தகவல் வெறுமை – டி.கே ராஜலட்சுமி (தமிழில்:செ. நடேசன்)

தகவல் வெறுமை – டி.கே ராஜலட்சுமி (தமிழில்:செ. நடேசன்)

 

கோவிட் 19 ஓர் உச்சக்கட்டத்தை நோக்கிச்செல்வதுபோல தோன்று கிறது: ஆனால், மத்திய அரசோ தொற்று மற்றும் சிகிச்சைகள் பற்றிய முறையான தகவல்களையும்,புள்ளி விவரங்களையும் பகிர்ந்து கொள்வதில் விருப்பமின்றி தவிர்த்துவருகிறது.

மத்திய அரசு கோவிட்19 சூழ்நிலை கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது, இந்த ஒட்டுவாரொட்டி நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் போதுமான அளவில் எடுக்கப்பட்டுவருகின்றன என்ற எண்ணத்தைத்  தொடர்ந்து கொடுக்க விரும்புகிறது. இருந்தபோதிலும், நோய் உறுதிசெய்யப்படும் நிகழ்வுகள் நாடுமுழுவதும் உறுதியாக அதிகரித்துவருகின்றன. மேலும் நோய்த்தொற்றை உறுதிசெய்யும் சோதனைகளின் வேகம் இந்தநோயின் மாபெரும் அளவுக்கு ஏற்ப சரியான விகிதத்தில் ஒத்திசைவாக இல்லை. அரசிடமிருந்தும், அறிவியல் கட்டமைப்புக்களிடமிருந்தும் இந்த சுகாதார அவசரநிலையில் பலநாடுகளிடையே உள்ள அளவீடுகளில் இந்தியா எங்கே உள்ளது என்ற உறுதியான மற்றும் பொருத்தமான பதில்களை‘ஊரடங்கு’ கட்டம் தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இன்றுவரை பொதுவெளியில் வந்துகுவியும் தகவல்கள், ஊரடங்கின் துவக்கத்தில் சற்று அதிகமாக இருந்தது மே, ஜூன் மாதங்களில் குறைவதுபோல் காணப்பட்டது என்பது ஜூன் மாதத்தில் இந்தத்தொற்று மிகவும் தீவிரமாகத் துவங்கியபோது அது ஒரு மோசடியாகத் தெரியவந்தது.

 ஜூன் 29 அன்று மத்திய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தின் பத்திரிகைச்செய்தி, ஒரு நம்பிக்கையூட்டும் சித்திரத்தைத்தர விரக்தியுடன் முயற்சித்தது. நோயிலிருந்து மீண்டுவருவோரின்வீதாச்சாரம் 58.67 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது: தீவிரமான நோய்த்தொற்று எண்ணிக்கைகளைவிட நோயிலிருந்து மீண்டுவருவோரின் எண்ணிக்கைகள் கூர்மையாக அதிகரித்துள்ளன என்றும்: நாளொன்றுக்குச் சோதனை மாதிரிகள் 2.3 இலட்சத்தைத் தாண்டியுள்ளன என்றும் தெரிவித்தது. ‘மீண்டுவருவோரின்” எண்ணிக்கைகளுக்கும், ‘தீவிர நோயாளிகளுக்கும் இடையில் உள்ள இடைவெளி ஜூன் 28 அன்று 1.06,661 என விரிவடைந்தது. ஒட்டுமொத்தமாகக் குணமடைந்த நோயாளிகள்3,21,722 என இருந்தபோது அங்கே இன்னும் ‘தீவிரமான மருத்துவ கண்காணிப்பில்’ இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள். கோவிட் 19 நோய் கண்டறியும் மையங்கள் அங்கே 1,047 உள்ளன அவற்றில் 50%க்கும்மேல் அரசு மையங்கள் .84 இலட்சம் அளவுக்குச் சோதனைகள் நடைபெற்றன. இது கோவிட் 19 தொடர்பான அர்ப்பணிக்கப்பட்ட மருத்துவமனைகள், தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் ஆழ்ந்த கவனிப்பு படுக்கைகள் போன்ற விவரங்களை அளித்தன. இந்தத் தகவல் முக்கியமானது மற்றும் வரவேற்கக்கூடியது: ஆனால், வைரஸ் ஆபத்து தொடர்பான பலகேள்விகள் பதிலளிக்கப்படாமல் உள்ளன. இவற்றின் மீது அரசும், அறிவியல் கட்டமைப்பும் தங்கள் வாயை இறுகமூடிக் கொண்டுள்ளன.

 அரசின் பத்திரிகை விளக்கங்கள் உறுதிசெய்யப்பட்ட நோய்கள் மற்றும் தொற்றுகள் செங்குத்தாக உயர்ந்துவரும் வரைபடத்தோடு சரியான விகிதத்தில் ஒத்திசைவானவைகளாக இல்லை ஊரடங்கின் துவக்கத்தில் நடைபெற்ற வழக்கமான விளக்கவுரைகள் மே இறுதிவாக்கில் படிப்படியாகக் குறைந்துவிட்டது. ஜூன் மாதத்தில் கடைசி ஒன்று ஜூன் 11 அன்று நடைபெற்றது: அதில் நுண்கிருமி ஆய்வுகளின் முதல்கட்ட முடிவுகள் மொத்த மக்கள் தொகையில் 0.73% பாதிக்கப்பட்டதாகக் காட்டியது: அது ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதற்குப்பிறகு தகவல் தொடர்பின் ஒருவகை வடிவமாகப் பத்திரிகை குறிப்புகள் மட்டுமே அளிக்கப்பட்டன, அவற்றில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கான பதில்கள் ஏதும் இல்லை. ஜூன் 17 அன்று நடைபெற்ற 17ஆவது அமைச்சர்கள் குழுக்கூட்டத்தில் அதன் உறுப்பினர்கள் மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா, குஜராத், உத்தரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் அதுவரையான மொத்த நோய்த்தொற்றுக்களில் 85.5%ம், இறப்புக்களில் 87%ம் கொண்டிருந்தன என்று தகவல் தெரிவிக்கப்பட்டார்கள் பாதிக்கப்பட்ட மாநிலங்களும்,.யூனியன் பிரதேசங்களும் தடுப்பு நடவடிக்கைகளிலும், கண்காணிப்பிலும் கவனத்தைக் குவிக்குமாறும், மிகவும் அதிகபட்சமான சோதனைத்திறனைப் பயன்படுத்துமாறும், நோயுற்ற மற்றும் வயதான மக்கள் தொகையினரை மேற்பார்வையிட்டு, நோய்த்தொற்று உருவாகும் இடங்களைக்  கணிக்க டிஜிட்டல்கருவிகளை பயன்படுத்துமாறும் அமைச்சர்கள் குழுவால் கூறப்பட்டது அமைச்சர்கள் குழுவுக்கு மக்கள்தொகையில் நோய்த்தொற்று மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை கூறப்பட்டதா என்ற விவரம் பத்திரிகை குறிப்பில் இடம்பெறவில்லை.

Indian Council of Medical Research - Wikipedia

  மாநிலங்களுக்கிடையிலான எண்ணிக்கைகளில் பெருமளவு வேறுபாடுகள் இருந்தபோதிலும், அதிகமான எண்ணிக்கைகளில் மக்கள் சோதனை செய்யப் பட்டார்கள் என்பது ஒரு சாதகமான அம்சமாகும். முந்தைய பரிசோதனை விகிதங்கள் .கிட்டத்தட்டத் தேக்கமடைந்திருந்ததால் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க  இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவின் (ICMR) பரிசோதனை உத்திகள் மாற்றியமைக்கப்பட்டன.  ஆனால், பரிசோதனை அளவுகள் ஜூன் மாதத்தில் அதிகரித்திருந்தாலும்கூட அவைமற்ற நாடுகளுடன் ஒப்பிடக்கூடிய மக்கள் தொகையோடும், உறுதிசெய்யப்பட்ட நோய்த் தொற்றுக்களோடும் பொருந்தவில்லை. மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்களுடைய  பரிசோதனை ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது, ஆய்வகங்களின் முழு ஆற்றலும் இதுவரை பயன்படுத்தப்படவில்லை என்று பொருள் தந்தது.

