[தேசிய சமூக முடக்க அறிவிப்பு தோல்வியடைந்ததை எதிர்கொள்ள முடியாமல், மத்திய அரசு தற்போது நாட்டில் கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்று அதிகரித்திப்பதற்கு மாநிலங்கள் மீதும், மக்கள் மீதும் பழி போட்டுக்கொண்டிருக்கிறது. மத்திய யூனியன் பட்ஜெட்டில், சுகாதாரத்திற்கு, மிகவும் குறைவான அளவிலேயே நிதி ஒதுக்கியதும் மற்றும் வலுவான பொது சுகாதார உள்கட்டமைப்பைக் கட்டி எழுப்புவதில் நீண்டகாலமாகவே தோல்வி அடைந்ததும் இந்நெருக்கடி அதிகரித்திருப் பதற்குக் காரணங்களாகும்.]

கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்று இந்தியாவில் குறைவதற்குப் பதிலாக மிகவேகமான முறையில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.(அரசுத்தரப்பில் அளிக்கப்படும் உறுதியான தொற்றாளர்கள் குறித்த எண்ணிக்கை, துல்லியமாக இருக்க வேண்டும் என்பதற்காகக் குறைவாகக் காட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.)

Image

இதனை மேலேயுள்ளபடம் 1-ஐப் பரிசீலித்தோமானால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.படம்-1 கொரானா வைரஸ் தொற்று மிகவும் வேகமாக வளர்வதன் காரணமாகத்தான் அந்தப் படத்தில் கோடு மிகவும் நேராக இருக்கிறது.வளைவுக் கோடு, நேர்க்கோட்டிலிருந்து விலகிச்செல்வதுபோல் தோன்றும் அதே சமயத்தில், சமீபத்திய தரவுகள் வளைவுக்கோட்டைக் காட்டிலும்,  நேர்க்கோட்டுக்கு நெருக்கமாகவே இருப்பதாகவே பரிந்துரைக்கின்றன. இந்தத் தரவுக்கான ஒரு முறையான புள்ளிவிவர தொடர்புப் போக்கு, இந்தத் தரவுக்கு சிறந்த வளைவு என்பது நேர்க்கோடுதான் என்றே காட்டுகிறது.

Image

ஒருவர், படம் 2இன்படி கடந்த ஒரு வார காலமாக வெளியாகியுள்ள தரவுகளைப் பார்ப்போமானால், இந்த வளர்ச்சிக் காரணி, படம் 1க்கு மிகவும் நெருக்கமாக இருந்தபோதிலும், அநேகமாக படம் 1க்கும் மேலேயே இருக்கிறது. இதன் பொருள், வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் கட்டத்தைக் காட்டிலும் கீழே வீழ்ந்துகொண்டிருப்பதுபோன்று இருந்தாலும், நாடு சமூக முடக்கத்தின் மூன்றாவது கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில், இது இப்போதும் அதிகமான ஒன்றேயாகும்.

Image

சில மாநிலங்கள், படம் 3இல் பார்ப்பதுபோல,  கொரானா வைரஸ் தொற்று பரவுவதை முடக்குவதில் வெற்றி பெற்றிருக்கக்கூடிய அதே சமயத்தில், பல மாநிலங்களில் பாதிப்புக்கு உள்ளாகிறவர்கள் எண்ணிக்கையும் மற்றும் வளர்ச்சி விகிதங்களும் இப்போதும் அதிகரிக்கக்கூடிய நிலையிலேயே இருக்கின்றன.  இவ்வாறுள்ள மாநிலங்கள் என்பவர் மகாராஷ்ட்ரம், குஜராத், தில்லி, தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவைகளாகும்.இவற்றில் தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில்,தொற்றாளர்கள் எண்ணிக்கை திடீரென்று பீய்ச்சி அடித்திருக்கிறது.

அகில இந்திய அளவிலான போக்கு என்பதும் அடிப்படையில், இத்தகைய மாநிலங்களின் போக்கையே பிரதிபலிக்கிறது.இந்த மாநிலங்களை கேரளா மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டோமானால் இவற்றின் நிலைமைகள் தெளிவாகத் தெரியும்.இவ்வாறு நம் முன் தெரியக்கூடிய படமும் கூட ஓர் உண்மையான சித்திரத்தை வழங்குவதாகக் கூறமுடியாதுதான்.ஏனெனில், அனைத்து மாநிலங்களிலும் அனைத்து மக்களும் சோதனைக்கு உள்ளாக்கப்படுவதில்லை. சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் குறித்துத்தான் இந்தத் தரவுகள் அனைத்தும் என்பதால், இதனை வைத்துக் கொண்டு அந்த மாநிலத்தின் நிலைமையைச் சரியாகக் கணித்திட முடியாது. ஒவ்வொரு மாநிலத்திலும் சோதனை செய்திடுவதில் வித்தியாசங்கள் இருக்கின்றன.

