்கிறார்கள்.
உற்பத்தியை தொடர்ந்து நடத்திட அதாவது பொருளாதாரம் வளர்கின்றது என்று சொல்ல , மனிதன் இயற்கை வளங்களான, நீர்,புதை எரிபொருள், மரம் , தாதுப் பொருள்கள், இன்னும் இன்னும் பலவற்றை, உற்பத்தி சுழற்சிக்கு கொடுக்கின்றான். இது நுகர்வு பொருட்களை (கார், ஆடைகள், அரை கலன்கள், தொலைபேசிகள் , பதட்டப்படுத்தப்பட்ட உணவுகள், இன்னும் பல), கொடுக்கின்றது, அதோடு கழிவுகளையும் சேர்த்து கொடுக்கின்றது.
இந்த செயல்கள் சூழலின், தன்னைத் தானே சமன் படுத்திக் கொள்ளும் இயற்கை தன்மையான ஆற்றலை குறைக்கின்றது. சுற்றுச்சுக்குழலின் சுழற்சியை சீர்குலைக்கிறது (உ-ம், காடுகளின் அழிவு, கார்பன் கரியமில வாயு உறிஞ்சும் அளவை குறைப்பது). அதே சமயத்தில், இது கழிவுகளின் அளவுகளை அதிகரிக்கின்றது. (உ-ம் புதை எரிபொருளை எரிப்பதனால் அதிகரிக்கும் கரியமில வாயு). இவை எல்லாம் சேர்ந்து நமது கோளின் பருவ நிலை மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
இந்த முறை தான் கோவிட-19 க்கும், மற்ற நோய்களின் பரவலுக்கு காரணம், இயற்கை வளங்களின் அளவு கடந்த தேவைகள், மனிதனை இயற்கை வாழ்விடங்களை ஆக்கிமிரத்து, தெரியாத நோய்கிருமிகளை அவ்விடங்களில் கொண்டு செல்கின்றது.
அதே சமயத்தில், மிகப் பெரிய அளவில் உணவு உற்பத்தி செய்யும் முறையானது பெரும் எண்ணிக்கையிலான கால்நடைகளையும், பறவைகளையும் ஒரே இடத்தில் அடைத்து வைக்கப் படுகின்ற மாபெரும் பண்ணைககளை உருவாக்கியிருக்கிறது. கோவிட் 19, வூஹான் நகரில் , காட்டுயிர்களை விற்கும் சந்தையில், விலங்கிடம் இருந்தும் மனிதனுக்கு தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. எறும்பு உண்ணிகள், புனுகு பூனைகள், நரிகள், காட்டு வாத்துக்கள், பன்றிகள்,போன்ற காட்டுயிர்களை பண்ணை முறையில் பெரும் எண்ணிக்கையில் வளர்ப்பது சீனாவில் பெருந்தொழிலாக உள்ளது. இந்த காட்டுயிர் வளர்ப்பு தொழில் ஊரக மக்களுக்கு, சீக்கிரம் செல்வந்தர் ஆவதற்கான வழி என்று கருதப்படுகிறது. இதன் சந்தை மதிப்பு, 7400 கோடி அமெரிக்க டாலர் என மதிப்பிட பட்டுள்ளது.
முதலாளித்துவத்தின், “உயிரை பொருளாக்கி, லாபம் ஈட்டும் செயல்”, நேரடியாக மனித வாழ்க்கையையே அழிவுக்குள்ளாக்கும் என்பதற்கு மிகப் பொருத்தமான உதாரணம் தான் இந்த வைரஸின் தோற்றம், இன்றைய கொரானா பிரச்சனை, தங்கு தடையற்ற முதலாளித்துவ உற்பத்தி முறையாலும், நுகர்விய முறையாலும் விளைந்ததே. மேலும் இந்த பிரச்சனை சுற்று சூழல் சீர்கேட்டையும் ஏற்படுத்துகின்றது
சமீபத்தில் உலக வங்கி கூட கோவிட் 19 ஐ எதிர்கொள்ள கட்டமைப்பு மாற்ற சீர்திருத்தங்களை செய்ய வேண்டியிருக்கும் என கூறியுள்ளது. மேலும் ‘அதிகக்கடியான சட்ட திட்டங்கள், மானியங்கள், லைசென்ஸ் ராஜ்ஜியம், வர்த்தக பாதுகாப்பு, போன்றவற்றை விடுத்து ‘வளரும் சந்தை, விருப்பத்திற்கிணங்க தேர்வு செய்தல், வேகமான வளர்ச்சிக்கான கூறுகள், ஆகியனவற்றை அடைவதற்கு கடன்கள் தேவை என்று கூறியுள்ளது.இவ்வாறு புதிய பொருளாதார வீச்சுகளை இரட்டிப்பாக்குவது, தங்கு தடையில்லாமல் வளங்களை பயன்படுத்துவதற்கு இட்டு செல்லும். இது கோவிட் 19-ற்க்கு பிந்தைய உலகை பேரழிவிற்கு இட்டு செல்லும்.
ஏற்கனவே, அமெரிக்காவில் சுற்றுசூழல் சட்டங்களை நீக்கியதன் விளைவு, ‘இயல்பு நிலை’ என்றால் என்னவென்று அதிகார அமைப்பு சொல்வது பயப்பட வேண்டிய குறியீடுகளையே தந்திருக்கின்றது.
பருவ நிலை மாறுகின்றது
பருவ நிலை மாற்றம் மற்றும் கோவிட் 19, இரண்டிற்கும் அடிப்படை தவறான பொருளாதார நடத்தைகள் தான். இது மனித வாழ்க்கையை அழிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கங்கள் இந்த இரண்டையும் வேறு வேறு தொடர்பில்லாத விஷயங்களாகவே அணுகி வருகின்றன. இதனாலே இந்த இரண்டிற்க்கும் வேறுபட்ட தனித்தனியான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.
உலகம் முழுவதிலும் பெரும்பாலான நாடுகள் அவைகளுக்குள் கொஞ்சம் கொஞ்சம் மாறுபட்டாலும், மக்கள் நடமாட்டத்தையும், ஒன்று கூடுதலையும் தடுக்க கறாரான நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றன. இது அவர்களுடைய பொருளாதாரத்தை பாதித்தாலும் இத்தககைய கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பருவ நிலை மாற்ற நடவடிக்கைகள் இத்தகைய அணுகுமுறையை பெற்றிருக்கவில்லை . சுற்று சூழல் மாற்றத்தின் அளவுகளை ஒப்பிட்டால் , பருவநிலை மாற்றத்திற்க்கான தற்போதைய முன்னெடுப்புகள் கொஞ்சமே.
பருவ நிலை மாற்றம் தேர்தல்களின் நான்கு வருட சுற்றையோ, ஐந்து வருட பொருளாதார திட்டச் சுற்றை ஒட்டி நடப்பது இல்லை. அது 2030 அல்லது 2050-ற்க்கான நிலையான வளர்ச்சி இலக்குகளுக்காக காத்திருக்கப் போவதில்லை.
வேறு வேறு இடங்களில் வேறுபட்ட அளவுகளில் நடைபெறுகின்ற பருவநிலை முன்னேற்ற நடவடிக்கைகளின் பல அம்சங்கள் வெளியே தெரிவதில்லை, அல்லது போதுமானதாக இல்லை. சில வரம்பு மீறல்கள் மீளவே முடியாத மாற்றங்களுக்கு இட்டு செல்லும். அது வளி மண்டலத்தில் உள்ள பசுமைக் குடில் வாயுக்களின் அளவு குறையுதலாகவோ , பூச்சியினங்கள் தொகை குறைவதாகவோ அல்லது ,உறை பிரதேசங்களில் பனி உருகுவதாகவோ இருக்கலாம்.
மேலும், கோவிட-19 ஆல் ஏற்படும் மரண எண்ணிக்கை தினசரி நமக்கு கொடுக்கபடுவது போல பருவ நிலை மாற்றங்களினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை நமக்கு கொடுக்கப் படுவதில்லை. பருவ நிலை மாற்றம் , கோவிட் 19 ஐ காட்டிலும் மிகக் கொடியது.
உலக வெப்பமயமாதல் 3c அளவுக்கு அதிகரிப்பது , பேரழிவுக்கு இட்டு செல்லும். இது மண் வளத்தை குலைத்து, பஞ்சங்களை அதிகரிக்க செய்து, கடல் நீரை கடலோர நிலங்களுக்கு மேலெழுந்து வரச் செய்து, மகரந்த சேர்க்கை உயிர்களின் எண்ணிக்கையை குறைக்க செய்து, நம்முடைய உணவு உற்பத்தி செய்யும் திறனை வெகுவாக பாதிக்கின்றது.
மேலும் இதனால் ஏற்படும் கடுமையான வெப்ப அலைகள், தட்பவெப்பம் அதிகரித்தல் , காட்டுத் தீ, கடும் சூறாவளி போன்ற கொடிய விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் ‘நிலையான வளர்ச்சி’ இலக்குகள், கார்பன் அளவை குறைக்கும் முயற்சிகள், அதிகரிக்கும் சூழல் திறன் மேம்பாடு, செல்வந்தர்கள் மேற்கொள்ளும் அதீத சைவ உணவு முறை, இன்னும் இதுபோன்ற பல நடிவடிக்கைகள் எதுவும் பருவ நிலை மாற்றத்தை தடுக்கப் போவதில்லை. ஏனென்றால் இவைகள் எதுவும் எதையும் பெரும் அளவில் உற்பத்தி செய்யும் முறையை மாற்றப் போவதில்லை. வெறுமனே வேறு பக்கம் நோக்கி கவனத்தை திசை திருப்பும். இத்தகைய அணுகுமுறைகள் எப்போதுமே பயன் தரப் போவதில்லை, ஏனென்றால் இவை நமது அதிக சக்தி செலவிடப்படும் வாழ்க்கை முறையில், தீவிரமான மாற்றங்களை பரிந்துரைத்து வேகத்தை மட்டு படுத்தவும், கழிவுகளின் வெளியேற்றத்தை குறைக்கவும் சொல்லப் போவதில்லை.
கோவிட் 19-ற்க்காக உலகெங்கும் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகள், தேவையானால் வழக்கமான நடவடிக்கைளை உடனே நிறுத்தக் கூடிய சமுதாயத்தின் அபார திறனை வெளிக் கொணர்ந்திருக்கின்றது. நாம் விரும்பினால் தீவிரமான நடவடிக்கைகளை நம்மால் எடுக்க முடியும் என்று காண்பித்திருக்கின்றது. ஏற்கனவே, ஊரடங்கு பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றத்தையும், மாசு ஏற்படுத்திகளின் அளவுகளையும் குறிப்பிடத்தக்க அளவில் குறைத்திருக்கின்றது. சீனாவில், கரியமில வாயு 25 சத வீதமும் நைட்ரஜன் டை ஆக்சைடு 37 சதா வீதமும் ஊரடங்கால் குறைந்திருக்கின்றது.
செயலில் இறங்குதல்
பசுமைக் குடில் வாயுக்களின் அளவு தற்காலிகமாக குறைந்திருப்பதை நாம் கொண்டாட வேண்டியதில்லை.
நிஜத்தில், ஊரடங்கினால் ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர். இன்னும் கோடிக்கணக்கான பேர் இந்த கொள்ளை நோயின் விளைவாக ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார சரிவை சந்திக்க வேண்டியுள்ளது.
சிலர் கூறியிருப்பதை போல, கோவிட-19 ற்க்கு, ஆற்றிய அதே அளவிலாலான வினை பருவநிலை மாற்றத்திற்கு தேவை இல்லை. நமக்கு வேண்டியதெல்லாம், ஏழைகளையும், பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளவர்களையம் பாதுகாக்கும் அம்சங்களை உள்ளடக்கி கொள்ளை நோய் எதிர் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து செய்யப் படும் ஒரு இடைநிலை பருவ மாற்றத்திற்க்கான செயல்களே ஆகும்.
இது நாம் தற்போது வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற பருவநிலை சீரழிவு நிலையை தடுத்து, திரும்ப நல்நிலைக்கு செல்லவும், இந்த மாதிரி கொள்ளை நோய்களின் அபாயத்தை குறைக்கவும் பயன்படும்.
இந்த இடை நிலை பருவ மாற்றம், இலாபத்தை விடுத்து மக்கள் நலனை பார்க்கக் கூடிய ‘திட்டமிட்டு வளர்ச்சியை குறைத்துக் கொள்ளும் ‘ பொருளாதார சீர்திருத்தங்களையும் உள்ளடக்கியதாக கட்டாயம் இருக்க வேண்டும்.
இதன் முதற்படி உலகெங்கும் அரசாங்கங்கள் அறிவிக்கின்ற ஊக்குவிப்பு தொகுப்பு திட்டங்களின் பலன் வீணாக பெரிய நிறுவனங்களை காப்பாற்றுவதில் போய் முடியக் கூடாது என்று உறுதி செய்ய வேண்டும்.
சாதாரண சமூகத்தை சேர்ந்தவர்களெல்லாம் வீடுகளில் முடங்கியிருக்க, நேர்மையற்ற பெரு வணிகர்களும் ஆள்பவர்களும் எளிதாக தங்களுக்குரிய அச்சமூட்டும் உலக சமமின்மையை மீண்டும் உறுதி செய்யும் நடவடிக்கைகளை நாம் அறவே தவிர்த்திட வேண்டும்.
கோவிட்-19 பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள அரசு நிதி பரவலாக்கப் பட்ட புதுப்பிக்கதக்க எரிசக்தி உற்பத்தி செயல்படுத்தப்பட புது பசுமை திட்டம் உருப்படியான வேலை வாய்ப்புகள் உருவாக்க வேண்டும்.
கோவிட் -19 பொருளாதார சிக்கல் நிலைமைகளுக்கு பிறகு
கோவிட்-19-ற்கு, பின் ஏற்படப்போகும் பொருளாதார சிக்கல்களுக்கு இடையே, அரசாங்கங்களின் நிதியாதாரங்கள் புதிய பசுமை ஒப்பந்தத்தை செயல்படுத்தும் விதத்தில் பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்வதில் மட்டுமே செலவிட வலியுறுத்த வேண்டும். அதே நேரத்தில் அனைவருக்கும் சுகாதாரம், இலவச கல்வி, பாதிக்கப் பட வாய்ப்பு உள்ளவர்களுக்கு சமூக பாதுகாப்பை நீட்டிக்க செய்தல், மலிவான (அல்லது பெரும்பாலனோரால் வாங்க முடிகிற விலையில் உள்ள ) வீடுகள் கிடைப்பதற்கு முன்னுரிமை, ஆகிய இவற்றை உறுதி செய்ய வேண்டும்.
கோவிட்-19ற்க்கு, தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் இதற்கு வழி காட்டுகிறது . நுகர்வை குறைத்துக் கொள்ளும் வாழ்க்கை முறைக்கும் வேலை முறைக்கும் இது நம்மை பழக்க படுத்தி விடும். இது பயணங்களின் அளவை குறைப்பது , வீட்டுக் கழிவுகளை குறைப்பது, குறைக்கப்பட்ட வேலை நேரங்கள், உள்ளூர் பொருட்களையே சார்ந்திருத்தல் நோக்கி நம்மை ஊக்குவிக்கும். அதாவது சாமானிய உழைப்பாளர்களின் வாழ்வாதாரங்களை குலைக்காமல், பொருளாதாரா நடவடிக்கைகள் உலகமயம் என்ற நிலையிலிருந்து உள்ளூர்மயம் என்ற நிலைக்கு செல்லும்.
கோவிட்19 ஆல் ஏற்பட்டுள்ள நிலைமை, ஏற்றதாக இல்லையென்றாலும், அவசரமாகவும் துரிதமாகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஒருவருக்கொருவர் உதவி செய்துக் கொண்ட செயல்கள் இவையெல்லாம் ஒன்றை மட்டும் விடாமல் கூறுகின்றன. எப்போதெல்லாம் ஒட்டு மொத்த மனித குலம் பேரிடர்களை சந்திக்கிறதோ அப்போதெல்லாம் சமூகம் கூட்டாக செயல்படும் திறனை தாண்டி இன்னும் வீரியத்துடன் செயல்படும்.
விஜய் கொலின்ஜிவாடி தமிழில் தேவநாதன்
மிக நேர்த்தியாக எளிய தமிழ் நடையில் அறிவார்ந்த மொழி பெயர்ப்பு