மருந்துகளுக்கு ஏற்பளிக்கும் பிரச்சனைகள்

பொதுவெளியில் தகவல்களை, குறிப்பாகச் சிகிச்சை நடைமுறைகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்வதில் தீவிரமான பிரச்சனைகள் அங்கே இருந்தன. ஜூன் 26 அன்று,குடிமக்கள் சமுதாயத்தின் ஒரு பரந்த கூட்டணியான ’அகில இந்திய மருந்துகள் நடவடிக்கை வலைத்தளம்’ (AIDAN) இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு தலைமை அலுவலருக்கு, கோவிட்19 மருந்துகள், சுகாதாரத்துக் கான தயாரிப்புக்கள்  அவற்றை மதிப்பீடு செய்து ஏற்பளிப்பதற்காக உருவாக்கப்பட்ட ’துறைசார்ந்த சிறப்பு நிபுணர்கள் குழு’வின் செயல்பாடுகளில் (SEC) வெளிப்படைத்தன்மை தேவை  என்பது தொடர்பாகக் கடிதம் எழுதியது.     அந்தக்குழுவைத் துவக்குவது பற்றிய தகவலிலும்கூட தீவிரமான தகவல் இடைவெளி இருந்ததையும், அது மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்ததையும் AIDAN சுட்டிக்காட்டியது.

ரெம்டெசிவிர் மற்றும் தொற்று எதிர்ப்பு ஃபவிபிரவிர் போன்ற கோவிட்19 மருந்துகளை ஒழுங்குபடுத்தி சந்தைப்படுத்த ஏற்பளிக்கும் ‘மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின்”(CDSCO)   பின்னால் உள்ள வழிமுறைகள் தெளிவாக இல்லை. SEC யின் அறிக்கையும்,  பொதுவெளியில் AIDAN னும் கூறியது ஜூன்22 அன்று DCGI க்ளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ்க்கு ஃபவிபிரவிர்- க்கும், சில்பாலிட். மற்றும் ஹெட்ரோ டிரக்ஸ்க்கு  ராம்டெசிவிர் ஊசிக்கும் முறையான ஏற்பை அளித்தது. ஜூன் 19 அன்றே ஏற்றுக்கடிதம் அளிக்கப்பட்டிருந்தாலும்கூட, அது ஜூன் 22 அன்றுதான் அறிவிக்கப்பட்டது.

DCGI அறிவிப்பு கூறுகிறது:’ ஊசியிடப்படும் கோவிட் 19 நோயின் அவசரத்தன்மை மற்றும் வழங்கப்படாத மருத்துவ தேவையின் அவசரம் கருதியும்  நோயாளிகளுக்கு ஊசிமூலம் செலுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து பயன்பாட்டுக்கும்,சிறிய மற்றும் நடுத்தர கோவிட்19 நோய்த்தொற்றுக்கு ஃபவிபிரவிர் மாத்திரைகளை பயன்படுத்துவதற்கும் பல்வேறு நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ஏற்பளிக்கப்பட்டுள்ளது”  ரெம்டெசிவிர் இறக்குமதிக்கும், சந்தைப்படுத்தலுக்கும் ஜூன் 1 அன்றே ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தாலும், இறக்குமதியாளர் CDSCO விலிருந்து மருந்தை இறக்குமதி செய்வதற்கு இன்னும் இறக்குமதி உரிமம் பெறாததால் அது இயலாமல் போனது. ஜூன் 20 அன்று CDSCO உள்ளூர் தயாரிப்பாளர்களுக்கு அந்த மருந்தின் ஊசிமூலம் செலுத்தப்படும் முறைகளுக்குக் கடுமையான கோவிட்19 சிகிச்சைகளை உறுதிப்படுத்தும்வகையில் தயாரிக்கவும், சந்தைப்படுத்தவும் ’கட்டுப்படுத்தப்பட்ட அவசர பயன்பாட்டின்’கீழ் அனுமதி அளித்தது. இந்த இரண்டு மருந்துகளும் மருத்துவரின் குறிப்புரையின் பேரில் விற்கப்படவேண்டும். முறையான பயன்பாட்டை உறுதிப்படுத்தும் விதத்தில் குறிப்பாக ரெம்டெசிவிர் தயாரிப்புக்கள் மருத்துவமனைகளுக்கும், நிறுவனங்களுக்கும் மட்டுமே  விநியோகிக்கப்படவேண்டும். இந்த இரண்டு நிகழ்வுகளிலும் நோயாளி அல்லது அவரது பிரதிநிதிக்குத் தெரிவித்து ஒப்புதல் பெறவேண்டியது கட்டாயமாகும்.

