தர்வாசா வாயுப் பள்ளம் (Darvaza gas crater) - இந்தப் பள்ளம் 250 அடி அகலம், 100 அடி ஆழம் மற்றும் 17,816 சதுரடி பரப்பளவும் கொண்டது- ஏற்காடு இளங்கோ - Yercaud Ilango - https://bookday.in/

தர்வாசா வாயுப் பள்ளம் (Darvaza gas crater)

தர்வாசா வாயுப் பள்ளம் (Darvaza gas crater)

– ஏற்காடு இளங்கோ

துர்க்மெனிஸ்தான் நாட்டில் காராகும் (Karakum) என்ற பாலைவனம் உள்ளது. இந்தப் பாலைவனத்தின் நடுவில் தர்வாசா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் 350 பேர் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்திற்கு அருகில் ஒரு நெருப்புக் குழி (Fiery Pit) இருக்கிறது. இது பார்ப்பதற்கு பாலைவனத்தின் நடுவில் உள்ள எரிமலை போல் தெரியும்.

சோவியத் ரஷியப் பொறியாளர்கள் 1971 ஆம் ஆண்டில் காராகும் பாலைவனத்தில் எண்ணெய் வயலைக் கண்டுபிடித்தனர். அவர்கள் 230 அடி சுற்றளவில் மிகப்பெரிய சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொண்டனர். எண்ணெய் அளவை மதிப்பீடு செய்ய துளையிடும் பெரிய ரிக் கருவி மூலம் துளையிட்டனர். இந்தப் பணி தொடங்கிய சிறிது நேரத்திலேயே தரைப்பகுதி உள்வாங்கி சரிந்தது. இதனால் ஒரு பெரிய பள்ளம் உருவானது. இந்தப் பள்ளத்தில் துளையிடும் ரிக் இயந்திரம் விழுந்து மறைந்தது.

தர்வாசா வாயுப் பள்ளம் (Darvaza gas crater) - இந்தப் பள்ளம் 250 அடி அகலம், 100 அடி ஆழம் மற்றும் 17,816 சதுரடி பரப்பளவும் கொண்டது- ஏற்காடு இளங்கோ - Yercaud Ilango - https://bookday.in/

இதிலிருந்து இயற்கையாக விஷ வாயு வெளிப்பட்டது. இது எண்ணெய் வயல் அல்ல. இது எரிவாயு நிறைந்த பகுதி எனத் தெரிய வந்தது. மீத்தேன் விஷ வாயு அதிகப்படியாக கசிந்தது. இதனால் ஆபத்தும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும் என்பதை உணர்ந்தனர். வாயுக்கள் வெளியேறுவதைத் தடுக்க பொறியாளர்கள் தீயிட்ட போது பள்ளம் முழுவதும் தீப்பிடித்தது. இது சில வாரங்களில் அணைந்துவிடும் என நம்பினர். ஆனால் தற்போது வரை (53 ஆண்டுகளாக) எரிந்து கொண்டிருக்கிறது.

இந்தப் பள்ளம் 250 அடி அகலம், 100 அடி ஆழம் மற்றும் 17,816 சதுரடி பரப்பளவும் கொண்டது. இது தர்வாசா வாயுப் பள்ளம் (Darvaza gas crater) என அழைக்கப்படுகிறது. உள்ளூர் மக்கள் இதை நரகத்திற்கான கதவு (Door to Hell) அல்லது நரகத்தின் வாயில்கள் (Gates of Hell) என்கிறனர். இதிலிருந்து மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் நிற தீச்சுவாலை இரவு, பகலாக உமிழ்ந்தபடி இருக்கிறது. இதன் விளிம்பில் நின்றால் நெருப்பின் கர்ஜனையைக் கேட்கலாம்.

இந்தப் பள்ளத்தில் ஜார்ஜ் குரோனிஸ் (George Kourounis) என்ற ஆராய்ச்சியாளர் இறங்கி சானைப் படைத்தார். இவர் வெப்ப எதிர்ப்பு உடை அணிந்து கொண்டு கீழே இறங்கினார். தரையைத் தோண்டி மணலை எடுத்து வந்தார். இந்த மண்ணில் சில வகையான பாக்டீரியாக்கள் இருப்பதை நுண்ணுயிரிலாளர் டாக்டர் ஸ்டீபன் கிரீன் கண்டுபிடித்தார். தற்போது இது ஒரு சுற்றுலாத் தளமாக மாறி உள்ளது.

 

எழுதியவர் : 

– ஏற்காடு இளங்கோ

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *