கவிதை: *முதுகெலும்பின் குரல்* – ப.தனஞ்ஜெயன்.

Sign in agricultural field with text No Farmers No Food. Farmers in the Netherlands protesting against forced shrinking of livestock because of CO2 and nitrogen emissions as measured bij the RIVM.முதுகெலும்பின் குரல்
−−−−−−−−−−−−−−−−−−−−

தலைநகரம் முழுவதும்
எதிர்ப்பு கோஷம்
அகிம்சை இயக்கம்
பச்சை வானவில்
சாலையில் உயிர் நீத்துக்கொண்டிருக்கிறது

உப்பு நீர் சுரந்து உயிர்நாடியை
வளர்க்கும் உழவனையும்
விட்டுவைக்காத
நடுவண் கைகளில்
தேநீர் கோப்பைகளில் பாலும்
கரும்பில் விளைந்த
சர்க்கரையும்
திரும்பிய பக்கமெல்லாம்
விவசாயத்தின் குறியீடுகள்
கவனிக்க வேண்டும்
நீ பசியோடு இருந்தால்
புரியும் உனக்கு

நெற்பயிர்களிடமும்
கோதுமைகளிடம்
நீ பேசியிருக்கிறாயா?
வேளாண் மசோதாக்களை
புறக்கணிக்கச் சொல்லிக்கொண்டேயிருக்கிறது
எங்களிடம்

விளை பயிர்களை கார்ப்பரேட்களிடம்
விற்று விடுவதும்
விவசாயிகளைக் கொல்வதும்
ஒன்றுதான்
உங்கள் விழியில் பிறக்கும்
அமிலங்களை
எங்கள் விழியில் சுரக்கும்
கனமழையால் எதிர்ப்போம்

அழிந்து கிடக்கும்
விவசாயத்தை மீட்காமல்
டிஜிட்டல் எப்படி
சமைக்கும்
எத்தனை செயலியை
பயன்படுத்தினாலும்
தோட்டத்தில்
விளைய வைக்க நாங்கள்
வேண்டும்
எங்கள் பொருளுக்கு
விலை நாங்களே
வைக்க வேண்டும்
வேளாண் சட்டத்தை
திரும்பப் பெற வேண்டும்.
டிஜிட்டல் சமையலில்
எதுவும் வேகாது

உங்கள் மசோதாக்கள் என்றும் விளையாது.
Image
ப.தனஞ்ஜெயன்.