3,02,956 samples tested by ICMR so far || இந்தியாவில் ...

  கோவிட்19 மருந்துகளுக்கும். ஊசிமருந்துகளுக்கும் ஏற்பளிக்கும் வழிமுறைகளை CDSCO 2020 மார்ச்-ல் அறிவித்திருந்தது என DCGIக்கு  AIDAN அனுப்பியிருந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தது. சம்பந்தப்பட்ட இரண்டு மருந்துகளுக்கும் ஏற்பளிக்கப்பட்டபோது, விரைவுபடுத்தப்பட்ட ஏற்புக்கான அடிப்படை தொடர்பாக அதிகாரபூர்வமானதகவல்கள் ஏதும் இல்லை ஒழுங்குபடுத்தும் வழிமுறைகள் நிறைவேற்றப்பட்ட விதத்தில் எந்தவிதமான தெளிவும் இல்லை.ரெம்டெசிவிர் மருந்தின் தயாரிப்பாளரான கிளீட், சோதித் தறிந்த புள்ளிவிவரங்களைச் சமர்ப்பித்திருந்ததா? அல்லது அந்தப்புள்ளி விவரங்கள் முக்கியமான மருத்துவ விமர்சன பத்திரிகைகளுக்கு அனுப்பப் பட்டிருந்ததா? அல்லது SEC தனிப்பட்ட முறையில் பரிசோதித்ததா? என்பது பற்றி எதுவும் தெளிவாக இல்லை. இந்த இரண்டு நிறுவனங்களுக்கு அந்த மருந்துகளைத் தயாரிக்கும் அனுமதி வழங்கப்பட்டபோது பதஞ்சலிக்கு ஊட்டச்சத்தை அதிகரிப்பவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. அத்துடன் மாநிலஆயுர்வேதத்துறையின் உரிமம் அளிக்கும் அலுவலர் ANI யிடம் ‘கோவிட் கிட் தயாரிப்பதற்கான அதிகாரமளித்த முகமையின் அடையாளம் பற்றிய விவரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டு பதஞ்சலிக்கு ஒரு அறிவிப்பு அளிக்கப்படும்’ என்று கூறியிருந்தார்.

 அமைச்சகம், ஹரித்துவாரிலுள்ள பதஞ்சலி ஆயிர்வேதா லிமிடெட்டால் செய்யப்பட்ட குறிப்பிட்ட அறிவியல்பூர்வ ஆராய்ச்சிகளின் உண்மைகள் மற்றும் உரிமைகோரல்கள் பற்றிய ‘ எதுவும் தனக்குத் தெரியாது என்று மறுத்தது. மேலும், கோவிட்சிகிச்சைக்கு உரியது என்று கோரப்பட்ட பெயர் மற்றும் மருந்துகளின் கலவை, எங்கே ஆய்வுகள் நடத்தப்பட்டன என்பதுபற்றிய இடங்கள் அல்லது மருத்துவமனைகள், வழிமுறைகள் ,மாதிரி அளவுகள், நிறுவன ஒழுக்க நியதி குழுவின் தடையின்மைச்சான்று, இந்திய மருத்துவ பரிசோதனை பதிவகத்தின் (CTRI) பதிவு எண் மற்றும் நடத்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் புள்ளிவிவரங்களின் முடிவுகள் ஆகியவற்றைச் சமர்ப்பிக்குமாறு பதஞ்சலியைக் கேட்டுள்ளது.

  விச்சித்திரமானவகையில், பதஞ்சலி, மாவட்ட நீதிபதி அனுமதி அளித்துள்ள தாக கூறி, இந்தூரில் பரிசோதனைகளை நடத்த முயற்சித்தது. மாவட்ட ஆட்சியருக்கு அத்தகைய அனுமதி அளிக்கும் அதிகாரம் இல்லை என்று, சுகாதார செயல்பாட்டாளர்கள் ஆட்சேபித்தபோது, மாவட்ட ஆட்சியரே, அனுமதி அளிக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என்று தாமே ஓர் அறிக்கை வெளியிட்டார். பின்னர் அந்த நிறுவனம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியின் ‘மருத்துவ அறிவியலுக்கான தேசிய நிறுவனம் (NIMS) என்ற அமைப்புடன் இணைந்துகொண்டது. ஆனால் மிகவிரைவிலேயே மருத்துவ அறிவியலுக்கான தேசிய நிறுவனத்தின் (NIMS) தலைவர் குணப்படுத்தும் எல்லாவிதமான உரிமைகோரல்களிலிருந்தும் தமது நிறுவனத்தை விலக்கிக்கொண்டார்.

