தொடர்- 21 : இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
உலகறிந்த இந்திய வேதியியலாளர் தேபப்ரதா கோஸ்வாமி Debabrata Goswami OR (Deva Viratha Goswami)
தேபப்ரதா கோஸ்வாமி கான்பூரிலுள்ள இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி நிறுவனத்தில் வேதியியல் ஆய்வகத்தில் முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். லேசர்கள் மற்றும் ஃபோட்டோனிக்ஸ் மையத்தின் முக்கிய ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வரும் இவர் இந்தியாவில் இருந்து வரும் சயன்ஸ் அட்வான்சஸ் எனும் அறிவியல் ஆய்விதழின் முதன்மை ஆசிரியராகவும் இருக்கும் விஞ்ஞானி ஆவார். குவாண்டம் கணினியியல் மற்றும் நவீன நுண்ணோக்கிகள் செய்வது குறித்த அறிவியல் துறை என்று கோஸ்வாமி வேதி-இயற்பியலின் இரண்டு முக்கிய துறைகளில் பல்வேறு பங்களிப்புகளை செய்திருக்கிறார்.
நுண்ணிநோக்கிகள் குறித்த அறிவியலோடு வேதியியல் எப்படி தொடர்பு கொள்ள முடியும் என்று நீங்கள் யோசிக்கலாம். நுண்ணோக்கியின் பயன்பாட்டை அடிப்படையாக கொண்ட கரிம திசுக்களின் நுண்ணிய உடற்கூறியல் தொடர்பான தீவிர ஆய்வு கோசுவாமி அவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு கலவை ஒளி நுண்நோக்கியின் செயல்திறன் மாதிரியின் மீது ஒளியை மையப்படுத்த மின் தேக்கி லென்ஸ் என்கிற அமைப்பு பயன்படுகிற இந்த லென்ஸை தயாரிக்கின்ற வேதிப்பொருட்களை குறித்த அறிவியல் தனித்துவமானது ஆகும்.
குவாண்டம் டன்னலிங் என்று அழைக்கப்படும் கோட்பாட்டு அடிப்படையில் ஸ்கேனிங் ஆய்வு நோக்கி என்கிற ஒன்றை இந்தியாவுக்கு என்று கண்டுபிடித்து வழங்கியவர் வேதியியலாளர் கோசுவாமி ஆவார். சாதாரண அடிப்படை கணினிகளில் இருந்து வேறுபடும் குவாண்டம் கணினிகளின் அடிப்படை கோட்பாடுகளை வரையறுப்பதில் வேதியியல் முக்கிய பங்காற்றுகிறது. வெறும் கிளாசிக்கல் இயற்பியலை கொண்டு இந்த வகை கணினிகளை புரிந்துகொள்ள முடியாது. இந்த குவாண்டம் சாதனங்களின் செயல்பாட்டை விளக்க பிட் என்பதற்கு பதிலாக குபீட் என்பது பயன்படுத்தப்படுகிறது.
குவாண்டம் கணக்கிட்டு வேதியியல் என்பது வேகமாக வளர்ந்து வரும் நவீன துறை ஆகும். இது வேதியியல் அமைப்புகளை உருவகப்படுத்த குவாண்டம் கணினியை பயன்படுத்துகிறது. வேதியியல் நடத்தைகளைப் புரிந்து கொள்வதில் குவாண்டம் இயக்கவியலின் அடிப்படை பங்கு இருந்தபோதிலும் பாரம்பரிய கணக்கிட்டு அணுகுமுறைகள் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கின்றன. கோஸ்வாமி போன்ற வேதியியல் அறிஞர்கள் நவீன கணக்கிட்டு அணுகுமுறைகளைப் பயன்படுத்தி குறிப்பிடத்தக்க சவால்களை உடைத்து வருகின்றனர். பெரும்பாலும் குவாண்டம் எந்திர சமன்பாடுகளின் சிக்கலான தன்மை மற்றும் கணக்கீட்டு தீவிரம் காரணமாக வேதியியல் அறிஞர்கள் இந்த விஷயத்தில் விலகியே இருக்கின்றனர். ஆனால் கோஸ்வாமி போன்ற விஞ்ஞானிகள் இந்த இடைவெளியை உடைப்பதற்கு குவாண்டம் கணக்கிட்டு வேதியல் எனும் தனி துறையை நிறுவி இருக்கிறார்கள்.
குவாண்டம் கணக்கீட்டின் வேதியியலில் பல பொதுவான செயல் முறைகள் இருந்தாலும் QUBITIZATION என்று அழைக்கப்படுகின்ற வேதி இயக்கவியல் வழியாக குவாண்டம் அமைப்புகளை உருவாக்கப்படுவதற்கான குவாண்டம் கணினியியல் ஒரு கணிதம் மற்றும் அல்கோரிதம் கருத்தாக நிலை கொண்டுள்ளது. இந்த விஷயத்தில் தனக்கென்று ஒரு கோட்பாட்டை வெளியிட்ட பெருமை கோஸ்வாமியை சேரும். குவாண்டம் அல்கோரிதங்கள் மூலம் மிகவும் திறமையாக செயலாக்கக்கூடிய வகையில் ஹாமில்டனியன் என்பது உருவகப்படுத்தலின் சிக்கலை குறியாக்கம் செய்து மிக சிக்கலான நவீன நானோ வேதியியல் ஐ இயக்குகிறது.
தேபப்ரதா கோஸ்வாமி 1964 ஆம் ஆண்டு ஈஷாபூர் என்னும் மேற்கு வங்காள பகுதியில் பிறந்தார். ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டம் பெறுவதற்கு வேதியியலைத் தேர்வு செய்தார். அதன் பிறகு கான்பூர் இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜில் MSc., நுண் வேதியியல் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் நவீன நானோ வேதியியலில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வெற்றி கண்டார்.
2017 அவர் அமெரிக்காவின் ஆப்டிக்கல்ஸ் சொசைட்டியின் FELLOW வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். குவாண்ட தகவல் மற்றும் உயிரியல் மருத்துவ பயன்பாடுகள் அவற்றில் ஒளியியல் மற்றும் போட்டோஸ் மிக்ஸ் இவற்றின் பங்கு குறித்து தீவிரமாக ஆய்வுசெய்து அல்ட்ரா ஃபாஸ்ட் என்னும் ஆப்டிகல் கருவியைக் கண்டுபிடித்தார்.
கோஸ்வாமி மெகாஹெர்ட்ஸ் ரப்பாடிஷன் எனும் லேசர் துடிப்பு வடிவத்தை நிரூபித்தார். பல்ஸ் வடிவ லேசர் பகுப்புகளை உருவாக்குவதற்கான தற்போதைய நிலை அளவீடு ஆகும். தற்போதைய தொழில்நுட்பத்தின் வரம்புகளை இவரது கண்டுபிடிப்பு பல வகைகளில் முன்னேற்றம் செய்துள்ளது அவரது பணி 30 ஆண்டுகளுக்கும் மேலாக துடிப்புள்ள லேசர் சோதனைகளில் பணி புரிந்த வரலாற்றை உள்ளடக்கியது இந்த துறையின் பல மைல் கற்களை அடைந்தவர் கோஸ்வாமி அவர் சுய அளவீடு செய்யப்பட்ட ஃபெம்டோ செகண்ட் ஆப்டிகல் சாமணம் உருவாக்கி லேசர் ஆப்டிகல் துறைக்கு பங்களிப்பு செய்துள்ளார்.
1993-94 ஆம் ஆண்டுகளில் இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற டைனோ ஸ்ட்ரிக்ட்லாம் உடன் இணைந்து அவருடைய ஆய்வகத்தில் கோஸ்வாமி பணியாற்றி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2003 ஆம் ஆண்டில் வேதியியல் துறையில் இணை பேராசிரியராக இணைவதற்காக கான்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்திற்கு வந்தார் அங்கு பேராசிரியர் சம்பத் நினைவு இருக்கையை தற்போது கோஸ்வாமி அலங்கரித்து வருகிறார் என்பதும் அங்கு லேசர் மற்றும் போட்டோஸ்நிக்ஸ் ஆய்வகத்தை உருவாக்கிப் பல 100 இளைஞர்களுக்கு வழிகாட்டியும் இருக்கிறார் என்கிற செய்தியும் நமக்கெல்லாம் பெருமை.
கட்டுரையாளர் :
தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: உலகறிந்த இந்திய குவாண்ட இயற்பியலாளர் சி. எஸ். உன்னிகிருஷ்ணன்
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Pingback: மஞ்சுளா ரெட்டி - Indian bacterial geneticist Manjula Reddy
இயற்பியல் மற்றும் கணிதம் பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்டது என்று அறிந்திருக்கிறேன். வேதியலின் உட்பிரிவுகளும் நவீன கால ஆராய்ச்சியில் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை இவருடைய ஆராய்ச்சிகளைப் பற்றி தெரிந்து கொண்ட பொழுது அறிந்தேன். மிகவும் சுவாரசியமான ஆராய்ச்சிகள்