படம் 4-a

Image

Image

படம் 4aஐப் பார்த்தோமானால், பல மாநிலங்கள் மிகவும் குறைவாகவே சோதனைகள் மேற்கொண்டிருப்பதைக் காண முடியும்.கேரளம் மற்றும் தெலங்கானாவில் சோதனைகள் செய்துள்ள அளவிற்கு, இதர மாநிலங்கள் மேற்கொள்ளவில்லை.மகாராஷ்ட்ரம், குஜராத், தில்லி, பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் சமீபத்தில்தான் பெரிய அளவிற்கு சோதனை செய்யப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

படம் 4-b

Image

Image

படம் 4bஐப் பார்த்தோமானால், ஒவ்வொரு நாளும் அதிகரிப்பதும், அன்றைய தினம் மொத்தம் கணக்கிட்ட எண்களுடன் ஒப்பிட்டு, இவற்றைப் பார்ப்போர் மத்தியில்  எந்தெந்த மாநிலங்கள், சோதனை செய்யப்பட்டவர்களுக்கும்,அவர்களில் சிகிச்சை அளித்துசரி செய்துள்ளவர்களுக்கும் இடையேயான நெருக்கம் அல்லது தொலைவு என்ன என்பதைப் புலப்படுத்துகின்றன. கேரளாவும், தெலங்கானாவும் இதில் கணிசமான அளவிற்கு வெற்றி பெற்றிருக்கக்கூடிய அதே சமயத்தில் மற்ற மாநிலங்களில் அதிக வேகமான வளர்ச்சி இருப்பதைக் காண முடிகிறது.

மகாராஷ்ட்ரா, குஜராத் மற்றும் தில்லியில் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கக்கூடிய அதே சமயத்தில், பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் சமீபத்தில் திடீரென்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.  ஆரம்பத்தில் இம்மாநிலங்களில் தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள், சிகிச்சை பெற்று உடல்நலமடைந்துவிட்டார்கள் என்று கூறப்பட்டபோதிலும், பின்னர் நிலைமைகள் மோசமடைந்திருக்கின்றன.

அரசாங்கம், கொரானா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக, மக்கள் மத்தியில் மருந்து எதுவும் உட்கொள்ளாமலேயே அதனைக் கட்டுப்படுத்துவதற்கான அளவீடாகத்தான் சமூக முடக்கம், மக்களிடையே இயக்கத்தில் கட்டுப்பாடுகள் மற்றும் தனிநபர் இடைவெளி முதலானவற்றைத் திணித்தது. எனினும் இவ்வாறு கட்டுப்பாடு விதித்த சமயத்தில் கொரானா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்திட நடவடிக்கைகள் வலுவாக எடுக்கப்பட்டிருக்குமானால், நோய்த் தொற்றைக் குறைத்திருக்க முடியும்.

ஆயினும் போதுமான அளவிற்கு அனைத்து மாநிலங்களிலும் மக்கள் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படவில்லை. அதனால் அளிக்கப்பட்டிருக்கிற தரவுகளும் உண்மையான சித்திரத்தைப் பிரதிபலிக்க வாய்ப்பில்லை.

அகில இந்திய அளவில் உள்ள புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில், கேரளாவில் மார்ச் கடைசி வாரத்திலிருந்தே தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைபெற்று நலமாகிக் கொண்டிருப்பது அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. இதேபோன்று தெலங்கானாவிலும் பாராட்டத்தக்க அளவிற்கு இருப்பதைக் காணமுடிகிறது.

COVID-19 India Update: With Nearly 700 Confirmed Cases Within 24 ...

ஆனால், மகாராஷ்ட்ரா, குஜராத், தில்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்திருக்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் இதர மாநிலங்களிலிருந்து இம்மாநிலங்களுக்கு வந்துகொண்டிருப்பது இதற்கு ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக பஞ்சாப்பில் ஏப்ரல் இறுதியில் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்திருந்தது, ஆனால் மகாராஷ்ட்ராவின் நாண்டட் பகுதியிலிருந்து யாத்ரிகர்கள் திரும்பிவந்ததை அடுத்து, அங்கே திரும்பிவந்த 480 பேர்களில் 105 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டிலும் கணிசமான அளவிற்குக் குறைந்திருந்தது, தற்போது அதிகரித்திருக்கிறது. இதற்குக் காரணம், பிற மாநிலங்களிலிருந்து, தமிழ்நாட்டிற்குள் வரும் டிரக் ஓட்டுநர்கள் மற்றும் இதர தொழிலாளர்களை உரிய முறையில் சோதனைக்கு உட்படுத்தாததே காரணமாகும். ஆனால் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு, சோதனைகள் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுதான் காரணம் என்று அரசுத்தரப்பில் கூறப்படுகிறது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சத்தின் அறிக்கையின்படி, நாட்டில் 20 மாவட்டங்களில் 68 சதவீதம் தொற்றால் பாதிக்கப்பட்டோர் இருப்பதாகக் கூறுகிறது. குறிப்பாக, மும்பை, அகமதாபாத், சென்னை, மத்திய தில்லி, வடக்கு தில்லி, கொல்கத்தா, கான்பூர் நகர் (கான்பூர் மாவட்டத்தின் நகர்ப்பகுதி), ஆந்திரப்பிரதேசத்தில் கிருஷ்ணா ஆகிய இடங்களில் வேகமாக அதிகரித்திருக்கின்றன. 72 சதவீத அளவிற்கு 20 மாவட்டங்களில் மரணங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக மும்பை, அகமதாபாத், (மத்தியப்பிரதேசத்தில்) இந்தூர், பூனே, சூரத், மத்திய தில்லி மற்றும் கிருஷ்ணா ஆகிய ஏழு மாவட்டங்களில் அகில இந்திய சராசரியான 3.2 சதவீதத்தைவிட இறந்தோர் எண்ணிக்கை விகிதம் அல்லது தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்களில் இறந்தோர் எண்ணிக்கை என்பது அதிகமாகும்.

சோதனை செய்யப்பட்டவர்களில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் அகில இந்திய சராசரி 4.4 சதவீதமாக இருக்கும் அதேசமயத்தில், ஒன்பது மாவட்டங்களில் இதைவிட அதிகமாக இருக்கிறது. பொதுவாக நாட்டில் அனைவரையும் சோதனை செய்வது என்பது பத்து லட்சம் (ஒரு மில்லியன்) பேர்களில் 1,100 பேர் என்ற அளவில், மிகவும் குறைவாக இருக்கிறது.

மிகவும் முக்கியமாக, நாடு முழுதும் மிகவும் விரிவான அளவில் சோதனைகள் மேற்கொள்வது என்பது தொடங்கப்படவே இல்லை.அதன் விளைவாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்தும் வேலைகளும் நடைபெறவில்லை.இதன் காரணமாகத்தான் இப்போது மத்திய அரசு, நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பதற்கு, யார் மீது பழிபோடலாம் என்று காரணங்களைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொண்டிருப்பதுபோன்று தோன்றுகிறது. மாநிலங்களும், மக்களும் இத்தகைய சூழ்நிலையில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கவில்லை என்று பழிபோடத் துவங்கியிருக்கிறது.

மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின்சார்பில்  காணொளிக் காட்சி மூலம் நடைபெற்ற கூட்டத்தில், மாநிலங்கள் சமூக முடக்கக் காலத்தைச் சரிவரப் பயன்படுத்தவில்லை என்றும், அதனைப் பயன்படுத்திக்கொண்டு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும், மக்களும் தனிநபர் இடைவெளியைப் பயன்படுத்தவில்லை என்றும், கறாராக வீட்டிற்குள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை என்றும், தனிமைப்படுத்துதல் தொடர்பான விதிகளைப் பின்பற்றவில்லை என்றும் கூறியிருக்கிறது.

சில மாவட்டங்களில் தொற்று அதிகமாக இருப்பதற்கு, அங்குள்ள மக்களுக்கு கொரானா வைரஸ் தொற்றின் அடையாளங்களைக் கண்டறியும் அளவிற்று விழிப்புணர்வு இல்லாததும், அத்தகைய விழிப்புணர்வை அளிக்கக்கூடிய விதத்தில், மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும் கூறியிருக்கிறது.இப்போது மிகவும் காலம் தாழ்த்தி, மாநில அரசுகள் சோதனைக்கான மாதிரி விகிதங்களை அதிகப்படுத்த வேண்டும் என்று கேட்டிருக்கிறது.

COVID-19: India reports 1st death as cases reach 73

மேலும், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தாமாகவே முன்வந்து சுகாதார மையங்களுக்குவந்து சோதனை செய்துகொள்வதற்குத் தயக்கமும், தாமதமும் காட்டினார்கள் என்று நம்புவதுபோன்றும் தோன்றுகிறது. மத்திய சுகாதார அமைச்சர், ஹர்ஷ் வர்தன், மாநில சுகாதார அமைச்சர்களுடன் மே 6, 7, 8 தேதிகளில் நடத்திய காணொளிக் காட்சி கூட்டங்களில் இதனை வலியுறுத்திக் கூறியிருக்கிறார். மேலும், சிகிச்சை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தரமற்ற இருந்ததும் தொற்று அதிகரிப்புக்குக் காரணம் என்றும் மத்திய அரசு குறைகூறுவதுபோன்றும் தோன்றுகிறது.

பல மாநிலங்களில் சுகாதாரப் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்வதற்குத் தேவையான அளவிற்கு உள்கட்டமைப்பு வசதிகளோ, போதிய சுகாதார ஊழியர்தகளோ கிடையாது என்பதை அது இப்போது ஏற்றுக்கொண்டிருக்கிறது. சுகாதார ஊழியர்களின் பற்றாக்குறையைச் சமாளித்திட அண்டை மாவட்டங்களிலிருந்து ஊழியர்களை வருவித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் தனியார் மருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்துக்கொள்ளவும், சாத்தியப்படும் இடங்களில் ஓய்வுபெற்றோரையும், இறுதி ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர்களையும், அரசு சாரா நிறுவனங்களைச் சேர்ந்தவர்களையும் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தி இருக்கிறது.

இவ்வாறு மத்திய அரசு சார்பில் மிக எளிதாகச் சொல்லப்பட்டிருந்தபோதிலும் அவற்றைச் செயல்படுத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல.இவை அனைத்தும் மத்திய அரசு முன்கூட்டியே தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதற்கும், மாநில அரசுகளை தொற்று உலகில் தெரியவந்த டிசம்பர்-ஜனவரி மாதங்களிலேயே தயார்ப்படுத்தவில்லை என்பதற்கும் சாட்சியங்களாகின்றன.

சுகாதாரம் என்பது மாநிலப் பட்டியலில் இருந்தபோதிலும், மத்திய அரசு மாநிலங்களுக்குத் தேவையான நிதி மற்றும் உதவிகளைச் செய்து தந்திருக்க வேண்டும்.போதுமான அளவிற்கு சுகாதார ஊழியர்களையும் அளித்து உதவியிருக்க வேண்டும்.மேலும் இது தொடர்பாக முறையான தகவல் தொடர்பே மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே இல்லை என்பதும் நன்கு தெரிகிறது.

மாநில அரசுகள் இத்தொற்றை சமாளித்திடத் தங்களிடம் போதிய அளவிற்கு வள ஆதாரங்கள் இல்லாத நிலையில், திடீர்த் தீயை அணைப்பதற்கு நடவடிக்கைகள் எடுப்பதுபோல் அவை எடுத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, நடைமுறைச்சாத்தியமற்றதாகும்.

COVID-19: ‘India doesn’t have enough testing kits’ –

மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக சுகாதாரத் துறைக்குப் போதிய பட்ஜெட் நிதி ஓதுக்கீடு செய்யாமல் புறக்கணித்தே வந்துள்ளது.நிதிப் பங்கீட்டிலும் மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே மிக மோசமான அளவிலேயே உறவுகள் இருந்துவந்துள்ளன.இதன் காரணமாக மாநிலங்களும் தாங்கள் சுயமாக சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளையும், மனிதவள ஆதாரங்களையும் அதிகப்படுத்திக்கொள்ள இயலா நிலைக்குத் தள்ளப்பட்டன.

சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பாக ஒரு நீண்டகால தொலைநோக்குடன் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே தொடர்புகள் இல்லாத நிலையில்,  மத்திய அரசு சமூக முடக்கம் போன்று திடீரென்று அறிவித்தால் மட்டும் பயனேதும் இல்லை என்பதையே, மாநிலங்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தெளிவுபடுத்தி இருக்கின்றன.

மேலும், மத்திய அரசு இரண்டாவதாகவும் மூன்றாவதாகவும் சமூக முடக்கத்தை அறிவித்தபோதுகூட மத்திய அரசின்கீழ் இயங்கிடும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட அமைப்புகளைக் கலந்தாலோசிக்காமல் அவர்களிடமிருந்து அறிவியல்ரீதியாகக் கருத்துக்கள் எதையும் கோராமல், நேரடியாக அறிவிக்கப்பட்டதாகவே நம்பகமான தகவல்களிலிருந்து தெரிய வருகின்றன. இத்தகைய மாபெரும் தொற்றை எதிர்கொண்டு முறியடிப்பதற்கு, அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி அடிப்படையில் இல்லாது தற்காலிகமான முறையில் நடவடிக்கைகள் எடுப்பது புத்திசாலித்தனம் அல்ல என்பது தெளிவாகி இருக்கிறது.m

நன்றி: Frontline,22.05.2020

படக்குறிப்பு: மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் மற்றும் சுகாதார இணை அமைச்சர் அஷ்வினி சௌபே மே 6 அன்று புதுதில்லியில் மகாராஷ்ட்ரா மற்றும் குஜராத் சுகாதார அமைச்சர்களுடன் மேற்கொண்ட காணொளிக் காட்சி கூட்டத்தின்போது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *