தீபா ஜெயபாலனின் “சவானாவின் வேர்கள் - ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களின் வாழ்வும் போராட்டமும்" புத்தகம் | Deepa Jayabalan's Savanavin Vergal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

தீபா ஜெயபாலனின் “சவானாவின் வேர்கள்” – நூல் அறிமுகம்

தீபா ஜெயபாலனின் “சவானாவின் வேர்கள்” 
அறிவியல் பார்வையோடு எழுதப்பட்ட இலக்கிய படைப்பு

மானுடத்தின் தாயகமான ஆப்பிரிக்க கண்டத்து மக்களின் ஆதிகால இனகுழுக்களாக இயற்கையோடு இணைந்து வாழ்ந்த கட்டத்திலிருந்து நவீன சுதந்திர நாடுகளாக உருவெடுக்க நடத்திய போராட்ட வரலாற்றை கதைகளாக இந்த புத்தகம் பேசுகிறது, நிறவெறிபிடித்த ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்க மக்களை இரண்டுகால் பிராணிகளாக கருதினர் அன்றைய கத்தோலிக்க மத போப்பாண்டவரே அவர்களை அடிமைகளாக ஆக்கி வேலை செய்யவைப்பது கிருத்துவனின் புன்னிய கடமை என்று சமய நெறியாக்கினார்.(.அதற்கு பின்னால் வந்த போப் பாவமன்னிப்பு கோறினார்) துவக்கத்தில் ஆப்பிரிக்காவின் தென்பகுதியில் குடியேற ஐரோப்பியர்கள் கருப்பின மக்களை கொன்றனர் (போயர்கள்) .பின்னர் கருப்பர்கள் உடல் வலுமிக்கவர்கள் என்பதால் அடிமைகளாக வேட்டையாடி பிடித்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து தங்கத்தை சொத்தாக குவித்தனர், மனித வளமும், கனிம வளமும் மிக்க ஆப்பிரிக்கா இருப்பதை கண்டவுடன், 19ம் நூற்றாண்டு இறுதியில் 7 ஐரோப்பிய நாடுகள் ஆப்பிரிக்க கண்டத்தை பங்கு போட்டு கொண்டன. அவர்களே ஆளுகிற பகுதிக்கு புதிய பெயரிட்டுக் கொண்டனர்.

அவர்களது பன்முகத் தன்மை கொண்ட பண்பாட்டை துடைத் தெறியத் தொடங்கினர். அன்றே ஏகாதிபத்திய எதிர்ப்பும் உருவாகி 20ம் நூற்றாண்டு முழுவதும் விடுதலை இயக்கமாகி, இன்று ஆப்பிரிக்கா 50 நாடுகளாக நவ காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து போராடும் களமாக உள்ளது ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஆப்பிரிக்க மக்கள் அமெரிக்க கண்டத்து பூர்வகுடிகள் போல் அழிந்து போகாமல் நிமிர்ந்து நிற்க முடிந்த வரலாற்றை 10 கதைகளாக தீபா ஜெயராமனின் “ சவானாவின் வேர்கள்” என்ற புத்தகம் பேசுகிறது.. ஒரு போராட்ட வரலாற்றை இலக்கிய நயத்துடனும் அறிவியல் பார்வையுடனும் எழுதப்பட்டிருப்பதே இப்புத்தகத்தின் சிறப்பாகும் பழமை என்பது மூட நம்பிக்கைகளின் தொகுப்புமட்டுமல்ல. மானுட பண்பை பேண வேண்டிய மரபுகளுமிருக்கும்.

முதல் கதை மசாய் இனக்குழுவின் முன்னோர்கள் பின்பற்றிய பெண்ணுறுப்பு சிதைக்கும் முறைக்கு முற்றுப் புள்ளிவைக்கிறது நாடோடியாக இருந்த சம்புருஇனம் நீர் நிலை கண்டவுடன் அந்த மண்ணை நேசிக்க தொடங்கியதையும் இயற்கையின் ஓசையிலிருந்து இசை மட்டுமல்ல தங்கள் மொழியின் சொல் உருவான அதிசயத்தையும் அது தான் உயிரெனக் கருதி பேணுவதை கூறுகிறது.