 ஊடகத்தின் ஒருபிரிவினரிடம் அவர் கூறினார். ‘கூறப்பட்ட எந்த ஒரு மருத்துவப் பரிசோதனைகளும் அங்கே நடைபெறவில்லை: நோய் அறிகுறி காணப்பட்ட நோயாளிகளுக்குப் பதஞ்சலியால் அளிக்கப்பட்ட மருந்துகள் மட்டுமே கொடுக்கப்பட்டன’ ”ஊட்டச்சத்தை அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்துகளை, அவற்றின் விளைவுகளைச் சோதிக்கும் சோதனைகளுக்கான அனுமதி மட்டுமே இந்திய மருத்துவ பரிசோதனை பதிவகத்திடம் (CTRI) பெறப்பட்டது’ என்று அவர் மேலும் கூறினார். இதுபற்றி விழிப்புணர்ச்சியை. அதுவரை பெற்றிராத ராஜஸ்தான் சுகாதாரத்துறை, இந்த மருந்து அந்த மாநிலத்தில் விற்பதற்கு அனுமதி இல்லை என்று அறிவித்தது.

 நடப்பில் உள்ள இந்தப்பிரச்சனைபற்றி ‘பதஞ்சலி போன்ற ஒரு நிறுவனத்தால் தூண்டிவிடப்பட்ட கோரிக்கைகளால் என்ன நடந்துகொண்டிருக்கிறது, என்பதைப்பற்றி எந்த ஒரு அரசும், மத்திய அரசோ அல்லது மாநில அரசோ தெரிந்துகொண்டிருப்பதாகத் தோன்றவில்லை. பிரதமரேகூட தம்மை ஆயுர் வேதத்தின் விளப்பரத்தூதுவராக தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது, அறிவியல் கட்டமைப்பின் எவர் ஒருவரும் இதற்கு எதிராக எந்த ஒன்றையும் கூறமாட்டார்கள் என்பது தெளிவாகத் தோன்றுகிறது. ஆயுஷ் அமைச்சகம்,’இந்தியா தானாகவே இந்த நோய்க்கு மருந்தைக் கண்டுபிடிக்க முயற்சித்துக்கொண்டிருக்கும்போது பதஞ்சலியின் உரிமைகோரல்கள் அரசுக்கு உலக அறிவியல் சமுதாயத்தின் முன்பு நிச்சயமாக அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது’ என்று வெளிப்படையாகப் பேசவேண்டியுள்ளது.

சுகாதாரப்பணியாளர்களின் பாதுகாப்பற்ற தன்மை

With 1,295 new cases, Delhi's Covid-19 count rises to 19,844

 மற்ற படிநிலைகளிலும்கூட வெளிப்படைத்தன்மையின்மை – குறிப்பாக சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்களின் பாதுகாப்பற்ற தன்மை குறித்தவை – உள்ளது. டெல்லியில் இப்போது கோவிட் மருத்துவ மனையாக உள்ள, பெருமைக்குரிய லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில், ஜூன் 28 அன்று மயக்கமருந்தியல் நிபுணர் வைரஸால் பீடிக்கப்பட்டார். அவர் அந்தமருத்துவமனையில் ஆழ்நிலை கவனிப்பு பிரிவில் (ICU) பணியாற்றிவந்தார். ‘கொரோனா போராளிகள்’ என்று அரசால் அளிக்கப்பட்ட புதுமையான பட்டத்தின்கீழ் பணியாற்றுவதற்கேற்ப சுகாதாரப்பணியாளர்களின் கவலைகள் போதுமான அளவுக்கு கவனம் பெறுவதில்லை. கொரோனா புற்றுநோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும்போது நோய்த்தொற்றுக்குள்ளான அல்லது  இறந்துவிட்ட சுகாதாரப்பணியாளர்களின் மத்தியப்படுத்தப்பட்ட புள்ளிவிவரத்தொகுப்புக்கள் அங்கே ஏதும் இல்லை. இது தொடர்பான ஊடகங்களின் கேள்விகள் பொதுவாக புறக்கணிக்கப்படுகின்றன.

 தகவல் வெறுமையை நிறைவுசெய்யத் தனியார் முகமைகள் காலெடுத்து வைத்துள்ளன. பெங்களூருவிலுள்ள மூன்று தனிப்பட்ட ஆராய்ச்சியாளர்களான சாவித்திரி தேவி, சுபஸ்ரீ, ஸ்ரீநிதிதத்தார். ஆகியோர் 392 சுகாதாரப் பணியாளர்களிடம் இணையவழியில், ‘தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்கள்’ (PPE) கிடைப்பது பற்றிய ஆய்வுகளை நடத்தினார்கள். அவர்கள் 26 மாநிலங்களில், 150 மாவட்டங்களில் பரவியுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சமுதாய சுகாதாரப்பணியாளர்கள், முதுகலை குடியிருப்பாளர்களை பேட்டி கண்டார்கள். இதன் கண்டுபிடிப்புக்கள் “பெரும்பாலான தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்கள் போதுமான அளவுக்குக் கிடைப்பதில்லை அல்லது, பெரும்பாலான சுகாதார கவனிப்பு அமைப்புக்களில் எதுவுமே கிடைப்பதில்லை’ என்று தெரிவிக்கின்றன.

 இந்த நேர்காணல்களில் பதிலளித்தவர்களில் 50% பேர் மிகவும் மோசமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, மற்றும் மத்தியப்பிரதேசத்தைச் சார்ந்தவர்கள். இந்த ஆய்வாளர்கள் பொது மருத்துவ மனை துறைகளில் வெளி நோயாளிகள் பிரிவில் பணியாற்றுபவர்களில் மூன்றில் ஒருபங்கினர் என்-95 முகக்கவசம் கூட இல்லாமலிருப்பதைக் கண்டார்கள். சிவப்பு பகுதி மாவட்டங்களில் பணியாற்றுபவரில் ஐந்தில் ஒருவர் என்-95 முகக்கவசம் இல்லாமல் இருக்கிறார்..  வீடு வீடாகச்சென்று சந்தேகத்துக்குரியவர்களைக் கண்டறியும் சமுதாய சுகாதாரப்பணியாளர்களில் கால்பகுதியினர்மட்டுமே முகக்கவசங்களையும், மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே கையுறைகளையும் பெற்றுள்ளார்கள்.

  இந்த ஆய்வு சுகாதாரப்பணியாளர்களில் 14% பேர், சிவப்பு மண்டலத்தில் உள்ளவர்கள் உட்பட தங்கள் சொந்த தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்களை வாங்கியுள்ளார்கள்: பதிலளித்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தங்கள் PPE களை மீண்டும் பயன்படுத்துவத்ச்க கூறியுள்ளார்கள். ஆனால் 88%பேர் அவர்களது வேலை அமைப்புக்காகப் பரிந்துரைக்கப்பட்ட PPE பற்றி போதுமான அறிவு பெற்றிருக்கவில்லை. வெப்பமான சூழ்நிலைகளில் PPE களை அணிவதில் சௌகரியமற்ற நிலைமைகளையும், PPE களை விநியோகிப் பதிலுள்ள பாரபட்சங்களையும், இவைபோன்றவற்றையும் புகாராகக் கூறினார்கள். 

  சான்றளிக்கப்பட்ட சமுதாய சுகாதார செயல்பாட்டாளர்கள் (ASHA) மற்றும் ஹரியானாவிலுள்ள தேசிய சுகாதார குழு அலுவலர்களிடமும் ஃப்ரண்ட் லைன் பேசியது. அவர்கள், PPE மற்றும் துப்புரவு கருவிகளில் கவலைக்குரிய அளவில் பற்றாக்குறை உள்ளதாகத் தெரிவித்தார்கள்.

  நன்றி: ஃப்ரண்ட் லைன் ஜூலை 17   

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *