*கூட்டம்* குறுங்கதை – மணவை கார்னிகன்

Crowed of Crows Mini Story By Manavai Karnigan. *கூட்டம்* குறுங்கதை - மணவை கார்னிகன். Book Day And Bharathi Puthakalayamஇரவின் முடிவிற்கும் பகலின் துவக்கத்திற்குமான வேளை. புகை மண்டலம் சூழ்ந்ததுபோல் வானம். பறவைகளின் சப்தம். சூரியனுக்கு மட்டும் தாமதமாக கேட்கிறது. சாலையோர தள்ளுவண்டி கடைகளுக்கு மட்டும் முன்கூட்டியே கேட்டிருக்கிறது. எல்லா வண்டி கடைகளிலும் காலை உணவுக்கான வேலை நடக்கிறது. முனியப்பனும் பலகாரம் போட்டுவதற்கு தயாராகிறார்.

“க்கா க்கா க்கா”
காக்கைகளின் கூக்குரல் ஒலிக்கிறது

தள்ளுவண்டிகளுக்கு எதிரே இருக்கும் நீண்ட பாலத்தின் பிடிசுவரில் கிட்டதட்ட ஐநூறு காக்கைகள் வரிசையாக அமர்ந்திருக்கும். முதல் போணி செய்வதற்குமுன். ஒவ்வொரு வண்டிக் கடையிலும் வெவ்வேறு உணவுகள் காக்கைகளுக்கு கிடைத்துவிடும்.

முனியப்பன் பலகாரங்களைச் சுட்டுக் குவியலாக்குகிறார். இப்போது இவரின் கைப்பக்குவத்தின் ருசியை அறிய காத்திருக்கிறது காக்கை கூட்டங்கள். செய்திதாளை கிழித்து பலகாரங்களின் வகைகளில் ஒவ்வொன்றை எடுத்து பிய்த்து தயாராக வைத்திருக்கிறார், மனைவி வருகைகாக

க்கா க்கா க்கா
ஒட்டுமொத்த காக்கைகளும் அதீத சத்ததுடன் தரை இறங்குகிறது. பத்தடி தூரத்தில் முனியப்பன் மனைவி வருகிறாள்.

இவ்வளவு நேரம் என்னா பண்ணுனே
சீக்கிரம் வரமாட்டியா

நான் என்ன சும்மாவா இருக்கேன்
எனக்கும் வேல சரியா இருக்கு

சரி இந்தா என்று பிய்த்து வைத்திருந்த பலகாரகளை நீட்டுகிறான்.
வாங்கியவள் விவசாய நிலத்தில் நெல்மணி தூவுவது போல் தூவுகிறாள் எல்லா காக்கைகளும் இரை எடுக்கிறது.

அந்த காட்சியை பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம்
அந்த கூட்டத்தில் நாள்தோரும் நானும்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.