May be a doodle of text that says "தீபா ஜெயபாலன் தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் பிரந்தவர். நற்போது செனயில் வசிக்கிறார். வரலாற்றில் இளங்கலையும். சென்னை: உலகத தமிழாராய்ச்க் சிநிறுவனத்தில் கல்வெட்டு டயியல் பட்டயப் முடித்தவர் கலைகள். இளியத்துறையீல் த்துறையில் பணிபுரிகிறார். குழந்தைகளுக் தைகளருக்காக யாளி சிலம்பக் கலைக் கூடம் தன்றை நடத்தியும் நட வருகிறார். இவரின் முதல்! நாலாகிய சவானாவின் வேர்கள் தமிழி அதிகம் அறியப்படாக ஓர் உலகைத்தை அறிமுகம் செய்கிறது. ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களின் பத்து ர்பற்றிய கதைகளாக இந்நூல் விரிந்துள்ளது. சவானாவின் வேர்கள் ஆப்பிரிக்கப் பழங்குடிகளின் வாழ்வும் போராட்டமும் ஜரோப்பிய ஆதிக்கவாதிகள் இிப்பழங்குடிகளைக் காட்டுமிராண்டுகள் என்றும்நாகறிகம் என்றும் நாகரிகம் பறியாதவர்கள் என்றும் கைப்புக்குரியவர்கள் பரப்பி வத்திருக்கம்சி சித்திரம் எக்துனை நூாலை வாசிக்கும் நாம் உணர்ந்து ககொள்கிறறம். தமிழ்ச்செல்வன் hamizhbooks com 0018760 பாதி புத்தகாயம் புத்தகம் பேசுது UN 0818768 தீபா ஜெயபாலன்"

ஹிம்பா இனக்குழு பற்றிய கதை மாடுகளை வாழ்வாதரமாக கொண்டவர்களின் திருமண முறையை கூறுகிறது தாய்வழி தந்தைவழி குடும்பங்களாக வாழ்பவர்கள் ” பெண்ணின் திருமணத்திற்கு தந்தை வழியில் வந்தவர்களை தவிர்ப்பர் தாய்வழியிலேயே இரண்டு குலங்களும் எவ்வாறு கலக்கின்றன என்பதை சித்தரிக்கிறது

டோகான் இனக்குழுவின் கதையாக வரும் வரலாறு கால்நடைகளை வாழ்வாதரமாக கொண்டவர்கள் வான சாஸ்திரத்தை உருவாக்க பங்களித்த கதையை சுவாரஸ்யமா கூறுகிறது

ஹெசா இனக்குழு பற்றிய கதை ஆப்பிரிக்காவில் இஸ்லாம் பரவிய பிறகு ஏகாதிபத்திய எதிர்ப்பினை விதைத்த கட்டத்தை சித்தரிக்கிறது
காரோ இனக்குழு,பற்றிய கதை கட்டப் பஞ்சாயத்து முறையின் மேன்மையை கூறுகிறது திருடுவது, பொய் சொல்வது இரண்டையும் வெறுக்கவைக்க பண்புள்ள மூத்தோரின் அவசியத்தை குறிக்கிறது
ஜுலு குலம் பற்றிய கதை தற்காப்பு முறைகளை எப்படி கற்றனர் என்பதை கூறுகிறது ஹேமர் இனக்குழுவின் நைல்நதி ஓடும் பகுதியான

எத்தியோப்பியவில் பழைய வாழ்வு முறையிலிருந்து புதிய வாழ்வை தேர்வு செய்ய கல்வியின் அவசியத்தை உணர நடந்த போராட்டத்தை சித்தரிக்கிறது. யொருபா ஹட்சா இனக்குழுக்கள் பற்றிய கதை ஆண் பெண் சமத்துவம் மற்றும் கல்விக்கு உதவும் மொழியைப் பேண நடத்திய போராட்டத்தை சித்தரிக்கிறது.

ஆப்பிரிக்கண்டம் பல இனக்குழுக்கள் பிறந்த இடம், இந்திய பல இனக்குழுக்கள் வந்தேறிய இடம். அது மட்டுமல்ல ஒருவரை ஒருவர் விருந்தினராக பார்த்த இடம். பல மொழிகள் உருவான இடம் நமது முன் னோர்கள் வாழ்ந்த விதத்தையும் அறிவியல் பார்வை கொண்ட கதைகளாக இவர் படைக்க பாராட்டுவோம்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: சவானாவின் வேர்கள்
ஆசிரியர்: தீபா ஜெயபாலன்
வெளியீடு:
பாரதி புத்தகாலயம்
விலை: ₹.
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 வே. மீனாட்சிசுந்தரம்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *