திரிபரா பீஜேபீ முதல் அமைச்சர் முதல் பீஜேபீ எம்பி துறவி சாத்வீ பிரயாக் வரை பல பீஜேபீத் தலைவர்களும் பசுப் பொருட்கள் ஆராய்ச்சியாளர்களும் ஆயுர்வேத மருந்து ஆராய்ச்சியாளர்களும் பதஞ்சலி உள்ளிட்ட பிரபல தயாரிப்பாளர்களும் பசுவின் சிறு நீர் அடர்விலோ… நீர்த்த வடிவிலோ பயன்படுத்தும் பொழுது புற்றுநோயையைக் குணப்படுத்தும் என்று பகிரங்கமாக அறிவித்து வருகின்றனர்.

குஜராத்தில் உள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவமனையில் பசுவையும் புற்று நோயாளியையும் ஒரே அறையில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். பசுவின் சிறு நீரால் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்த்தை மருந்தாக உட்கொடுத்தும் சாணத்தை உடல் முழுவதும் தேய்த்தும் சிகிச்சை அளிக்கின்றனர்.  நான் பசுவின் சிறுநீர் மருத்துவத்தால் எனது புற்றுநோயைக் குணப்படுத்தினேன் என்றும் கொானோவிற்கு இதை கொடுத்து குணப்படுத்தலாம் எனவும்  திரிபரா அமைச்சர் ஹரிப்பிரியா முன் வைக்கிறார்.

இதே போல் மலேகான் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது பீஜேபீ எம்பி ஆகியுள்ள சாத்வீ பிரயாக் தேர்தலின் போது தனது கேன்சர் குணமாவதற்கு பசுவின் சிறுநீரே உதவியுள்ளது என பகிரங்கமாக அறிவித்தார். பஞ்ச காவ்யா என்ற பசுவின் பொருட்களுடன் ஆயூர்வேதிக் மருந்துகளும் உட்கொண்டதால்  தனக்கு  கேன்சர் குணமானது என அறிவித்து உள்ளார்

ஆனால் டெல்லி பத்பர்கஞ்ச் மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை டாக்டர் விகாஸ் கோஸ்சுவாமி இதனை மறுக்கிறார். யாரோ சிலருக்கு இது பயன்பட்டுள்ளது என அவர்களே தெரிவிப்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. பல நோயாளிகளில் இதைச் சோதனை செய்து நிரூபித்துக் காட்ட வேண்டும் என்கிறார்.

அதே போல் குருகிராம் ஆர்ட்டீமிஸ் மருத்துவமனை மருத்துவர் அறிவியல் ரீதியாக இதற்கு ஆதாரம் கிடையாது. நாங்கள் அலோபதி மருத்துவ முறைகளையே பயன்படுத்து கிறோம். மாற்று மருத்துவ முறைகளைப் பின்பற்றிய நோயாளிகளில் பலர் மிகவும் மோசமான நிலையில் இங்கு வந்து சிகிச்சை செய்ய இயலாத சூழ்நிலையே ஏற்பட்டிருக்கிறது என்கிறார்.

Cow dung for indigestion, urine for pimples: Vishwa Hindu Parishad's guide to a healthy life - Living News , Firstpost

அப்படியானால் பசு சிறுநீர் புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லையா? ஆராய்ச்சிக் கட்டுரைகள் எதுவும் வெளிவரவில்லையா? மருந்துகள் எதுவும் உருவாக்கப்பட்டு பேட்டன்ட் பெறவில்லையா?

மன்சார் மாவட்டத்தில் புற்றுநேய் முகாமில் ஒரு சோதனை செய்துள்ளார்கள்.எட்டு நாள் கொண்ட ஒரு சோதனை. இந்த சோதனையின் நோக்கம் பசு சிறுநீரினால் புற்றுநோய் குணமாவது. 68 நோயாளிகளுக்கு பசு சிறுநீர் வழங்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இவர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வந்தவர்கள். 68 நோயாளிகளில்  ஐந்து நபர்கள் பாதியிலேயே போய்விட்டனர். 63 நபர்கள் தொடர்ந்தனர்.  இவர்கள் பல விதமான கேன்சர் உள்ளவர்கள். அதிக அளவில் தொண்டை புற்று நோய் உள்ளவர்கள் 30.8% மார்பகப் புற்றுநோய் 14.7% தொண்டை மற்றும் வாய்ப்புற்று 5.88% கற்பவாய் கற்பப் புற்று 5.88% , வாய்க்குழி மற்றும் சைனஸப்புற்று 4.41% நுறையீரல் புற்று, இரத்தப்புற்று எலும்புப் புற்று 2.94% பிற கேன்சர் 8.82 என வகை வகையான புற்றுநோய்க்கு ஒரே மருந்தாக எட்டு நாட்களுக்கு பசுவின் சிறு நீர் மருந்தாக வழங்கப்பட்டது. நோயின் அறிகுறிகளான வலி, பரவுதல், எரிச்சல், விழுங்குதலல் சிரமம் போன்றவை எடுத்துக் கொள்ளப்பட்டு முதல் நாள் அதிகபட்ச, மத்திபம், குறைந்த அளவு என மூன்று வகையாக 86.16, 15.8% 1.58 என முதல் நாள் இருந்தது 7.5%, 55.3% ,36.34% குறைந்துள்ளாதக் கணக்கிட்டு உள்ளனர். இந்த சிகிச்சையை 2-3 மாதம் செய்தவர்கள் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்கின்றர். (Efficacy of cow urine therapy on various cancer patients in Mandsaur District, India – A survey January 2010International Journal of Green Pharmacy 4(1) DOI: 10.4103/0973-8258.62163 Authors: N. K. Jain, V. B. Gupta, Rajesh Garg, N Silawat)

இந்த ஆராய்ச்சியில் பல குறைபாடுகள் உள்ளன..ஒன்று மிகக் குறைந்த சோதனை நபர்கள். மிகக் குறைந்த சோதனை நாட்கள், சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நோயின் அறிகுறிகள், சோதனையின் பின் செய்த அளவீடுகள்…. நோயாளிகள் சொல்வதை வைத்துத் தான் முடிவுக்கு வந்திருக்க வேண்டிய அளவீடு.எனவே இந்த ஆய்வே அறிவியல் பூர்வமற்றது. ஆராய்ச்சி ரீதியாக ஏறறுக் கொள்ளக் கூடியதல்ல. ப்ரி கிளினிக்கல் ட்ரையல்ஸ் விலங்குகளில் செய்த பின்னர் கிளினிக்கல் ட்ரையல்ஸ் என்பது மூன்று கட்டங்களைக் கொண்டது. பல்வேறு பகுதிகளில் செய்ய வேண்டியது. ஒவ்வொரு கட்டத்திலும் சோதணையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். மூன்றாவது கட்டத்தில் குறைந்தது 500 நபர்களிடம் சோதிக்கப்பட வேண்டும் என்கிறார்.

Can cow urine treat cancer?

மற்றுமொரு ஆச்சரியமான செய்தி என்னவென்றால் பசு சிறுநீர் மருந்துக்கு பேட்டன்ட் வாங்கிய செய்தி தான் அது…. பேடன்ட் எண் No. 6410059. 2002 ஜூன் 25 அன்று வழங்கப்பட்டது. அதன்படி வடித்தல் முறையில் பசு சிறுநீரினைத் தயாரித்து ஆன்டி பயாட்டிக், ஆன்டி கேன்சர், காச நோய் எதிர்ப்பு மருந்துகளுடன்  இணைத்துக் கொடுக்கும் பொழுது அம்மருந்துகள் வீரியமாகச் செயல்படுகிறதென்றும் இதனால் இம் மருந்துகளின் அளவைக் குறைக்கலாம் என கூறப்பட்டுள்ளது..இது மட்டுமல்ல எருமை, ஒட்டகம் போன்ற விலங்குகளின் சிறுநீருக்கும் இந்த பண்பு இருக்கிறதென்றும் கூறிவிட்டார்கள். அப்புறம் என்ன பசுவுக்கு மட்டும் அப்படி ஒருசிறப்பு.

இந்த பேட்டன்ட் விவகாரத்திலும் அறிவியல் ரீதியான  ஒப்புதல் பெறவில்லை. இந்த பேட்டன்ட்டுக்குத் தேவையான உரிய ரெக்காட்ஸ் இல்லை. இதில் இருக்கும் மூலக்கூறுகள் நானோ அளவில் அதை விட குறைந்த அளவில் ஓமியோபதிக்காரர்கள்  போல்  கூறுகின்றனர். அதிக அளவில் இருந்தால் இது வேலை செய்யாது என வேறு சொல்லித் தப்பிக்கின்றர். ரொம்ப நெருக்கினால் பொத்தம் பொதுவாக பசுவின் சிறுநீர் உடல் நலத்தை மேம்படுத்தும் எனக் கூறி தப்பித்து விடுகின்ற்னர்.



இதிலிருந்து நாம்ஒரு முடிவுக்கு வர வேண்டியுள்ளது….

பசுவின் சிறு நீர் ஆராய்ச்சிகள்,  பேபட்டன்ட் எல்லாம் அறிவியல் ரீதியான ஆராய்ச்சிகளின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இது ஒரு குப்பை  ( Junk) ஆராய்ச்சி வகையிலேயே அறிவியல் அறிஞர்கள்  சேர்க்கின்றனர்.

எனவே  பாரம்பரியவாதிகள்  கூறுவது போல்  பசுவின் சிறுநீர் புற்று நோயைக் குணப்படுத்துமா? குணப்படுத்தாது என்பதே! இதனை நம்பி இறங்கினால் நோய்கள் தாக்கம் அதிகமாகி துயரப்படுவதும் இறப்பதுமே முடிவாக இருக்கும்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *